உள்ளத்தில் நல்ல உள்ளம்...!
போலியான உலகம்.
போலியான மனிதர்கள்.
வேஷம் போடும் உறவுகள்.
பாசாங்கு காட்டும் நட்பு வட்டாரங்கள்.
இப்படிப்பட்ட சுழ்நிலையில் ஒரு மனிதன் எப்படி அமைதியாக வாழ முடியும்.
மனிதனுக்கு வாழ்க்கையில் எப்படி மகிழ்ச்சி கிடைக்கும்.
இந்த கேள்விகளுக்கு பதில் இதுதான்.
மனதில் தோன்றும் அழுக்குகளை அவ்வப்போது அகற்றி விட்டு, எப்போதும் திறந்த மனதுடன் பிறருக்கு உதவும் எண்ணத்தை வளர்த்து கொண்டால் வாழ்க்கையில் ஓரளவுக்கு நிம்மதி கிடைக்கும்.
பிறருக்கு உதவி செய்து பாருங்கள், அதில் கிடைக்கும் மகிழ்ச்சியே தனிதான்...
பிறருக்கு செய்யும் சிறிய உதவி கூட நமக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தும்.
அதனால் உறவுகளை வளர்க்கும்.
முடிந்த அளவிற்கு முன்கோபம், அவசரம் போன்ற தேவையில்லாத பல பண்புகளை குறைத்து கொண்டு வாழ்க்கையை அனுபவிக்க ஆரம்பித்து விட்டாலே உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி தொற்றிக் கொள்ளும்.
உள்ளத்தில் நல்ல உள்ளம் அமைதியை இழக்காது.
இந்த உலக வாழ்க்கையே கொஞ்ச காலம்தான்.
அதில், போட்டி, பொறாமை, உள்குத்து, வெளிகுத்து போன்றவை நமக்கு எதற்கு ?
ஒன்றுமில்லை.
தூக்கம் வரலே, அதனால் ஏதேதோ சிந்தனைகள்.
அவ்வளவுதான்.
No comments:
Post a Comment