முஸ்லிம்களின் மனிதநேயம்.....!
மழைக் காலங்களில் மட்டுமல்லாமல் பேரிடர் காலங்களில் முஸ்லிம்கள் மனிதநேய சேவைகளில் ஈடுபடுவது அனைவரும் அறிந்ததே.
சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டிய கனமழையால் பாதிப்புகள் அதிகமாகி வந்த நிலையில், இந்த முறையும் முஸ்லிம்கள் தங்களது சமூக, மனிதநேய சேவையில் சிறிதும் குறை வைக்கவில்லை.
சென்னையில் உள்ள பல பள்ளிவாசல்கள் அனைத்து சமுதாய மக்களுக்கும் திறக்கப்பட்டு, தங்க இடம் அளிக்கப்பட்டது. அத்துடன் சில பள்ளிவாசல்களில் இலவச உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்மூலம் முஸ்லிம்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் அன்பானவர்கள், ஆபத்து காலங்களில் உதவிக்கரம் நீட்டும் தன்மை கொண்டவர்கள் என்பது மீண்டும் ஒருமுறை உறுதியாக நிரூபிக்கப்பட்டது.
இஸ்லாமிய நெறிமுறைப்படி மனித சமுதாயத்தை நேசிக்கும் இத்தகைய நல்ல உள்ளகளை தான், சிலர், வேண்டும் என்றே வெறுப்போடு பார்க்கிறார்கள்.
வேண்டாம் இந்த வெறுப்பு....!
அனைவர் மீதும் அன்பு செலுத்தி சகோதரத்துவ மனப்பான்மையுடன் இனி தொடர்ந்து பயணிப்போம்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment