Thursday, September 26, 2024

அசாம் முஸ்லிம்கள்....!


“அசாம் முஸ்லிம்கள் சந்திக்கும்

பிரச்சினைகளும் சவால்களும்”

 

-    ஜாவீத் -

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் வாழும் முஸ்லிம்கள் நாள்தோறும், சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. அந்த மாநிலத்தில் தற்போது பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதலமைச்சராக ஹிமந்த் பிஸ்வா சர்மா இருந்து வருகிறார்.

முதலமைச்சர் ஹிமந்த் பிஸ்வா சர்மா ஒவ்வொரு நாளும் முஸ்லிம்களுக்கு எதிராக கருத்துகளை தொடர்ந்து பேசி வருகிறார். ஏழை முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி அளிக்கும் மதரஸாக்களை ஒழித்துக் கட்ட திட்டங்களை தொடர்ந்து அரங்கேற்றி வருகிறார். அத்துடன் மாநிலத்தில் பொதுசிவில் சட்டம் கொண்டு வரப்படும் என அடிக்கடி முஸ்லிம்களை மிரட்டிக் கொண்டே இருக்கிறார். முஸ்லிம்கள் குறித்து கருத்து கூறும் அவர், “கடந்த 1951ஆம் ஆண்டு அசாமில் 12 சதவீதமாக இருந்த முஸ்லிம் மக்கள் தொகை, தற்போது 40 சதவீதமாக உயர்ந்துவிட்டதாக பொய்யான ஒரு தகவல் தெரிவித்தார்.

உண்மையில் அசாமில் முஸ்லிம்களின் தொகை 24 புள்ளி 68 சதவீதாக இருந்த நிலையில்ட 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 34 புள்ளி 22 சதவீதமான உள்ளது. இருந்தும், முஸ்லிம்கள் குறித்து தொடர்ந்து முதலமைச்சர் ஹிமந்த் பிஸ்வா சர்மா மற்றும் பா.ஜ.க.வினர் தொடர்நது தவறான புள்ளிவிவரங்களை கூறிக் கொண்டே இருக்கிறார்கள். அதன்மூலம் சகோதரச் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களை குழப்பிக் கொண்டே இருக்கிறார்கள்.  

ஆக்கிரமிப்பு என்ற பெயரில் இடிப்பு:

அசாமில் முஸ்லிம்களின் வீடுகள் குறிவைத்து அடிக்கடி இடிக்கப்படுகின்றன. ஆக்கிரமிப்பு இடங்களில் வீடுகள் கட்டப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டி, இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வீடுகள் இடிப்பது குறித்து உச்சநீதிமன்றம் எச்சரிக்கை செய்தபிறகும், அதை காதில் வாங்கிக் கொள்ளாமல், முஸ்லிம் வீடுகளை இடிக்கும் நடவடிக்கைகள் அசாமில் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

மௌலான பதுருதீன் அஜ்மல் கண்டனம்:

ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அசாம் அரசு மேற்கொண்டு வரும் இடிப்பு நடவடிக்கையை அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தேசிய தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மௌலானா பத்ருதீன் அஜ்மல் கடுமையாக கண்டனம் செய்து விமர்சித்துள்ளார். முதலமைச்சர் ஹேமந்த் பிஸ்வா சர்மா அரசை வன்மையாகக் கண்டித்துள்ள அவர், இது ஒரு மோசமான செயல் என்றும், முஸ்லிம்களின் வீடுகளை இடித்து அவர்களை வீடற்றவர்களாக ஆக்குவதில் பா.ஜ.க. அரசு குறியாக இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

‘‘கவுகாத்தி உயர்நீதிமன்ற உத்தரவை மீற, பா.ஜ.க. அரசு சிறிதும் தயங்குவதில்லை. அஸ்ஸாம் முதல்வர் ஹேமந்த் பிஸ்வா சர்மா, இந்த ஜனநாயக நாட்டின் சட்டம், நீதிமன்ற உத்தரவுகளுக்கு சிறிதும் மதிப்பு அளிப்பது இல்லை. கட்டுப்பட்டு நடப்பது இல்லை. நீதிமன்ற உத்தரவுகளுக்கு கட்டுப்பட யாருக்கு விருப்பம் இல்லையோ, அப்படிப்பட்டவருக்கு ஆட்சியில் இருக்க தகுதியில்லை. சர்மா, தன்னை தானா ஷாவாக (சர்வாதிகாரியாக) நினைக்க ஆரம்பித்துவிட்டார். அவரை உடனடியாக முதலமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் மௌலானா வலியுறுத்தியுள்ளார்.

அசாம் அரசின் கடும் செயல்:

அஸ்ஸாம் அரசு, முஸ்லிம் பெரும்பான்மை கிராமங்களை தொடர்ந்து இடம்பெயர்ந்து வருவதால், சில முஸ்லிம் அல்லாத வீடுகளும் அதன் செல்வாக்கின் கீழ் வருகின்றன, ஆனால் அரசாங்கம் முஸ்லிம் பெரும்பான்மையாக உள்ளது என்பதே உண்மை வெளியேற்றம் என்ற பெயரில் குறிவைத்து செயல்படுகிறது. வீடற்ற மக்களுக்கு வீடுகளை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு. ஆனால் அஸ்ஸாம் அரசாங்கம் மாற்று வழியின்றி ஏழைகளை இடம்பெயரச் செய்வதில் மும்முரமாக இருக்கிறது. இது வெட்கக்கேடானது.

ஒடுக்கப்பட்டவர்களின் பெருமூச்சு பெரும் கொடுங்கோலர்களை தோற்றுவித்துள்ளது, எனவே இந்த அரசாங்கமும் முடிவுக்கு வரும். ஒடுக்குமுறையாளருக்கு தண்டனை நிச்சயம் கிடைக்கும் என்றும் மௌலானா எச்சரித்துள்ளார்.

இத்தகையா சூழ்நிலையில், கம்ரூப் மாவட்டத்தின் சோனாபூர் கிராமத்தில் வெளியேற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த இரண்டு முஸ்லிம் இளைஞர்களை காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரம் அனைவரின் முன்னிலையிலும் உள்ளது. ஆனால் அரசு தனது பிடிவாதத்தை கைவிடுவதாக பெயர் எடுக்காததால், தற்போது சுமார் 2 ஆயிரம் பேர் வசிக்கும் கோல்பாரா மாவட்டம் லக்கிபூர் வட்டத்தில் உள்ள பந்தர்மாதா கிராமத்துக்கும், அசோடோபி கிராமத்துக்கும் தடை விதித்துள்ளது. 7 ஆயிரம் பேர் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி வீடுகளையும் கிராமங்களையும் காலி செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், “இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் கவுகாத்தி உயர்நீதிமன்றத்தின் கதவைத் தட்டினர். 2024 செப்டம்பர் 18ஆம் தேதி அளித்த தீர்ப்பில், வனத்துறையின் நிலம் யாரிடமாவது இருந்தால்,. அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும். அதிகாரிகள் காலி செய்யலாம், ஆனால் வட்டத்தின் நிலம் அரசாங்கத்திற்குச் சொந்தமானால், அது அடுத்த விசாரணைக்கு அதாவது 2 டிசம்பர் 2024 வரை அதன் நிலையில் வைக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேபோன்று, உச்சநீதிமன்றமும், இடிப்பு விவகாரத்தை கைவிட வேண்டும் என பல மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக, ஜமியத் உலமா அஸ்ஸாமின் பிரதிநிதிகள் குவால்பாரா மாவட்ட ஆணையரைச் சந்தித்து, மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு கோரினர். அவர்கள் அனைவரிடமும் குடியுரிமை ஆவணங்கள் உள்ளன. அவர்களின் பெயர்கள் 1951 NRC இல் பட்டியலிடப்பட்டுள்ளன. அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளன. அவர்களுக்கு மின் கட்டணம் உள்ளது, இந்த இரண்டு கிராமங்களிலும் 1965 மற்றும் 1978, இதேபோல் அரசு பள்ளிகள் மற்றும் இடங்கள் உள்ளன என்று எடுத்துக் கூறினர். மேலும் தொழுகை நடத்த மஸ்ஜித் 1980 இல் நிறுவப்பட்டது. உண்மை இப்படி இருக்க, அசாம் பா.ஜ.க. அரசு, தொடர்ந்து முஸ்லிம் விரோத போக்கில் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது.

கண்டனங்கள்:

அசாம் முதலமைச்சர் சர்மாவின் செயல்பாடுகள், நடவடிக்கைகள் ஆகியவற்றை கண்டித்து செய்தி ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டும், தலையங்கம் எழுதியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. எனினும், அவற்றை பா.ஜ.க. அரசு கண்டுகொள்வதில்லை. கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி தி ஆங்கில நாளிதழ் எழுதிய தலையங்கத்தில், அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த் பிஸ்வா சர்மா, முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் கருத்துகளை தொடர்ந்து வெளியிட்டு தனது சத்தியப் பிரமாணத்தை மீறி வருவதாக கண்டனம் தெரிவித்து இருந்தது.

முஸ்லிம்களுக்கு எதிராக வெறுக்கத்தக்க பேச்சு, குறிப்பாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைப்பது, இன மோதல்கள் மற்றும் பேரழிவு விளைகளை ஏற்படுத்தக்கூடிய அட்டூழியங்களுக்கான சாத்தியமான தூண்டுதலாக மீண்டும் மீண்ஒடும் அரங்கேற்ற வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் அசாம் முதலமைச்சர் செயல்படுவதாக அந்த நாளிதழ் கண்டித்துள்ளது.  

இப்படி, பல நேர்மையான ஜனநாயக நெறிமுறைகளில் செயல்பட்டு தங்களது ஊடகத் தர்மத்தை நிலைநாட்டும் நாளிதழ்கள் அசாம் அரசின் செயல்பாடுகளை கண்டித்தாலும், முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இன்னும் நிறுத்தப்படவில்லை. அசாம் முஸ்லிம்கள் தொடர்ந்து பிரச்சினைகளையும் சவால்களை சந்தித்துக் கொண்டே, ஒவ்வொரு நாளும் வேதனையில் வாழ்ந்துகொண்டே இருக்கிறார்கள். இத்தகைய மோசமான சூழ்நிலைக்கு ஏக இறைவன் தான் நல்ல விடிவை தர வேண்டும்.

======================

 

 

No comments: