நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் கே.நவாஸ் கனி, எம்.பி. பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள், அவர்களை சட்டத்தின் முன்னிறுத்தி கடும் தண்டனைக்குட்படுத்தப்பட வேண்டும்.
ஜாகீர் உசேன் அவர்களின் குடும்பத்தினரின் கோரிக்கைக்கிணங்க ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள வக்ஃபு சொத்தை மீட்க தமிழ்நாடு வக்ஃபு வாரியம் அவர்களோடு முழுமையாக துணை நிற்கும் என்றார்.
No comments:
Post a Comment