ஊடக முதலாளிகளை ஏமாற்றும் அரை வேக்காடுகள்......
அவுட்புட் எடிட்டர்(Output Editor)......அப்படியன்னா என்ன...?
அன்கட் பைட் (uncut Byte).....அது என்ன ?
மாலாலாவை தெரியுமா....அது யாரு?
இந்த கேள்விகள் எல்லாம் அண்மையில் தொடங்கப்பட்ட ஒரு தொலைக்காட்சியின் செய்திப்பிரிவுக்கு நேர்முக தேர்வுக்கு சென்றவரிடம் கேட்டகப்பட்டவை...
நேர்முக தேர்வில் கலந்து கொண்டவருக்கு நிச்சயம் பதில் தெரியவில்லை...
வேலை கிடைக்கப் போவதில்லை என்று உறுதியாக நம்பினார் அந்த நபர்..
ஆனால் என்ன ஆச்சரியம்.....40 ஆயிரம் ரூபாய் மாத சம்பளத்தில் உடனே பணியில் சேரும்படி அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.
வாய்ப்பு அளிக்கப்பட்டது. நேர்முக தேர்வில் கலந்து கொண்டவருக்கு ஒன்றுமே புரியவில்லை...
ஆனால், செய்திப்பிரிவில் தலைமை பொறுப்பில் இருந்தவருக்கு இப்படிப்பட்ட ஆட்கள்தான் தேவைப்பட்டது.
காரணம்....
அவரது பதவிக்கு யாரும் போட்டியாக வந்துவிடக் கூடாது... திறமைசாலிகளை, அனுபவசாலிகளை பணிக்கு எடுத்துவிட்டால், தன்னுடைய, திறமை வெட்ட வெளிச்சத்திற்கு வந்துவிடும், வெளிப்பட்டுவிடும் என்ற அச்சம் அந்த நபருக்கு...
எனவே,
சுறுசுறுப்பாக வேலை செய்பவர்கள்....
உண்மை உழைப்பாளிகள்....
செய்தியை பல்வேறு கோணங்களில் அளிக்கும் திறமை பெற்றவர்கள்...
மற்ற தொலைக்காட்சிகளில் வருவதற்கு முன்பே, முதலில் தான் பணிபுரியும் நிறுவனத்தில் செய்தி வந்துவிட வேண்டும் என துடிப்பவர்கள்...
மற்றும்,
விஷயம் தெரிந்தவர்களை பக்கத்தில் அவர் சேர்த்துக் கொள்வதே இல்லை...
செய்தி எழுத தெரியவில்லை என்றாலும் பராவயில்லை...
தனக்கு அடங்கி நடந்து செல்பவர்களை உடனே பணியில் சேர்த்து கொள்வதுதான் அந்த தலைமை செய்தி ஆசிரியர் வழக்கமாக கொண்டிருக்கிறார்...
மேலே கூறிய வார்த்தைகள் கற்பனையாக நீங்கள் நினைக்கலாம்...அப்படியும் இருக்கலாம்....இருக்காமல் போகலாம்...(கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது அல்லவா)
ஆனால், தற்போது விஷுவல் மீடியாவில் இந்த போக்குதான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது...
ஊடக முதலாளிகளை ஒரு கும்பல், தவறான வழியில் அழைத்து சென்றுக் கொண்டிருக்கிறது...
பணத்தை பற்றி கவலைப்படாமல், தொலைக்காட்சி முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என ஆசையில், ஊடக முதலாளிகள் ஆர்வம் செலுத்தும்போது, அவர்களின் ஆசையை உன்னிப்பாக கவனிக்கும் சிலர், தங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்து விட்டதாக நினைத்து உடனே காரியத்தில் இறங்கி விடுகின்றனர்.
ஊடக முதலாளிகளின் பணத்தை எப்படி வீண் வழியில் செலவழிக்க முடியுமா...அப்படி செய்கிறார்கள்....செய்தி வழங்குகிறோம் என்ற பெயரில் பணத்தை பிடுங்கி செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள்...
விமானத்தில் பறப்பது.....நட்சத்திர விடுதிகளில் அறைகளை போட்டு தங்குவது....அனைத்து வசதிகளையும் அனுபவிப்பது.....பல லட்சம் ரூபாய் மாத சம்பளம் வாங்கிக் கொண்டு, உல்லாச வாழ்க்கை அனுபவிப்பது....
ஒரு வரியில் செய்தியை சொல்லிவிட்டு, அலுவலகத்தில் நேரத்தை வீணாக செலவழிப்பது இதுதான், தலைமை பொறுப்பில் இருக்கும் ஒருசிலரின் வாடிக்கையாக தற்போது இருக்கிறது....
அதுவும் ஒருசில குறிப்பிட்ட தொலைக்காட்சிகளில் மட்டும்தான் இந்த போக்கு இருந்து வருகிறது....
புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தொலைக்காட்சிகளில் மட்டும்தான், இந்த அரை வேக்காடுகளின் ஆதிக்கம் தலைதூக்கி உள்ளது...
இதற்கு எப்போது விடிவு கிடைக்குமோ......நிச்சயம் யாருக்கும் தெரியாது....
ஆனால்....
இயற்கை மேல் நம்பிக்கை கொள்பவர்களுக்கு, நிச்சயம் காலம் ஒருநாள் மாறும் என்பது தெரியும்....
ஊடக முதலாளிகள் விழித்துக் கொள்ளும்போது, அரை வேக்காடுகளின் வேடம் வெளிச்சத்திற்கு வரும்...
அப்போது, ஒதுங்க இடம் கிடைக்காமல் அலைவார்கள்....
காலம் அப்படிதான் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறது....
உண்மை உழைப்பாளிகளே...
பொறுமையை கடைப்பிடியுங்கள்....
பொறுமையாளர்கள் நிச்சயம் வெற்றியை பெற்றிருக்கிறார்கள்....
வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறார்கள்....
விரைவில், அரை வேக்காடுகளின் அட்டகாசங்கள், ஒருநாள் நிச்சயம் அடங்கிவிடும்...
இதற்கு, அண்மை கால நிகழ்வுகளே சாட்சிகளாக உள்ளன...
No comments:
Post a Comment