பக்கா கமர்ஷியல் திரைப்படம்...!
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வழக்கம் போல தனது பாணியில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தை ஒரு நல்ல கமர்ஷியல் படமாக எடுத்துள்ளார். விறுவிறுப்பான திரைக்கதை மூலம், ரசிகர்களை திரைப்படத்திலேயே ஒன்றிவிடும்படி இயக்குநர் படத்தை இயக்கியுள்ளது பாராட்ட வேண்டிய அம்சமாகும்.
ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன், நவீன் சந்திரா, இளவரசு ஆகியோர் தங்களது சிறப்பான நடிப்பின் மூலம் படத்திற்கு வலு சேர்க்கின்றனர்.
இந்த திரைப்படத்தில் மிகப்பெரிய ப்ளஸ் பெயின்ட், சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை என்றே கூறலாம். பின்னணி இசையில் பின்னி பெடல் எடுத்துள்ளார். பாடல்களும் கொஞ்சம் ரசிக்க வைக்கின்றன.
அடர்வனப் பகுதியில் எடுக்கப்பட்ட யானை வேட்டைக் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. பாராட்டுகள்.
ஒருசில குறைகள் இருந்தாலும், மிகப்பெரிய அளவுக்கு குறைச் சொல்லும் வகையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் இல்லை என்பதால், ரசிகர்கள் திரைப்படத்தை பார்த்து ரசிக்கலாம்.
எஸ்.ஏ,அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment