Wednesday, April 30, 2025

வேண்டுகோள்...!

 Important appeal regarding Nationwide silent 'LIGHTS OFF' Protest (Batti Gul) against WAQF Amendment ACT 2025, on 30 April 2025, Wednesday from 9 to 9:15 PM (IST).

Maulana Fazlur Rahim Mujaddidi Saheb 

General Secretary AIMPLB Official



Sunday, April 27, 2025

ஏழை முஸ்லிம் பெண் சாதனை...!

ஏழை முஸ்லிம் ஆட்டோ ஓட்டுனரின் மகள் அடிபா அகமது, சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று சாதனை...!

இந்திய குடிமைப் பணிகளில் சேர வேண்டும் என்று லட்சக்கணக்கான இந்திய இளைஞர்கள் கனவு காண்கிறார்கள். அதற்கான முயற்சியிலும் இறங்குகிறார்கள். அதற்காக கடினமாக உழைக்கிறார்கள்.பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால், ஒரு சிலரே அந்த  கனவு இலக்கை வெற்றிகரமாக அடைகிறார்கள். அப்படி கனவு கண்டு இந்தாண்டு யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்ற சிலரில், முஸ்லிம் பெண் அடிபா அகமதுவும் ஒருவர் ஆவார். அவரது சாதனை இன்னும் சிறப்பு வாய்ந்தது. ஆம், தம்முடைய வெற்றி மூலம், மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து யு.பி.எஸ்.சி. தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற முதல் முஸ்லிம் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

தேர்வு வரிசைப் பட்டியலில் அடிபா அகமது முதலிடத்தில் இல்லாதிருக்கலாம். ஆனால் அரசாங்கப் பணிகளுக்கான இந்தியாவின் கடினமான தேர்வில் தேர்ச்சி பெற்று இருப்பதால், அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார். உற்சாகமாக இருந்து வருகிறார்.

ஆட்டோ ஓட்டுனரின் மகள்:

ஒரு சாதாரண முஸ்லிம் ஆட்டோ ஓட்டுனர் அஷ்.ஃபாக் அகமது மற்றும்  இல்லத்தரசி ஆகியோரின் மகளான அடிபா அகமது, தனது மூன்றாவது முயற்சியில் வெற்றிக்கனியை எட்டிப் பறித்துள்ளார். ஆம், இது அடிபாவின் மூன்றாவது முயற்சியாகும்.

மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், தனது கனவு இலட்சியத்தை அடைவதற்கான முயற்சிகளை ஒருபோதும் கை விடாமல் கடும் போராட்டங்களுக்குப் பிறகு தற்போது வெற்றி இலக்கை அடைந்துள்ளார். நாடு முழுவதும் ஆயிரத்து ஆறு பேர் வெற்றிபெற்ற நிலையில், அவர்களில் முஸ்லிம்கள் மட்டும் 27 பேர் ஆவார்கள். இந்த 27 பேரில் ஒருவர் என்ற பெருமையை அடிபா பெற்றுள்ளார். மேலும் தேர்வு வரிசைப் பட்டியலில் அவர் 142வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்த வெற்றி சாதனை, அவரது சாதாரண வருமானம் கொண்ட நடுத்தர குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வெற்றிக்கான போராட்டங்கள்:

அடிபா அகமதுவின் வெற்றிக்குப் பின்னால் மிகப்பெரிய போராட்டங்கள், வேதனைகள் நிறைந்த கதைகள் இருக்கின்றன. ஆரம்பத்தில் அவரது வெற்றி ஒரே சீராக அமைந்து இருக்கவில்லை.  அவரது குடும்பம் வாடகை வீட்டில் வசிக்கிறது. அத்துடன், மிகப்பெரிய அளவில் பொருளாதார ரீதியாக சவால்களை எதிர்கொள்ள வேண்டிய இருந்தது. மேலும், ஆணாதிக்க சமூகத்தில் இதுபோன்ற சாதனையை அடைவது எளிதல்ல. அதுவும் ஏழை முஸ்லிம் வீட்டுப் பெண் ஒருவர், யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெறுவது என்பது யாருமே  நினைத்துப் பார்க்க முடியாத, கற்பனை செய்ய முடியாத ஒரு சாதனையாகும்.

தனது இந்த வெற்றி குறித்து கருத்து கூறியுள்ள அடிபா, "இது என்னுடைய மூன்றாவது முயற்சியாகும். முதல் முயற்சியில் தோல்வியடைந்தப் பிறகு, நான் மிகவும் சோர்வடைந்தேன். பல சமயங்களில், நான் சிவில் சர்வீசஸ்களுக்குத் தகுதியற்றவள் என்று கூட நினைத்தேன். அப்படி ஒருசில நேரங்களில் உணர்ந்தேன். சில சமயங்களில், நாங்கள் சிரமங்களை எதிர்கொள்கிறோம். மேலும் அது எங்கள் கனவுகளை அடைவதிலிருந்து நம்மைத் தள்ளிவிடுகிறது. எனக்கும் இதேதான் நடந்தது. ஆனால் என் குடும்பம், குறிப்பாக என் பெற்றோர், இந்த ஏற்ற தாழ்வுகளின் பயணம் முழுவதும் இரண்டு தூண்களைப் போல என்னுடன் இருந்தனர். அதனால் நான் தொடர்ந்து முயற்சி செய்தேன்" என்று  தனது வெற்றிக்குப் பின்னால் இருந்த போராட்டங்கள், சவால்கள் ஆகியவற்றை கூறி, தம்முடைய பெற்றோர் உறுதியாக இருந்தது தமக்கு உற்சாகம் அளித்தது என மகிழ்ச்சி தெரிவிக்கிறார்.

வெற்றி எளிதில் கைக்கு வந்து சேராது:

முதல் மற்றும் இரண்டாவது முறை தோல்வி அடைந்தபிறகு, அடிபா சோர்வு அடைந்தாலும், தமது இலட்சியத்தை ஒருபோதும் கைவிடவில்லை. எப்படியும் வெற்றி பெற வேண்டும். ஜெயிக்க வேண்டும் என்ற உறுதியான மனதுடன் தொடர்ந்து முயற்சி செய்தார். இந்த முயற்சிகளுக்கு அவரது பெற்றோர் ஆதரவாக இருந்து உற்சாகம் அளித்தனர். இதன்மூலம் அடிபா அகமது வெற்றிபெற்று சாதனை புரிந்துள்ளார்.

அடிபா அகமது பெற்றுள்ள இந்த வெற்றி, மூலம்  மற்ற இளைஞர்கள், நல்ல படிப்பினை பெற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும். குறிப்பாக, முஸ்லிம் இளைஞர்கள், வாழ்க்கையில் சாதிக்க முன்வர வேண்டும். உயர் பதவிகளில் அமர கனவு காண வேண்டும். அதற்காக நல்ல கல்வி பெற வேண்டும். கல்வியை முடித்தபின் ஓர் கனவை காண வேண்டும். அது இலட்சிய கனவாக இருக்க வேண்டும். தமக்கும், சமுதாயத்திற்கு பலன் அளிக்கும் கனவாக அது இருக்க வேண்டும். ஆம், அடிபா அகமது கண்ட கனவை போன்ற கனவாக அது இருக்க வேண்டும். அதற்காக தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். இடையில் தடைக்கற்கள் வந்தால், அதை உடைத்து விட்டு,பயணத்தை தொடர வேண்டும். அப்படிப்பட்ட ஒரு கடின பயணத்தை மேற்கொண்டு அடிபா அகமது சாதனை புரிந்து இருப்பது உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்காக முஸ்லிம் சமுதாயம் உண்மையில் பெருமைப்பட வேண்டும்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Saturday, April 26, 2025

சாதனை....!

 Adiba Anam is going to become first muslim woman IAS officer of Maharashtra.

Her father Ashfaq Ahamed Auto driver and living in rented house.



கேள்வி...!

 பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவம்...!

காங்கிரஸ் கேள்வி...!!



Friday, April 25, 2025

சுற்றுலாப் பயணிகளின் இதயங்களை வென்ற காஷ்மீர் முஸ்லிம்கள்...!

"அழகிய மனிதநேய செயல்கள் மூலம் சுற்றுலாப் பயணிகளின் இதயங்களை வென்ற காஷ்மீர் முஸ்லிம்கள்"

உலக மக்களின் சுற்றுலாச் சொர்க்கமாக இருந்துவரும் காஷ்மீரின் பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில், கடந்த 22.04.2025 செவ்வாய்க்கிழமை அன்று பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தீவிரவாத தாக்குதல் காரணமாக 26 பேர் உயிரிழந்தனர். இந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் முஸ்லிம்கள் நேற்று (25.04.2025) வெள்ளிக்கிழமையன்று கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். பல இடங்களில் மெழுகுவர்த்தி பேரணியும் நடைபெற்றது. 

நிலைமை இப்படி இருக்க, இந்த தாக்குதலை முஸ்லிம்களுக்கு எதிராக திசை திருப்ப சில சக்திகள் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றன. இந்துக்களுக்கு எதிராக முஸ்லிம் பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்திவிட்டதாகவும் இஸ்லாமிய தீவிரவாதம் என்றும், அந்த தாக்குதலுக்கு பெயர் சொல்லி அழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இஸ்லாமும், முஸ்லிம்களும் தீவிரவாத செயல்களை ஒருபோதும் ஆதரித்ததில்லை. ஆதரிக்க போவதுமில்லை. அமைதி மார்க்கம் இஸ்லாம் அனைவரின் மீதும் அன்பு செலுத்த வேண்டும் என்றும், அரவணைத்துச் செல்ல வேண்டும் என்றும் அறிவுரைகளை கூறுகிறது. அதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் கட்டளையிடுகிறது. 

இதை சரியாக உணர்ந்துகொள்ளாமல், ஒருசிலர் செய்யும் தீவிரவாத செயல்களால், முஸ்லிம் சமுதாயத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டு விடுகிறது. இப்படி சிலர் செய்யும் செயல்களை ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயமும் எதிர்த்து கண்டிக்கிறது. பஹல்காம் தீவிரவாத சம்பவத்திற்கு எதிராக காஷ்மீரில் மட்டுமல்லாமல், தமிழகம் உட்பட நாடு முழுவதும் முஸ்லிம்கள் கண்டன குரல்களை எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். மார்க்க அறிஞர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்து முஸ்லிம்களும் இந்த பயங்கரவாத செயலுக்கு தங்களது எதிர்ப்பையும் கண்டனங்களையும் பதிவு செய்து இருக்கிறார்கள். 

சுற்றுலாப் பயணிகளை பாதுகாத்த காஷ்மீரிகள்:

இதுஒருபுறம் இருக்க, காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட மக்களை பத்திரமாக பாதுகாத்து அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதில் காஷ்மீர் முஸ்லிம்கள் மிகவும் ஆர்வம் செலுத்தி, தங்களுடைய மனிதநேய கடமையை மிகவும் சிறப்பாக நிறைவேற்றி இருக்கிறார்கள். இதை பெரும்பாலான ஊடகங்கள் வெளியிடவில்லை. பிரச்சினையை இந்து-முஸ்லிம் என்ற நோக்கத்தில் திசை திருப்ப ஊடகங்கள் முயற்சிகளை மேற்கொண்டன. ஆனால், அதையும் தாண்டி, காஷ்மீர் முஸ்லிம்கள் செய்த அற்புதமான அழகிய செயல்கள் தற்போது உலகத்தின் வெளிச்சத்திற்கு வந்துகொண்டே இருக்கிறது. 

முஸ்லிம்களின் அழகிய செயல்களை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு, பத்திரமாக தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பிய சுற்றுலாப் பயணிகள் வாக்குமூலமாக தற்போது தந்துக் கொண்டே இருக்கிறார்கள்.  குறிப்பாக கேரளவைச் சேர்ந்த என்.ராமச்சந்திரன் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் உயிரிழக்க, அவரது மகள் ஆரத்தி மேனனுக்கு காஷ்மீர் முஸ்லிம் இளைஞர்கள் முசாஃபிர் மற்றும் சமீர் ஆகிய இரண்டு பேர் செய்த மனிதநேய உதவிகளை தன்னால் ஒருபோதும் மறக்க முடியாது என ஆரத்தி மேனன் கூறியது மட்டுமல்லாமல், தனக்கு இரண்டு முஸ்லிம் சகோதரர்கள் கிடைத்து இருப்பதாகவும், நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். 

தமிழக சுற்றுலாப் பயணிகள்:

இதேபோன்று, பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு, சென்னை திரும்பிய தமிழக சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலானோர், தங்களை பாதுகாத்து தங்க வைத்தது முஸ்லிம்கள் தான் என கூறி மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 'நாங்கள் தங்கி இருந்தது முஸ்லிம்களின் இடத்தில் தான் என்றும், அவர்கள் அனைவரும் எங்களை அக்கறையுடன் கவனித்துக் கொண்டார்கள் என்றும் தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கூறியுள்ளனர். 

இந்து-முஸ்லிம் என்ற பிரச்சினையே காஷ்மீரில் இல்லை. அவர்கள் அனைவரும் மனிதநேயம் மிக்க நல்ல முஸ்லிம்கள். எங்களை இந்துக்கள் என்ற நோக்கத்தில் ஒருபோதும் பார்க்கவில்லை. அப்படி பார்த்து எங்களை நடத்தவில்லை. நல்ல அன்புடன் பழகி எங்களை பத்திரமாகவும் பாதுகாப்பாகவும், தமிழகம் செல்ல தேவையான அனைத்து உதவிகளையும் செய்தவர்கள் காஷ்மீர் முஸ்லிம்கள் தான். சில ஊடகங்களில் வெளிவந்த கற்பனை கதைகளை போல் இல்லாமல், காஷ்மீர் முஸ்லிம்கள் அன்பானவர்கள், பண்பானவர்கள், நேசம் மிக்கவர்கள். குறிப்பாக மனிதநேயத்துடன் உதவிச் செய்ய வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்கள் என தமிழக சுற்றுலாப் பயணிகள் புகழாரம் சுட்டியுள்ளனர். 

வீடுகளில் தங்கவைத்து விருந்து:

பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு, பதற்றம் அடைந்த சுற்றுலாப் பயணிகள் அனைவரையும் ஒவ்வொரு காஷ்மீர் முஸ்லிமும், தங்களுடைய இல்லத்திற்கு அழைத்துச் சென்று அவர்களை தங்க வைத்ததுடன், சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தந்துள்ளனர். ஆண், பெண், குழந்தைகள் என அனைவரையும் அரவணைத்துக் கொண்டு அவர்களுக்கு நல்ல உணவு விருந்து அளித்து பயத்தையும் பதற்றத்தையும் போக்க தேவையான பணிகளை காஷ்மீர் முஸ்லிம்கள் செய்துள்ளனர். 

அத்துடன், பலர், பேருந்துகளில் பயணம் செய்த சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான தண்ணீர், உணவு ஆகியவற்றை வழங்கி தங்களுடைய அன்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஒருசில காஷ்மீர் இளைஞர்கள் வீரத்துடன் செயல்பட்டு, தாக்குதல் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து பாதிக்கப்பட்ட பலரை தங்களுடைய முதுகுகளில் தூக்கிக் கொண்டு, ஓடோடிச் சென்று, பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்ற காணொளிகளையும் நாம் சமூக வலைத்தளங்களில் காண முடிந்தது. 

பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு டாக்டர் ஆர்.நஜீப் தலைமையிலான முஸ்லிம் மருத்துவர்கள் குழு ஒன்று, ஆனந்த்நாக்கில் உள்ள ஜி.எம்.சி. மருத்துவமனையில் இரவு பகல் என பார்க்காமல் மருத்து உதவிகளை வழங்கினார்கள். தற்போது அளித்துக் கொண்டே இருக்கிறார்கள். இதுபோன்ற பல மனிதநேயச் செயல்கள், பணிகள் காஷ்மீர் முஸ்லிம்களால் செய்யப்பட்டுள்ளது. 

மூடி மறைக்க சதி:

பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு, காஷ்மீர் முஸ்லிம்கள் செய்த மனிதநேயச் செயல்கள், பணிகள், ஆகியவற்றை மறைக்க சதி நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. காஷ்மீர் முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்ற முத்திரை குத்த வேண்டும் என்ற மிகவும் கெட்ட எண்ணத்தில் சில ஊடகங்கள் செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றன. 

காஷ்மீர் முஸ்லிம்கள் செய்த மனிதநேயச் செயல்களும் மிகவும் நெருக்கடியான நேரத்தில் அவர்கள் ஆற்றியப் பணிகளும் மறைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், சமூக வலைத்தளங்கள் மூலம் தற்போது காஷ்மீர் முஸ்லிம்கள் ஆற்றிய அற்புதமான மனிதநேயச் செயல்கள், பணிகள் அனைவரும் அறிந்து வியப்பு அடைந்து மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள். காஷ்மீர் முஸ்லிம்கள் குறித்து தாங்கள் தப்பாக எண்ணிக் கொண்டோம் என அவர்கள் வேதனை அடைகிறார்கள். 

எவ்வளவு தான் உண்மையை மூடி மறைத்தாலும், அது ஒருநாள் நிச்சயம் வெளிச்சத்திற்கு வந்துவிடும். வந்தே தீரும் என்பது தான் உண்மையாகும். காஷ்மீர் முஸ்லிம்களின் விவகாரத்தில் தற்போது அது தான் நடந்து இருக்கிறது. காஷ்மீர் முஸ்லிம்களின் மனிதநேயச் செயல்கள், அழகிய பணிகள் இனி உலகம் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளும். அந்த அழகிய அற்புதமான சொர்க்கப் பூமி, இனி எப்போதும் சொர்க்கப் பூமியாகவே இருக்க வேண்டும். அதன் இயற்கை அழகை காண சுற்றுலாப் பயணிகள் அங்குச் சென்றுக் கொண்டே இருக்க வேண்டும். அதன்மூலம், தங்களுடைய வாழ்வாதாரத்திற்கான வருவாயை காஷ்மீர் முஸ்லிம்கள் பெற்று அமைதியாக வாழ வேண்டும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Thursday, April 24, 2025

காஷ்மீர் தந்த இரண்டு முஸ்லிம் சகோதரர்கள்....!

துப்பாக்கி குண்டுக்கு என் தந்தை உயிரிழந்தார். ஆனால் காஷ்மீர் எனக்கு இரண்டு முஸ்லிம் சகோதரர்களை தந்து இருக்கிறது....!

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ராமசந்திரனின் மகள் ஆரத்தி நெகிழ்ச்சி...!!

கொச்சி, ஏப்.25-காஷ்மீரின் பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 26 பேரில் ஆரத்தியின்  தந்தை, 65 வயதான என். ராமச்சந்திரனும் ஒருவர் ஆவார். இந்த தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு, ஸ்ரீநகரை விட்டு வெளியேறிய கொச்சியைச் சேர்ந்த ஆரத்தி, கற்பனை செய்ய முடியாத இழப்பை எதிர்கொண்ட உள்ளூர் காஷ்மீரிகளுக்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளார். அதில் "எனக்கு இப்போது காஷ்மீரில் இரண்டு சகோதரர்கள் உள்ளனர். அல்லாஹ் உங்கள் இருவரையும் பாதுகாக்கட்டும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

கடந்த செவ்வாயன்று பஹல்காமின் பசுமையான புல்வெளிகளை உலுக்கிய கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச் சேர்ந்த ஆரத்தி ஆர் மேனனுக்கு, தனது குடும்பத்துடன் காஷ்மீரின் இயற்கை அழகில் ஒரு குறுகிய பயணம் ஒரு பயங்கரமான நினைவாக மாறியது. பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 26 பேரில் அவரது தந்தை, 65 வயதான என். ராமச்சந்திரனும் ஒருவர், பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள் ஆவார்கள். 

சம்பவம் குறித்து விளக்கம்:

இந்த சம்பவம் குறித்து ஆரத்தி ஆர் மேனன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், "முதலில் இது பட்டாசு என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் அடுத்த ஷாட்டிலேயே, அது ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்று எனக்குத் தெரியும்," என்று தெரிவித்தார்.

ஆரத்தியின் தந்தையும் அவரது ஆறு வயது இரட்டை மகன்களும் பைசரனில் வேலி அமைக்கப்பட்ட புல்வெளி வழியாக நடந்து சென்றபோது, ​​தீவிரவாதிகள் அவர்களைத் தாக்கினர். அவரது தாயார் ஷீலா காரில் இருந்துள்ளார். "நாங்கள் தப்பிக்க வேலியின் கீழ் ஊர்ந்து சென்றோம். மக்கள் எல்லா திசைகளிலும் சிதறி ஓடினர். நாங்கள் நகர்ந்து கொண்டிருந்தபோது, ​​காட்டில் இருந்து ஒரு மனிதன் வெளிப்பட்டான். அவன் எங்களை நேராகப் பார்த்தான்," என்று அவர் கூறினார். அந்நியன் அவர்களுக்குப் புரியாத வார்த்தைகளைப் பேசினான்.

"நாங்கள் பதிலளித்தோம். எங்களுக்குத் தெரியாது. அடுத்த கணம், அவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். என் தந்தை எங்கள் அருகில் சரிந்தார்," என்று அவர் கூறினார். "நான் இரண்டு ஆண்களைப் பார்த்தேன், ஆனால் அவர்கள் எந்த சிப்பாய் சீருடையும் அணியவில்லை," என்று அவர் நினைவு கூர்ந்தார். "என் மகன்கள் கத்த ஆரம்பித்தார்கள்.  அந்த மனிதன் வெளியேறினான். என் தந்தை போய்விட்டார் என்பது எனக்குத் தெரியும். நான் சிறுவர்களைப் பிடித்துக்கொண்டு காட்டுக்குள் ஓடினேன். நான் எங்கே போகிறேன் என்று தெரியவில்லை," என்று அவர் கூறினார், அவர்கள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வனாந்தரத்தில் எப்படி அலைந்தார்கள் என்பதை விவரித்தார். குதிரைக்குட்டிகளும் ஓட ஆரம்பித்துவிட்டன, நான் அவற்றின் கால்தடங்களைப் பின்பற்றினேன்.

காஷ்மீரில் இரண்டு முஸ்லிம் சகோதரர்கள்:

இறுதியாக அவரது தொலைபேசி சிக்னல் கிடைத்ததும்,, அவர் ஓட்டுநர் முசாஃபிரை அழைத்தார். "என் ஓட்டுநர் முசாஃபிர் மற்றும் மற்றொரு மனிதர், சமீர்.  அவர்கள் என் சகோதரர்களானார்கள். அவர்கள் எல்லாவற்றிலும் என்னுடன் நின்றார்கள், என்னை பிணவறைக்கு அழைத்துச் சென்றார்கள். சம்பிரதாயங்களுக்கு உதவினார்கள். அதிகாலை 3 மணி வரை நான் அங்கே காத்திருந்தேன். அவர்கள் என்னை ஒரு சகோதரியைப் போல கவனித்துக்கொண்டார்கள்," என்று ஆரத்தி நினைவு கூர்ந்துள்ளார்.  அவர் ஸ்ரீநகரை விட்டு வெளியேறியபோது, ​அவர்களிடம் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டியிருந்தது. அந்த வார்த்தைகள் இவை: "எனக்கு இப்போது காஷ்மீரில் இரண்டு சகோதரர்கள் உள்ளனர். அல்லாஹ் உங்கள் இருவரையும் பாதுகாக்கட்டும்."

தாங்க முடியாத அதிர்ச்சியை எதிர்கொண்டாலும், மேனன் தனது அன்புக்குரியவர்களை கடுமையான உண்மையிலிருந்து - குறிப்பாக தனது தாயாரிடமிருந்து - பாதுகாக்கும் வலிமையைக் கண்டார். தனது தந்தை ராமச்சந்திரனின் உயிரைப் பறித்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு சில மணிநேரங்கள் மற்றும் நாட்களில், மேனன் தனது தந்தை ராமச்சந்திரனின் உடலை கொச்சிக்குக் கொண்டுவரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அதே நேரத்தில் அவரது தாயாருக்கு அந்த துயரம் குறித்துத் தெரியாமல் இருந்தார். கொச்சியின் எடப்பள்ளியைச் சேர்ந்த ராமச்சந்திரனின் உடல் புதன்கிழமை இரவு 8 மணியளவில் கொச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. துபாயில் பணிபுரியும் மேனன், தற்போது இந்தியாவில் சிறிது காலம் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

மௌலானா அப்துல் ஹஃபீஸ் ரஹ்மானி...!

 "மௌலானா அப்துல் ஹஃபீஸ் ரஹ்மானி - சில நினைவலைகள்"

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் - 

வாழந்த காலமெல்லாம் தனது மூச்சுக்காற்று அனைத்தையும், இஸ்லாம் மற்றும் இஸ்லாமியச் சமுதாயத்திற்காக அர்பணித்த பல இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவர் தான் மௌலானா அப்துல் ஹஃபீஸ் ரஹ்மானி அவர்கள். இஸ்லாமிய வாழ்க்கை நெறிமுறைப்படி, முஸ்லிம்கள் தங்களுடைய வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். அதன்மூலம் இஸ்லாமிய ஒளி தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் பரவ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் தம்முடைய வாழ்க்கையின் அனைத்து நேரத்தையும் செலவிட்ட மௌலானா அப்துல் ஹஃபீஸ் ரஹ்மானி அவர்கள், வேலூரில் இஸ்லாமிக் சென்டர் உருவாக முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர் ஆவார்.

வேலூரில் உள்ள இஸ்லாமிக் சென்டரை, சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் மட்டுமல்லாமல், நம்முடைய சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கூட சரியாக பயன்படுத்தி, இஸ்லாமிய சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் காரணமாக, வேலூரில் இளைஞர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திய மௌலானா அவர்கள், கடந்த 1982ஆம் ஆண்டு வேலூரில் கல்லூரி படிப்பை நிறைவு செய்த இளைஞர்களை அழைத்து அவர்கள் மத்தியில், இஸ்லாமியப் பணியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துகூறி, அவர்களை இஸ்லாமிய வாழ்க்கை நெறியில் வாழ வழிகாட்டியதுடன், மற்றவர்களுக்கும் ஒரு உந்துதல் சக்தியாக இருக்க வேண்டும் என அறிவுறுத்திக் கொண்டே இருந்தார்.  

ஆடம்பர வாழ்க்கையை சிறிதும் விரும்பாமல், எப்போதும் எளிமை, எளிமை, எளிமை என்ற இலட்சியத்துடன் தாம் வாழ்நாள் முழுவதும் மிகவும் எளிமையாக வாழ்ந்த மனிதர். அனைவரிடமும் புன்னகையுடன் பேசும் குணம் கொண்ட மௌலானா அவர்கள், கோபம் அடைந்து நான் பார்த்தது இல்லை. அதேநேரத்தில் சில நேரங்களில் தமாஷாக கூட பேசி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவார். 

சில நினைவலைகள்:

கல்லூரி படிப்பு முடித்தபிறகு, புதுமலர் என்ற கையெழுத்துப் பிரதியை நான் நடத்திக் கொண்டு இருப்பதை அறிந்துகொண்ட மௌலானா மௌலானா அப்துல் ஹஃபீஸ் ரஹ்மானி அவர்கள், வேலூர் இன்பென்டரி சாலையில் இருக்கும் என் வீடு தேடி வந்து என்னை வாழ்த்தியது, இன்றும் என் நினைவில் இருந்துகொண்டே இருக்கிறது. நான் இருக்கும் பகுதியை ஒட்டியுள்ள டிட்டர் லைன் பகுதியில் மௌலானா அவர்களின் வீடு இருந்தது. என்னை சந்தித்தபிறகு, தமது இல்லத்திற்கு வரும்படி அன்புடன் அழைப்பு விடுத்தார். அதன்படி, அவரது வீட்டிற்குச் சென்றபோது, என்னையும் என்னுடைய குடும்பத்தைப் பற்றியும் நானே அறியாத பல விஷயங்களைச் சொல்லி என்னை வியப்பில் ஆழ்த்தினார். என்னுடைய தந்தை அப்துல் சத்தார் சாஹிப் அவர்களின் விருந்தோம்பல் குணம், வேலூரில் மிகவும் புகழ்பெற்றது என அவர் என்னிடம் கூறியபோது, நான் மிகவும் ஆச்சரியம் அடைந்தேன். 

இப்படி பல விஷயங்களை பேசிய மௌலானா அவர்கள், பின்னர், என்னை நோக்கி "உங்களிடம் எழுத்துத் திறமை உள்ளது. அதை நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நிறைய படித்து அதன்மூலம் எழுத்துப்பணியை மேற்கொள்ளுங்கள்" என அறிவுறுத்தினார். அத்துடன், உர்தூ மொழியை நன்கு கற்று தேர்ச்சி பெற்றால், அதன்மூலம் இன்னும் நிறைய அறிவை பெற முடியும் என்றும் கூறியதுடன், சிறிது காலம் எனக்கு உர்தூ கற்பிக்கும் ஆசிரியராக கூட இருந்து என்னை ஊக்குவித்தார். 

எழுத்துப் பணிக்கு ஊக்கம்:

தற்போது நான் ஒரு இஸ்லாமிய எழுத்தாளனாக இருக்கிறேன் என்றால், அதற்கு முதலில் விதை போட்ட பலரில் ஒருவர் மௌலானா அவர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. சமரசம் இதழில் என்னுடைய முதல் கட்டுரையான "வாழ்வு இனிக்க" வெளியாக காரணம் அப்துல் ஹஃபீஸ் ரஹ்மானி அவர்கள் தான். அதன்பிறகு, பல கட்டுரைகளை சமரசம் இதழில் தொடர்ந்து வெளியிட ஊக்கம் தந்து, ஆலோசனைககளை வழங்கி, எனக்கு நல்ல ஆதரவு வழங்கினார். 

வேலூரில் உள்ள இஸ்லாமிக் சென்டரில், நடக்கும் கருத்தரங்கம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைத்து அது தொடர்பான செய்திகளை சேகரித்து சமரசத்திற்கு மட்டுமல்லாமல், பிற தினசரி பத்திரிகைகளுக்கும் அனுப்ப ஆலோசனைகளை வழங்கி, தேவையான உதவிகளையும் செய்வார். 

இப்படி அவர் ஆரம்பக் காலங்களில் செய்த சிறிய சிறிய உதவிகள், பின்னர், என்னை ஒரு எழுத்தாளராக, பத்திரிகையாளராக, தொலைக்காட்சி செய்தி ஆசிரியராக மாற்றியது என்றே கூறலாம். இஸ்லாமியர்கள் மத்தியில் ஈமான் வலிமையாக இல்லை என்ற ஆதங்கம் மௌலானா அவர்களுக்கு எப்போதும் இருந்துகொண்டே இருந்தது. நாம் அனைவரும் பெயரில் மட்டுமே முஸ்லிம்களாக இருக்கிறோம். ஈமான் உறுதியுடன், செயல் அளவில் இன்னும் முழுமையான முஸ்லிம்களாக மாறவில்லை என எப்போதும் சொல்லிக் கொண்டே இருப்பார். 

வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு, இஸ்லாமிய நெறிமுறைகளின்படி வாழ்க்கை அமைத்துக் கொள்ள வேண்டும் என இளைஞர்களுக்கு அறிவுரை கூறிக் கொண்டே இருந்த ரஹ்மானி அவர்கள், அதற்காக வேலூரில் ஒரு இளைஞர் அமைப்பையே உருவாக்கி, இளைஞர்கள் மத்தியில் தீன் பிரச்சாரத்தை செய்ததுடன், அவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் தீனின் வலிமையை எடுத்துக் கூற வழி அமைத்து தந்தார். 

மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு தலைவர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத், அப்துல்லாஹ் அடியார் உள்ளிட்ட பல அறிவுஜீவிகள் வேலூர் இஸ்லாமிக் சென்டருக்கு வருகை தந்தபோது, அவர்களின் வருகை குறித்து முன்கூட்டியே இளைஞர் அமைப்புகளுக்கு தகவல் தெரிவித்து, அவர்கள் ஆற்றும் சொற்பொழிவுகளை கேட்டு, அதன்மூலம் இளைஞர்கள் பயன் அடைய வேண்டும் என்ற ஆர்வம் எப்போதும் ரஹ்மானி சாஹிப் அவர்களுக்கு இருந்துகொண்டே இருந்தது. அதன் காரணமாக இஸ்லாமிக் சென்டரில் எப்போதும் இளைஞர்களின் படை இருந்துகொண்டே இருக்கும். 

இதேபோன்று, பெண் கல்வி குறித்து அதிக அக்கறை கொண்ட மௌலானா அவர்கள், அவர்கள் அனைவரும் மிகவும் பாதுகாப்புடன் கல்வி பெற வேண்டும் என்று அறிவுறுத்திக் கொண்டே இருப்பார். முஸ்லிம் குடும்பங்களில் ஒரு பெண் நல்ல கல்வி பெற்று தேர்ச்சி பெற்றால், அவர்கள் மேல்கல்வி கற்ற வேண்டும் என ஊக்குவிப்பார். மேலும், இஸ்லாமிய கல்வியை பெண்கள் அவசியம் பெற வேண்டும் என்றும், அவர்கள் தீனியில் நிலைத்து இருக்க தீன் கல்வி மிகவும் முக்கியம் என்றும் சொல்லிக் கொண்டே இருந்தது மட்டுமல்லாமல், அதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு அதில் ஏக இறைவனின் கருணையால் ஓரளவுக்கு சாதித்தும் இருக்கிறார். 

மௌலானா அப்துல் ஹஃபீஸ் ரஹ்மானி அவர்களின் மறைவு, எனக்கு தனிப்பட்ட முறையில் இழப்பு என்று கூறும் அதேவேளையில், இஸ்லாமிய அறிஞர்களின் உலகில் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாகும். ஏக இறைவன் மௌலானா அவர்களின் பணிகளை ஏற்று அங்கீகரித்து அருள் புரிய வேண்டும். உயரிய சுவன பாக்கியத்தை வழங்க வேண்டும். 

=====================

உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு - நேர்காணல்...!

"இணைப்பே இலக்கியம்" என்ற முழக்கத்துடன்  திருச்சியில் இஸ்லாமிய இலக்கியக் கழகம் நடத்தும்  உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு -

- மணிச்சுடர் நாளிதழுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் பேராசிரியர் சேமுமு முகமதலி தகவல் -

தமிழகத்தில் இஸ்லாமிய இலக்கியக் கழகம் கடந்த 1973ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் தொடங்கி, கடந்த 50 ஆண்டுகளாக சிறப்பான இலக்கியச் சேவையை ஆற்றி வருகிறது. 1973ஆம் ஆண்டு முதல் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டை நடத்திய இஸ்லாமிய இலக்கியக் கழகம், அதனைத் தொடர்ந்து 8 மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தி, தற்போது வரும் மே 9, 10, 11 ஆகிய தேதிகளில் திருச்சியில் எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரி வளாகத்தில் 9வது மாநாட்டை நடத்த இருக்கிறது. எல்லா மாநாடுகளிலும் அறிஞர்கள், பேராளர்கள், ஆய்வுரையாளர்கள், கவிஞர்கள், இலக்கியப் புலிகள் பங்கேற்று சிறப்பித்ததைப் போன்று இந்த 9வது மாநாட்டிலும், உலகம் முழுவதிலும் இருந்து தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள்  பங்கேற்று சிறப்பிக்க இருக்கிறார்கள். 

9வது மாநாடு மிகவும் சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன், மாநாட்டு நெறியாளர்கள் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், பேராசிரியர் முனைவர் தி.மு.அப்துல் காதர், நீதியரசர் ஜி.எம்.அக்பர் அலி ஆகியோரின் அருமையான ஆலோசனைகளை பெற்று, மாநாட்டு அமைப்பாளர்கள் பேராசிரியர் முனைவர் சேமுமு முகமதலி, பேராசிரியர் முனைவர் மு.இ.அகமது மரைக்காயர், எஸ்.எஸ்.ஷாஜஹான் ஆகியோர் சிறப்பாக பணிகளைச் செய்துவருகிறார்கள். அதன்படி, மாநாட்டுப் பணிகள் வேகமாக நடைபெற்றுவரும் நிலையில், இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் சேமுமு முகமதலி அவர்களிடம், உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாட்டின் நோக்கம், அதில் பங்கேற்கும் அறிஞர் பெருமக்கள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அறிய முற்பட்டு, மணிச்சுடர் நாளிதழுக்கு நேர்காணல் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டோம். மிகவும் பிஸியான நேரத்திற்கு இடையே கூட, எந்தவித தயக்கமும் இல்லாமல் மிகவும் மகிழ்ச்சியுடன் நேர்காணலை அளிக்க ஒப்புக் கொண்டு, சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் அவர்களுக்கு, பேராசிரியர் சேமுமு முகமதலி அவர்கள், மூன்று நாள் மாநாடு குறித்து, பல சுவையான தகவல்களை தெரிவித்தார். அதை மணிச்சுடர் வாசகர்களுக்கு மட்டுமல்லாமல், தமிழ் சமுதாயத்திற்கும் வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். 

இஸ்லாமிய இலக்கியக் கழகமும் மாநாடுகளும்:

தமிழ்ச் சமுதாயத்திற்கு மிகச் சிறந்த முறையில் இலக்கியச் சேவையை ஆற்றி வரும் இஸ்லாமிய இலக்கியக் கழகம், கடந்த 1973ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட அந்த ஆண்டிலேயே திருச்சியில் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய முதல் மாநாட்டை இரண்டு நாட்கள் இஸ்லாமிய இலக்கியக் கழகம் நடத்தியது. பின்னர் இரண்டாவது மாநாட்டை சென்னை புதுக் கல்லூரியில் 1974, ஜுன் 8 மற்றும் 9 ஆகிய இரண்டு நாட்களில் நடத்தியது. மூன்றாவது மாநாடு 1978 ஜனவரி 13, 14, 15 ஆகிய தேதிகளில் காயல்பட்டினத்தில் நடைபெற்றது. 

நான்காவது மாநாடு 1979, ஜுன் 29, 30 மற்றும் ஜுலை ஒன்று ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் இலங்கை கொழும்பு நகரில் நடைபெற்றது. ஐந்தாவது மாநாடு கீழக்கரையில் 1990, டிசம்பர் 29, 30, 31 ஆகிய மூன்று நாட்கள் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார். ஆறாவது மாநாடு மற்றும் இஸ்லாமிய இலக்கியக் கழக வெள்ளி விழா கூத்தாநல்லூர் புரவலர்கள் சார்பாக சென்னையில் 1999 நவம்பர் 30, டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. ஏழாவது மாநாடு, மீண்டும் சென்னையில் 2007, மே 25, 26,27 ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு உமறுப்புலவர் விருது வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 8வது மாநாடு, 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 14, 15 மற்றும் 16 ஆகிய நாட்களில் கும்பகோணத்தில் கிஸ்வா அமைப்பின் ஒத்துழைப்போடு நடைபெற்றது. தற்போது உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய  ஒன்பதாம் மாநாடு திருச்சியில் உள்ள  எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரி வளாகத்தில் வரும் மே 9, 10, 11 ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. அதற்காக சிறப்பான  ஏற்பாடுகளைச் செய்துவருகிறோம். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு:

இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் பொன்விழாவுடன் நடத்தப்படும், உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாட்டின் தொடக்க விழா, மே 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் சேமுமு முகமதலி தலைமையில் நடைபெறுகிறது. இந்த தொடக்க விழாவில் கலந்துகொள்ளும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள், தொடக்க உரையாற்றுகிறார். மாநாட்டின் முதல் நாளில் பங்கேற்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தொடக்க விழா பேருரையை ஆற்றுகிறார்.  தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு, 9வது மாநாட்டின் சிறப்பு மலர் மற்றும் ஆய்வு கோர்வை, யார், எவர் ஆகிய நூல்களை வெளியிடுகிறார்.  முதல் நாள் மாநாட்டில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள். 

இதனைத் தொடர்ந்து சமய நல்லிணக்கக் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் மௌலவி அப்துல் காதர் பாகவி, கும்பகோணம் திருவடிக் குடில் சுவாமி அவர்கள், கிறித்துவ மத போதக்ர் ஜெகத் காஸ்பர் ராஜ், காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் கலந்துகொண்டு, சிறப்புரையாற்ற இருக்கிறார்கள். 

பின்னர், கவியருவி பேராசிரியர் தி.மு.அப்துல் காதர் தலைமையில் கவியரங்கம் நடைபெறுகிறது.  இந்த கவியரங்கில் 20 கவிஞர்கள் பங்கேற்று, தங்களுடைய அழகிய கவிதைகளை வாசித்து, தமிழ் உள்ளங்களை கவர இருக்கிறார்கள். 

வெளிநாடுகளில் இருந்து குவியும் தமிழ் அறிஞர்கள்:

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாட்டில், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், சவுதி அரேபியா, பஹ்ரான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து 250க்கும் மேற்பட்ட அறிஞர் பெருமக்கள், சமய பெரியவர்கள் கலந்துகொள்கிறார்கள். இந்தியாவில் இருந்து 600 பேராளர்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.  

இணைப்பே இலக்கியம் என்ற முழக்கம்:

இணைப்பே இலக்கியம் என்ற இலட்சிய முழக்கத்துடன் நடைபெறும் இந்த மாநாடு, மத ரீதியாக மக்களை பிரிக்கும் ஆதிக்கச் சக்திகளின் உண்மையான முகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து, சமய நல்லிணக்கத்தையும் மனிதநேயத்தையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வழி வகுக்கும். மாநாட்டில் முக்கிய அம்சமாக மார்க்க அறிஞர்களின் அரங்கம் நடைபெறுகிறது. தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் மாநில தலைவர் மௌலானா பி.ஏ.காஜா முயீனுத்தீன் பாகவி ஹழ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்த சிறப்பு அரங்கில், பல சமய நல்லறிஞர்கள் கலந்துகொண்டு தங்களுடைய உரைகளுடன் ஆய்வு அறிக்கைகளையும் சமர்ப்பிக்க இருக்கிறார்கள். 

மாநாட்டின் இரண்டாம் நாள் தொடக்க நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் கோவி.செழியன், ஆவடி நாசர், சுவாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.  இதனைத் தொடர்ந்து நடைபெறும் 11 அமர்வுகளில் 110 பேர் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் தங்களுடைய ஆய்வுகளை சமர்ப்பிக்க இருக்கிறார்கள். குறிப்பாக, மார்க்கம், வரலாறு, பண்பாடு, இலக்கியம், நாட்டு நடப்பு என பல்வேறு தலைப்புகளில் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும். 

இதேபோன்று மகளிர் அரங்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி தேசிய தலைவர் பாத்திமா முசப்பர் தலைமையில் நடைபெறுகிறது. இதில் புகழ்பெற்ற தமிழ் பேராசிரியை பர்வீன் சுல்தானா உட்பட 150 பெண்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள். 

மாநாட்டின் முக்கிய அம்சமாக ஊடக அரங்கம் நடத்த ஏற்பாடு செய்துள்ளோம். இதில் பங்கேற்றும் புகழ்பெற்ற ஊடகவியலாளர்கள், ஊடகம் சமுதாயத்திற்கு செய்ய வேண்டிய கடமைகள் குறித்தும் அதன் பொறுப்புகள் குறித்தும் தங்களுடைய கருத்துகளை எடுத்துக் கூற இருக்கிறார்கள்.  இந்த நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில முதன்மை துணைத் தலைவர் எம்.அப்துர் ரஹ்மான், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ., ஆளுர் ஷாநவாஸ் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.மேலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா ஃபோரத்தின் தலைவர் ஜனாப் என்.எம்.அமீன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களும் மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள். 

இரண்டாம் நாள் இரவு தீன் இசை நிகழ்ச்சி எம்.எம்.அப்துல் குத்தூஸ் என்ற இறையன்பன் குத்தூஸ் தலைமையில் நடைபெறுகிறது. புகழ்பெற்ற இஸ்லாமிய பாடகர் நாகூர் ஹனீபா நூற்றாண்டு விழா நினைவாக நடைபெறும் இந்த தீன் இசை நிகழ்ச்சியில் 12க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பாடகர்கள் கலந்துகொண்டு, அனைவரின் காதுகளுக்கும் தீன் இசையை வழங்க இருக்கிறார்கள். 

மூன்றாவது நாள் நிகழ்ச்சிகளின் சிறப்பு:

மாநாட்டின் மூன்றவாது நாள், நாடு நடப்பும் என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற இருக்கிறார்.  மனித நேய மக்கள் கட்சித் தலைவர் முனைவர் பேராசிரியர் மு. ஹி. ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் நெல்லை முபாரக் ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.  இதனைத் தொடர்ந்து வாழ்த்தரங்கம் நடைபெறுகிறது. இதில், உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து கலந்துகொண்டு சிறப்பிக்கும் அறிஞர் பெருமக்கள் வாழ்த்தி உரையாற்ற இருக்கிறார்கள். 

மாநாட்டின் நிறைவாக நடைபெறும் நிறைவு நிகழ்ச்சி, நீதியரசர் ஜி.எம்.அக்பர் அலி அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது. இதில், நீதிபதி கே.என்.பாஷா, திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா, எம்.பி., ஆகியோர் கலந்துகொண்டு, சிறப்பித்து, தங்களுடைய கருத்துகளை முன்வைக்க இருக்கிறார்கள். 

மாநாட்டின் முக்கிய நிகழ்வாக அறிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகிய 26 பேருக்கு 20 ஆயிரம் ரூபாய் பொற்கிழிவுடன் இலக்கியச் சுடர் விருது அளிக்கப்படுகிறது இதேபோன்று, 10 பேருக்கு இலக்கியப் புரவலர் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு விருதுக்கு தேர்வானவர்களுக்கு விருதுகளை வழங்கி வாழ்த்துகிறார். இறுதியில் பல முக்கிய தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ளன. 

- சந்திப்பு: சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Wednesday, April 23, 2025

ஊடகங்கள் வெளியிடாத உண்மைகள்....!

" பஹல்காம் தாக்குதல்: ஊடகங்கள் வெளியிடாத உண்மைகள்"

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் -


அமைதி மார்க்கமான இஸ்லாத்தில் தீவிரவாத செயல்களுக்கு ஒருபோதும் அனுமதில்லை. பயங்கரவாத செயல்களை இஸ்லாம் எப்போதும் ஆதரிப்பது இல்லை. தீவிரவாத செயல்கள் மூலம் அப்பாவி மக்களை கொல்வது மிகவும் கொடுமையான, பாவமான செயல் என இஸ்லாம் கண்டிக்கிறது. தீவிரவாத செயல்கள் குறித்து இஸ்லாம் இப்படி, கண்டிக்கும் நிலையில் கூட, முஸ்லிம்களில் ஒருசிலர், தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு, சமுதாயத்திற்கு தீங்கு விளைப்பது மட்டுமல்லாமல், இஸ்லாத்திற்கும் கெட்ட பேரை ஏற்படுத்தி வருகிறார்கள். இதன் காரணமாக முஸ்லிம்கள் எவ்வளவு தான் நன்மையான செயல்களை செய்துவந்தாலும், ஒருசிலர் செய்யும் தீவிரவாத செயல்கள் மூலம், அவை அனைத்தும் வீணாகிவிடுகின்றன. 

இத்தகைய சூழ்நிலையில் தான், ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த ஒரு பேரழிவு தரும் பயங்கரவாதத் தாக்குதலில் 27 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இது சமீபத்திய ஆண்டுகளில் இப்பகுதியில் நடந்த மிக மோசமான சம்பவங்களில் ஒன்றாகும். இந்திய தொலைக்காட்சி சேனல்கள் இந்த துயரத்தை விரிவாக உள்ளடக்கியிருந்தாலும், அவற்றின் பெரும்பாலான செய்தித்தாள்கள் பிளவுபடுத்தும் கதைகளில் கவனம் செலுத்தி, தாக்குதலை இந்து-முஸ்லிம் மோதலாக சித்தரிக்க முயன்றன. பயங்கரவாதிகள் குறிப்பாக, இந்து சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து, அவர்களின் மத அடையாளத்தை உறுதிப்படுத்த அவர்களின் பெயர்களைக் கேட்டு அவர்களைக் கொன்றதாக ஊடகங்கள் கூறின. இருப்பினும், இந்தக் கூற்றுக்களை எந்த நம்பகமான ஆதாரமும் ஆதரிக்கவில்லை. மேலும் இதுபோன்ற செய்திகள் ஏற்கனவே பதட்டமான பகுதியில் வகுப்புவாத பதட்டங்களை அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன என்பது ஊடகங்கள் மறந்துவிட்டு செயல்பட்டன. இன்னும் செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றன. 

இந்தியா முழுவதும் கண்டனம்:

பல முன்னணி தொலைக்காட்சி சேனல்கள் முன்னிலைப்படுத்தத் தவறியது, தாக்குதலுக்குப் பிறகு வெளிப்பட்ட ஒற்றுமை, துணிச்சல் மற்றும் மனிதநேயத்தின் கதைகளாகும். காஷ்மீர் மற்றும் அதற்கு அப்பால் உள்ள மக்களின் மீள்தன்மை மற்றும் ஒற்றுமையை எடுத்துக்காட்டும் வகையில், கவனிக்கப்படாத அம்சங்களை நாட்டு மக்கள் அறிந்துகொள்வது மிகவும் அவசியமாகும்.

காஷ்மீர் மட்டுமின்றி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அரசியல் மற்றும் மத முஸ்லிம் தலைவர்கள், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டித்தனர். வன்முறையைக் கண்டித்து, இதுபோன்ற செயல்கள் இஸ்லாம் மற்றும் மனிதகுலத்தின் கொள்கைகளுக்கு எதிரானவை என்பதை வலியுறுத்தி, முக்கிய பிரமுகர்கள் அறிக்கைகளை வெளியிட்டனர். இந்தத் தலைவர்கள் ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்தனர். அத்துடன்,  பயங்கரவாதத்திற்கு எதிராக குடிமக்கள் ஒன்றாக நிற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

ஒற்றுமையின் சக்திவாய்ந்த வெளிப்பாடாக, காஷ்மீரின் பல்வேறு நகரங்களில் உள்ள முஸ்லிம் சமூகங்கள் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக மெழுகுவர்த்தி அமைதி பேரணிகளை ஏற்பாடு செய்தன. இந்த அமைதியான கூட்டங்களில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்றனர்.  காஷ்மீர் மக்கள் வன்முறையை நிராகரிப்பதாகவும், நாட்டின் பிற பகுதிகளுடன் சேர்ந்து அப்பாவி உயிர்களை இழந்ததற்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் இந்த அமைதி பேரணிகள் தெளிவான செய்தியை நாட்டுக்கு அனுப்பியது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் முழு அடைப்பு:

காஷ்மீர் வரலாற்றில் 35 ஆண்டுகளில் முதல் முறையாக, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுமையான முழு அடைப்பைக் கண்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டு நிலைப்பாடாகவும் கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டன. இந்த முன்னோடியில்லாத செயல், பிராந்தியத்தின் அமைதிக்கான உறுதிப்பாட்டையும் வன்முறையை நிராகரிப்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

 சுற்றுலாப் பயணிகளை காப்பாற்றிய காஷ்மீரிகள்:

பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளிக்கு சுற்றுலாப் பயணிகளை கார் பார்க்கிங் பகுதியிலிருந்து அழைத்துச் சென்ற உள்ளூர் குதிரை சவாரி வீரரான சையத் அடில் ஹுசைன் ஷா, தாக்குதலின் போது அசாதாரண துணிச்சலைக் காட்டினார். கால் அல்லது குதிரையின் மூலம் மட்டுமே அணுகக்கூடிய புல்வெளி, பயங்கரவாதிகளால் குறிவைக்கப்பட்ட இடங்களில் ஒன்றாகும். தாக்குதல் தொடங்கியபோது, ​​சையத் அடில் தான் அந்த இடத்திற்கு அழைத்து வந்த சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாக்க தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரை எதிர்கொள்ள முயன்றார். துரதிர்ஷ்டவசமாக, மற்றவர்களைக் காப்பாற்றுவதற்கான அவரது துணிச்சலான முயற்சியில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது தியாகம் மற்றவர்களுக்காக தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் சாதாரண காஷ்மீரிகளின் தன்னலமற்ற தன்மைக்கு சான்றாக நிற்கிறது.

ஆதிலின் மனிதாபிமான செயல்:

தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தில், சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஆதில் என்ற மற்றொரு முஸ்லிம் ஓட்டுநர் மிகையாகச் செயல்பட்டார். பல சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்படக்கூடியவர்களாகவும் உடனடி உதவி இல்லாமல் இருந்ததாலும், ஆதில் தனது வீட்டை அவர்களில் ஒரு குழுவிற்குத் திறந்து, உதவி வரும் வரை தங்குமிடம், உணவு மற்றும் ஆறுதல் அளித்தார். நெருக்கடியான காலங்களிலும் கூட, காஷ்மீர் நெறிமுறைகளை வரையறுக்கும் ஆழமான வேரூன்றிய விருந்தோம்பல் மற்றும் இரக்கத்தை அவரது நடவடிக்கைகள் பிரதிபலிக்கின்றன.

மஸ்ஜித்துகள் திறப்பு:

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் மிகவும் துயரத்திற்கு ஆளானார்கள். பாதுகாப்பாக எப்படி செல்வது என்று தெரியாமல் திகைத்து நின்றனர். அப்போது அந்த பகுதிகளில் இருந்த மஸ்ஜித்துகள் அனைத்தும் திறந்துவிடப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்புடன் தங்கிச் செல்ல வசதி செய்யப்பட்டது. சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மஸ்ஜித் நிர்வாகிகள் செய்துகொடுத்தனர். இது காஷ்மீர் மக்கள் ஒருபோதும் தீவிரவாத செயல்களை ஆதரிக்கவில்லை என்பதை உறுதிப்பட தெரிவிக்கும் வகையில் இருந்தது. 

அத்துடன், தீவிரவாத செயல்களைக் கண்டித்து, காஷ்மீர் முழுவதும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இதில் அனைத்து முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், அங்குள்ள அனைத்துச் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களும் ஒருங்கிணைந்து தீவிரவாத தாக்குதல்களுக்கு கடும் எதிர்ப்பையும், கண்டனங்களையும் கூறிக் கொண்டனர். இதுபோன்ற ஒரு நிலையை தாம் இதுவரை கண்டதில்லை என மூத்த அரசியல்வாதியும் முன்னாள் மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத் ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார். 

இதேபோன்று, பயங்கரவாத தாக்குதலின் போது பல முஸ்லிம் இளைஞர்கள் தங்களை பாதுகாப்புடன் பாதுகாத்து கொண்டு வந்ததாக சுற்றுலாப் பயணியான இந்து பெண்மணி ஒருவர் கூறியிருக்கிறார். பிஸ்மில்லாஹ், பிஸ்மில்லாஹ் என்று கூறிக் கொண்டே அவர் எங்களை பாதுகாத்துக் கொண்டு வந்ததை ஒருபோதும் மறக்க முடியாது என்றும் அந்த பெண்மணி குறிப்பிட்டுள்ளார். 

பயங்கரவாதிகள் ஒவ்வொருவரின் பெயரையும் கேட்டுக் கொண்டு சுட்டுக் கொன்றதாக ஊடகங்கள் கூறியது பொய் என்றும், பயங்கரவாதிகள் மறைந்திருந்து அனைவரையும் சுட்டனர் என வினுபாய் என்ற ஒரு பெரியவர் கூறியுள்ளார். 

பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு, சுற்றுலாப் பயணிகள் அனைவரையும், பேருந்துகளில் ஏற்றி அழைத்துச் சென்ற காஷ்மீரி மக்கள், அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் உள்ளிட்ட பொருட்களை கொடுத்து, தங்களுடைய மனிதநேயத்தை வெளிப்படுத்தினர். தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞர், காஷ்மீர் இளைஞர் ஒருவர் தன்னுடைய முதுகில் தூக்கிக் கொண்டு ஓடிவரும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து காஷ்மீரிகள் காட்டிய வீரத்தையும், அன்பையும் அனைவரையும் வியப்பு அடையச் செய்தது.  இந்த பயங்கரவாத தாக்குதல் அனைத்து சமூக மக்களையும் பாதித்த ஒரு சோகமாகும். மேலும் காஷ்மீரிகள் - முஸ்லிம்கள் மற்றும் பிறர் - அமைதி மற்றும் மனிதநேயத்திற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது. 

காஷ்மீர் முஸ்லிம்களின் மனிதநேய சேவை:

பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு, சுற்றுலாப் பயணிகள் அனைவரையும் காஷ்மீர் முஸ்லிம்கள் பத்திரமாக பாதுகாத்து, தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கருத்து கூறியுள்ள சென்னை திரும்பிய தமிழக சுற்றுலாப் பயணிகள் அனைவரும், தாங்கள் பாதுகாப்பாக ஊர் திரும்பியதற்கு காஷ்மீர் முஸ்லிம்களே காரணம் என உறுதிப்பட கூறியுள்ளனர். இந்து-முஸ்லிம் என்ற பிரச்சினையே இல்லாமல், காஷ்மீர் முஸ்லிம்கள் அனைவரும் மிகவும் மனிதநேயத்துடன் நடந்துகொண்டு, தங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ததாக அவர் குறிப்பிட்டு, அந்த உதவிகளை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர். விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்கான கார் வாடகையை கூட காஷ்மீர் முஸ்லிம்கள் பெறவில்லை என்றும், சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பது தங்களுடைய கடமை என்றும் அவர்கள் கூறியதாகவும், தமிழக சுற்றுலாப் பயணிகள் கூறி பெருமிதம் அடைந்தனர்.

இதேபோன்று, கேரளவைச் சேர்ந்த ஆரதி என்ற பெண்மணி, தாக்குதலில் தம்முடைய தந்தை ராமசந்திரன் கொல்லப்பட்ட நிலையில், ஷமீர், முஷாபிர் ஆகிய இரண்டு காஷ்மீர் சகோதரர்கள் தம்மை இரவு பகல் பராமல் உதவி செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தாக குறிப்பிட்டு, தம்முடைய தந்தை கொல்லப்பட்ட நிலையில், தற்போது தமக்கு இரண்டு சகோதரர்கள் கிடைத்து இருப்பதாக வேதனையிலும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, பல மாநில சுற்றுலாப் பயணிகள் கூட, காஷ்மீர் முஸ்லிம்கள் இந்து-முஸ்லிம் என்ற பாகுபாடு காட்டாமல், சுற்றுலாப் பயணிகள் அனைவரையும் பாதுகாக்க வேண்டும் என்ற மனிதநேயத்துடன் செயல்பட்டதாக தெரிவித்துள்ளதை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வகுப்புவாத கதைகளில் கவனம்:

உண்மை நிலவரம் இப்படி இருக்க, துரதிர்ஷ்டவசமாக, பல தொலைக்காட்சி சேனல்கள் சரிபார்க்கப்படாத வகுப்புவாத கதைகளில் கவனம் செலுத்தி ஒற்றுமை மற்றும் வீரத்தின் இந்தக் கதைகளை மறைத்துவிட்டன. இத்தகைய செய்தி களத்தில் உள்ள யதார்த்தத்தை தவறாக சித்தரிப்பது மட்டுமல்லாமல், நீண்டகாலமாக மோதலால் பாதிக்கப்பட்ட ஒரு பிராந்தியத்தில் நல்லிணக்கத்தை வளர்க்க பாடுபடுபவர்களின் முயற்சிகளையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.

முஸ்லிம் தலைவர்களின் கண்டனம், ஒற்றுமை மற்றும் துணிச்சல் பற்றிய அறிவிக்கப்படாத கதைகளை எடுத்துரைப்பதன் மூலம், பஹல்காம் தாக்குதல் குறித்து சமநிலையான கண்ணோட்டத்தை அறிந்துகொள்ள முடியும். காஷ்மீர் மக்கள், தங்களுடைய மனிதநேயச் செயல்கள் மூலம், பயங்கரவாதம் தங்கள் அடையாளத்தை வரையறுக்கவில்லை என்பதைக் காட்டியுள்ளனர். மாறாக, அவர்களின் இரக்கம், தைரியம் மற்றும் மீள்தன்மை ஆகியவை துன்பங்களை எதிர்கொள்ளும்போது பிரகாசிக்கின்றன.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் இந்தியாவிற்கு ஒரு இதயத்தை உடைக்கும் இழப்பாகும்.  ஆனால் பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் மனித மன உறுதியையும் வெளிப்படுத்தியது. சையத் அடில் ஹுசைன் ஷாவின் வீர தியாகம் முதல் ஆதிலின் தன்னலமற்ற விருந்தோம்பல் வரை, மெழுகுவர்த்தி ஏந்தி நடந்த போராட்டம் முதல் வரலாற்றுச் சிறப்புமிக்க ஊரடங்கு வரை, காஷ்மீர் மக்கள் ஒற்றுமையும் மனிதநேயமும் பிரிவினை மற்றும் வன்முறையை விட மேலோங்கி நிற்கின்றன என்பதை நிரூபித்துள்ளனர். இந்தக் கதைகளை வெளியிடாமல் இருந்துவிட்ட ஊடகங்கள், மக்களிடையே புரிவதலை வளர்க்க இனிமேலாவது வெளியிடுவது வகட்டாயமாகும்.

========================

கண்டனம்...!

 Press Meet...!

This is not a time for partisan politics. It's a moment for collective resolve to ensure justice for those who lost their lives and for their grieving families by bringing the perpetrators to justice.

Among the list of victims were:

Shri Manjunath from Chikmagalur.

Shri Bharat Bhushan from Bengaluru.

I spoke to both the wives of the deceased, Pallavi and Sujata, this morning. They are at present safe, but they are worried about the future.

I spoke to the KPCC, and the Cabinet has deputed Labour Minister Santosh Lad. He said that he met two members of the family and their children. He also met nearly 200 tourists from Karnataka there in various hotels and arranged flights to return to Bangalore.

I have also requested J&K CM Umar Abdullah to make arrangements for those who are not in touch with their respective states.

Yesterday night, I spoke to our Home Minister; he promised me that he will take care of all those people.

I offer my deepest condolences to the families of the deceased and their loved ones in the tragic incident.

The summer season has started, and tourists have started visiting the region. Tourism is also the biggest source of income for Jammu and Kashmir. They are dependent on that income. But due to this attack, Shri Omar Abdullah has told me that this year the economy has collapsed. The Government of India is ruling there, as it's a Union Territory, still not declared as a state. So the response would be from the Government of India.

In this moment, we are all one with the government. Together we have to fight. Whosoever we are fighting against—whether it is terrorists or other agencies—we will be one together to protect the country and its unity and integrity.

: Congress President Shri @kharge



சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற 27 முஸ்லிம் இளைஞர்கள்.....!

 சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற 27 முஸ்லிம் இளைஞர்கள்....!

40வது இடத்தைப் பிடித்த இராம் சவுத்ரி முஸ்லிம் மாணவர்களில் முதலிடம் பிடித்து சாதனை....!!

புதுடெல்லி, ஏப்.23- ஒன்றிய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) சார்பில் நடத்தப்படும்  2024ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணிகள் தேர்வின் இறுதி நிலையான நேர்முகத் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை (22.04.2025) வெளியிடப்பட்டன.  இந்த தேர்வுகளில் வெற்றி பெற்ற ஆயிரத்து ஒன்பது  பேரில் மொத்தம் 27 முஸ்லிம் இளைஞர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் முதல் 30 தரவரிசைகளில் ஒரு முஸ்லிம் கூட இடம்பெறவில்லை.அதேநேரத்தில் 40வது இடத்தைப் பிடித்த இராம் சவுத்ரி முஸ்லிம் மாணவி  முதலிடத்தில் உள்ளார். 

சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள்:

நாட்டில் சிவில் சர்வீசஸ் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் மற்றும் ஐஎஃப்எஸ் பதவிகளுக்கான நியமனங்களைப் பெறுவதற்காக நடத்தப்பட்ட யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வுகளின் இறுதி முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன, இதில் 27 முஸ்லிம் இளைஞர்கள் உட்பட ஆயிரத்து 9 மாணவ மாணவியர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்தத் தேர்வுகளில் வெற்றி பெற்ற முதல் 10 பேரில் மூன்று பெண்கள் உள்ளனர். அதேநேரத்தில் தேசிய அளவில் முதலிடத்தில் இருப்பவர் சக்தி துபே ஆவார். 

முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு:

இந்த முறை, நாடு முழுவதும் வெற்றி பெற்ற முதல் 40 மாணவர்களில் ஒரு முஸ்லிம் மாணவர் கூட இடம்பெறவில்லை. ஒட்டுமொத்தமாக, நடப்பு ஆண்டின் முடிவுகளை மதிப்பாய்வு செய்தால், ஆயிரத்து 9 மாணவ மாணவியர்களில்  27 முஸ்லிம் இளைஞர்களின் வெற்றி, கடந்த 10 ஆண்டுகளில் மிகக் குறைந்த விகிதமாகும் என்பதால், அவை முஸ்லிம்களுக்கு ஏமாற்றமளிப்பதாகக் கருதப்படுகிறது. 

கடந்த 2023 தேர்வு முடிவுகளில், 51 முஸ்லிம் இளைஞர்கள் வெற்றி பெற்றனர். அப்போது மொத்த வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 16 ஆகும். 2009 தேர்வுகளில், வெற்றி பெற்ற 791 பேரில் 31 முஸ்லிம் இளைஞர்கள் அடங்குவர். இதேபோல், 2020 யுபிஎஸ்சி தேர்வுகளில், வெற்றி பெற்ற 761 பேரில் 31 முஸ்லிம் இளைஞர்கள் அடங்குவர். 2021 தேர்வுகளில், வெற்றி பெற்ற 685 பேரில் 21 முஸ்லிம் இளைஞர்கள் அடங்குவர். 2022 தேர்வுகளில், வெற்றி பெற்ற 933 பேரில் 30 முஸ்லிம் இளைஞர்கள் அடங்குவர். 

புது தில்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் அமைந்துள்ள ரெசிடென்ஷியல் கோச்சிங் அகாடமியைச் சேர்ந்த மொத்தம் 78 மாணவ மாணவியர் யு.சி.எஸ்.சி. தேர்வுகளில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது, அதில் இதுவரை 32 பேர் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளனர். மேலும் இந்த 32 வெற்றி பெற்றவர்களில் 12 பேர் பெண்கள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெற்றி பெற்ற முஸ்லிம் மாணவ மாணவியரின் பட்டியல்:


இராம் சவுத்ரி – 40வது இடம்

ஃபர்கண்டா குரேஷி – 67வது இடம்

முகமது முனீப் பட் - 131வது இடம்

அதிபா அனம் அஷ்ஃபாக் அஹ்மத் – ரேங்க் 142

வாசிம் உர் ரஹ்மான் - 281வது இடம்

எம்.டி. நயாப் அஞ்சும் - தரவரிசை 292

முகமது ஹாரிஸ் மிர் – 314வது இடம்

முகமது சவுகத் அசீம் - 345வது இடம்

அலிஃப் கான் - 417வது இடம்

நஜ்மா ஏ சலாம் – ரேங்க் 442

ஷகீல் அகமது - 506வது இடம்

ஷா முகமது இம்ரான் முகமட் இர்ஃபான் - 553 வது இடம்

முகமது அஃப்தாப் ஆலம் – 560வது இடம்

மொஹ்சினா பானோ - 585வது இடம்

அபுசாலியா கான் - ரேங்க் 588

சயீத் முகமது ஆரிஃப் மொயின் – தரவரிசை 594

ஹசன் கான் - 643வது இடம்

காஞ்சி கசாலா முகமதனிஃப் - 660 வது இடம்

முஹம்மது சலா டி ஏ - ரேங்க் 711

சதாஃப் மாலிக் - ரேங்க் 742

யாசர் அகமது பாட்டி - ரேங்க் 768

ரியாஸ் வாட்சன் ஜே – தரவரிசை 791

ஜாவேத் மேவ் – 815வது இடம்

பீர்சாடா எம் உமர் - 818வது இடம்

நசீர் அஹ்மத் பிஜ்ரான் – 847வது ரேங்க்

அர்ஷத் அஜிஸ் குரேஷி – 993வது ரேங்க்

இக்பால் அகமது - 998வது இடம்

- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Tuesday, April 22, 2025

"அனைவருக்கும் அரபி மொழி" - சிறப்பு நேர்காணல்....!

 "அனைவருக்கும் அரபி மொழி"

பேராசிரியர் டாக்டர் சையத் கராமதுல்லாஹ் பஹ்மனியின் அரிய முயற்சி

- சிறப்பு நேர்காணல் -

சென்னையைச் சேர்ந்த புதுக்கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் முனைவர் சையத் கராமதுல்லாஹ் பஹ்மனி அவர்கள், அனைவருக்கும் அரபி மொழி என்ற உயர்ந்த நோக்கத்துடன், அந்த இலட்சியப் பயணத்தை நோக்கி தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருக்கிறார். இதற்காக 'அகாடமி ஆஃப் அரபிக் ஸ்டடீஸ்' என்ற கல்வி அமைப்பை உருவாக்கி, அரபி மொழி கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ளவர்களுக்கு எளிமையான முறையில் அரபிமொழியைக் கற்பித்து வருகிறார். அத்துடன், அரபி மொழி தொடர்பாக இதுவரை 40க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி, வெளியிட்டுள்ளார்.  குறிப்பாக 'அரபிமொழி இலக்கணம்' 'நடைமுறை அரபிமொழி:எளிய வழி' 'ஃகாமூசுல் அலிஃப்: அரபிமொழி தமிழ் சொல்லகராதி' 'ஃகாமூஸ் அல்ஃபாஸில் ஃகுர்ஆன் சொல்லகராதி' என பல்வேறு தலைப்புகளில் அரபிமொழி குறித்த அற்புதமான நூல்களை எழுதி, வெளியிட்டு, தொடர்ந்து புதிய நூல்களை எழுதி வெளியிடும் பணியிலும்  ஈடுபட்டு வருகிறார். 

தமிழ், உர்தூ மொழிகளை பேசும் முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், இந்திய முஸ்லிம்கள் அனைவரும் அரபி மொழியை எளிமையாக கற்றுக் கொண்டு, திருக்குர்ஆனின் அற்புதத்தை அனுபவிக்க வேண்டும் என்ற உயர்ந்து நோக்கத்துடன் தன்னுடைய நாட்களை சமூகத்திற்காக பயன்படுத்திவரும், பேராசிரியர் முனைவர் சையத் கராமதுல்லாஹ் பஹ்மனி அவர்கள் குறித்தும், அவர் செய்துவரும் பணிகள் குறித்தும் மணிச்சுடர் வாசகர்கள் அறிந்துகொள்ள வேண்டும். அத்துடன் சமுதாயமும் அறிந்துகொண்டு, அரபிமொழியை எளிமையாக கற்றுக் கொண்டு, அதில் புலமை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பேராசிரியர் முனைவர் சையத் கராமதுல்லாஹ் பஹ்மனியிடம் மணிச்சுடர் சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் அவர்கள் சிறப்பு நேர்காணல் ஒன்றை நடத்தினார். அந்த சிறப்பு நேர்காணல் இதோ உங்கள் பார்வைக்கு:

அரபி மொழியில் ஆர்வம்:

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் சையத் கராமதுல்லாஹ் பஹ்மனி தற்போது பெருங்குடியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவருடைய தந்தை சையத் சுல்தான் மொய்த்தீன் பஹ்மனி, ஒரு ஆலிம் ஆவார். தந்தை பஹ்மனி, 1942 முதல் 1965 வரை, உர்தூ மொழியில் இமாமி என்ற வார இதழை நடத்தி வந்தார்.  மகன், மகள் என மொத்தம் 10 பேரை கொண்ட இந்த குடும்பத்தில் ஒருவர் தான் முனைவர் சையத் கராமதுல்லாஹ் பஹ்மனி ஆவார். இவருக்கு இளமைப் பருவம் முதலே, அரபி மொழியில் ஒரு காதல் இருந்துகொண்டே இருந்தது. ஆர்வம் வளர்ந்துகொண்டே இருந்தது. அந்த மொழியை கற்றுக் கொண்டு, மற்றவர்களுக்கு கற்றுத் தர வேண்டும் என அவரது மனம் சொல்லிக் கொண்டே இருந்தது.  தன்னுடைய இந்த ஆர்வம் காரணமாக பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் சையத் கராமதுல்லாஹ் பஹ்மனி அரபி மொழி கற்றுக் கொண்டதுடன், அதில் புலமைபெறும் வகையில் தன்னுடைய ஆற்றலை வளர்த்துக் கொண்டார். 

இதன் காரணமாக ஆரம்பத்தில் அஃப்சல் உலமா மட்டுமே படித்த அவர், பின்னர் அரபி மொழியில் எம்.ஏ. பட்டமும், எம்.ஃபில். பட்டமும் பெற்றதுடன், இஸ்லாமிய ஆய்வுகள் படிப்பில் சேர்ந்து எம்.ஏ. பட்டமும் பெற்றார். மேலும், தன்னுடைய தாய் மொழியான உர்தூ மொழியில் கூட அவர், எம்.ஏ. படிப்பில் தேர்ச்சி பெற்றார். அத்துடன், இவரது கல்வி ஆர்வம் நிற்கவில்லை. முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்து அந்த முனைவர் பட்டத்தையும் பெற்ற பஹ்மனி, பின்னர் சென்னை புதுக்கல்லூரியில் அரபித்துறை பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார். இதற்கிடையே, சென்னை பல்கலைக்கழக அரபித்துறையில் சிறிது காலம் பேராசிரியராக பணிபுரிந்து, அரபிமொழியின் சிறப்பு குறித்து மாணவ மாணவியர்களுக்கு மிகவும் எளிய மொழியில் கற்பித்து, தம்முடைய கல்வியைச் சேவையை நிறைவேற்றினார். இப்படி 22 ஆண்டுகள் பேராசிரியராக பணிபுரிந்த பஹமனி, கடந்த 2006ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார். 

பேராசிரியர் பணிக்குதான் ஓய்வு. ஆனால், கற்றல், கற்பித்தால், எழுதுதல் என்ற இலக்குகளுக்கு பஹ்மனி ஒருபோதும் ஓய்வு அளிக்கவில்லை. தாம் பேராசிரியராக பணிபுரிந்தபோதும், ஓய்வுபெற்ற பிறகும், தொடர்ந்து அரபிமொழியை அவர் மற்றவர்களுக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டே இருந்து வருகிறார். இதற்காக அரபிமொழி குறித்த பல அற்புதமான நூல்களை வெளியிட்டுள்ள அவர், அரபிமொழியை அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார். 

அனைவருக்கும் அரபி மொழி:

அரபிமொழி குறித்து கருத்து கூறும் பேராசிரியர் பஹ்மனி, அது ஒரு எளிமையான மொழி என்றும், அந்த மொழியை அனைவரும் எளிதாக கற்றுக் கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கிறார். இதன் காரணமாக தான் ஏக இறைவன் திருக்குர்ஆனையை மிகவும் எளிமையாக உலக மக்களுக்கு தந்து இருக்கிறான் என கூறும் பஹ்மனி, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அரபிமொழியை எளிதாக, எந்தவித சிரமும் இல்லாமல் கற்றுக் கொள்ள முடியும் என உறுதிப்பட தெரிவிக்கிறார். அரபிமொழியை கற்றுக் கொள்ள முதலில் ஆர்வம் இருக்க வேண்டும். சரியான வழிகாட்டுதலின்படி, மொழியை கற்றுக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அப்படி சரியான திசையை நோக்கிச் சென்றால், நிச்சயம் அரபிமொழியை அனைவரும் கற்றுக் கொள்ள முடியும். இப்படி கற்றுக் கொள்வதன் மூலம், அதன் அழகிய சுவையை அறிய முடியும். 

 அனைவருக்கும் அரபிமொழி என்ற உயர்ந்த நோக்கத்திற்காக, சென்னையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் பயிற்சி மையங்களை உருவாக்கி, தொடர்ந்து அரபிமொழியை பஹ்மனி கற்பித்து வருகிறார். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அரபிமொழியை கற்பிக்க வேண்டும் என்ற ஆசை காரணமாக இந்த முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அவர், அதற்காக நான்கு வழிகளில் அரபிமொழியை கற்பிக்க முடியும் என்றும் உறுதியாக நம்புகிறார். மக்தப், மதரஸா, மஸ்ஜித்துகளில் வாரம் இருமுறை, ரிஸ்வான் மதரஸாகளில் பெண்களுக்கு வாரம் ஒருமுறை அரபிமொழி கற்பித்தல்  என நான்கு வழிகளில் அரபிமொழியை நாம் கற்பிக்க முடியும் என அவர் ஆலோசனை தருகிறார். 

இப்படி அரபிமொழி கற்பிக்கும்போது, அந்த மொழியை கற்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் திருக்குர்ஆன் வசனங்களை எளியில் புரிந்துகொள்ள வாய்ப்பு உருவாகும். அத்துடன், எழுத்துப் பயிற்சியுடன் கூடிய அரபிமொழி படிப்பு மூலம், கூடிய விரைவில் அரபிமொழியை கற்றுக் கொள்ளலாம். அதற்காக ஆர்வத்துடன், நேரமும் ஒதுக்க முஸ்லிம்கள் அனைவரும் முன்வர வேண்டும். 

அரபிமொழி கற்பதற்கான நூல்கள்:

அரபிமொழி அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என நோக்கத்துடன் பேராசிரியர் முனைவர் சையத் கராமதுல்லாஹ் பஹ்மனி அவர்கள் இதுவரை 43 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இந்த நூல்கள் மூலம் மஸ்ஜித்துகளில் செயல்படும் மக்தபுகளில் சிறுவர், சிறுமிகளுக்கு தமிழ்மொழி மூலமே அரபிமொழிப் பயிற்சியை எளிதாக அளிக்கலாம். இதன்மூலம், அனைவருக்கும் திருமறை அருளப்பட்ட மொழியினை தமிழ், ஆங்கிலம் வழியாக, கற்கும் வாய்ப்பு அவர்களின் சொந்த ஊர்களிலேயே கிடைக்கும். அரபிமொழி கற்கும் முதற்கட்டப் பயிற்சியிலேயே, அவர்கள் பெறும் மொழியறிவின் அடிப்படையில் எளிய நடையிலான திருக்குர்ஆனியின் வசனங்கள், நபிமொழிகள் மற்றும் துஆக்களின் பொருளை அரபி வாசகங்களின் மூலம் எளிமையாக விளங்கிக் கொள்ளும் அனுபவத்தை பெறுவார்கள். 

தம்முடைய கடுமையான உழைப்பின் காரணமாக 15 ஆண்டுகள் தொடர் முயற்சி காரணமாக திருக்குர்ஆன் சொல்லகராதி பாகம் ஒன்று மற்றும் பாகம் இரண்டு ஆகியவற்றை பஹ்மனி வெளிட்டுள்ளார். தற்போது மூன்றாவது பாகத்தை வெளியிடும் முயற்சியில் இறங்கி, அதற்கான பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.  அரபிமொழி குறித்து இவர் எழுதியுள்ள நூல்களுக்கு சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ள இஸ்லாமிய மையங்கள் வரவேற்பு அளித்து, அவற்றை வாங்கி, எளிமையான முறையில் அரபிமொழியை கற்பிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. 

இதேபோன்று, இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படும் மதரஸாக்களில் கூட அரபிமொழி கற்பித்தல் தொடர்பாக பஹ்மனி எழுதிய நூல்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. 

சமுதாயம் ஆதரவு தர வேண்டும்:

அரபிமொழி கற்பித்தல் தொடர்ந்து எழுதப்பட்டுள்ள அனைத்து நூல்களும், பேராசிரியர் சையத் கராமதுல்லாஹ் பஹ்மனி அவர்களின் சொந்த நிதியில் இருந்து வெளியிடப்பட்டவையாகும். இதற்காக யாரிடமும் அவர் நிதியுதவி பெறவில்லை. கடுமையான உழைப்பிற்குப் பிறகு வெளியிடப்பட்டட திருக்குர்ஆன் சொல்லகராதி பாகம் ஒன்று மற்றும் பாகம் இரண்டு ஆகிய நூல்கள் கூட தமது சொந்த நிதியில் இருந்து வெளியிடப்பட்டதாக கூறும் பஹ்மனி, இந்த நூல்களை அனைத்து மதரஸாக்களில் கொண்டு சென்று சேர்க்கும் பொறுப்பை சமுதாயம் ஏற்றுக் கொண்டால், அதன்மூலம், மதரஸாக்களில் படிக்கும் மாணவர்களுக்கு நல்ல பயன் கிடைக்கும் என உறுதியாக நம்புகிறார். அத்துடன் எளிமையாக முறையில் அரபிமொழியை விரைவில் கற்றக் கொள்ளக்கூடிய வாய்ப்பு மாணவர்களுக்கு ஏற்பட்டு, அரபிமொழி குறித்த நல்ல புரிதல் உருவாகும் என்றும் அவர் உறுதியாக நம்புகிறார். 

'அல்ஃகாமூஸ் அல்கபீர் மூலச்சொல், அடிப்படையிலான விரிவான அரபிமொழி தமிழ்ச் சொல்லகராதி' 'ஃகுர்ஆன், நபிமொழிகள் மற்றும் சுன்னத்தான துஆக்களின் தொகுப்பு' போன்ற அற்புதமான நூல்கள் தமிழத்தில் உள்ள ஒவ்வொரு மதரஸதா மற்றும் முஸ்லிம் கல்வி நிறுவனங்களில் உள்ள நூலகங்களில் கட்டாயம் இடம்பெற வேண்டும். இப்படி இடம்பெற்றால், அரபிமொழி குறித்த அறிவு மாணவர்கள் மத்தியில் விரிவடையும். அரபிமொழி தமிழ்ச் சொல்லகராதிக்காக சுமார் 15 லட்சம் ரூபாய் வரை செலவழித்தாக கூறும் பஹ்மனி, அதன் பலன் மாணவர்களுக்கும், இஸ்லாமிய சமுதாயத்திற்கும் கிடைத்தால் மட்டும், தமது உள்ளம் மகிழ்ச்சி அடையும் என்றும் தெரிவிக்கிறார். 

கடந்த 30 ஆண்டுகளாக இந்த பணியில் ஈடுபட்டுள்ள பேராசிரியர் சையத் கராமதுல்லாஹ் பஹ்மனி, தற்போது தனது 77 வயதில் கூட அதே அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு, அரபிமொழி தொடர்பான நூல்களை எழுதி, அனைவரும் அரபிமொழி கற்ற வேண்டும் என ஆர்வம் கொண்டு செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார். தாம் மட்டும் அரபிமொழியில் புலமையுடன் இருக்க வேண்டும் என நினைக்காமல் தம்முடைய குடும்பத்தினரும் அரபிமொழியின் இலக்கணம் அறிந்துகொள்ள வேண்டும். அந்த மொழியில் புலமை பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட, பஹ்மனி, அதன்படி, தம்முடைய இரண்டு மகள்களையும் அரபிமொழியை படிக்க வைத்து, எம்.ஏ. அரபிமொழியில் எம்.ஏ.பட்டம் பெறும் வகையில் ஊக்குவித்துள்ளார். 

அரபிமொழிக்காக தனது இளமை காலம் முதல் தற்போது வரை முழு நேரமும் அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றிவரும் பேராசிரியர் சையத் கராமதுல்லாஹ் பஹ்மனியின் பணிகளை சமுதாயம் அங்கீகரிக்க வேண்டும். அதற்கு தேவையான ஆதரவையும் உதவிகளையும் வழங்க முன்வர வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே, பஹ்மனி அவர்களின் இலட்சியம் முழுமையாக நிறைவேற வாய்ப்பு கிடைக்கும். முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், சகோதர சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கூட, அரபிமொழியை நன்கு கற்று, அதன் மொழி அழகை நன்கு ரசிக்க முடியும். 

தம்முடைய வாழ்க்கையை அரபிமொழியின் வளர்ச்சிக்காகவும், அதனை அனைவருக்கும் கற்பிக்க பேராசிரியர் சையத் கராமதுல்லாஹ் பஹ்மனி அவர்கள் செய்துவரும் பணிகள், சேவைகள், முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெற நாமும் வாழ்த்தி விடைப்பெற்றோம். 

- சந்திப்பு: சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


Monday, April 21, 2025

Press Meet.

 Press conferences conducted by PChidambaram in Delhi and Kumari Selja  in Bhopal, Madhya Pradesh, against the BJP's attempt to divert attention from the real issues impacting our nation.

The Congress party will continue to hold the Modi govt. accountable for the misuse of power and govt. machineries.



ரஷீத்தின் எழுச்சி....!

 "ரஷீத்தின் எழுச்சிக்குப் பின்னால், வியர்வை மற்றும் கண்ணீரின் கதை"


ஒவ்வொருவரின் வாழ்க்கையில் கிடைக்கும் வெற்றிக்குப் பின்னால் மிகப்பெரிய கண்ணீர் கதைகள், அதிகளவு சோகங்கள் புதைந்து இருக்கின்றன என்பதுதான் உண்மையாகும். வெற்றி என்பது யாருக்கும் மிகவும் சுலபமாக கிடைத்துவிடுவதில்லை. அப்படி கிடைத்துவிடும் என ஒருவர் எண்ணினால், அல்லது நினைத்தால், அவரை விட மிகவும் மோசமான முட்டாள் உலகில் யாரும் இருக்க மாட்டார்கள். எந்தவொரு துறையாக இருந்தாலும், கடின உழைப்புடன் வியர்வையை சிந்தினால் மட்டுமே வெற்றி கைக்கூடும். சவால்களைச் சந்தித்தால் மட்டுமே, உயரத்தின் உச்சிக்குச் செல்ல முடியும். இந்த உண்மையை முஸ்லிம் இளைஞர்கள் தற்போது உணர்ந்துகொள்ள ஆரம்பித்து இருக்கிறார்கள். அதன் காரணமாக இந்திய முஸ்லிம் இளைஞர்கள் பல்வேறு சவால்களை, நெருக்கடிகளை சந்தித்தபிறகும் கூட, தொடர்ந்து முயற்சி செய்து வெற்றிகளை குவித்து வருகிறார்கள்.  அந்த வரிசையில் ஒருவர் தான் இளம் கிரிக்கெட் வீரர் ஷேக் ரஷீத் ஆவார். 

இளம் கிரிக்கெட் வீரர் ஷேக் ரஷீத்:

ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூரில் கடந்த 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி பிறந்த ஷேக் ரஷீத், பிப்ரவரி 24, 2022 அன்று ஆந்திரப் பிரதேச அணிக்காக, 2021–22 ரஞ்சி டிராபியில் சர்வீசஸ் அணிக்கு எதிராக தனது முதல் அறிமுகத்தை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து அக்டோபர் 16, 2022 அன்று ஆந்திரப் பிரதேச அணிக்காக, 2022–23 சையத் முஷ்டாக் அலி டிராபியில் நாகாலாந்து அணிக்கு எதிராக தனது டி-20 அறிமுகத்தை மேற்கொண்டார். கடந்த 2022ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் துணைத் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டார். குறிப்பாக, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் பேட்டிங்கில் அவர் செய்த பங்களிப்புகள் இந்தியா யு-19 உலகக் கோப்பையை வெல்ல உதவியது. தற்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ள ரஷீத், தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். 

இந்த வெற்றி அல்லது முக்கியத்துவத்தை அடைவதற்கு முன்பு அவர் எதிர்கொண்ட போராட்டங்கள் மற்றும் கஷ்டங்களை, சவால்களை ஏராளம் என கூறலாம்.  ரஷீத்தின் தற்போதைய வெற்றி, சவால்கள் நிறைந்த ஒரு நீண்ட மற்றும் கடினமான பயணத்தின் விளைவாகும்.

ஷேக் ரஷீத்துக்கு ஏழு வயது இருக்கும்போது, அவரை விட இரண்டு மடங்கு வயதுடைய சுமார் 300 பேருடன் உப்பலில் உள்ள ஒரு கோடைக்கால கிரிக்கெட் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு ரஷீதின் திறமையை கண்ட  பயிற்சியாளர்கள், அவரது தந்தை ஷேக் பாலிஷா வாலியை அழைத்து, ரஷீதின் நம்பமுடியாத பேட்டிங் திறன்களைப் பற்றி கூறி, அவருக்கு முழுநேர பயிற்சி அளிக்கும்படி வற்புறுத்தினர்.

இதைக் கேட்டதும் ஆச்சரியம் அடைந்த ரஷீதின் தந்தை ஷேக் பாலிஷா வாலி, “இதற்கு முன்பு, தனது மகன் அவ்வளவு திறமையானவர் என்று தனக்குத் தெரியாது. ஆனால் இதற்குப் பிறகு, நான் அவரை தினமும் பயிற்சிக்கு அழைத்துச் சென்று வீட்டிற்கு அழைத்து வந்தேன்” என்று கூறி தனது மகனுக்கு அளித்த பயிற்சி, ஊக்கம் குறித்து மகிழ்ச்சி அடைகிறார். “தனது மகனின் நலனில் கவலைப்பட்டதால், ஏ.சி.ஏ. அகாடமியின் தலைமை பயிற்சியாளர் கிருஷ்ணா ராவிடம் ஆலோசனை கேட்டதை பாலிஷா வாலி நினைவு கூர்ந்தார். காரணம், ரஷீத் மிகவும் இளமையாக இருந்தார். அத்துடன், அகாடமி மங்களகிரியில் இருந்தது. இப்படி தான்  ஆரம்பத்தில் ரஷீதின் கிரிக்கெட் பயணம் தொடங்கியது. 

பழ வியாபாரியின் மகன்:

குடும்பத்தை காப்பாற்ற ஷேக் ரஷீதின் தந்தை ஷேக் பாலிஷா வாலி பழங்களை விற்க வேண்டியிருந்தது. ஆம், ஹைதராபாத்தில் செய்துவந்த பணியில் இருந்து விலகியபிறகு, அவர் ஒரு பழ வியாபாரியாக இருந்து வந்தார். இத்தகைய சூழ்நிலையில், மகனின் திறமையை கண்ட ஷேக் பாலிஷா வாலி, தனது தொழிலை கைவிட்டு விட்டு, மகனுக்கு முழு நேரமும் பயிற்சி அளிக்கும் பணியில் ஈடுபட்டார். அவரது இந்த முயற்சிக்கு ஒருசில நண்பர்கள் உதவி செய்தார்கள். குறிப்பாக ஹைதராபாத்தைச் சேர்ந்த மருத்துவர் நண்பர்  இந்திரேசன் ரெட்டி, வங்கியாளர் உல்லி ஸ்ரீகாந்த் ஆகியோர், ஷேக் ரஷீதின் கிரிக்கெட் பயிற்சிக்கு தேவையான நிதியுதவிகளை வழங்கினார்கள். இதன்மூலம் ரஷீதின் கிரிக்கெட் கனவுகள் பிரகாச ஒளியுடன் பற்றி எரிந்தன. 

கனவுகள் மெய்ப்பட வேண்டுமானால், கடினமாக உழைக்க வேண்டும். பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். தந்தையின் ஆதரவு, தந்தையின் நண்பர்கள் கொடுத்த நிதியுதவி ஆகியவற்றின் மூலம், சாதாரண ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஷேக் ரஷீத், கிரிக்கெட் விளையாட்டில், தன்னுடைய அற்புதமான திறமையை வெளிப்படுத்தி, அனைவரின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கினார். 

ஐ.பி.எல். தொடரில் அசத்தல்:

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில், சென்னை அணிக்கு தேர்வு செய்யப்பட்ட ஷேக் ரஷீத், லக்னோ அணிக்கு எதிரான தனது முதல் அறிமுக ஆட்டத்தில், அற்புதமான திறமையை வெளிப்படுத்தி, சென்னை அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். இப்படி திறமையான வீரராக உருவெடுத்தாலும், ஆரம்ப காலங்களில் அவரும் அவரது தந்தையும் சந்தித்த சவால்கள், துயரங்கள் ஏராளமானவையாகும். இளம் கிரிக்கெட் வீரர் என்பதால், பண வசதி இல்லாத காரணத்தால் அவர் ரயில்களில் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சில நேரங்களில் முன்பதிவு டிக்கெட் கிடைக்காத காரணத்தால், பதிவு செய்யப்படாத பெட்டிகளில் அவர்கள் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ரயில் பெட்டி கழிவறையை ஒட்டியுள்ள பகுதியில் தூங்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. 

இப்படி பல்வேறு கண்ணீர் கதைகளை எதிர்கொண்ண்ட ஷேக் ரஷீதின்  கிரிக்கெட் வாழ்க்கைப் பயணத்தில் யு-19 உலகக் கோப்பையை இந்தியா வென்றபிறகு, புதிய அத்தியாயம் தொடங்கியது. அத்துடன் தற்போதை 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில், சென்னை அணியில் இடம்பெற்றுள்ள ஷேக் ரஷீத், வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறார். எந்த துறையாக இருந்தாலும், சவால்களையும் ஏளனங்களையும் சந்திக்காமல், எதிர்கொள்ளாமல் வாழ்க்கையில், சாதிக்க முடியாது என்பதை ஷேக் ரஷீதின் வியர்வை மற்றும் கண்ணீரின் கதை மிகவும் அழகாக மற்றவர்களுக்கு பாடம் கற்பிக்கிறது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்