உலக தேநீர் தின வாழ்த்துகள்...!
இன்று (15.12.2023) உலக தேநீர் தினம்.
இந்த இனிய நாளில் தேநீர் அருந்தும் மற்றும் அருந்தாமல் இருக்கும் அனைவருக்கும் எமது வாழ்த்துகள்.
தேநீர் ஒரு அற்புதமான எனர்ஜி பானம் என்றே கூறலாம். காலையில் எழுந்தும் ஒரு கப் தேநீர் அருந்துவது உடலுக்கு மட்டுமல்லாமல், மனதுக்கும் உற்சாகத்தை தரும்.
குறிப்பாக, நம் மீது உண்மையான அன்பு செலுத்தும் தோழர்கள், தோழிகள் தரும் தேநீர் நிச்சயமாக தனி சுவையாக இருக்கும்.
எழுத்துப் பணியில் உள்ளவர்களுக்கு தேநீர் ஒரு புத்துணர்ச்சியை தரும் பானமாகும்.
ஒரு கப் தேநீர் அருந்திவிட்டு மீண்டும் எழுத ஆரம்பித்தால் சிந்தனைகள் சிறகடித்து பறந்து வார்த்தைகள் மளமளவென வந்து விழும்.
குடும்பங்களில் உறவுகள் மேம்பட, தேநீர் எப்போதும் உறவு பாலமாக இருந்து வருகிறது என உறுதியாக கூறலாம்.
படித்து விட்டு வேலை கிடைக்காத இளைஞர்களில் சிலர் தேநீர் கடை ஆரம்பித்து இன்று பல நகரங்களில் கிளைகளை திறந்து நல்ல வருவாய் ஈட்டி வருகிறார்கள்.
தேநீர் சிலருடைய வாழ்க்கையில் சிறப்பான மாற்றங்களை கொண்டு வந்துள்ளது என்பது மறைக்க முடியாத உண்மை.
ஆக,
வாங்க டீ சாப்பிடலாம்....!
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment