இந்து மதத்திற்கு எதிராக திப்புசுல்தான் செயல்படவில்லை......!
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா.....!!
பெங்களூருவில் 07-11-2015 அன்று செய்தியாளர்களிடம் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது....
மைசூரு புலி என்று போற்றப்படும் திப்புசுல்தான், ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிரான கடைசிவரை போர்புரிந்தவர்.
ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியது மட்டுமல்லாது, மதசார்பற்ற சமுதாயத்தை கட்டமைக்கவும் தீவிரமாக பாடுபட்டவர் தீப்பு சுல்தான்.
'திப்புசுல்தான் ஒரு மதவாதி. ஹிந்துக்களை கட்டாயப்படுத்தி இஸ்லாம் மதத்திற்கு மதமாற்றம் செய்தார்' என்று கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதரமற்ற பொய்யாகும்.
திப்புசுல்தான் மதவாதியாக இருந்திருந்தால், ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள ஸ்ரீரங்கநாதசுவாமி கோயிலின் வளர்ச்சிக்கு மானியம் வழங்கியிருக்கமாட்டார்.
மாநில அரசு மீது குறைகூறுவதற்கு எதுவும் இல்லாததால் திப்புசுல்தான் பிறந்தநாள் கொண்டாடுவதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால் சில்லரை விஷயங்களை முன்வைத்துக்கொண்டு அரசை விமர்சித்துவருகிறார்கள்.
திப்புசுல்தான் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல.
திப்புசுல்தான் பிறந்தநாள் கொண்டாட்டத்தை எதிர்ப்பதன் மூலம் மதவாதிகள், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சமுதாயத்தை பிளவுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டுவருகிறார்கள்.
சிற்சில விவகாரங்களை விமர்சித்து மதநல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள்.
திப்புசுல்தான் பிறந்தநாளை மாநில அரசு சார்பில் இதற்கு முன்னரே கொண்டாடியிருக்க வேண்டும். தாமதமாக கொண்டாடுகிறோம் என்பதுதான் உண்மை.
இவ்வாறு திப்புசுல்தான் குறித்து சித்தராமையா கருத்துக்களை தெரிவித்தார்.
திப்பு சுல்தானின் தியாகத்தை மறக்க முடியுமா....!
நாட்டின் விடுதலைக்காக போராடி உயிர் தியாகம் செய்த மாவீரன் திப்பு சுல்தானின் வரலாற்றை யாராலும் மறக்க முடியாது.
அந்த மாவீரனின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் அவருக்கு விழா எடுப்பதில் எந்த தவறும் இல்லை.
ஒற்றுமையாக வாழும் மக்கள் இடையே குழப்பத்தை உருவாக்கி, பிளவை ஏற்படுத்தவே பிஜேபி முயற்சி செய்கிறது.
அதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
இவ்வாறு கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கருத்து கூறியுள்ளார்.
No comments:
Post a Comment