வலிமையான நம்பிக்கை....!
வழக்கம்போல் இந்த வாரம் ஜூம்மா தொழுகைக்கு சேப்பாக்கம் மஸ்ஜித்-எ-குத்தூஸியாவிற்கு சென்றிருந்தேன்.
இமாம் சாஹிப் எளிமையான உருது மொழியில் ஜூம்மா உரை நிகழ்த்தி கொண்டிருந்தார்.
இஸ்லாத்தில் மூட நம்பிக்கைகள் இல்லை, இதை முஸ்லிம்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார் அவர்.
முஹரம், ஸபர் மாதங்களில் நல்ல செயல்களை செய்து சரியல்ல என தப்பான எண்ணங்கள் முஸ்லிம்கள் மத்தியில் இருப்பதை சுட்டிக் காட்டி பேசிய இமாம் சாஹிப், நமது நம்பிக்கையை வலிமையானதாக மாற்றி கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இமாம் சாஹிப் வலிமையான நம்பிக்கை குறித்து உரை நிகழ்த்தி கொண்டிருந்தபோது, பக்கத்தில் அமர்ந்திருந்த நபரை கவனித்தேன்.
அவர் வாட்ஸ்-அப்பில் சார்ட் செய்து கொண்டிருந்த காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
பள்ளிவாசலில் ஜூம்மா உரை கேட்பதை விட, வாட்ஸ்-அப், முகநூலில் அதிக கவனம் செலுத்தும் இதுபோன்ற சில சகோதரர்களை என்ன செய்வது.
எப்படி வலிமையான நம்பிக்கை முஸ்லிம்கள் மத்தியில் மலரும்
புரியாத கேள்வி....!
No comments:
Post a Comment