அமைதியின் மார்க்கம் இஸ்லாம்: "முஸ்லிம்களின் ஆதரவு இல்லாமல் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று இருக்க முடியாது"
அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் புகழாரம்.....!
அமெரிக்காவின் புதிய அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் நவம்பர் 5ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் குடியசுரக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப், அமோக வெற்றி பெற்று அமெரிக்காவின் 47வது அதிபராக தேர்வு செய்யப்பட்டார். ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட கமலா ஹாரிஸ், டிரம்ப்பை விட குறைவான வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த தேர்தல் முடிவுகள், பலரை வியப்பில் ஆழ்ந்தி இருக்கலாம். பொதுவாக கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார் என ஒருசில கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், தேர்தல் முடிவுகள் வேறுவிதமாக இருந்தன. டொனால்ட் டிரம்ப்பின் வெற்றிக்கு முக்கிய காரணம் யார்? என்ற கேள்விகள் எழுந்ததுக் கொண்டே இருக்கின்றன. அதற்கு டொனால்ட் டிரம்ப் மிகவும் அழகான முறையில் பதில் அளித்துள்ளார்.
அமைதியின் மார்க்கம் இஸ்லாம்:
அமெரிக்காவில் தற்போது மக்களை வேகமாக ஈர்த்துவரும் மார்க்கமாக இஸ்லாம் இருந்து வருகிறது. இதனை நன்கு உணர்ந்துகொண்ட டொனால்ட் டிரம்ப், தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, இஸ்லாம் குறித்தும், இஸ்லாமியர்கள் குறித்தும், மிகவும் புகழ்ந்து பேசினார். 'அமைதியின் மார்க்கம் இஸ்லாம்' என குறிப்பிட்ட அவர், முஸ்லிம்கள் அமெரிக்காவின் வளர்ச்சிக்கு மிகச் சிறந்த முறையில் சேவை ஆற்றி வருவதாக புகழாராம் சூட்டினார். இஸ்லாம் குறித்து தமக்கு முன்பு தவறான புரிதல் இருந்ததாக குறிப்பிட்ட அவர், தற்போது அந்த கருத்து நீங்கி விட்டதாகவும், உலகில் மக்களை அமைதிப்படுத்தும் மார்க்கமாக இஸ்லாம் இருந்து வருகிறது என்றும் டிரம்ப் கூறியது அமெரிக்க முஸ்லிம்களை மிகவும் வியப்பு அடையச் செய்தது.
இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர்கள் குறித்து டொனால்ட் டிரம்ப்வுக்கு நல்ல எண்ணம் ஏற்பட்டு இருப்பதை அறிந்துகொண்ட அமெரிக்க முஸ்லிம்கள், அதிபர் தேர்தலில் அவருக்கு முழு ஆதரவு அளித்தார்கள். முஸ்லிம்களின் இந்த முழு ஆதரவு காரணமாக அதிபர் தேர்தல் சவால் நிறைந்து இருந்தபோதும், மிகவும் எளிதான முறையில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். தனது வெற்றிக்குப் பிறகு கூட, அவர் முஸ்லிம்களை புகழ்ந்து கருத்து கூறியிருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வேகமாக பரவும் இஸ்லாம்:
உலகம் முழுவதும் மிகவும் வேகமாக பரவும் மார்க்கமாக இஸ்லாம் இருந்து வருகிறது. அமைதி மற்றும் சகோதரத்துவம், சகிப்புத்தன்மை உள்ளிட்ட பல காரணங்களால் இஸ்லாமிய மார்க்கத்தை தேடி மக்கள் அலை அலைவாக வந்துக் கொண்டே இருக்கிறார்கள். ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் இஸ்லாமிய மார்க்கம், மக்களை மிகவும் வேகமாக கவர்ந்துவரும் நிலையில், அமெரிக்காவில் அது இன்னும் முழுவீச்சில் பரவி வருகிறது.
அமெரிக்காவின் ஒவ்வொரு மாகாணங்களிலும் மஸ்ஜித்துகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. இஸ்லாமிய மார்க்கம் குறித்து மக்களிடைய நல்ல முறையில் எடுத்துக் கூற, இஸ்லாமிய மையங்கள் (Islamic Centre) ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக இஸ்லாம் எத்தகைய மார்க்கம்?, அதில் வாழ்க்கையின் அமைதிக்கு என்ன தீர்வு சொல்லப்பட்டு இருக்கிறது? போன்ற கேள்விகள் சகோதரச் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களிடம் எழுந்து வருகிறது. இந்த கேள்விகளுக்கு இஸ்லாமிய மையங்கள் நல்ல விளக்கங்களை அளித்து வருகின்றன. இஸ்லாமிய மையங்கள் அளிக்கும் விளக்கங்கள் அறிவியல் ரீதியாக ஏற்றுக் கொள்ளும் வகையில் இருப்பதால், அமெரிக்கர்கள், இஸ்லாமிய மார்க்கம் மீது பற்றுக் கொண்டு, அதனை தங்களுடைய வாழ்வியல் மார்க்கமாக ஏற்றுக் கொண்டு வருகிறார்கள். இதனால், தற்போது அமெரிக்காவில் வேகமாக பரவும் மார்க்கமாக இஸ்லாம் இருந்து வருகிறது.
உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடாக அமெரிக்கா இருந்து வரும் நிலையில், அங்கு அமைதி மற்றும் சகோதரத்துவத்தின் மார்க்கமாக இருக்கும் இஸ்லாம், மக்களை கவர்ந்து வருவது பலரை வியப்ப்பில் ஆழ்த்தி வருகிறது. அமைதியின் மார்க்கமாக இஸ்லாம் இருப்பதால், அமெரிக்காவின் வேகமான வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார். டிரம்ப்பின் இந்த அழைப்பு, முஸ்லிம்கள் குறித்து அவர் ஏற்கனவே கொண்டு இருந்த நிலைப்பாட்டில் இருந்து மாறுபட்டு இருந்தது. இதன்மூலம் ஓர் உண்மை மிகவும் தெளிவாக தெரிய வருகிறது. அது, இஸ்லாம் அமையின் மார்க்கம் என்பதையும், இஸ்லாமியர்கள் சகோதரத்துவதை நேசிப்பவர்கள் என்பதையும், டொனால்ட் டிரம்ப் உணர்ந்து கொண்டு இருப்பது உறுதியாக தெரியவருகிறது.
அமெரிக்காவில் மட்டுமல்லாமல், ஐரோப்பிய முழுவதும் இஸ்லாமிய ஒளி தற்போது வேகமாக பரவி வருகிறது. மக்களின் மனங்களை பெரிதும் கவரும் மார்க்கமாக இஸ்லாம் இருந்து வருகிறது. இஸ்லாம் மிகவும் சக்தி வாய்ந்த ஆன்மிக நெறிமுறைகளை மக்களுக்கு சொல்லித் தருவதால், அதன்மூலம் அமைதியான வாழ்க்கைக்கு வழி கிடைக்கிறது. இதனை அமெரிக்க மக்கள் மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளின் மக்களும் தற்போது நன்கு உணர ஆரம்பித்து இருக்கிறார்கள்.
எதிரியாக நினைத்தவர்களின் மனங்களில் மாற்றம்:
ஒரு காலத்தில் இஸ்லாமிய மார்க்கத்தை தங்கள் எதிரியாக நினைத்த அமெரிக்கர்கள், தற்போது அது ஒரு சக்திவாய்ந்த ஆன்மிக நெறி என்பதை நன்கு உணர ஆரம்பித்து இருக்கிறார்கள். இஸ்லாத்தை வெறுத்தவர்களின் மனங்களில் மிகப்பெரிய மாற்றம் தற்போது ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் இஸ்லாத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தாலும், இஸ்லாமிய வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. வெறுப்பு பிரச்சாரம் குறித்து அமெரிக்க மக்கள் மத்தியில் ஒருவித தேடுதல் வேட்டையை உருவாக்கியது. அவர்கள் இஸ்லாம் குறித்து அறிந்துகொள்ள முயற்சிகளை மேற்கொண்டார்கள். அந்த முயற்சிகள் அனைத்தும், அவர்களை இஸ்லாமிய மார்க்கத்திற்குள் நுழைய வைத்தது. அதன்மூலம் அமைதியின் மார்க்கத்தில் அமெரிக்க மக்கள் நுழைய ஆரம்பித்து தற்போது, அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இஸ்லாம் என்பது உண்மையான மார்க்க நெறி என்பதை புரிந்துகொண்ட அமெரிக்க மக்கள், அவர்களின் மனங்களில் ஏற்கனவே இருந்து எதிர்ப்பு எண்ணத்தை கைவிட ஆரம்பித்தார்கள். சரியான புரிதல் ஏற்பட்ட காரணத்தால், இஸ்லாமிய மார்க்கம் மீது அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டு, அதுவே வாழ்க்கை நெறியாக மாறிவிட்டது.
இதன் காரணமாக அமெரிக்காவில் மிகவும் வேகமாக பரவும் மார்க்கமாக இஸ்லாம் இருந்து வருகிறது. இதனை நன்கு உணர்ந்துகொண்ட டொனால்ட் டிரம்ப், இஸ்லாம் அமைதியான மார்க்கம் என்றும் இஸ்லாமியர்கள் அமைதியான குணம் கொண்டவர்கள் என்றும் தேர்தலுக்கு முதல் நாளில் பேசிய முஸ்லிம்களை கவர்ந்துகொண்டனர். 'நான் ஏற்கனவே முஸ்லிம்கள் குறித்து தவறாக நினைத்து இருந்தாகவும் தற்போது அந்த எண்ணம் மாறிவிட்டது' என்றும் டிரம்ப் கூறினார். தேர்தல் வெற்றிக்குப் பிறகு பேசிய அவர், அமெரிக்க முஸ்லிம்கள் மட்டுமல்ல, உலகில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் அமைதியான உலகிற்கு தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதன்மூலம் எதிரி மார்க்கமாக இருந்த இஸ்லாம் தற்போது, அமெரிக்கர்களின் ஆதரவு மார்க்கமாக மாறிவிட்டது என்பதை உறுதியாக அறிந்துகொள்ள முடிகிறது.
பிரிட்டனில் மாற்றம்:
அமெரிக்காவில் மட்டுல்ல, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் இஸ்லாமிய மார்க்கத்தின் மீது மக்கள் ஆர்வம் கொண்டு வருகிறார்கள். அதன் காரணமாக, பிரிட்டனில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்பு பிரசங்கம் (பயான்) செய்வதை, வானொலி மூலம் ஒலிப்பரப்ப அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதேபோன்று, ஜெர்மனியில் அதான் எனும் பாங்கு ஒலிப்பரப்பட்டு வருகிறது. கனடா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளின் நாடாளுமன்றங்களிலும் திருக்குர்ஆனினின் வசனங்கள் ஒதுப்பட்டு வருகின்றன. ஒரு காலத்தில் பாங்கு ஒலியை தடை செய்த நாடுகள், தற்போது அந்த தடையை நீக்கிவிட்டன. அதற்கு முக்கிய காரணம், மக்களின் மனங்களில் மிகப்பெரிய அளவுக்கு மாற்றம் ஏற்பட்டு வரும் நிலையில், அதை தடைகள் மூலம் தடுக்க முடியாது என்பதை அந்த நாடுகள் நன்கு உணர்ந்துகொண்டு இருப்பதாகும்.
அமெரிக்க உள்ளிட்ட வளர்ச்சி அடைந்த நாடுகளில், மக்கள் சந்திக்கும் மனரீதியான பிரச்சினைக்கு நல்ல தீர்வு தரும் மார்க்கமாக இஸ்லாம் இருப்பதால், அது மிகப்பெரிய சக்தி வாய்ந்த ஆன்மிக நெறியாக மக்கள் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
பாங்கு ஒலியின் அற்புதம்:
அமெரிக்காவின் அண்மையில் நடந்த ஒரு அதிசய சம்பவம் அனைவரையும் வியப்ப்பில் ஆழ்த்தி இருக்கிறது. அங்குள்ள புகழ்பெற்ற மருத்துவமனயில் ஒரு அமெரிக்க பெண்மணி குழந்தை பெற்றெடுத்தாள். ஆனால் அந்த குழந்தை மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், பிழைப்பு அரிது என்று மருத்துவர்கள் கைவிரித்தார்கள். இதனால் அவரது தாயார் மிகவும் மன வேதனை அடைந்தார். அப்போது மருத்துவமனைக்கு அருகில் அடைந்த மஸ்ஜித்திற்கு சென்ற அந்த பெண்மணி, அங்கு இருந்த மோதினாரை சந்தித்து பேசினார். தனது குழந்தையை காப்பாற்ற மருத்துவமனைக்கு வர வேண்டும். குழந்தையின் காதுகளில் அதான் ஓது வேண்டும் என்றும் அன்பு வேண்டுகோள் விடுத்தார். அதன்படி மருத்துவமனைக்கு சென்ற மோதினார், குழந்தையை பார்த்து வேதனை அடைந்தார். குழந்தை பிழைப்பது அரிது என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டார். எனினும், அந்த குழந்தையின் தாய் கேட்டுக் கொண்டபடி, அதான் சொல்ல ஆரம்பித்தார். என்ன வியப்பு, அதான் கேட்ட அந்த குழந்தை சிலிர்த்து எழ ஆரம்பித்தது. அதான் முழுமையாக சொல்லி முடிந்ததும், ஆச்சரியம் அளிக்கும் வகையில் குழந்தை உயிர் பிழைத்தது.
அப்போது மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் மிகவும் வியப்பும் ஆச்சரியமும் அடைந்தார்கள். அதானின் அற்புறம் அவர்களுக்கு அப்போது மிகவும் தெளிவாக புரிய ஆரம்பித்தது. அதான் மட்டும் இப்படிப்பட்ட அற்புதம் நிகழ்த்தும் என்றால், அந்த அதானை வழங்கிய இஸ்லாமிய மார்க்கம் வாழ்வில் ஏப்படிப்பட்ட அற்புதம் நிகழ்த்தும் என்பதை உணர்ந்துகொண்ட அவர்கள், உடனடியாக மருத்துவமனைக்கு அருகில் இருந்த மஸ்ஜித்திற்கு சென்று, ஏக இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்கள்.
இதன்மூலம் ஓர் உண்மை மிகவும் தெளிவாக தெரியவருகிறது. உலகில் தற்போது அறிவியல் ரீதியாக ஆய்வு செய்யப்பட்டு மக்களின் மனங்களை கவர்ந்துவரும் மார்க்கம் இஸ்லாம் என்பது உண்மையிலும் உண்மையாகும். இஸ்லாமிய வாழ்க்கை நெறிமுறை, அமைதி மற்றும் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தி, மக்களை நல்வழிப்படுத்தி வருகிறது என்பதை உலகம் தற்போது நன்கு கண்டு வருகீறது. அதனால் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூட, இஸ்லாம் அமைதியான மார்க்கம், இஸ்லாமியர்கள் அமைதியானவர்கள், சகோதரத்துவ நேசம் கொண்டவர்கள் என புகழாராம் சூட்ட ஆரம்பித்துள்ளார்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment