தயக்கம் ஏன்...?
தயங்கி தயங்கி ஒதுங்கினால் நிச்சயம் நீங்கள் ஓரம் கட்டப்படுவீர்கள்.
காலத்திற்கு ஏற்ப வேஷம் போட மறுத்தால் உங்களால் ஒரு அடி கூட முன்னேற முடியாது.
எதுவுமே தெரியவில்லை என்றாலும் எல்லாமே என் கை விரல் நுனியில் என்று சொல்லும் தைரியம் உங்களுக்கு கண்டிப்பாக இருக்க வேண்டும்.
இல்லையெனில் வாழ்க்கையில் உங்களுக்கு வளர்ச்சி கிடைக்கவே கிடைக்காது.
கூச்ச சுபாவம் இருந்தால் நிச்சயம் உங்களுக்கு தோல்விதான்.
பொய் பித்தலாட்டம் இவையெல்லாம் தற்கால முன்னேற்றத்திற்கு அவசியம்.
கை தூக்கி விடுபவர்களை கொஞ்சமும் தயங்காமல் கல் மனதுடன் வீழ்த்தும் குணம் உங்களிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
இல்லையெனில் நீங்கள் ஒரு இஞ்ச் கூட முன்னேற முடியாது.
சமீபத்திய நாட்டு நடப்புகள் மூலம் கிடைத்த படிப்பினை இது.
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment