அழகான பாடல் !
ஓய்வு நாள்.
மாலை நேரம்.
மெரினா கடற்கரைக்கு சென்றிருந்தேன்.
கண்ணகி சிலைக்கு பின்புறம், அங்காங்கே அமர்ந்து கொண்டிருந்த காதலர்கள், மெரினாவின் அழகை மேலும் மெருக்கூட்டினார்கள்.
இந்த காட்சியை பார்த்தபோது, இயற்கையின் அற்புதம் குறித்து மனம் கொஞ்சம் அழமாகவே யோசிக்க செய்தது.
நீண்ட நேரம், மெரினாவின் அழகை (காதலர்களையும்தான்) ரசித்த பின்பு அறைக்கு திரும்பி எஃப்.எம். ரேடியோவை ஆன் செய்தேன்.
ஒரு கவிஞரின் திரைப்படப்பாடல் ஒலித்தது.
இறைவனின் அற்புதப் படைப்பான பெண்ணின் அழகை அந்த கவிஞன் மிக அற்புதமாக வர்ணித்து இருந்தான்.
அந்த பாடலில் நீண்ட நேரம் லயித்துப் போனேன்.
அழகான பாடல்.
அற்புதமான வரிகள்.
நீங்களும் ரசிக்க
இதே அந்த பாடலின் வரிகள்
உங்கள் பார்வைக்கு......
விழியிலே மலர்ந்தது
உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே
அடடா
எங்கெங்கும் உன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே
உன் விழியே போதுமடி
மனம் மயங்கும்
மெய் மரக்கும்
புது உலகின் வழி தெரியும்
பொன் விளக்கே
தீபமே
விழியிலே மலர்ந்தது
உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே
அடடா
எங்கெங்கும் உன்னழகே
ஓவியனும் வரைந்ததில்லையே
உன்னைப் போல் ஓரழகைக் கண்டதில்லையே
காவியத்தின் நாயகி
கற்பனைக்கு ஊர்வசி
கண்களுக்கு விளைந்த மாங்கனி
காதலுக்கு மலர்ந்த பூங்கொடி
விழியிலே மலர்ந்தது
உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே
அடடா
எங்கெங்கும் உன்னழகே
கைய்யளவு பழுத்த மாதுளை
பாலில் நெய்யளவு பரந்த புன்னகை
முன்னழகில் காமினி
பின்னழகில் மோகினி
மோகவலை சூடும் நேரமே
யோகம் வரப் பாடும் ராகமே
விழியிலே மலர்ந்தது
உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே
அடடா
எங்கெங்கும் உன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே.
பாடல் வரிகளை ரசித்தீர்களா ?
அழகான பாடல்தானே !
அழகை ரசிக்கும்போது, வரிகளும் அழகாகதானே வரும்.
அழகை ரசியுங்கள். இயற்கையை சுவாசியுங்கள்.
மனதில் தானாகவே உற்சாகம் பிறக்கும்.
கவலைகள் மறந்து போகும்.
புதிய உலகம் தென்படும்.
புதிய காட்சிகள் வரும்.
அனைவரையும் நேசிக்கத் தோன்றும்.
நேசிப்பதிலேயே மகிழ்ச்சி உருவாகும்.
எஸ். ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment