நோய்களுக்கு மருந்தாகும் முருங்கை!
முருங்கை – 300க்கும் மேற்பட்ட நோய்களை தீர்க்கும் சக்தி கொண்டது. இதில் என்னென்ன சத்துகள் எனப் பார்ப்போம். முருங்கை இலை, பூ, மரப்பட்டை, காய் என எல்லாம் பயனை அள்ளித்தரும்.
இலை: கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, நார்சத்து, மற்றும் வைட்டமின் A-E நிறைந்தது.
கீரை: பாலைவிட 2 மடங்கு புரோட்டீன் உள்ளது. ஆரஞ்சுப் பழத்தை விட 7 மடங்கு வைட்டமின் C உள்ளது, வாழைப்பழத்தைவிட – 3 மடங்கு பொட்டாசியம் உள்ளது, கேரட்டைவிட – 4 மடங்கு வைட்டமின் A உள்ளது. பாலைவிட 4 மடங்கு கால்சியம் நிறைந்தது.
முருங்கையின் மற்ற பயன்கள்:
ரத்தம் விருத்தியாகும். ஹீமோகுளோபின் அளவு கூடும். தோள்பட்டை வலி, இடுப்பு வலி, மூட்டு வலி, எலும்பு தேய்மானம், அல்சர், வாய்புண், சர்க்கரை நோய், பற்கள் உறுதியாகும். வாரம் இரு முறை காய், இலையினை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். தினமும் 2 வேளை சூப்பாக குடிக்கலாம். மங்கலான கண்பார்வை தெளிவாகும். சளித்தொல்லை, தலைவலி, ஆஸ்துமா, மலச்சிக்கல், புற்று நோய் கூட குணமாக்கும். நார்சத்து நிறைந்தது. தாய்ப் பாலை அதிகரிக்கச் செய்யும். இவ்விதம் நமது உடலுக்கு பலவித நன்மைகளை தருவதால் முருங்கையை ஏதாவது ஒரு விதத்தில் பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியம் பெறும்.
- நன்றி: குங்குமம் தோழி இதழ்....!
No comments:
Post a Comment