Saturday, December 14, 2024

இ.டி.முஹம்மது பஷீர் எம்.பி. உரை...!

*நாட்டின் ஒற்றுமைக்காக முன்னோர்கள் கண்ட கனவை ஒன்றிய அரசு கெடுத்துக் கொண்டு இருக்கிறது.

*நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற விஷயங்கள் எதிர் திசையில் செல்கின்றன.

*வழிபாட்டுதலச் சட்டம், 1991க்கு, மாறாக 172 மஸ்ஜித்துகளை குறிவைத்து வலதுசாரி அமைப்புகள் இயங்குவதை ஒன்றிய அரசு வேடிக்கைப் பார்க்கிறது.

*முஸ்லிம்களுக்கு எதிராக நாடு முழுவதும் பிரச்சினைகளை எழுப்பி அவர்களின் வீடுகள் இடிக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. 

*சிறுபான்மையினோர், உடல் ஊனமுற்றோர், மாற்றுத் திறனாளிகளுக்கு நாட்டில் நீதி கிடைப்பதில்லை.

*சிதைக்கப்பட்டு வரும் அரசிலயமைப்பு சட்டத்தைப் பாதுகாத்து மக்களின் நலனுக்காக அரசு மிகவும் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மக்களவையில் நடந்த விவாதத்தில் பங்கேற்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய அமைப்புச் செயலாளர் இ.டி.முஹம்மது பஷீர் எம்.பி. உரை...!

புதுடெல்லி,டிச.15-இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி மக்களவையில் இரண்டு நாள் விவாதம் நடைபெற்றது. இதில் கடந்த 13ஆம் தேதி (13.12.2024) நடந்த விவாதத்தில் கேரள மாநிலம் மலப்புரம் தொகுதி இ.யூ.முஸ்லிம் லீக் எம்.பி., இ.டி.முஹம்மது பஷீர் பங்கேற்று பேசினார். அப்போது ஒன்றிய பா.ஜ.க. அரசின் செயல்பாடுகளை அவர் கடுமையாக விமர்சனம் செய்தார். நாட்டில் ஒற்றுமையை சீர்குலைக்க ஒரு கும்பல் செய்துவரும் சதிகளை, ஒள்றிய பா.ஜ.க. அரசு வேடிக்கைப் பார்ப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.  மக்களவையில் இ.டி.முஹம்மது பஷீர் ஆற்றிய உரையின் முழு விவரம் வருமாறு:

அரசியலமைப்பின் அழகு என்ன? 

வரலாற்று சிறப்புமிக்க அமர்வில் பங்கேற்க எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்கு மிக்க நன்றி. நானும் டாக்டர் அம்பேத்கரின் வார்த்தைகளில் இருந்து எனது உரையை ஆரம்பிக்கிறேன். டாக்டர் அம்பேத்கர் அரசியலில் அறநெறிக்காக நின்றார். டாக்டர் அம்பேத்கர் இவ்வாறு கூறினார். “எவ்வளவு நல்ல அரசியலமைப்பாக இருந்தாலும், அது மோசமாக மாறும் என்பது உறுதி, ஏனென்றால் அதைச் செயல்படுத்த அழைக்கப்பட்டவர்கள் மோசமானவர்களாகவே இருப்பார்கள். ஒரு அரசியலமைப்பு எவ்வளவு மோசமாக இருந்தாலும், அதைச் செயல்படுத்த அழைக்கப்பட்டவர்கள் நல்லவர்களாக இருந்தால் அது நல்லதாக மாறும்" இவை மிகவும் அருமையான வார்த்தைகளாகும்.  இது அவரது தொலைநோக்கு பார்வையை காட்டுகிறது.

இந்திய அரசியலமைப்பின் அழகு என்ன? அப்துல் கலாம் ஆசாத் ஒரு கனவு கண்டார்.  "பன்முகத்தன்மைக்கு மத்தியில் ஒரு கலாச்சார ஒற்றுமை என்பது பல்வேறு வண்ணங்களைக் கொண்ட பூச்செண்டு போன்றது, ஒவ்வொன்றும் முழுமைக்கும் அழகு சேர்க்கிறது." அவருடைய தொலைநோக்குப் பார்வையை நாம் நன்கு புரிந்து கொள்ள முடியும்.

எதிர்திசையில் செல்லும் விஷயங்கள்:

இந்திய அரசியலமைப்பின் இரண்டு கரங்கள் உள்ளன.  மதச்சார்பின்மை மற்றும் உள்ளடக்கிய தன்மை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி மேலும் ஆய்வு செய்தால், அது நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தைப் பொறுத்தது. ஆனால் இப்போது நாட்டில் என்ன நடக்கிறது? இப்போது விஷயங்கள் எதிர் திசையில் செல்கிறது என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இது குறித்து இந்த நாடு முற்றிலும் கவலையடைந்துள்ளது. 

இந்த அவையில்  நாம் நாம் என்ன விவாதிக்க முடியும்?  சிறுபான்மையினரின் அரசியலமைப்பு உரிமைகள் பற்றி விவாதிக்கலாம். அரசியல் சாசனத்தில் உள்ள சிறுபான்மையினரின் உரிமையைப் பற்றிய பிரிவுகள் 14, 25, 29(1), 29(2), 30 மற்றும் பிரிவு 347 எடுத்துக் கூறுகின்றன. ஆனால் இப்போது, ​​என்ன நடக்கிறது? இந்த உரிமைகள் அனைத்தும் குறைக்கப்பட்டுள்ளன. இப்போது விஷயங்கள் எதிர் திசையில் செல்கின்றன. நம் முன்னோர்கள் அழகிய கனவு கண்டார்கள் என்று சொல்ல விரும்புகிறேன். இந்த அரசு முழுவதையும் கெடுத்துக் கொண்டிருக்கிறது. மதச்சார்பற்ற கொள்கையில் இந்தியா அக்கறை கொண்டுள்ளது. 

நாட்டின் சோகமான நாள்:

இப்படிப்பட்ட நாட்டில் இதுவரை சோகமான நாள் எது என்று யாராவது கேட்டால் நாம் ஒன்றை மட்டுமே சொல்ல முடியும். அதாவது 6வது டிசம்பர், 1992 பாபர் மஸ்ஜித் இடிப்பு நடந்தது. வலதுசாரி சக்திகளின் தலைமையில்  பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டது. அன்று, என்ன நடந்தது? பாபர் மஸ்ஜித்தை இடித்தவர்கள் என்ன கோஷம் எழுப்பினர். அதன் அர்த்தம் என்ன? 'யே தோ கேவல் ஜாங்கி ஹை, காசி மதுரா பாக்கி ஹை'. பாபர் மஸ்ஜித்தை இடித்தவர்கள், அதே பாதையில் தொடர்ந்து பயணம் செய்துக் கொண்டு இருக்கிறார்கள்.  அதை நாம் உணர வேண்டும்.

அவர்கள் 172 வழிபாட்டுத் தலங்களை பட்டியலிட்டுள்ளனர். அவர்களின் இந்த போக்கிற்கு இந்திய தொல்லியல் துறை மற்றொரு தந்திரம் செய்து வருகிறது. அவர்களும் உள்ளே போகிறார்கள். அந்த திசையில். அந்த மாதிரியான குழப்பத்தையும் இந்த அமைப்பில் உருவாக்குகிறார்கள். அந்த திசையில் விஷயங்கள் செல்லக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இருந்தாலும்,  அதேநேரத்தில், அரசாங்கம் உண்மையில் விஷயங்களை கெடுத்து வருகிறது.

வழிபாட்டுதலச்சட்டத்திற்கு எதிராக வழக்குகள்:

வழிபாட்டுதலச் சட்டம், 1991 தொடர்பாக, அலகாபாத் உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பு அளித்தது.  இதற்கு எதிராக அவர்கள் மேல்முறையீட்டுக்கு சென்றபோது, ​​அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு, தெளிவான வழிகாட்டுதலை அளித்துள்ளனர். நீதிமன்றங்களுக்கு வெள்ளி ரேகை போன்றது என்று கூற விரும்புகிறேன். அந்த தீர்ப்பை நினைத்து நாம் பெருமைப்படலாம். நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான். பாசிச கும்பல் அத்தனை பேரும் இந்த மாதிரியான சர்வே, இது போன்ற விஷயங்களுக்குத்தான் நீதிமன்றங்களுக்கு போகிறார்கள். சம்பல் மஸ்ஜித்துக்கு ஏஎஸ்ஐ அதிகாரிகள் சென்றபோது, அவர்களும் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்பினர். அங்கு ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். என்ன காரணத்திற்காக அப்பாவி மக்கள் இறந்தனர்? இந்த ஒரு வகையான துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதற்கு யார் காரணம்?. நாம் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள முடியும். நாட்டில் தொடர்ந்து மேலும் இதுபோன்ற செயல்களை  அரசாங்கமே செய்து வருகிறது

முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள்:

நான் ஒரு எளிய கேள்வி கேட்கிறேன். வேலி என்பது பாதுகாப்பிற்காக. வேலியே தேவை இல்லையென்றால் இந்த நாட்டை யார் காப்பாற்றுவது? கடவுள் தான் இந்த நாட்டை காப்பாற்றட்டும். தற்போது விஷயங்கள் வேறு விதமாக நடந்து கொண்டிருக்கின்றன. கும்பல் படுகொலை பற்றி நான் சொல்ல விரும்புகிறேன். நாட்டில் இது வழக்கமான நிகழ்வாகிவிட்டது. வீடுகளை புல்டோசர் செய்து அந்த சிறுபான்மையினரை நடுத்தெருவில் நிறுத்துவதும் உண்டு. நாட்டில் வெறுப்புப் பேச்சுக்கள் பரவி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த வகையான விஷயங்கள் நடக்கின்றன. சிறுபான்மையினரை சமூக மற்றும் பொருளாதார ஓரங்கட்டுதல் இந்நாட்டிலும் நடக்கிறது.

பண்டித ஜவஹர்லால் நேருவை நீங்கள் புறக்கணிக்கக் கூடாது என்பதை உணர வேண்டும் மகாத்மா காந்தி  சிறுபான்மையினரை நடத்தும் விதத்தை வைத்தே ஒரு நாகரீகத்தை மதிப்பிட முடியும் என்றார்.  சிறுபான்மையினரை எப்படி நடத்துகிறீர்கள்? அதுவே நாட்டின் கௌரவத்தை மதிப்பிடுவதற்கான அளவுகோலாகும். அதேபோல், ஜனநாயகத்தின் உண்மையான சோதனை என்று பண்டித ஜவஹர்லால் நேரு கூறினார். பலவீனமான சிறுபான்மையினர் கூட பாதுகாப்பாக உணரும் திறன் இருக்க வேண்டும் என்பது . காந்தியின்  கனவு. பண்டித ஜவஹர்லால் நேரு ஒரு கனவு கண்டார். துரதிர்ஷ்டவசமாக, இந்த நாடு வேறு திசையில் செல்கிறது.

மக்களின் நலனுக்காக அரசு செயல்பட வேண்டும்:

இப்போது நீதித்துறை பிரச்சினைக்கு வருகிறேன். உன்னதம், நம்பகத்தன்மை, நீதிமன்றத்தின் சுதந்திரம் ஒரு அற்புதமான விஷயம். இதை கடைபிடித்தால், என்னென்ன விளைவுகள் ஏற்படப் போகிறது என்பதை நாம் நன்கு அறிந்து கொள்ளலாம். மணிப்பூரைப் பொறுத்தவரை. மணிப்பூர் இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது.  பிரதமர் அங்கு செல்லவில்லை. அவர் உலகம் முழுவதும் பயணம் செய்கிறார். ஆனால் அவர் மணிப்பூரில் உண்மையைக் கண்டுபிடிக்க அங்கு போகவில்லை. நாம் உள்ளடக்கம் பற்றி பேசுகிறோம். நமது சமூகத்தில், மிகவும் புறக்கணிக்கப்பட்ட பிரிவினர் உடல் ஊனமுற்றோர், மாற்றுத் திறனாளிகள். அவர்களுக்கு நீதி கிடைப்பதில்லை. அவர்கள் இன்னும் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த மக்களின் நலனுக்காக அரசு மிகவும் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு இ.டி.முஹம்மது பஷீர் பேசினார். 

- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: