Monday, December 11, 2023

இ.யூ.மு.லீக் யாத்திரை...!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (இளைஞர் முஸ்லிம் யூத் லீக்சார்பாக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை யுவ பாரத் யாத்ரா நடைபெற உள்ளது. 

 *India for us.* 

 *All of us* 

"இந்தியா நாம் தான்.

நாம் அனைவரும்."

என்பது யாத்திரையின் கருப்பொருள்.

யாத்திரையின் நோக்கங்கள்..

1) அடையாள அரசியல்.

அனைவருக்கும் அமைதியான சகவாழ்வு.வளர்ச்சி மற்றும் அதிகாரமளித்தல். என்ற சித்தாந்தத்தை பரப்புதல்.

2) சமூகத்தில் நல்லிணக்கம்.சகிப்புத்தன்மை.மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தேசம் தான் வலிமையான தேசம் என்ற செய்தியை பரப்புதல்.

3) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம்பெற்றுல்ல நாட்டில் ஜனநாயக சக்தியின் மாபெரும் கூட்டணியான " இந்தியா" கூட்டணியின் வெற்றியை உறுதி செய்வது.

கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் கனவை நனவாக்க காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பிறை கொடி பட்டோலி வீசி பறக்கவும் 

வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலிலே  மதசார்பற்ற ஜனநாயக கூட்டணியான “இந்தியா“கூட்டணி வெற்றி பெறுவதற்க்காக இந்த யாத்திரை நடைபெற உள்ளது அதன் *logo* அறிமுகம் 

10:12:2013 அன்று சேலத்தில் முனிருல் மில்லத் பேராசிரியர் பெருந்தகை *K M காதர் மெய்தீன்* அவர்களின் பொற்கரங்களால் வெளியிடப்பட்டது. 

அதன் தொடர்ச்சியாக 

சேலம் மாவட்ட தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் சேலம் மாநாகராட்சியின் 31வது கோட்ட மாமன்ற உறுப்பினர் 

 S Aசையத் மூஸா* அவர்கள் தூய்மை பணியாளர்களுக்கு நலஉதவி. உபகரணங்கள் வழங்கும் விழாவும் நடைபெற்றது இக் கூட்டத்தில் சேலம் மாநகராட்சியின் மேயர், துணை மேயர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் என திரளாக கலந்து கொண்டனர் 

இந் நிகழ்ச்சியை சேலம் மாவட்ட தாய்சபை நிர்வாகிகள் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் .

யுவ பாரத் யாத்ரா இன்ஷாஅல்லாஹ் வருகிற ஜனவரி 26ம் தேதி காஷ்மிரில் ஆரம்பமாகிறது.

யாத்திரை  தொடர்ந்து வெற்றிகரமாக நடைபெறுவதற்கும் நம் தேசத்தின் மறுமலர்ச்சிக்கு இந்த யாத்திரை 

சிறப்பாக செயல் படுத்திட வல்ல ரஹ்மான் கிருபை செய்வானாக !

No comments: