நம்பிக்கை....!
இந்த வாரம் ஜூம்மா தொழுகைக்கு சென்னை ரிச் ஸ்டீட்டில் உள்ள குலாம் உசேன் பள்ளிவாசலுக்கு சென்றிருந்தேன்.
இமாம் சாஹிப் ஜூம்மா உரையை, எளிய உருது மொழியில் அனைவருக்கும் புரியும் வகையில் செய்தார்.
ஏக இறைவன் மீது மக்கள் எப்படி உறுதியாக நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதை இமாம் சாஹிப் விளக்கிய விதம் மனதை கவர்ந்தது.
வாழ்க்கையில் நாம் சந்திக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் நிச்சயம் ஒரு தீர்வு என உறுதியாக நம்பி, ஏக இறைவனின் அருளை எதிர்பார்க்க வேண்டும் என்றார் அவர்.
போலியான நம்பிக்கை, பகுத்தறிவுக்கு இடம் தராத செயல்கள் மூலம் நமது பிரச்சினைகளுக்கு எப்போதும் தீர்வு கிடைக்காது என இமாம் சாஹிப் கூறியது மனதை யோசிக்க வைத்தது.
ஏக இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து உங்கள் வாழ்க்கைப பயணத்தை தொடருங்கள்.
துன்பங்கள், துயரங்கள் வரிசையாக நின்றாலும் அவற்றை நீங்கள் துணிவுடன் சந்தித்து தூள் தூளாக்கி விடலாம் என்றார் இமாம் சாஹிப்.
எவ்வளவு உண்மையான, நம்பிக்கையை ஊட்டும் வார்த்தைகள்.
இதுபோன்ற ஜூம்மா உரைகள் ஒவ்வொரு பள்ளிவாசல்களில் இமாம்கள் நிகழ்த்தினால் பயன் உள்ளதாக இருக்கும் அல்லவா....!
No comments:
Post a Comment