Sunday, April 6, 2025

ஆரோக்கியமான உணவு கிடைக்காமல்....!

 "ஆரோக்கியமான உணவு கிடைக்காமல் தவிக்கும் 300 கோடி மக்கள்"

உலகம் முழுவதும் இன்று (07.04.2025) உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. மக்கள் மத்தியில் சுகாதாரம் குறித்தும், ஆரோக்கியமான உணவு குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த தினம் கொண்டாடப்பட்டு, மக்களுக்கு ஒரு புதிய செய்தியை ஒவ்வொரு ஆண்டு தந்துக் கொண்டிருக்கிறது. 

இப்படி, ஒவ்வொரு ஆண்டும் உலக சுகாதார தினம் கொண்டாடப்பட்டு வந்தாலும், உலகில் வாழும் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான மக்களுக்கு ஆரோக்கியமான உணவை கிடைக்கவில்லை என்பது தான் உண்மையான நிதர்சனமாகும்.இப்படி ஆரோக்கியமான உணவு கிடைக்காமல் தவிக்கும் இந்த மக்கள், பல்வேறு நோய்களுக்கு ஆளாகி, தொடர்ந்து இன்னல்களைச் சந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள். தங்களுடைய சுகாதாரம் குறித்து கவலைப்படும் அவர்கள், அதற்காக நாள்தோறும் பணத்தை செலவழித்துக் கொண்டே இருக்கிறார்கள். இதன் காரணமாக மருத்துவமனைகளில் விதவிதமான நோய்களுக்கு தீர்வு காணவும், நல்ல சிகிச்சைப் பெறவும், மக்களின் கூட்டம் தொடர்ந்து படையெடுத்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், பிரச்சினைக்கு இன்னும் முற்றுப்புள்ளி கிடைக்கவில்லை. அல்லது வைக்கப்படவில்லை. 

ஆய்வில் அதிர்ச்சி தகவல்:

தற்போது உலகம் முழுவதும் 800 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோருக்கு  ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை. அல்லது அவர்களால் வாங்க முடியவில்லை. கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து இன்னும் மக்கள்  முழுமையாக மீளவில்லை என்று உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) வெளியிட்ட புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருகிறது. 

உலகம் முழுவதும் உணவு விலைகள் அதிகரித்து, ஆரோக்கியமான உணவின் சராசரி செலவு அதிகரித்தாலும்,  பொருளாதார மீட்சி மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட நேர்மறையான வருமான விளைவுகளால் மக்கள் ஆரோக்கியமான உணவை வாங்க முடியவில்லை.  இதன் விளைவாக, உலக மக்கள்தொகையில் சுமார் 35 புள்ளி 4 சதவீதம் பேர், அதாவது 300 கோடிக்கும் அதிகமான மக்கள், ஆரோக்கியமான உணவை வாங்க முடியவில்லை. இந்த நிலை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கிறது.  உயர்-நடுத்தர மற்றும் உயர் வருமான நாடுகளின் குழுவில் ஆரோக்கியமான உணவை வாங்க முடியாத மக்களின் எண்ணிக்கை தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளுக்குக் கீழே குறைந்தது. 

முக்கிய தகவல்கள்:

ஆப்பிரிக்காவில் ஆரோக்கியமான உணவை வாங்க முடியாத மக்களின் பங்கு 64 புள்ளி 8 சதவீதம். ஆசியாவில், இந்த எண்ணிக்கை 35 புள்ளி 1 சதவீதமாகும்.  லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனில், 27 புள்ளி 7 சதவீதம் என்றும்,  ஓசியானியாவில் 20 புள்ளி 1 சதவீதம் என்றும்,  மற்றும் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில், 4 புள்ளி 8 சதவீதம் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

குறைந்த வருமானம் மற்றும் குறைந்த நடுத்தர வருமான நாடுகளில், ஆரோக்கியமான உணவுகளை வாங்க முடியாத மக்களின் எண்ணிக்கை 2019 முதல் தொடர்ந்து அதிகரித்தது. இது தொற்றுநோய்க்குப் பிந்தைய பொருளாதார மீட்சிகள் எவ்வாறு சமமற்ற முறையில் பகிரப்பட்டன என்பதையும், உணவுப் பொருட்களின் விலைகளில் விநியோகச் சங்கிலி அதிர்ச்சிகள் மற்றும் உலகளாவிய பணவீக்க அழுத்தத்தைச் சமாளிக்க மேம்பட்ட பொருளாதாரங்கள் எவ்வாறு சிறப்பாக நிலைநிறுத்தப்பட்டன என்பதையும் பிரதிபலிக்கிறது.

வாங்கும் சக்தி சமநிலையில் (PPP) விலைகள் கணிசமாக உயர்ந்தன. ஆனால் வருமான வளர்ச்சியும் வலுவாக இருந்த இடங்களிலும், அதிக நிதி திறன் கொண்ட அதிக வருமானம் கொண்ட நாடுகளைப் போல, வீட்டு வரவு செலவுத் திட்டங்களின் பங்காக உணவு குறைவாக இருந்த இடங்களிலும் தாக்கம் நீர்த்துப்போகச் செய்யப்பட்டது.

"ஆரோக்கியமான உணவு முறைகளுக்கான பொருளாதார அணுகலில் ஏற்பட்டுள்ள சீரற்ற முன்னேற்றம், 2030 காலக்கெடுவிலிருந்து ஆறு ஆண்டுகள் தொலைவில், உலகில் பசியை பூஜ்ஜியமாக்குவதற்கான நிழலை ஏற்படுத்துகிறது" என்று SOFI அறிக்கை கூறுகிறது.

"முக்கிய காரணிகளுக்கு எதிரான அவர்களின் மீள்தன்மையை வலுப்படுத்தவும், ஆரோக்கியமான உணவுகள் அனைவருக்கும் மலிவு விலையில் கிடைப்பதை உறுதிசெய்யவும், ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்யவும் நமது வேளாண் உணவு முறைகளின் மாற்றத்தை விரைவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் ஆரோக்கியமான உணவுகளை அணுகவும் உட்கொள்ளவும் கூடிய மக்களுக்கு உறுதியளிக்க வேண்டிய அவசியமும் உள்ளது," என்று  அறிக்கை தெரிவிக்கிறது. 

குறைந்த நடுத்தர வருமான நாடுகளில் வாழும் 160 கோடிக்கும் அதிகமான மக்கள் ஒரு தரமான உணவை வாங்க முடியவில்லை. மேலும் குறைந்த வருமான நாடுகளில் வாழும் 503 கோடி மக்களுக்கும் இதுவே பொருந்தும். ஆரோக்கியமான உணவுகளை வாங்க முடியாத 77 சதவீத மக்களுக்கு மேற்குறிப்பிட்ட பொருளாதார நிலைகள் முக்கிய காரணமாக இருந்து வருகின்றன.

தங்கள் நாடுகளில் குறைந்த விலையில் ஆரோக்கியமான உணவை வாங்க முடியாத மக்கள் குறைந்தபட்சம் ஓரளவு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர்.  மலிவு விலை உணவுகளின் விலையை அளவிடுவதற்கும் கண்காணிப்பதற்கும் FAOவின் தொடர்ச்சியான முயற்சி ஒரு வகையான ஆரம்ப எச்சரிக்கை குறிகாட்டியை வழங்குகிறது.  

ஆரோக்கியமான உணவு அடிப்படை உரிமை:

ஆரோக்கியமான உணவு என்பது ஒவ்வொரு மக்களின் அடிப்படை உரிமையாகும். ஆனால், இந்த உரிமையை மக்கள் இன்னும் முழுமையாக பெறவில்லை. தொடர்ந்து அதிகரித்துவரும் விலைவாசி உயர்வு, வருவாய் குறைவு உள்ளிட்ட பல காரணங்களால், மக்கள் சத்தான உணவை வாங்க முடிவதில்லை. இதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகும் மக்கள், தொடர்ந்து நோய்களாலும் பாதிக்கப்படுகிறார்கள். நோய்களுக்கு சிகிச்சைப் பெற லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. உலக மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியமான உணவு கிடைப்பதை, உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்ய வேண்டும். அதற்கான ஒவ்வொரு நாட்டு அரசுகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும். பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி மக்கள் மத்தியில் ஆரோக்கியமான உணவு குறித்து நல்ல புரிதனை ஏற்படுத்த வேண்டும். அப்படி செய்யாமல் ஒவ்வொரு ஆண்டும் சுகாதார தினம் கொண்டாடப்படுவதால் எந்த பலனும் கிடைக்காது. 

ஆரோக்கியாக வாழ வேண்டுமானால், ஆரோக்கியமான உணவுடன் ஆரோக்கியமான எண்ணங்களும் மிகவும் அவசியம் என்பதை மக்கள் அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். குறைந்த வருவாய் கொண்ட மக்கள் கூட, ஆரோக்கியமான உணவை பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும். அதன்மூலம் மட்டுமே, மக்கள் சந்திக்கும் தொல்லைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: