வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக் கூறி மதுரை வில்லாபுரத்தில் 650 அடி கருப்பு துணி ஏந்தி பெண்கள் பிரமாண்ட கண்டன ஆர்பாட்டம்.
மதுரை வில்லாபுரம் பகுதி அனைத்து ஜமாத்தார்கள் ஒருங்கிணைந்து பாஜக அரசின் வக்ஃபு சட்ட திருத்த மசோதா திரும்ப பெற கோரி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்திற்கு ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் பள்ளிவாசல் செயலாளர் அப்துல்காதர் தலைமை வகித்தார். முபாரக் பள்ளி வாசல் முகம்மது மிர்ஷாத் தொகுப்புரை வழங்கினார். காஜா தெரு முஸ்லீம் உறவின் முறை ஜமாத் செயலாளர் காதர் மைதீன் வரவேற்புரை கூறினார் .
கண்டன உரை நிகழ்வில் மதுரை மாநகர துணை மேயர் நாகராஜன்,
மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் அருணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் அவுதா காதர்,
மதுரை தெற்கு மாவட்ட தலைவர் P.K.N அப்துல் காதர் ஆலிம்
இளைஞரணி நிர்வாகி ஹபீப் முஹம்மது ஆகியோர் கலந்து கொண்டனர்.
வக்ஃபு திருத்த சட்ட மசோதாவினை திரும்ப பெறக்கோரி 500 பெண்கள் 650 அடி நீள கருப்பு துணியை தாங்கி பிடித்து தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
15 பள்ளிவாசல்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்
தங்கள் எதிப்புகளை தெரிவித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது..
No comments:
Post a Comment