Thursday, October 26, 2023

தேசப்பற்று.....!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது, இரு நாடுகளையும் சேர்ந்த #இஸ்லாமியர்கள் மூன்று விதமாக முடிவெடுத்து இன்றுவரை வாழ்ந்து வருகின்றனர்.

#முதலாமவர்:- 

பாகிஸ்தானை தாய்நாடாக ஏற்று, இந்தியாவைப் பிரிந்து சென்று அங்கு குடிபெயர்ந்தவர்கள்.

#இரண்டாமவர்:- 

பிரிவினையின் போது பாகிஸ்தானில் வாழ்ந்தவர்கள், அதையே தங்கள் தாய்நாடாகக் கொண்டு, அங்கேயே இன்றுவரை வாழ்ந்து வருபவர்கள்.

#மூன்றாமவர்:- 

தாங்கள் இந்தியாவில் சிறுபான்மையாக இருந்தாலும், இந்தியாவிலேயே இருப்போம் என்று இங்கேயே இருப்பவர்கள் மற்றும் பிரிக்கப்பட்ட பாகிஸ்தானை விட்டு எல்லை கடந்து வந்து, இந்தியாவையே தன் தாய்நாடாக நினைத்து இங்கு குடியேறிவர்கள்.

இந்தியாவில் இன்று வரை வாழ்ந்துவரும் இஸ்லாமியர்கள அனைவரும் மூன்றாம் வகையினர். அவர்கள் காலம் காலமாக இந்தியாவையே தங்கள் தாய்மண்ணாகக் கருதி வாழ்பவர்கள். 

அவர்களது தேசப்பற்றை, பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக, பாகிஸ்தான் பிரிவினையின் போதே உலகுக்கு உணர்த்திவிட்டனர். 

கேவலம் ஒரு கிரிக்கெட் விளையாட்டின் தோல்விக்காக, அவர்களது தேசப்பற்றை கொச்சையாக்குவது ஈனத்தனமானது.

அயோக்கியத்தனமானது.

அவர்கள் இங்கு தங்களை இந்தியர்களாக இன்னும் எத்தனை ஆண்டுகள் நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும்..?

அவர்கள் முகமது அலி ஜின்னாவின் அழைப்பையும் துச்சமாக கருதியவர்கள். ஹைதர் அலி, திப்பு சுல்தானின் சாரம் கொண்டவர்கள். 

வேண்டுமானால், நீங்களெல்லாம் இஸ்லாமியர்களின் தியாகங்கள் மீது உரசிப்பார்த்து உங்கள் தேசப்பற்றை நிரூபித்துக் கொள்ளுங்கள்.

இறுதியாக, இந்தியாவுக்காக விளையாடும் வேறெவரைவிடவும் முகமது ஷமி ஒரு மிகச்சிறந்த தேசப்பற்றாளன். அதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை.

பின்குறிப்பு:- 2007 - T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்தி, கோப்பையை முதல்முறையாக கைப்பற்றி இந்தியா சாதனை படைத்தது. அந்த போட்டியின் ஆட்ட நாயகன் #Irfan_Pathan.

- முகநூலில் தோழர் கார்த்திகேயன் தேவதாஸ்.

No comments: