கூடா நட்பு கேடாய் முடியும்..
ஒரு கிணற்றில் தவளை ஒன்று வாழ்ந்து வந்தது....அதனால் எல்லோர்டுடனும் ஒத்து போக முடியவில்லை....சில தவளைகளை கூட சேர்த்து கொண்டு சண்டை போட்டு பார்த்தது...ssh.....முடியல.....(வடிவேல் மாதிரி reaction பண்ணியது...)
வலுவான எதிரி வேண்டும் என்று வெளியே போய் ஒரு பாம்பை நண்பனாக்கி கொண்டது...பிறகு அதனிடம் என்னுடன் வா.....உனக்கு எளிதில் உணவு கிடைக்கும்...ஆனால் என்னுடைய எதிரியை மட்டும் தான் சாப்பிடனும்....என் நண்பர்களை தொட கூடாது என்று ஒப்பந்தம் செய்தது....
பாம்புக்கு வசதி தானே.....ஒவ்வொரு தவளை யாக....காலி பண்ணியது....நம்ம தவளையும்....எதிரிகள் ஒழிகிற சந்தோசத்தில....குவார்ட்டர ராவா அடிச்சு குஜாலா இருந்தது....
ஒரு நாள்....அதனோட எல்லா எதிரிகளும் முடிந்த பிறகு.....பாம்பை கூப்பிட்டு....உங்கிட்ட பினிஷிங் பக்காவா இருந்திச்சு.....உன்னோட நேர்மை எனக்கு பிடிச்சிருந்தது...நம்ம சங்கத்த கலைச்சிரலாம்....நீ கிளம்பு என்றது....அதெப்படி...???
நீதான் எனக்கு நண்பன்....நான் இப்ப ரொம்ப சுக வாசி ஆயிட்டேன்....என்னால வெளியே போக முடியாது...என்று...அதனோட நன்பர்கள ஒவ்வொன்றா சாப்பிட ஆரம்பிச்சது....கண்ணு முன்னாடியே...உயிருக்கு உயிரான நன்பர்கள இழக்கும் போது......குவார்ட்டர ராவா அடிச்ச நம்மாலாள....ஒரு பெக்-க கூட ஊறுகாய் வெச்சுகிட்டு குடிக்க முடியல....
கடைசி நாள் பாம்பு அதனிடம் வந்து....இன்னைக்கு நான் வாழனும் என்றால்....அது நண்பனான உன்னால் தான் முடியும்....இன்னைக்கு நீதான் எனக்கு உணவு என்றது.....நம்மாளும்....அந்த முடிவில் தான் இருந்தார்.....எல்லாம் போன பிறகு இனி தனித்து வாழ்ந்து என்ன பயன்...??? இனி என்ன நடந்தது என்பதை நீங்களே அறிவீர்கள்....
கூடா நட்பு கேடாய் முடியும்... என்பதற்கு மேலே சொன்ன நீதி கதையை படித்து இருப்பீர்கள்.
சில கெட்ட எண்ணம் கொண்டவர்களிடம் நட்புக் கரம் நீட்டாதீர்கள். என்னுடைய வாழ்க்கையில் நான் இதுபோன்று நட்புக்கரம் நீட்டி, நம்பி, தற்போது நொந்து நூலாகி போய் உள்ளேன். கெடுகெட்ட அந்த நட்பை நினைத்து, அந்த கெட்ட எண்ணம் கொண்டவனை நினைத்து புலம்பிக் கொண்டிருக்கிறேன்... அவனை சபித்துக் கொண்டிருக்கிறேன்.
No comments:
Post a Comment