பார்க்கிங் - விறுப்பான திரைப்படம்....!
தமிழில் அண்மைக் காலமாக சில நேரங்களில் நல்ல கதை அம்சங்கள் கொண்ட திரைப்படங்கள் வந்து விடுகின்றன்.
இந்த வரிசையில் பார்க்கிங் திரைப்படமும் ஒன்று.
ஒரு சிறிய கதையை எந்தவித சோர்வும் ஏற்படாத வகையில், விறுவிறுப்பான திரைக்கதை எழுதி அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் படத்தை இயக்கி, ரசிகர்களை படத்திலேயே ஒன்றிவிடும்படி செய்து இருப்பதை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.
கதாநாயகன் ஹரிஷ் கல்யாண், சாதாரண குடும்ப தலைவனாக வந்து வில்லனாக மாறும் எம்.எஸ்.பாஸ்கர், நாயகி இந்துஜா ஆகிய அனைவரும் தங்களது இயல்பான, சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து பாராட்டுகளை பெறுகிறார்கள்.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சி, ஒரு தனி ரகம்.
சாம் சி.எஸ். தன்னுடைய பின்னணி இசை மூலம் மிரட்டி இருக்கிறார். ஃபிலோமின் ராஜ்ஜின் படத்தொகுப்பு படத்தை மேலும் சுறுசுறுப்பாக கொண்டு செல்கிறது.
பார்க்கிங்கில் இரட்டை அர்த்த காட்சிகள் இல்லை. பெண்களை தவறாக சித்தரிக்கும் காட்சிகள் இல்லை. வன்முறை இல்லை. எனவே குடும்பத்தில் உள்ள அனைவரும் பார்க்கிங் திரைப்படத்தை தைரியமாக பார்க்கலாம்.
அண்டை வீட்டாருடன் உறவு சிதை்காமல் இருக்க விட்டு கொடுக்கும் மனப்பான்மை மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்தும் பார்க்கிங் திரைப்படம் நிச்சயம் பார்க்க வேண்டிய திரைப்படம்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment