* திருச்சியில் வரலாற்று சிறப்பு மிக்க மாநில பொதுக்குழு கூட்டம்...!
* இராமநாதபும் தொகுதி வேட்பாளராக நவாஸ் கனி மீண்டும் தேர்வு....!
*அனைவரும் தேர்தல் நிதி வழங்க வேண்டும்...!
*தேர்தல் பிரச்சாரத்தில் மிகவும் கவனம் தேவை.....!
*விமர்சனங்களுக்கு தனது சிறப்பான பணிகள் மூலம் பதிலடி தந்த நவாஸ் கனி ...!
*எல்லோருக்கும் சொந்தமான நாடு இந்தியா ....!
*சட்டமன்றத் தேர்தலுக்கும் இப்போது பணி தொடங்க வேண்டும்...!
மாநில பொதுக்குழு சிறப்பு கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் ஆற்றிய நிறைவுரை...!
சென்னை,மார்ச்.03- திருச்சியில் நடைபெற்ற இ.யூ.முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு கூட்டத்திற்கு தலைமையேற்ற தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், கூட்டத்தின் இறுதியில் நிறைவுரையாற்றினார். அதன் விவரம் வருமாறு:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு சிறப்பு கூட்டத்திற்கு வருகை தந்த மாநில, மாவட்ட மற்றும் பல்வேறு சார்பு அணி நிர்வாகிகள், சிறப்பு அழைப்பார்கள் ஆகிய எல்லோருக்கும் எனது சார்பிலும் மாநில நிர்வாகிகள் சார்பிலும் இதயம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ,மாநில பொதுக்குழு கூட்டம், மிகவும் குறுகிய காலத்தில் திருச்சியில் நடத்துவது என முடிவு எடுத்தபோது, அதனை மிகச் சிறப்பாக செயல்படுத்திய மாநில பொதுச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், மற்றும் மாநில நிர்வாகிகள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் கூறிக் கொள்கிறேன்.
மிகக் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநில பொதுக்குழு சிறப்பு கூட்டத்தை, திருச்சி மாவட்டத்தில் சிறப்பாக நடத்திய திருச்சி மாவட்ட நிர்வாகிகள் அனைவருக்கும், மாநில நிர்வாகிகள் சார்பில் என்றுடைய பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வரலாற்று சிறப்பு மிக்க பொதுக்குழு கூட்டம்:
திருச்சியில் நடந்த இந்த மாநில பொதுக்குழு சிறப்பு கூட்டம், பல்வேறு அம்சங்களில், மிகச் சிறப்பான பொதுத்குழு கூட்டம் என்று உறுதியாக கூறலாம். இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் அனைவரின் ஒப்புதலோடும், அனைவரின் ஆதரவோடும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் முதல் தொகுதியாக இராமநாதபும் தொகுதியை இ.யூ.முஸ்லிம் லீகிற்கு ஒதுக்கிய திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் மற்றும் தொகுதி பங்கீட்டு குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும் நன்றியையும் கூறிக் கொள்கிறேன். இதன்மூலம் திருச்சியில் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு பொதுக்குழு சிறப்பு கூட்டம் நடத்த வாய்ப்பு நமக்கு கிடைத்தது.
நவாஸ் கனி மீண்டும் தேர்வு:
முதல் தொகுதியாக இ.யூ.முஸ்லிம் லீகிற்கு ஒதுக்கப்பட்ட இராமநாதபுரம் தொகுதியில், மீண்டும் போட்டியிட தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியே மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அண்மையில், திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள நாம் நேரில் சென்று, அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து கூறினோம். அப்போது, நவாஸ் கனி முதலமைச்சருக்கு வாழ்த்து கூறி சால்வை அணிவித்தபோது, இராமநாதபுரம் தொகுதியின் வேட்பாளரான உங்களுக்கு எனது வாழ்த்துகள் என நவாஸ் கனிக்கு முதலமைச்சர் வாழ்த்து கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தளபதி மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்பு மற்றும் அவரது வாழ்த்துகளை இந்த பொதுக்குழு தற்போது அங்கீகாரம் செய்து உலகிற்கு அறிவித்துள்ளது
புதிய வரலாறு படைக்க வாழ்த்துகள்:
கேரளாவில் உள்ள பத்திரிகைகள் இராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனி நின்று, புதிய வரலாறு படைக்கப் போகிறார் என தகவல்களை வெளியிட்டு வருகின்றன. இந்த தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி, போட்டியிட போகிறார் என்றும், அவரை எதிர்த்து நவாஸ் கனி போட்டியிட்டு, புதிய வரலாறு படைக்கப் போகிறார் என்றும் கேரள பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
அது உண்மை தான். இராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனி நிற்பது மோடியை எதிர்த்து, அவரது ஆட்சியை எதிர்த்து, பாஜகவை எதிர்த்து, பாசிச கொள்கைகளை எதிர்த்து, மக்கள் விரோத பாஜக ஆட்சியை எதிர்த்து நிற்கும் நவாஸ் கனி, நிச்சயம் வெற்றி பெற்று சாதனை படைக்க உள்ளார். அத்துடன், அடுத்து வரும் ஒன்றிய ஆட்சியில் அவர் இடம்பெற போகிறார். அதற்காக நாம் அனைவரும் துஆ செய்ய வேண்டும். வருகின்றன ரமலான் மாதத்தில் தொடர்ந்து துஆ கேட்க வேண்டும். துஆக்கள் எப்போது தோற்காது. துஆக்கள் நவாஸ் கனியை வெற்றி கனி பறிக்கும் வகையில் ஆற்றல் செய்து விடும்.
தேர்தல் நிதி வழங்க வேண்டும்:
இந்த பொதுக்குழு சிறப்பு கூட்டத்தில் எடுக்கப்பட்ட அனைத்து முடிகளும் புதிய சரித்திரம் படைக்கும் என்பது உறுதி. இப்படிப்பட்ட சரித்தம் படைக்க வேண்டுமானால், தேர்தல் காலத்தில். தலைவர்களுக்கு தொண்டர்கள் சால்வை அணிவிப்பதை தவிர்க்க வேண்டும். அதை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக தேர்தல் நிதியை வழங்க வேண்டும். தாரளமாக வாரி வழங்க வேண்டும்.
பிரச்சாரத்தில் கவனம் தேவை:
இங்கு பேசிய கிஸர் முஹம்மது சொல்லியபோது போன்று, சாதி, பேதம், மொழி என்ற அடிப்படையில் தேர்தல் பணிகளில் நாம் ஈடுபடக் கூடாது. அப்படி பிரச்சாரம் செய்தால், அந்த தேர்தல் செல்லாது என தேர்தல் ஆணையமும் எச்சரிக்கை செய்துள்ளதை நாம் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இ.யூ.முஸ்லிம் லீக் மதவாத கட்சி இல்லை என உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ளது. முஸ்லிம் லீக் ஒரு சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக மட்டுமே பணியாற்றுவது இல்லை. அனைத்துத் தரப்பு மக்களின் நலனுக்காக சேவை ஆற்றி வருகிறது. எனவே தான் உச்சநீதிமன்றமும் நல்ல தீர்ப்பு அளித்து, இ.யூ.முஸ்லிம் லீக் மதவாத கட்சி இல்லை என மிகவும் திட்டவட்டமாக கூறியுள்ளது. ஆகவே, இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள மூன்று பேரும் ஏணி சின்னத்தில் களம் காண உள்ளார்கள். ஏணி சின்னம் என்பது ஒரு சாதி, மொழி, மதம் ஆகியவற்றுக்கு சொந்தமானது அல்ல. அது, அவரின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பயன்படும் சின்னமாகும். ஏணி சின்னத்தின் மூலம் அனைவரும், அனைத்து சமுதாய மக்களும் ஏற்றம் பெற வேண்டும்.
வெற்றிக்கு பாடுபட வேண்டும்:
இராமநாதபுரம் தொகுதியில் மீண்டும் நவாஸ் கனியை நிறுத்த முடிவு செய்த பெருமை உங்கள் அனைவருக்கும் உண்டு. இங்குள்ள அனைத்து சகோதரர்களும் உண்டு. வேட்பாளரை தேர்வு செய்ததோடு நின்றுவிடாமல், அவரது வெற்றிக்கு அனைத்து வகையிலும் நீங்கள் பணியாற்ற வேண்டும். தியாகங்களை செய்ய வேண்டும். நாடாளுமன்றத்தில் "நாரே தக்பீர் அல்லாஹு அக்பர்" என்ற முழக்கம் ஏற்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் யாராவது "ஜெய் ஸ்ரீராம்" என முழக்கம் எழுப்பினால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் "நாரே தக்பீர் அல்லாஹு அக்பர்" என முழக்கம் எழுப்பும் நிலை உருவாக வேண்டும். அதற்கான பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு. கூட்டணி கட்சிகளுக்கும் உண்டு. இதனை நாம் மட்டும் கூறவில்லை. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
சிறப்பான பணிகள் மூலம் பதில்:
இராமநாதபுரம் தொகுதியில் முதல்முறையாக நவாஸ் கனியை நிறுத்தியபோது, என்மீது பல்வேறு தரப்பினர் கடும் விமர்சனங்களை வைத்தார்கள். ஆனால், அந்த விமர்சனங்களுக்கு நவாஸ் கனி தனது நல்ல பணிகள் மூலம் சிறப்பான பதில் அளித்துள்ளார். இராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனி ஆற்றிய சேவைகள், பணிகள் ஆகியவற்றை கண்டு தொகுதி மக்கள் மட்டுமல்லாமல், திமுக கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் வியப்பு அடைந்து பாராட்டி வருகின்றன. நாடாளுமன்றத்தில் நவாஸ் கனி ஆற்றிய உரைகள், எடுத்துவைத்த கருத்துகள், விவாதங்களில் கலந்துகொண்டு மக்களின் நலனுக்காக ஒன்றிய அரசிடம் முன்வைத்த கோரிக்கைகள் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகின்றன.
எனவே தான், திமுக தலைவர்கள் மட்டுமல்லாமல், காங்கிரஸ் மற்றும் கூட்டணியில் உள்ள தலைவர்கள் கூட, இராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனி மீண்டும் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்கள். அத்துடன், தொகுதியில் உள்ள மக்களும் நவாஸ் கனி போன்ற ஒரு நல்ல எம்.பி. நமக்கு கிடைத்து இருக்கிறார். அவரே மீண்டும் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்து திமுக தலைமைக்கு தகவல்களை அனுப்பி வைத்தார்கள். இதன் காரணமாக தான், நவாஸ் கனி மீண்டும் நிறுத்தப்பட்டு, அந்த தொகுதி மக்களுக்கு மிகச் சிறப்பான சேவையை ஆற்றுவதுடன், தமிழகத்திற்கும், இந்திய திருநாட்டிற்கும் பணியாற்ற உள்ளார்.
எல்லோருக்கும் சொந்தமான நாடு:
இந்திய அரசியல் சாசனத்தின்படி, நாம் அனைவரும் செயல்பட வேண்டும். ஒரு கையில் இந்திய அரசியல் சாசனத்தையும், மற்றொரு கையில் ஏக இறைவனின் திருக்குர்ஆனையும் ஏந்திக் கொண்டு, முஸ்லிம்கள் பணியாற்ற வேண்டும். சிறப்பாக செயல்புரிய வேண்டும். இந்த நாடு எல்லோருக்குமான நாடாகும். இந்தியாவிற்கு ஈடானா நாட்டை உலகில் வேறு எங்கும் நாம் காண முடியாது. இதுபோன்ற ஒரு சிறப்பான நாடு உலகில் எங்கும் கிடையாது. இந்தியாவில் உள்ள 142 கோடி மக்களில், முஸ்லிம்கள் மட்டும் 25 கோடி பேர் இருந்து வருகிறோம். முஸ்லிம்களின் தாய், தந்தையாக இந்தியா இருந்து வருகிறது. எனவே, நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும், முஸ்லிம் சமுதாயம் பாடுபட வேண்டும். இந்த கடமையும், பொறுப்பும் முஸ்லிம் சமுதாயத்திற்கு உண்டு. அதன்படி தான் இ.யூ.முஸ்லிம் லீக் தனது பணிகளையும் கடமைகளையும் நிறைவேற்றி வருகிறது.
சட்டமன்ற தேர்தலுக்கும் இப்போது பணி:
தற்போது நாடாளுமன்றத்தில் நமது எண்ணிக்கை மூன்றாக உள்ளது. அது முப்பதாக மாற வேண்டும். தற்போதைய நாடாளுமன்றத் தேர்தல் பணியோடு நாம் நின்று விடாமல், வரும் சட்டமன்ற, உள்ளாசி மன்ற தேர்தலுக்காகவும் நீங்கள் அனைவரும் இப்போது பணியாற்ற வேண்டும். செயல் திட்டங்களை அமைத்து உழைக்க வேண்டும். நல்ல ஒரு இலக்கை முன்வைத்து நாம் அனைவரும் செயல்பட்டால், பணியாற்றினால், வரும் காலங்களில், நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி மன்றங்களில் இ.யூ.முஸ்லிம் லீக் பிரதிநிதிகள் அதிகளவில் அலங்கரிப்பார்கள். சேவை ஆற்றுவார்கள். முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டுமல்லாமல், அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்கும் முஸ்லிம் பிரதிநிதிகள் பணி செய்வார்கள். இதற்கு நாம் துஆவுடன், நமது பொறுப்புகளையும் உணர்ந்து மிகச் சிறப்பான முறையில் பணியாற்ற வேண்டும். அந்த வகையில் நீங்கள் அனைவரும் மிகச் சிறப்பாக பணியாற்றி, சமுதாயத்திற்கு செய்ய வேண்டிய கடமையை மிகச் சிறப்பான முறையில் செய்வீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் உரையாற்றினார்.
- சிறப்பு செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment