Wednesday, December 18, 2013

மதுவுக்கு எதிராக ஓர் போர்....! (21)

" மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....! " - நாள் : 21


மதுப்பழக்கம்+திறமை -  ரிசல்ட்  0%

மதுப்பழக்கம் இல்லாமை+திறமையின்மை -  ரிசல்ட் 100%

என்ன சகோதரர்களே..... ஆச்சரியமாக இருக்கிறதா....

உண்மை நிலை இதுவாகதான், தற்போது இருந்து வருகிறது...

நல்ல திறமை இருந்தும் மதுப்பழக்கத்தால் பலர் சரியான ரிசல்ட்டை அளிக்க முடியாமல் திணறுகின்றனர்...

திறமையில்லாதபோதும் பலர் மதுப்பழக்கம் இல்லாத ஒரே காரணத்தால், நல்ல ரிசல்ட்டை  அளிப்பதாக அவர்களது மேலதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.


ஊடகத்துறையில் பலர் மதுப்பழக்கத்திற்கு ஆளாகி, தங்களது திறமையை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர்...

எனக்கு தெரிந்த ஊடக நண்பர்கள் சிலர், தங்களுடைய சம்பள பணத்தை வீட்டிற்கு செலவழிக்காமல், மதுவிற்கு செலவழித்து வாழ்க்கையை வீணடித்து கொண்டனர்.

ஒருசில நண்பர்கள், மதுப்பழக்கம் காரணமாக விபத்துக்களில் சிக்கி அதில் இருந்து இன்னும் மீள முடியாமல் வேதனையை அனுபவித்து வருகின்றனர்.

ஒன்றுமே திறமையில்லாத சில ஊடக சகோதரர்கள், இன்று மிகப் பெரிய பதவிகளில் வலம் வரும்போது, சுறுசுறுப்பாக இயங்கிய சில நண்பர்கள், மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி, இன்றும் குறைந்த சம்பளத்தில் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்...


எல்லாம் மது என்ற அரக்கணுக்கு அடிமையானதுதான்...

ஊடகத்துறையில் இருக்கும் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட செய்தியாளர்கள், நாள்தோறும் மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்...

அதற்காகவே, தங்களுக்கு அன்பளிப்பாக கிடைக்கும் பணத்தை செலவழிக்கிறார்கள்...

ஒருசில நேரங்களில் கவர் கிடைக்காவிட்டால், அவர்கள் படும் பாடு இருக்கிறதே....

அதை சொல்ல வார்த்தைகள் இல்லை....


ஊடகத்துறையில் மட்டுமல்ல, பல துறைகளில் இருக்கும் நல்ல திறமைசாலிகள் மதுவிற்கு அடிமையாகி, தங்களது திறமைகளை வெளிப்படுத்த தவறி விடுகின்றனர்.

இதனால், அவர்களின் வளர்ச்சியில் தடை ஏற்படுகிறது....

ஒன்றுக்குமே லாயிக்கில்லாதவர்கள் எல்லாம் வளர்ச்சியை நோக்கிச் செல்லும்போது, நல்ல திறமைசாலிகள், மதுப்பழக்கத்தால், தோல்வியை அல்லது வீழ்ச்சியை நோக்கி நடை போடுகின்றனர்...


நீங்களும் உங்களுடைய அனுபவத்தில் பலரை பார்த்திருக்கலாம்...

ஆக, மது உடல்நலத்தை கெடுப்பதோடு, வளர்ச்சியை, முன்னேற்றத்தையும் தடை செய்கிறது...

இது உண்மைதானே நண்பர்களே....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: