மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சிறந்த வழி என்ன....?
மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை வாழ, ஒருவருக்கு நிறைய செல்வமும் வசதியும் இருக்க வேண்டிய அவசியமில்லை. செல்வத்தால் உலகில் உள்ள அனைத்தையும் வாங்க முடியாது. செல்வம் மட்டுமே திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றியிருந்தால், வளமான குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே சண்டைகள் இருக்காது. கணவன்-மனைவி இருவரும் விவாகரத்து செய்ய மாட்டார்கள். மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு செல்வத்தைத் தவிர வேறெதுவும் தேவையில்லை என்று மாறிவிடும்.
எதிர்பார்ப்புகள்:
பொதுவாக இல்லத்தரசிகள், தங்கள் கணவரிடம் இருந்து எந்த ஒரு விலையுயர்ந்த பரிசையோ செல்வத்தையோ விரும்பது இல்லை. மாறாக, பணி முடிந்து கணவன் வீட்டிற்குள் நுழையும் போது, மகிழ்ச்சியான மனநிலையுடனும் சுபாவத்துடனும் திரும்ப வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். அதன்மூலம் வீடு முழுவதும் மகிழ்ச்சி நிறைந்த குழந்தைகளும் புதிய உற்சாகத்துடன் இருப்பார்கள் என மனைவிமார்கள் விரும்புகிறார்கள்.
முடிந்தால், பிள்ளைகள் மற்றும் மனைவியின் ஒழுக்க மாண்புகள், அவர்களது அலங்காரம், உடை, பாவனையைப் பாராட்டி, அன்றைய தினத்தின் முழுத் துன்பத்தையும் மறந்துவிடும் வகையில் மனநிறைவையும் மகிழ்ச்சியையும் கணவன்மார்கள் வெளிப்படுத்த வேண்டும்.
அழகான எடுத்துக்காட்டு:
அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். "உங்களில் சிறந்த நபர். தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு சிறந்தவராக இருப்பவர்தான்" இதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஹஸ்ரத் ஆயிஷா அவர்கள் நபிகள் நாயகத்தின் பண்புகளைப் பற்றிக் குறிப்பிடுகையில், "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் தோழர்களுடன் மட்டுமின்றி தம் மனைவியுடனும் சிரித்து அன்பை வெளிப்படுத்தினார்கள்" என்று கூறியுள்ளார்கள்.
ஒரு முஸ்லிமோ அல்லது ஒரு மனிதரோ தனது சிரிப்பு, புன்னகை, உற்சாகம் மற்றும் கலகலப்பு ஆகிய பரிசுகளை மற்றவர்களுக்கு வழங்கி எப்போதும் அன்புடன் பழக வேண்டும். தனது அழகான இந்த செயல்கள் மூலம், மனைவி மற்றும் குடும்பத்தினர் இந்த பாக்கியத்தை பெறும் வகையில் நடந்துகொள்ள வேண்டும். இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்திருக்கிறார்கள்.
கேலி, கிண்டல் வேண்டாம்:
பொதுவாக கேலி, கிண்டல் செய்பவர்களை மக்கள் விரும்ப மாட்டார்கள். அப்படி செய்வர்களை தங்கள் நண்பராக இருக்க யாரும் விரும்புவதில்லை. மாறாக, தார்மீக, மகிழ்ச்சியான, மற்றும் நல்ல குணமுள்ளவர்களை நண்பர்களாக ஆக்குவதன் மூலம் மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். மேலும் அவர்களின் மகிழ்ச்சி, புத்துணர்ச்சி, புன்னகை ஆகியவற்றைக் கண்டு, மக்கள் ஈர்க்கப்படுகிறார்கள். எனவே, கணவன் தன் மனைவியை மிகுந்த மகிழ்ச்சியுடனும் புத்துணர்ச்சியுடனும் புன்னகையுடன் சந்திப்பது அவசியமாகிறது. எந்த சூழ்நிலையிலும் கெட்ட கோபத்தைக் காட்டக்கூடாது.
ஒவ்வொரு முஸ்லிமும் வாழ்த்துவதில் முன்முயற்சி எடுக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறியுள்ளது. எனவே கணவனும் மனைவிக்கு வாழ்த்து தெரிவிப்பதில் முனைப்பு காட்ட வேண்டும். நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ரத் அனஸ் அவர்களிடம் கூறினார்கள்; "ஓ அனஸ்! நீங்கள் உங்கள் வீட்டிற்குள் நுழைந்தால், உங்கள் குடும்பத்தாரை வாழ்த்துங்கள். உங்கள் வாழ்த்து உங்களுக்கும் வீட்டிற்கும் ஆசீர்வாதமாக மாறும்". ஒரு வாழ்த்து எப்படி குடும்பத்தை மகிழ்ச்சி அடையச் செய்யும் என்பதற்கு இந்த நபிமொழியே ஓர் சிறந்த எடுத்துக்காட்டு என கூறலாம்.
இஸ்லாத்தில் கைகுலுக்கலும் முக்கியமானது. மனித உளவியல் மற்றும் பிற விஞ்ஞானங்களின்படி, கைகுலுக்கல் மூலம், ஒருவரின் கை மற்றொரு நபரின் கைக்கு வரும்போது, அவரது இதய உணர்வுகள் அனைத்தும் ஒருவருக்கொருவர் தெரியும். எனவே கைகுலுக்கிக்கொண்டே இருக்க வேண்டும். கைகுலுக்கல் என்பது காயங்களை மறைக்கும் கட்டு என்று கூறப்படுகிறது. கைகுலுக்கல் என்பது எரியும் காயங்களை குளிர்விக்கும் தைலம். எனினும் நவீன கலாச்சாரத்தில் நுழைந்து விடாமல், ஒவ்வொரு சூழ்நிலையிலும் இஸ்லாமிய வரம்புகளையும் போதனைகளையும் நாம் கவனித்தில் எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும்.
மனம் விட்டு பேச வேண்டும்:
கணவன்-மனைவி இடையே பிரச்சினைகள் வராமல் இருக்க இருவர் மத்தியில் நிகழும் உரையாடல் சிறப்பாக இருக்கும் என மனத்தத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள். எனவே, மனைவியிடம் எப்போதும் மனம் விட்டு பேசி நல்லவராகவும், மகிழ்ச்சியாகவும், ஊக்கமளிப்பவராகவும் கணவன் இருக்க வேண்டும்.
நல்ல விஷயங்களைச் சொல்வது தர்மம். உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால், நீங்கள் சில விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். முதலில், உங்கள் மனைவியிடம் மென்மையாகவும், அன்பாகவும், இனிமையாகவும் பேசுவதைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் ஒரு பெண்ணின் மனநிலை மென்மையானது. அதனாலேயே மென்மையும் இனிமையுமான வார்த்தைகளால் மட்டுமே மனைவியிடம் பேச வேண்டும். வாக்கியங்கள் எப்போதும் அன்பால் நிறைந்ததாக இருக்க வேண்டும். உரையாடலின் பாணி பாராட்டப்பட வேண்டும். அதில் அவளுடைய அழகு பாராட்டப்பட வேண்டும். அவளுடைய கருணைக்கும் சேவைக்கும் அங்கீகாரம் அளிக்க வேண்டும்.
குடும்பத்திற்காக செலவழிக்க வேண்டும்:
ஒரு நல்ல மற்றும் சிறந்த கணவனின் குணங்களில் ஒன்று, அவர் தனது குடும்பம் மற்றும் மனைவியின் நியாயமான தேவைகளை அறிந்திருப்பது மட்டுமல்லாமல், புன்னகையுடனும் மகிழ்ச்சியுடனும் அவற்றை நிறைவேற்றுவதாகும். மேலும் அவற்றை நிறைவேற்றுவதில், எந்த வித கஞ்சத்தனம் செய்யாமல் வசதிக்கு ஏற்ப தாராளமாக இருக்க வேண்டும். இஸ்லாத்தில், மனைவி மற்றும் குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுதல், அவர்களுக்காக செலவிடுவது தர்மம் என்று அழைக்கப்படுகிறது. மனைவிக்கு செலவு செய்வது சமூகத் தேவை மட்டுமல்ல, வெகுமதியும் கூட என்பது தெளிவாகிறது
உரிமைகள் சமம்:
இஸ்லாத்தில் கணவன்-மனைவியின் உரிமைகள் சமம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்., ஏனென்றால் பரஸ்பர ஒத்துழைப்பும் அன்பும் திருமணமும் இருவரின் உரிமைகளும் அந்தஸ்தும் சமமாக இருக்கும்போது மட்டுமே உருவாகின்றன. குடும்பத்திற்காக கணவன் பணிக்கு செல்கிறான். மனைவி வீட்டில் வேலை எதுவும் செய்யாமல் சும்மா இருக்கிறாள் என நினைப்பது தவறு. கூர்ந்து கவனித்தால், உண்மையில் அந்த வீட்டின் கட்டிடக் கலைஞரும், பொறுப்பாளரும் பெண் என்பது தெரியும். பெண்கள் எவ்வளவு வேலை செய்கிறார்களோ, அத்தனை பணிகளுக்கும் தனித்தனியாக பணியாளர்களை வைத்துக் கொண்டால், மாதம் ஒரு லட்ச ரூபாய் வரை செலவாகும் என்பதை கணவர்மார்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
சமையலறையில் சமையல்காரர், குழந்தைகளுக்கான குழந்தை பராமரிப்பு, நர்சரி மேலாளர். மாமியார் மாமனாருக்கு செவிலியராகவும் வேலைக்காரராகவும் மனைவி இருக்கிறார், அதே நேரத்தில் கணவன் வீட்டு அமைப்பு மற்றும் செலவுகளை நிர்வகிக்கிறார். இந்த உண்மைகளை புரிந்துகொண்டு, வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தால், வாழ்க்கை எப்போதும் மிகவும் மகிழ்ச்சியாகவும், ஆனந்தமாகவும் இருக்கும்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment