"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!" நாள்: 27
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி மாநிலத்தில் உள்ள சில கட்சிகள் அவ்வவ்போது போராட்டங்களை நடத்தி வருகின்றன..பாமக, மதிமுக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், த.மு.மு.க. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட அமைப்புகள் மதுவிற்கு எதிராக நாள்தோறும் குரல் கொடுக்க தவறுவதில்லை.
அந்த பட்டியலில் இடம் பிடித்துள்ள கட்சிகளில் பிஜேபியும் அடங்கும்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் கடந்த 22.12.2013 அன்று பிஜேபி சார்பில் மாநாடு நடத்தப்பட்டது.
மதுவின் கொடுமையால் இளைஞர்கள் சீரழிவதுடன் தங்கள் குடும்பத்தையும் தெருவுக்கு கொண்டு வந்துவிடுவதால், மாநிலத்தில் மிகப் பெரிய அவல நிலை ஏற்பட்டு வருவதாக பிஜேபி புகார் தெரிவித்துள்ளது.
இதனை தடுக்கும் வகையிலும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல் படுத்த வலியுறுத்தியும் பிஜேபி மகளிர் அணி சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த தக்கலையில் தாலி காக்கும் தாமரை மாநாடு நடைபெற்றது.
மாவட்ட மகளிர் அணித்தலைவர் மகேஷ்வரி தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் மதுவினால் இளைய சமுதாயத்தினர் பாதிப்பு அடைவது குறித்தும் அவர்களை பாதுக்கப்படுவது குறித்தும் பல நல்ல கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டன.
மாநாட்டில் பங்கேற்று பேசிய பிஜேபி மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல் படுத்த வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக் கொண்டார்.
மதுவுக்கு எதிரான இது போன்ற மாநாடுகள் மாநிலம் முழுவதும் நடத்தப்படும் என்றும் பொன். ராதாகிரூஷ்ணன் தெரிவித்தார்.
மாநாட்டில் பெண்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்று மதுவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
மதுவுக்கு எதிராக குரல் கொடுக்கும் தமிழக பிஜேபிக்கு நமது பாராட்டுக்கள்...அவர்களது பணி தொடர வாழ்த்துக்கள்..-
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================
No comments:
Post a Comment