"சைவ, அசைவ உணவு" - சில முக்கிய தகவல்கள்....!
மாறிவரும் காலத்துக்கு ஏற்ப மனிதர்களின் வாழ்க்கை முறையும் தற்போது வெகுவாக மாறிவிட்டது. வாழ்க்கை முறை மாறிவிட்டதால், இப்போது ஆரோக்கியமான உணவுமுறையே, மக்களிடம் பெரிதும் விரும்பப்படுகிறது. இஸ்லாமிய பெண்கள் வெவ்வேறு உணவு வகை திட்டங்களை முயற்சி செய்கிறார்கள். அதில் ஒன்றுதான் "சைவ உணவுமுறை". அதன் போக்கு தற்போது முஸ்லிம் குடும்பங்களில் அதிகரித்துள்ளது. ஆரோக்கியக் கண்ணோட்டத்தில் இந்தப் போக்கு எவ்வளவு சரியானது என்பதை அறிந்துகொள்வது மிகவும் முக்கியம்.
எந்தவொரு உணவுத் திட்டத்தையும் பின்பற்றுவதற்கு முன், அதைப் பற்றி கொஞ்சம் அறிந்து கொள்வது மிகவும் அவசியம். அப்போதுதான், அந்த உணவுத் திட்டத்தின்மூலம் எந்தளவுக்கு பலன் கிடைக்கிறது? உடலுக்கு எப்படிப்பட்ட சக்தி கிடைக்கிறது? போன்ற விவரங்கள் நமக்கு கிடைக்கும்.
ஆரோக்கியத்தில் கவனம்:
கொரோனா பேரிடர் காலத்திலும், அதற்கு பிறகும், மக்கள் தங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். இந்த விஷயத்தில், பெண்கள் அதிக உணர்திறன் கொண்டவர்களாக மாறிவிட்டனர். இப்போது, ஆரோக்கியமான உணவுமுறையே மக்களிடம் அதிகம் விரும்பப்படுகிறது. எனவேதான் பெண்கள், குறிப்பாக முஸ்லிம் பெண்கள் வெவ்வேறு உணவு திட்டங்களை முயற்சி செய்கிறார்கள்.
ஆரோக்கியமான உணவு, உடலுக்கு மட்டுமல்ல, உள்ளத்திற்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை அனைத்து மக்களிமும் இருந்து வருகிறது. அதன் காரணமாக, உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான உணவு வகைகளை தேடி தேடி வாங்கி சாப்பிடும் பழக்கம், மக்களிடம் அதிகரித்து வருகிறது.
ஆரோக்கியமான உணவுகள் குறித்து மருத்துவர்கள் தரும் ஆலோசனைகள், அதுதொடர்பாக வரும் விளம்பரங்கள் மக்களிடையே நல்ல, பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. பொதுவாக சைவ உணவு, அசைவ உணவு என இருவகை உணவு முறை பழக்கமும் அனைத்துத் தரப்பு மக்களிடமும் இருந்து வருகிறது.
சைவ உணவு முறை:
உலக முழுவதும் உள்ள பெண்கள், வெவ்வேறு வகையான உணவு திட்டங்களை முயற்சி செய்யும்போது, "சைவ உணவுமுறை" திட்டத்தையும் தங்களது கவனத்தில் எடுத்துக் கொள்கிறார்கள். அதன் போக்கு முஸ்லிம்கள் மத்தியிலும் தற்போது அதிகரித்துள்ளது.
"சைவ உணவுகள்" என்பது இறைச்சி மற்றும் பால் பொருட்களை விலக்கும் உணவுகளை உள்ளடக்கியது. உலகெங்கிலும் உள்ள மக்கள், இந்த உணவு முறையை தற்போது பின்பற்றுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம், இந்த உணவுமுறைத் திட்டத்தை பல பிரபலங்கள் பின்பற்றுகிறார்கள் என்பதாகும்.
சைவ உணவு திட்டத்தைப் பின்பற்றுவது புத்திசாலித்தனமாக இருக்க வாய்ப்பளிப்பது மட்டுமல்லாமல், இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டையும் மேம்படுத்துகிறது என்று கருத்து பொதுவாக இருந்து வருகிறது. சைவ உணவை ஊக்குவிப்பவர்கள் மேற்கண்ட இந்த கருத்தை கூறி வருகிறார்கள்.
இந்த உணவு, அனைத்து வகையான இறைச்சி, முட்டை மற்றும் பால் பொருட்களைத் தவிர்த்து, முழு தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு வகையாகும். சைவ உணவு, பல வகைகளில் இருந்து வருகிறது.
இந்த உணவில் பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், உலர் பழங்கள் மற்றும் விதைகள் ஆகியவற்றுடன், மீன் மற்றும் இறைச்சி இல்லாத சமைத்த உணவு வகைகளை, பல்வேறு மசாலாப் பொருட்களை சேர்த்து, சமைத்து மக்கள் சாப்பிட்டு வருகிறார்கள்.
சைவ உணவின் முக்கிய அம்சங்கள்:
சைவ உணவில், 80 சதவீதம், கலோரிகள் கார்போஹைட்ரேட் (பழங்கள்) மற்றும் 10 சதவீதம் தாவர அடிப்படையிலான புரதம் மற்றும் கொழுப்பு ஆகியவற்றிலிருந்து வருகின்றன. இதன் பொருள், இந்த உணவில் பெரும்பாலும் பழங்கள் உள்ளன. இதில் கொழுப்பு குறைவாக உள்ளது என்பதாகும்.
சைவ உணவில், மாவுச்சத்துள்ள உணவுகள் சேர்க்கப்பட்டு, பழங்களுக்குப் பதிலாக வேகவைத்த உருளைக்கிழங்கு, அரிசி மற்றும் சோளம் ஆகியவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர, குறைந்த கொழுப்பு, அதிக மாப்பொருள் (ஸ்டார்ச் உணவு) உணவு வகைகள் உள்ளன.
சைவ உணவை நீங்கள் உண்ணும்போது, அந்த உணவுகள் அனைத்தும் 48 டிகிரி செல்சியஸில், அதாவது குறைந்த வெப்பத்தில் சமைக்கப்பட வேண்டும். மீதமுள்ள பழங்கள் மற்றும் பல காய்கறிகள் பச்சையாக சாப்பிட வேண்டும். சில வகையான சைவ உணவு வகைகளை, மாலை நான்கு மணிக்குள் சாப்பிட வேண்டும் என உணவு வகை மருத்துவர்கள் ஆலோசனைகளை தருகிறார்கள்.
சைவ உணவு பல நன்மைகளைக் கொண்டுள்ளது. அதன் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று, உடல் எடை இழப்பு அல்லது குறைப்பு என கூறலாம். சைவ உணவு உண்ணும் பெண்கள், அந்த உணவை எடுத்துக் கொள்ளாத பெண்களை விட, குறைவான உடல் எடையுடன் இருப்பார்கள். ஒரு ஆராய்ச்சியின்படி, சைவ உணவைப் பின்பற்றும் பெண்களின் இரத்த சர்க்கரை, கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்மூலம் பெண்கள் தங்கள் வாழ்க்கையை இலகுவாக உணர்கிறார்கள். தங்களுடைய வாழ்க்கை முறையை அனுபவிக்கவும், ஆரோக்கியமான செயல்களில் பங்கேற்கவும் அவர்களின் கவனம் செல்கிறது.
சைவ உணவுமுறை இதய நோய் அபாயத்தை 75 சதவீதம் வரை குறைக்கும் என்று மருத்துவ ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. உயர் இரத்த அழுத்தம் காரணமாக, இதய நோயால் ஏற்படும் இறப்பு அபாயமும் சைவ உணவால் 42 சதவீதம் குறைக்கப்படுகிறது.
சைவ உணவின் தீமைகள்:
சைவ உணவின் பலவீனமான அம்சம் என்னவென்றால், இறைச்சியை சாப்பிடாமல் இருப்பது சில சந்தர்ப்பங்களில் ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். ஏனெனில் இறைச்சி உடலுக்கு புரதத்தை வழங்குகிறது. சைவ உணவு பழக்கம் கொண்ட ஒருவர், இறைச்சி சாப்பிடுவதில்லை, மீன் சாப்பிடுவதில்லை. ஒருவர் மீன் சாப்பிடவில்லை என்றால், உடல் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் பற்றாக்குறையால் பாதிக்கப்படுகிறது.
சைவ உணவு உண்பவர்கள் தைராய்டு பிரச்சனையால் பாதிக்கப்படுவார்கள் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். உண்மையில், அயோடின் குறைபாடு, தைராய்டு நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. மேலும், அயோடின் பற்றாக்குறையால், எலும்புகளும் பலவீனமடைகின்றன. இந்தக் காரணங்களுக்காக, எந்தப் போக்கையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் முன் அதன் அனைத்து அம்சங்களையும் அறிந்து கொள்வது அவசியம்.
அனைத்து வகை உணவுகள் அவசியம்:
ஒருவர் நல்ல உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், அவருக்கு அனைத்து வைட்டமின்களும் தேவைப்படுகிறது. எனவே உணவில் அனைத்து வகையான உணவு வகைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
சைவம், அசைவம், எந்த வகை உணவாக இருந்தாலும், அதன்மூலம், நமது உடலுக்கு கிடைக்கும் சக்தி என்ன? பலன்கள் என்ன? நமது உடல் ஆரோக்கியமாக இருக்குமா? போன்ற கேள்விகளை கேட்டு, அதன்படி, நாம் உணவு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஏக இறைவன் மனிதர்களுக்கு கொடுத்துள்ள அனுமதிக்கப்பட்ட, அனைத்து உணவு வகைகளையும் எடுத்துக் கொண்டு, சிறப்பான வாழ்க்கையை நாம் வாழ வேண்டும். சைவ, அசைவ உணவு குறித்து வீண் சர்ச்சைகளை எழுப்பி, நம்முடைய வாழ்க்கையை அனுபவிக்காமல் இருக்கக் கூடாது. உணவே மருந்து என்ற கொள்கையை வாழ்க்கையில் கடைப்பிடித்தால், இதுபோன்ற வீண் சர்ச்சைகள் நம்மிடம் ஏற்படாது. ஆரோக்கியமான உணவே, ஆரோக்கியமான வாழ்க்கை என்ற சிந்தனை நமது உள்ளத்திலும் மனதிலும் இருந்தால், வாழ்க்கை எப்போதும் இனிக்கும் நல்ல வாழ்க்கையாக இருக்கும். எனவே நல்ல உணவை சாப்பிடுங்கள். எப்போதும் ஆரோக்கியமாக வாழுங்கள்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment