Saturday, October 24, 2026

பாஜகவுடன் கூட்டணி கிடையாது - ஆதவ் அர்ஜுனா திட்டவட்டம்...!

 பாஜகவுடன் எப்பொழுதும் எந்தக் காலத்திலும் உறவும் கிடையாது, கூட்டணியும் கிடையாது

த.வெ.க. மூத்த தலைவரும் பொதுப்பணித்துறை அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா திட்டவட்டம்

சென்னை, அக்.25- மதவாத கட்சியான பாஜகவுடன் தமிழக வெற்றிக் கழகம் எந்த காலத்திலும் கூட்டணி வைத்துக் கொள்ளாது என்று த.வெ.க. மூத்த தலைவரும் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சென்னையில் கடந்த 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முஸ்லிம் யூத் லீக் சார்பில் நடைபெற்ற கண்ணியமிகு காயிதே மில்லத் வழியில் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசினார். அப்போது இ.யூ.முஸ்லிம் லீகின் பெருமைகளை எடுத்துரைத்து பேசிய அமைச்சர், பாஜகவையும் கடுமையாக சாடினார். ஆதவ் அர்ஜுனா ஆற்றிய உரையின் விவரம் வருமாறு :

பாஜகவுடன்  கூட்டணி கிடையாது :

 மறைந்த திமுக தலைவர் கலைஞர் அவர்கள் 1998 முதல் 2004 வரை பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தார்.   இதேபோன்று மறைந்த அதிமுக பொதுச் செயலாளர் அம்மா ஜெயலலிதா அவர்களும் பாஜகவுடன் கூட்டணி வைத்து பின்னர், 2014-ல் எந்தக் காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கூறினார்.   எங்க தலைவர் விஜய் அவர்கள் நூறு   வருடமானாலும் சரி, நாங்கள் உயிரோடு இருக்கும் வரை அடுத்த 100 வருடங்களோ அல்லது 200 வருடங்களோ தமிழக வெற்றிக் கழகம் எந்தக் காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி வைக்காது.   இந்த உறுதியை நீங்கள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். 

திமுக கூட்டணியால் பயன் இல்லை :

திமுகவுடன் 60 வருடங்களுக்கும் மேலாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டணி வைத்து இருந்தது. கண்ணியத்திற்குரிய அண்ணல் காயிதே மில்லத் அவர்களின் குறிக்கோள் என்ன. அதற்குப் பிறகு வந்த முஸ்லிம் லீக் தலைவர்களின் குறிக்கோள் என்ன. இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இருந்தோ, அல்லது இஸ்லாமியர்களால் உருவாக்கப்பட்ட ஒரு இஸ்லாமிய கட்சியில் இருந்தோ, இ.யூ.முஸ்லிம் லீகை மட்டும் பேசவில்லை. இஸ்லாமிய சமுதாயத்தில் இருந்து உருவாக்கப்பட்ட எவ்வளவோ கட்சிகள் உண்டு. முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் குறிக்கோள் ஒன்று. 

என்ன குறிக்கோள். பிறப்பால் அனைவரும் சொல்லக் கூடிய அரசியலமைப்பில் மதப் பெரும்பான்மை மூலம் அரசியலை உருவாக்கக் கூடாது. மதப் பெரும்பான்மை மூலம் உருவாக்கப்படும் அரசியல் பெரும்பான்மைக்கான அரசியலாக மாறினால் நாடு எப்பொழுதும் அமைதியாக இருக்காது.   இதுதான் அம்பேத்கர் புரட்சியாளர் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் அமைப்பு சட்டம்.   இதில் தான் தமிழ்நாடு எப்போதும் உறுதியாக இருக்கும். இந்தியாவில் எங்க வேணாலும் பாஜக ஜெயிக்கலாம். ஆனால் தமிழகத்தில் ஜெயிக்கப் போவதுமில்லை, ஜெயிக்கக்கூடிய வரலாறும் இல்லை.   இதை உருவாக்கியது நமது தலைவர்கள். 

முதலமைச்சர் ஜோசப் விஜய் உறுதி :

அதேவழியில் நமது முதல்வரமைச்சர் அண்ணன் விஜய் அவர்கள் எப்போதும் உறுதியாக இருப்பார். எந்தக் காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதில் எப்பொழுதும் உறுதியாக இருப்பார்.  தமிழக வெற்றிக் கழகம் பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளாது. இதை இஸ்லாமிய சகோதர சகோதரிகளே எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இதனால் நாங்கள் சிறை செல்லலாம். எங்களுடைய உயிரோ போனாலும் எங்கள் கொள்கையில் நாங்கள் உறுதியாக இருப்போம். தமிழக வெற்றிக் கழகம் கொள்கை ரீதியான பயணத்தில் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கும். எனெனில் மூன்று வருடத்திற்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட சி.ஜோசப் விஜய் அவர்களின் த.வெ.க.வின் வெற்றி, ஒரு சிறுபான்மை சமுகத்தின் வெற்றியாகும்.

சினிமாத் துறையில் விஜய் விஜய் என்று சொன்ன ஒரு கலாச்சாரத்தை, மக்கள் அனைவரும் கூப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, ஒரு தைரியம் வேணும். வேட்பாளர் பெயர் அறிவிக்கும் போது, அவர் பெயரை சொல்லும்போது, அவர் சொன்னார், என்னுடைய பெயர் சி. ஜோசப் விஜய.   அதற்கான அறைக்கூவல் என்னவென்றால், நான் சிறுபான்மை சமூகத்தில் பிறந்திருந்தாலும், நான் முதலமைச்சர் வேட்பாளராக நின்றால், தமிழகத்தில் இருக்கக்கூடிய ஒட்டுமொத்த மக்களும் எனக்காக ஓட்டு போடுவாங்க.   அதன் அர்த்தம் என்னவென்றால், நீங்கள் மதப் பெரும்பான்மையை வைத்து தமிழகத்துல அரசியல் செய்ய முடியாது. இதற்கு மேல் என்ன கொள்கை வேண்டும் ஒரு முதலமைச்சருக்கும். 

தமிழகத்தில் புதிய வரலாறு :

ஒரு சிறுபான்மையின சமுதாயத்தில் இருந்து கடந்த 75 ஆண்டுகளில் தமிழகத்தில் யாராவது முதலமைச்சராக வந்திருக்க முடியுமா. அல்லது உண்மையான அதிகாரம் கொடுத்த ஒரு தலைமையை நாம் பார்த்து இருக்கிறோமா. பண்ணையார் மனப்பான்மை தான் இருந்து வந்தது. எங்களுக்கு பிரச்சனைன்னா உங்க வீட்டுக்கு வந்து நாங்க மனு கொடுக்கணும். ஆனால் நாங்களே அமைச்சராகி எங்க சமூகத்தை நாங்களே பாதுகாத்துகிட்டா நீங்க வேலைக்கு போயிட்டீங்க. நீங்க வந்து காசு வாங்கிட்டீங்க. பணத்தைப் பற்றி யார் பேசுறது. திமுக தலைவர் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்போ பேசிக் கொண்டு இருக்கிறார். 

த.வெ.க. அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம்பெற்று இருப்பது என்பது,  திருப்பித் திருப்பி நாங்கள் பதிவு பண்ணுவோம்.  தமிழக அமைச்சரவையில் இ.யூ.முஸ்லிம் லீக் மற்றும் விசிக இடம்பெற்றபோது, இ.யூ.முஸ்லிம் லீக் தலைவர் பெரியவர் காதர் மொகிதீன் அவர்களிடம் நமது முதலமைச்சர் சொன்னார், இன்று தான் எனது மனம் நிறைவாக இருக்கும். அதன் அர்த்தம் என்ன. இ.யூ.முஸ்லிம் லீகில் இருந்து ஷாஜஹான் அவர்கள் அமைச்சராக வந்து இருப்பது, அவரது தனிப்பட்ட அமைச்சர் அதிகாரம் கிடையாது. இது ஒட்டுமொத்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கான அமைச்சரவை. 

காயிதே மில்லத் கனவு நிறைவேற்றம் :

அண்ணல் காயிதே மில்லத் அவர்களின் கனவுடைய வெற்றி.  75 வருட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பயணத்தின் வெற்றி. கேரளாவில் அமைச்சரவையை உருவாக்கி முஸ்லிம் லீக் இடம்பெற்றார்கள். ஆனா தமிழ்நாட்டில் ஏன் அமைச்சரவையில் முஸ்லிம் லீக் இடம்பெறவில்லை. ஆனால் தற்போது நாங்களும் தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுவிட்டோம் என்று அகில இந்திய தலைவர்களுக்கு தமிழக முஸ்லிம் லீக் தலைவர்கள் சொன்னார்களே, இதுதான் உண்மையான மாற்றம்.  இந்த மாற்றதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். 

 இந்த பண்ணையாரக இருப்பவர்கள் திடீரென கூலி தொழிலாளிகளை மதிக்க மட்டார்கள். அரசியல் வரலாறு என்பது என்ன பண்னாருக்கும், கூலி தொழிலாளிக்கும் நடந்ததுதானே அரசியல் வரலாறு.   மதப் பெரும்பான்மைவாதிகளுக்கும், சிறுபான்மையா இருக்கக்கூடிய ஒருத்தர் படிச்சிட்டு வந்தாரே, அப்துல் கலாம் படிச்சிட்டு வந்தாரே, அவர் என்ன தீவிரவாதியா. அவர் மட்டும் அக்னியை கண்டுபிடிக்காமல் இருந்தால், இந்த நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருந்திருக்கும்.  இந்த நாட்டின் பாதுகாப்பை உருவாக்கியது அப்துல் கலாம் என்கின்ற ஒரு இஸ்லாமியர்.   இனிமேல் இஸ்லாமியர்களுக்கு எதிராக லேபிள்களை குத்த முடியாது. 

மீண்டும் மீண்டும் உறுதி :

இந்த நாட்டை பாதுகாக்கக்கூடிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு அரசியல் அதிகாரம் தமிழ்நாட்டில் இல்லாமல் இருந்தது, அதை ஏற்படுத்திக் கொடுத்தது எங்களுடைய அண்ணன் சி. ஜோசப் விஜய் அவர்கள்.  இது வரலாற்றில் எப்போதும் எழுதப்படும். இஸ்லாமிய சகோதர சகோதரரிகளே  நாங்கள் திரும்பவும் சொல்கிறோம். நாங்கள் எப்பொழுதும் பாஜகவுடன் எந்தக் காலத்திலும் உறவும் கிடையாது. கூட்டணியும் கிடையாது. உறுதியாக சொல்கிறோம். 

இவ்வாறு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினார்.

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

==========================

No comments: