பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பளூ தூக்கும் போட்டி...!
மேல்விஷாரம் சி அப்துல் ஹக்கீம் கல்லூரி சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது...!
தென்மேற்கு மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பளூ தூக்கும் போட்டி ஆந்திராவின் ராஜமுந்திரியில் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து 90 பல்கலைக்கழகங்களில் இருந்து 800 மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
தமிழகத்தில் இருந்து வேலூர் திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தின் மேல்விஷாரம் சி.அப்துல் ஹக்கீம் கல்லூரியைச் சேர்ந்த 10 மாணவர்கள், வேலூர் பயிற்சியாளர் என்.ஜமாலுதீன், குழு மேலாளர் வி.ராஜா ஆகியோர் தலைமையில் போட்டியில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்த போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை மேல்விஷாரம் சி.அப்துல் ஹக்கீம் கல்லூரி மாணவர்கள் வென்று திருவள்ளூவர் பல்கலைக்கழகத்திற்கு பெருமையை சேர்த்தனர்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment