Wednesday, June 28, 2023

தியாகத் திருநாள்....!

 

தியாகம்.....!


ஏக இறைக் கொள்கை என்ற உன்னத தத்துவத்திற்கு ஒரு மனிதன் எப்படி செயல்பட்டு தியாகம் செய்ய வேண்டும்...?

தன் பகுத்தறிவை எப்படி பயன்படுத்தி சிந்திக்க வேண்டும்....?

அதற்காக வாழ்க்கையில் எப்படிப்பட்ட துன்பங்கள், துயரங்களை துணிச்சலுடன் சந்திக்க வேண்டும்..?

இப்படி, பல கேள்விகளுக்கு

நபி இப்ராஹீம் (அலை)

நபி இஸ்மாயில் (அலை)

ஆகிய இருவரும் தங்களது வாழ்க்கையின் மூலம் நமக்கு அழகிய பாடம் சொல்லி தருகிறார்கள்.

இந்த நபிமார்கள் செய்த பல தியாகங்களின் மூலம்தான், இன்று உலகில் மனித இனம் ஒரளவுக்காவது அமைதியாக வாழ்கிறது.

பல இக்கட்டான நேரங்களில் தியாகங்களை செய்து, துன்பங்களில் இருந்து விடுபடுகிறது.

இந்த தியாகங்களை நினைவுப்படுத்தி, உலகம் முழுவதும் உள்ள மனித இனம், சவுதி அரேபியாவின் மெக்காவில் ஒன்று கூடி, நிறைவேற்றும் ஒரு கடமைதான் ஹஜ்.

ஹஜ் ஒரு உலக சகோதரத்துவ மாநாடு என்று கூட கூறலாம்.


பல இனம், பல மொழிகள், பல கலாச்சாரங்கள், பண்பாடுகள் கொண்ட மனித இனம், ஏக இறைக் கொள்கையை உறுதியாக ஏற்று, அதன்படி வாழ்ந்து, ஏக இறைவன் முன்பு மனிதன் ஒரே இனம்தான் என்பதை உலகிற்கு சொல்லும் ஒரு புனித பயணம்தான் ஹஜ் பயணம்.

அத்துடன், உலகம் முழுவதும் இருந்து மெக்காவில் லட்சக்கணக்கில் குவியும் மக்கள், உலக அமைதிக்காக மனம் உருகி துஆ (பிராத்தனை) செய்யும்போது, அது இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

அதனால், உலகில் அமைதி தவழ வாய்ப்பு கிடைக்கிறது.

இப்படி தியாகங்கள் பல செய்து, ஹஜ் கடமை நிறைவேற்றி, அதன் ஒருபகுதியாக கொண்டாடும் திருநாள்தான் பக்ரீத் எனப்படும் தியாகத் திருநாள்.

இந்த தியாகத் திருநாளில் அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள்...!

ஈத் முபாரக்....!

No comments: