நூல் மதிப்புரை
நூல் : நூற்றாண்டை மீட்ட திராவிட மாடல் மாட்சி பேராளுமையின் ஏற்றமிகு ஓராண்டு
ஆசிரியர் : முனைவர் அ.ரசித்கான்
வெளியீடு : நூர்ஜஹான் பதிப்பகம்,
எண் 21/10, நல்லெண்ண முதலி தெரு,
இராயப்பேட்டை, சென்னை - 600 014.
செல்பேசி: 90809 13636
E.mail: rasheedrubina@gmail.com
விலை : ரூ.600/-
இந்திய துணைக் கண்டத்தில் சிறந்த முதலமைச்சராக விளங்கி, அனைத்துத் தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாள்தோறும் ஆற்றிவரும் தொண்டுகள், திட்டங்கள், பணிகள் மற்றும் சாதனைகளை அனைத்துத் தரப்பு மக்களும் அறிந்துகொள்ளும் வகையில், சென்னை புதுக்கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் அ.ரசித்கான் மிகச்சிறப்பான முறையில், "நூற்றாண்டை மீட்ட திராவிட மாடல் மாட்சி" என்ற இந்த நூலை படைத்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின், மே 2021ம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரையிலான ஓராண்டு சாதனைகள் குறித்த பல சுவையான, அரிய தகவல்களை திரட்டி, ஒரு வரலாற்று நூலாக இதனை பேராசிரியர் ரசித்கான் உருவாக்கியுள்ளார்.
'வெளிப்படைத் தன்மை - ஜனநாயகத்தின் மிக முக்கியமான பண்பு' 'சரித்திரபூர்வமான நவீன காலப்பார்வை; முதலமைச்சர்களுக்கு முன்னுதாரணம்!' 'ஓங்கி ஒலிக்கும் மாநில சுயாட்சி!' 'தொடர்ந்து உறுதியாக கண்காணித்துக் கொண்டிருப்பேன்!' '2030 ஆண்டில், "ஒரு ட்ரில்லியன் டாலர்' எனும் உச்சத்தை தொட்டிட சூளுரை!' என மொத்தம் ஐந்து தலைப்புகளில் சுமார் 652 பக்கங்களில், திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனைகள் குறித்த அற்புதமான, பல சுவையான, அரிய தகவல்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.
முரசொலி, தினகரன், தினத்தந்தி, இந்து தமிழ்திசை, உள்ளிட்ட பல்வேறு நாளிதழ்களில் (ஆங்கில நாளிதழ்கள் உட்பட) வெளியான, திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், பணிகள், நிகழ்த்தப்பட்ட சாதனைகள், திமுக அரசின் திட்டங்கள் மற்றும் பணிகள் மூலம் தமிழக மக்களுக்கு கிடைத்தப் பலன்கள் ஆகியவை குறித்த செய்திகள் மற்றும் தகவல்களை திரட்டி, தனது கடின உழைப்பின் மூலம், ஒரு அற்புதமான நூலை முனைவர் ரசித்கான் உருவாக்கியுள்ளார்.
திமுக ஆட்சியில் என்ன சாதனைகள் நிகழ்த்தப்பட்டன? என கேள்விகளை எழுப்பும் எதிர்க்கட்சிகளுக்கு, தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இந்த "நூற்றாண்டை மீட்ட திராவிட மாடல் மாட்சி" என்ற நூலில் நல்ல விவரமான விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன.
திமுக ஆட்சியின் சாதனைகள் குறித்து மிகவும் சிறப்பான முறையில் எழுதப்பட்டுள்ள இந்த நூலை, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் நூலகங்களில் கட்டாயம் இடம்பெறச் செய்ய வேண்டும். அதன்மூலம், ஆயிரக்கணக்கான வாசகர்கள் மற்றும் பொதுமக்கள், திமுக அரசு எப்படிப்பட்ட திராவிட மாடல் ஆட்சியை நடத்தி, மக்களுக்கு சேவை ஆற்றி வருகிறது என்பதை அறிந்துகொள்ள நல்ல ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
பள்ளி, கல்லூரி நூலகங்களிலும் இந்த நூலை இடம்பெறச் செய்தால், தமிழக மாணவச் சமுதாயம், திராவிட மாடல் ஆட்சி என்பது என்ன? அந்த ஆட்சியில் மக்கள் எப்படி பயன் அடைந்து வருகிறார்கள்? அனைத்துத் துறைகளிலும் எப்படிப்பட்ட வளர்ச்சி, முன்னேற்றம் கிடைக்கிறது? போன்ற பல கேள்விகளுக்கு நல்ல விளக்கங்களைப் பெற முடியும்.
"நூற்றாண்டை மீட்ட திராவிட மாடல் மாட்சி" நூல் அரிய தகவல்களைக் கொண்ட ஒரு வரலாற்றுப் பொக்கிஷம் என்றே கூறலாம். தமிழக மக்கள் அனைவரும் இந்த நூலை அவசியம் படித்து தெளிவுப் பெற்றால், திராவிட மாடல் ஆட்சி, தமிழகத்தில் மட்டுமல்லாமல், இந்தியாவிலும் மலர வேண்டும் என்றே விரும்புவார்கள். ஆசை கொள்வார்கள். அதற்காக ஒத்துழைப்பார்கள்.
- ஜாவீத்
No comments:
Post a Comment