லைக்...லைக்....லைக்...லைக்கோ லைக்....!
நான் காசி தியேட்டரில் நயன்தாரா திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
லைக்.
நான் தி.நகர் ரங்கநாதன் தெருவில் கூட்ட நெரிசலில் சிக்கி வெளியே வந்தேன்.
லைக்.
திருவல்லிக்கேணியில் லேசான தூறல்.
லைக்.
நான் அரசு பேருந்தில் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருக்கிறேன்.
லைக்.
நான் ஓட்டலில் மசால் வடை சாப்பிட்டேன்.
லைக்.
ஹி.....ஹி....!
அதற்கும் ஒரு லைக்
இப்படி முகநூலில் சிலர் குப்பையாக கிறுக்குத்தனமாக எதை எழுதினாலும் லைக் போட ஒரு கூட்டம் கியூ கட்டி நிற்கிறது.
இதன்மூலம் ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது.
நாட்டில் நிறைய பேர் இன்னும் வேலை வெட்டி இல்லாமல் என்ன செய்வதே என்று தெரியாமல் இருக்கிறார்கள்.
முகநூல் பலரால் இன்னும் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை.
அதன் முக்கியத்துவம் பலருக்கு இன்னும் விளங்கவில்லை.
இது மட்டும் உறுதி.
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment