பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் குறித்த இந்திய பிரச்சாரக்குழு:
ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யானுடன் சந்திப்பு....!!
இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய அமைப்புச் செயலாளர் இ.டி.முஹம்மது பஷீர் எம்.பி. பங்கேற்பு...!!!
அபுதாபி, மே.22- பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் குறித்தும், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்திற்கு எதிரான பிரச்சாரம் செய்வது குறித்து உலகளாவிய பிரச்சாரத்திற்கான இந்தியக் குழுவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மக்களவைத் தலைவர் இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி. இடம்பெற்றுள்ளார். . ஒன்றிய பா.ஜ.க. அரசின் இந்த அழைப்பு ஏற்று, உலக நாடுகளுக்கு, குறிப்பாக பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் நமது நாட்டிற்கு எதிரான பாகிஸ்தானின் நடவடிக்கைகளுக்கு எதிராக நமது தேசிய நோக்கத்தை முன்வைக்க இந்தியக் குழுவில் இடம்பெற்றிருப்பது தனது கட்சிக்கும் தனக்கும் கிடைத்த ஒரு மிகப்பெரிய கௌரவம் என்று இ.டி.முஹம்மது பஷீர் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தார்.
யு.ஏ.இ. அமைச்சருடன் சந்திப்பு:
இந்நிலையில், சிவசேனா எம்.பி, ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழுவில் இடம்பெற்றுள்ள இ.டி.முகமது பஷீர் உள்ளிட்ட 9 பேர் இன்று (22.05.25) ஐக்கிய அரபு அமீரகம் சென்றனர். அபுதாவி சென்ற அவர்களுக்கு அந்நாட்டு வழக்கப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் குழுவில் இடம்பெற்ற எம்.பி.க்கள்,பன்சூரி சுவராஜ், அதுல் கார்க், மன்னன் குமார் மிஸ்ரா, எஸ்.எஸ்.அலுவாலியா, இ.டி.முஹம்மது பஷீர், சஸ்மித் பட்ரா, மற்றும் ஐக்கிய அரசு அமிரக தூதர் சுஜன் சினாய் ஆகியோர் ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் ஷேக் நஹ்யான்பின் முபாரக் அல் நஹ்யானை இந்திய குழு சந்தித்தது. இந்த சந்திப்பின்போது, பாகிஸ்தான் எப்படி பயங்கரவாத செயல்களை ஊக்குவித்து வருகிறது என்பது குறித்து விரிவாக எடுத்துக் கூறி விளக்கம் அளித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஆபரேஷன் சிந்தூர் நடவக்கை தொடர்பாகவும், பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்திய ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து இந்திய குழு முழுமையாக எடுத்துக் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானுக்கு எதிராக உலக அளவில் பயணம் செய்யும், இந்தியக் குழுக்கள், பயங்கரவாதத்தின் ஆபத்துகளுக்கு உலகை விழிப்புணர்வடையச் செய்ய முடியும் என்று ஏற்கனவே தெரிவித்துள்ள இ.டி.முஹம்மது பஷீர், . இந்தியக் குழுவில் ஒரு உறுப்பினராக, தனது பங்களிப்பை சிறப்பாகச் செய்ய இருப்பதாக உறுதிப்பட கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
=======================
No comments:
Post a Comment