நூல் மதிப்புரை
நூல் : புகழ் பெற்ற கடற் போர்கள்
ஆசிரியர் : வி.என்.சாமி
வெளியீடு : வி.என்.சாமி, 45, செவந்தி தெரு,
பராசக்தி நகர், வில்லாபுரம்,
மதுரை - 625 012.
செல்பேசி: 96297 61984
விலை : ரூ.600/-
மனித வரலாற்றில் தொடர் நிகழ்ச்சியாக இருந்துவரும் போர்கள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்வதில் இயற்கையாகவே ஒவ்வொருவரும் ஆர்வம் இருந்து வருகிறது. அந்த வகையில் கடற் போர்கள் குறித்த செய்திகளை அறிய மனிதனுக்கு மிகுந்த ஆவல் உள்ளது. மனிதனின் இந்த ஆவலைப் பூர்த்திச் செய்யும் வகையில் மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமி, "புகழ் பெற்ற கடற் போர்கள்" என்ற அழகிய நூலை மிகுந்த ஆர்வத்துடன், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அழகிய தமிழ் மொழியில், அனைவரும் எளிதாக புரிந்து படிக்கும் வகையில், எளிய நடையில் எழுதியுள்ளார்.
"கடற்படையின் தோற்றமும் வளர்ச்சியும் என தொடங்கி, பாக்லாந்துப் போரும் முடிவும்" என மொத்தம் 41 தலைப்புகளில், கடற்போர்கள் குறித்த பல அரிய தகவல்களை நூலாசிரியர் மிக அழகாக இந்த நூலில் எடுத்துக் கூறியுள்ளார். கடற்போரின் பின்னணி, கடற்போரில் சாதனை புரிந்தவர்களின் கதை என பல நல்ல தகவல்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. நூலைப் படிக்க தொடங்கும்போது, அதில் மனம் ஒன்றிவிடுகிறது. முழு நூலையும் ஒரே மூச்சில் படித்து முடித்து விட வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது.
இந்த நூலின் சிறப்பான அம்சம் என்னவென்றால், கடற் போர்கள் தொடர்பான பல அரிய புகைப்படங்கள் இடம்பெற்று இருப்பதை கூறலாம். இதன்மூலம் நூலை வாசிக்கும்போது புதிய ஆர்வம் பிறக்கிறது. வரலாற்று நூல்களை ஆர்வத்துடன் படிப்பவர்கள் மட்டுமல்லாமல், நூல் வாசிப்பில் ஆர்வம் கொண்ட அனைவரும் இந்த "புகழ் பெற்ற கடற் போர்கள்" நூலை அவசியம் படிக்க வேண்டும். அதன்மூலம், பல அரிய தகவல்களை அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும். போர்கள் மூலம் மனித இனம் எப்படிப்பட்ட துன்பங்களை, துயரங்களை சந்திக்கிறது என்பதை சிந்திக்க வைக்கும்.
சிறப்பான முறையில் எழுதப்பட்டுள்ள இந்த நூலை, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் நூலகங்களில் இடம்பெறச் செய்தால் அதன்மூலம், ஆயிரக்கணக்கான வாசகர்கள் கடற் போர்கள் குறித்த தகவல்களை அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும். பள்ளி, கல்லூரி நூலகங்களில் இந்த நூல் இடம்பெறச் செய்தால், மாணவச் சமுதாயம் முன்பு போர்கள் குறித்து எழும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய முடியும். புகழ் பெற்ற கடற் போர்கள் நூல் ஒரு வரலாற்றுப் பொக்கிஷம் என்றே கூறலாம்.
- ஜாவீத்
No comments:
Post a Comment