சென்னையில் நான்.........!
பலரின் கனவு நகரமாக இருக்கும் சென்னையை சுற்றி பார்க்க யாருக்குதான் ஆசை இல்லை...
கல்லூரி நாட்களில் எனக்கும் இந்த ஆசை கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.
அப்படிதான் ஒருநாள், கல்லூரி தோழர் ஒருவருடன் இணைந்து வேலூரில் இருந்து சென்னைக்கு கிளம்பினேன்.
அப்போது, பாரி முனையில் இருந்த பேருந்து நிலையத்திற்கு இருவரும் வந்து சேர்ந்தோம்.
அங்கிருந்த பல கடைகளை சுற்றி பார்த்த நண்பர், பூக்கடை பகுதியில் இருந்த பழக்கடை அங்காடிக்குள் நுழைந்தார்.
நான் வெளியே நின்றுக் கொண்டு, சென்னையில் சாலைகளில் மாநகர பேருந்துகள் வேக வேகமாக சென்றுக் கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.
பழக்கடை அங்காடிக்குள் நுழைந்த நண்பர் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை...
என்ன நேர்ந்தது பழக்கடையே விலைக்கு பேசுகிறாரா என சந்தேகம் அடைந்த நான், அங்காடிக்குள் நுழைந்தேன்...
அங்கிருந்த பழ வியாபாரி ஒருவரிடம் நண்பர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்...
பிறகு ஒருவழியாக வெளியே வந்த அவர், பழ வியாபாரியை கடுமையாக சாடிக் கொண்டே இருந்தார்...
என்ன நடந்தது என நான் கேட்டபோதும், பொரிந்து தள்ளினார் நண்பர்...
ஐந்து ஆப்பிள் பழங்களை அடுக்கி கூறு வைத்த பழ வியாபாரி, ஒன்று பத்து, ஒன்று பத்து என கூற, ஆசையில் 5 கூறுகளை வாங்கியுள்ளார் நண்பர்.
ஐந்து கூறுகளுக்கு 50 ரூபாயையும் நீட்டியுள்ளார்...
ஆனால், பழ வியாபாரியோ, 250 ரூபாய் கேட்க அதிர்ச்சி அடைந்த நண்பர், என்னப்பா 50 ரூபாய்தானே கொடுக்க வேண்டும் என கேட்க,
ஒரு பழம் பத்து ரூபா சார்.... 5 கூறுக்கு 25 பழங்கள்... 250 ரூபா கொடுங்க சார்...என விளக்கம் அளிக்க
இருவருக்கும் தொடர்ந்தது வாக்குவாதம்...
கடைசியாக 50 ரூபாய் கொடுத்து ஒரு கூறு மட்டும் வாங்கிக் கொண்டு பழ வியாபாரியை வசைப்பாடிக் கொண்டே திரும்பினார் நண்பர்...
நடந்த விஷயம் என்னிடம் சொல்லி, பழ வியாபாரியை கோபத்தில் பொரிந்தும் தள்ளினார்.
எனக்கு நீண்ட சிரிப்பு அடங்க முடியவில்லை....
பழ வியாபாரியின் புத்திசாலிதனத்தை நினைத்து வியந்தேன்...
அது புத்திசாலிதனம் இல்லை....
சென்னையின் ஏமாற்றும் வித்தைகளில் ஒன்று என்பது பிறகுதான் புரிந்தது.
இதுபோன்ற அனுபவங்கள் சென்னையில் எனக்கு மட்டுமல்ல பலருக்கும் நேர்ந்து இருக்கலாம்...
எனினும், சென்னையின் இனம் புரியாத ஈர்க்கும் தன்மையால், அதை நாம் இன்றும் சுற்றி சுற்றி வந்துக் கொண்டிருக்கிறோம்...
இதுபோன்ற அனுபவங்கள் தொடர்ந்து பார்க்கலாம்....
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment