மிகப்பெரிய அளவுக்கு குறை சொல்ல முடியாத திரைப்படம் அன்னபூரணி...!
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது படமான 'அன்னபூரணி' சமையல் கலையில் ஆர்வம் கொண்ட ஒரு பெண் குறித்த திரைப்படமாகும். அண்மைக் காலமாக வன்முறைகளை வைத்து திரைப்படங்களை எடுத்து அதன்மூலம் கல்லா கட்டும், பல சூப்பர் ஸ்டார்கள் மத்தியில், பெண் சூப்பர் ஸ்டார் நயன்தாரா எந்தவித பந்தாவும் இல்லாமல், தன்னுடைய இயல்பான நடிப்பில் மூலம் இந்த படத்தில் கலக்கி இருக்கிறார் என்றே கூறலாம்.
இந்த திரைப்படத்தில் வன்முறை காட்சிகள் இல்லை. பாலியல் வன்முறை காட்சிகள் இல்லை. ஆபாச வசனங்கள், இரட்டை அர்த்த வசனங்கள் எதுவும் இல்லை.எனவே குடும்பத்தினருடன் உட்கார்ந்து அன்னபூரணியை தைரியமாக கண்டு ரசிக்கலாம்.
நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில், பல இடங்களில் வசனங்கள், நச்சுன்னு இடம்பெற்றுள்ளன. ஆர்வமுள்ள சமையல்காரரான அன்னபூரணி எதிர்கொள்ளும் சவால், அந்த சவால்களை முறியடித்து எப்படி வெற்றி பெறுகிறார் என்பதுதான் கதை. படத்தில் சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர். வில்லனாக வரும் கார்த்திக் குமார், தன்னுடைய நடிப்பின் மூலம் பெண்களின் வெறுப்பை சம்பாதித்து, சிறப்பான கதாபாத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார். தமனின் இசை, பிரவீன் ஆண்டனியின் படத்தொகுப்பு என படத்தில் அனைத்தும் நன்றாகவே வந்திருக்கிறது.
அன்னபூரணி, குறை சொல்ல முடியாத குடும்ப படம் என்பதே எமது கருத்து.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment