தொகுதி மறுவரையரை திட்டத்திற்கு எதிராக தென்மாநிலங்களில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கருத்து வேறுபாடுகளை மறந்துவிட்டு,ஒற்றுமையாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அழைப்பு....!
சென்னை, மார்ச்.22- சென்னையில் நடைபெற்ற தொகுதி மறுவரையரை திட்டம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பா.ஜ.க.வின் சதித் திட்டத்தை முறியடிக்க அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என கேட்டுக் கொண்டார். அவரது உரையின் முழு விவரம் வருமாறு:
மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு:
தொகுதி மறுவரையரை விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மேற்கொண்டு வரும் சிறப்பான பணிகளுக்கு முதலில் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இதன்மூலம் எங்களை எல்லோரையும் ஓர் அணியில் அவர் திரட்டியுள்ளார். தொகுதி மறுவரையரை குறித்து எங்களுடைய விரிவான அறிக்கையை நாங்கள் அளித்துள்ளோம். குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் தென்மாநில அமைப்புகள் இது குறித்து தெளிவான முடிவை எடுத்துள்ளது. அதன்படி, என்னுடைய சில கருத்துகளை நான் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
வேகமாக வளரும் தென்மாநிலங்கள்:
தற்போது நாடு மிகப்பெரிய சவால்களை எதிர்நோக்கிக் கொண்டு இருக்கிறது. கடந்த 1971ஆம் ஆண்டு இந்திய அரசு நாடு முழுவதும் , குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தது. இந்திய அரசின் இந்த திட்டத்தை தென்னிந்தியா மிகவும் நல்ல முறையில் அமல்படுத்தியது. ஆனால் வடமாநிலங்களில் உள்ள மிகப்பெரிய மாநிலங்கள் இந்த திட்டத்தை முழுமையாக நடத்தாமல் தோல்வி அடைந்துவிட்டது. நாம் மிக வேகமாக மக்கள் தொகையை கட்டுக் கொண்டு வந்த நிலையில், வடமாநிலங்களின் நிலைமையை நாம் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தோம்.
அதேநேரத்தில் பல்வேறு துறையில் நாம் வேகமாக முன்னேறி வருகிறோம். தனிநபர் வருமானம் அதிகரிப்பு, ஜி.டி.பி, உயர்வு, வேலை வாய்ப்பு அதிகரிப்பு, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உயர்வு, சிறந்த நிர்வாகம், மற்றும் சிறந்த சமூக நலன் ஆகியவற்றை தென்மாநிலங்கள் நன்கு செய்து வருகின்றன. அத்துடன் நாட்டின் வளர்ச்சிக்கு தென்மாநிலங்கள் மிகவும் சிறந்த முறையில் தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றன.மத்திய அரசுக்கு செலுத்துவம் வரி வருவாயில் உரிய பங்கீட்டை தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் பெறுவதில்லை.
ஆனால், பீகார், உத்தரப் பிரதேசம், மத்திய பிரசேதம் உள்ளிட்ட மாநிலங்கள் செலுத்துவம் வரி வருவாயில் இருந்து மிகவும் அதிகமாக பல மடங்கு வரி பங்கீட்டை பெற்று வருகின்றன. நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதை நாம் முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம். அதேநேரத்தில் தொகுதி மறுவரையரை என்ற பேரில் தென்மாநிலங்களின் தொகுதிகளை குறைக்கும் திட்டத்தை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம் அரசியல் ரீதியாக எங்களை பலவீனப்படுத்துவடன், மிகச் சிறந்த முறையில் மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டத்தை நிறைவேற்றிய எங்களை பழிவாங்கும் நோக்கத்திலும், தண்டனை தரும் நோக்கத்திலும் இத்தகை செயல்கள் அரங்கேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திரா காந்தி, வாஜ்பாய் முறையை பின்பற்ற வேண்டும்:
பாஜவின் இத்தகைய செயல்திட்டங்கள் நாம் ஒற்றுமையாக தடுத்து நிறுத்த வேண்டும். 1976 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் தொகுதி மறுவரையரை திட்டத்தை அமல்படுத்தியபோது, தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல்,. அனைத்து மாநிலங்களுக்கும் உரிய அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என அவர் விரும்பினார். இதோபேன்று 2001ஆம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் தொகுதி மறுவரையரை திட்டத்தில் தொகுதிகள் எதுவும் அதிகரிக்கவில்லை.
பிரதமர் நரேந்திர மோடி கூட இதை முறையை பின்பற்ற வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையரை செய்யும் திட்டத்தை தென்மாநிலங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. பாஜக மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுவரையரை திட்டத்தை அமல்படுத்தினால், தென்மாநிலங்களில் தங்களுடைய அரசியல் பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிடும். வட மாநிலங்கள் மிகப்பெரிய அளவுக்கு பிரதிநிதித்துவம் பெற்றுவடும். எனவே மக்கள் தொகையில் அடிப்படையில் தொகுதி மறுவரையைரை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
வட மாநிலங்களின் ஆதிக்கம்:
காரணம், பீகார், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் நிலை உருவாகும். எனவே எந்த நிலையிலும் இதை நாங்கள் ஒப்புக் கொள்ள மாட்டோம். மக்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாஜகவின் இந்த திட்டத்தை எதிர்கிறார்கள். இதேபோன்று புரோ ரேட்டா பார்முலா திட்டத்தை நாங்கள் ஏற்க மாட்டோம். இது பல்வேறு பிரச்சினைகளுக்கு வழி வகுத்துவிடும். மத்திய அரசு ஒரு வாக்கில் வீழ்ந்து வரலாறு உண்டு. எனவே, அதையும் ஏற்க முடியாது.
நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடைப்பிடித்த முறையை தற்போது மீண்டும் கடைப்பிடிக்க வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையரை திட்டத்தை கைவிட வேண்டும். தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முடிவை கைவிட வேண்டும்.
ஒற்றுமையுடன் எதிர்க்க வேண்டும்:
அத்துடன் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கி, எஸ்.டி. எஸ்.,டி., ஆகியோருக்கான தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். மக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் அமைப்புகளாக மாநிலங்கள் உள்ளன. எனவே தொகுதி மறுவரையரை திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.
மக்கள் தொகையை கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு உதவி தென்மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு பரிசு அளித்து ஊக்குவிக்க வேண்டும். மக்கள் தொகையில் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டம், பல்வேறு பிரச்சினைகளை கொண்டுவந்துவிடும். அத்துடன் பல்வேறு துறைகளில் சிறந்துவிளங்கும் தென்மாநிலங்களை ஒன்றிய அரசு ஊக்குவிக்க வேண்டும்.
பாஜக தொகுதி மறுவரையரை திட்டத்தை நடைமுறைப்படுத்த துடித்தால், தென்மாநிலங்களில் தொகுதிகளை 33 சதவீதம் அளவுக்கு உயர்த்த வேண்டும். தொகுதிகளின் எண்ணிக்கையை குறைப்பது தென்மாநிலங்களுக்கு செய்யப்படும் அநீதியாகும்.
தென்மாநிலங்களில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கருத்து வேறுபாடுகளை மறந்துவிட்டு, பாஜகவின் சதித் திட்டத்திற்கு எதிராக ஒற்றுமையாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதுதொடர்பாக தெலங்கானா மாநில சட்டப்பேரவையில் நாங்கள் தீர்மானம் ஒன்றை விரைவில் நிறைவேற்ற இருக்கிறோம். இதேபோன்று, மற்ற மாநில அரசுகளும் சட்டப்பேரவைகளில் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும். தென்மாநிலங்களின் வலிமையான கருத்துக்கு வடமாநிலங்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு ரேவந்த் ரெட்டி பேசினார்.
சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
=======================
No comments:
Post a Comment