சமோசாவில் ஆலு (உருளைக்கிழங்கு) இருக்கும் வரை பீகாரில் லாலு இருப்பான் !
சிறையின் முக்கிய வாயில் வழியே வெளியே வந்த லாலு, சிறை வளாகத்தில் இருந்த பழங்குடியின தலைவரின் சிலைக்கு மாலை அணிவித்தார்.
லாலு விடுதலையை முன்னிட்டு கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் சிறைக்கு வெளியே கூடியிருந்தனர். அவர்கள் லாலுவை வாழ்த்தி முழக்கமிட்டனர்.
பின்னர் அங்கு கூடியிருந்த நிருபர்களிடம் லாலு கூறியதாவது:
டெல்லியில் வலுவாக காலூன்ற மதவாத சக்திகள் முயற்கின்றன. அவர்களை விரட்டியடிப்பதற்காக நான் வந்துவிட்டேன்.
நரேந்திர மோடியோ, பாஜக அல்லது ஆர்எஸ்எஸ் அமைப்போ தங்களின் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள இடம்தரமாட்டோம்.
அஸ்தினாபூரில் இருந்து மதவாத சக்திகள் வெளியேற்றப்படுவார்கள்.
மத சார்பற்ற சக்திகளை வலுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் பயணம் செய்யப் போகிறேன் என்றார் லாலு.
"நான் சிறைக்கு சென்றவுடன் எனது கதை முடிந்துவிட்டதாக சிலர் நினைத்தார்கள்.
சமோசாவில் ஆலு (உருளைக்கிழங்கு) இருக்கும் வரை பீகாரில் இந்த லாலு இருப்பான் என்பதை அவர்கள் நினைவில் கொள்ளவேண்டும்.
நரேந்திர மோடிக்கு பின்னால் தொழிலபதிபர்கள் உள்ளனர். மதவாத சக்திகளிடம் இருந்து மக்கள் விலகியிருக்க வேண்டும்.
வரும் தேர்தலில் பீகாரில் பாஜகவுக்கும், அதன் கூட்டணியில் இருந்து பிரிந்த சென்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்" என்றார் லாலு.
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
==================
No comments:
Post a Comment