சளி, இருமல் அல்லது தொண்டை வலியா? நிவாரணத்திற்காக ஏழு எளிய வீட்டு வைத்தியங்கள்...!
நாடு முழுவதும் தற்போது மழைக்காலம் மெல்ல மெல்ல விடைப்பெற்று, குளிர்காலம் தொடங்கியுள்ளது. குளிர்காலம் வந்துவிட்டால், அதனுடன் நிறைய உடல்நலப் பிரச்சினைகள் அழைக்கப்படாமல் வருகின்றன. இந்த குளிர்காலத்தில் பொதுவாக அனைவரும் எதிர்கொள்ளும் நோய்களில் சளி, இருமல், தொண்டை வலி உள்ளிட்டவை முக்கியமாக இருந்து வருகின்றன.
சளி, இருமல், காய்ச்சல் மற்றும் தொண்டை புண் ஆகியவற்றால், தீவிர சோர்வு மற்றும் அன்றாட பணிகளை திறம்பட செய்வதில் சிரமத்தை நாம் அனைவரும் உணரலாம். இருப்பினும், சில வீட்டு வைத்தியங்கள் சளி மற்றும் இருமல் அறிகுறிகளை திறம்பட நிர்வகிக்க உதவும். அத்துடன் இத்தகைய நோய்களில் இருந்து சிறிது நிவாரணம் கிடைக்கும் என உறுதியாக கூறலாம். சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட சில நோய்களில் இருந்து நிவாரணம் பெற உதவும் ஏழு சிறந்த வீட்டு வைத்திய தீர்வுகளை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
இஞ்சி:
ஏக இறைவன் வழங்கிய அருட்கொடைகளில் இஞ்சி ஒரு அற்புதமான அருட்கொடை என்று கூறலாம். இஞ்சி அதன் பல்வேறு ஊட்டச்சத்து நன்மைகளுக்கு அறியப்படுகிறது. அதனால்தான் இது ஆயுர்வேதத்தில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. தினமும் இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்வதால் மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. இஞ்சியின் முழுப் பலனையும் பெற இஞ்சிச் சாற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இஞ்சி அழற்சி எதிர்ப்பு விளைவை வழங்குகிறது. இது இருமலை சமாளிக்க உதவுகிறது. .
சில புதிய இஞ்சியை, தேனுடன் கலந்த சாப்பிட்டால் சளி, இருமலுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். இஞ்சியை தேநீரில் சேர்த்து கூட நாம் அருந்தலாம். நல்ல பலன் கிடைக்கும். இதனால் தான் பழம்பாடல் ஒன்றில் இஞ்சி, சுக்கு, கடுக்காய் ஆகியவை குறித்து இப்படி பெருமையாக குறிப்பிடப்பட்டுள்ளது.
"காலையில் இஞ்சி,
கடும்பகல் சுக்கு,
மாலையில் கடுக்காய்
மண்டலம் சாப்பிட
கோலூன்றி நடந்தவன் கோலைவீசி
நடப்பான் மிடுக்காய்"
தேன்:
தேன் ஓர் இனிய உணவுப்பொருள் ஆகும். மருத்துவ குணமும் கொண்டது. தேன், கலோரி ஆற்றல் மிகுந்த ஒர் உணவாகும்.சக்கரை மற்றும் இதர சில கூட்டுப்பொருள்களின் கலவையாக தேன் உள்ளது. மாவுச்சத்துகள் என்ற அடிப்படையில் தேனை பகுக்கும்போது தேனில் பிரதானமாக பிரக்டோச் 38 புள்ளி 5 சதவீதமும் குளுக்கோச் 31 புள்ளி 0 சதவீதமும் கலந்துள்ளதாக அறியப்படுகிறது. செயற்கையான ஒரு சர்க்கரை திரவமாக தயாரிக்கும்போது அதில் தோராயமாக 48 சதவீத பிரக்டோச், 47 சரவீத குளுக்கோச் மற்றும் 5 சதவீத சுக்ரோச் கலக்கப்படுகிறது. எஞ்சியுள்ள தேனில் மாவுச்சத்துகளான மால்டோச், சுக்ரோச் மற்றும் இதர சிக்கலான மாவுச்சத்துகள் அடங்கியுள்ளன. பிற சத்துள்ள இனிப்புச் சாறுகளைப் போலவே தேனும் அதிக அளவிளான சர்க்கரையும் சிறிய அளவில் உயிர்சத்துக்கள் அல்லது கனிமங்களைக் கொண்டுள்ளது
இருமலுக்கு தேன் ஒரு சிறந்த தீர்வாகும். இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளால் நிரம்பியுள்ளது. இது பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இருவருக்கும் பயன்படுத்தப்படலாம். ஒரு தேக்கரண்டி தேனில் ஒரு சில துளிகள் இஞ்சி சாறுடன் கலந்து சாப்பிடுவது இருமல் நீங்கும். நீங்கள் அதை சூடான எலுமிச்சை அல்லது பச்சை தேயிலையிலும் சேர்க்கலாம்.
வைட்டமின் சி:
வைட்டமின் சி ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வைட்டமின் சி அஸ்கார்பிக் அமிலம் என்றும் அழைக்கப்படுகிறது. உடலில் உள்ள திசுக்களின் வளர்ச்சி மற்றும் அனைத்து உடல் திசுக்களின் வளர்ச்சி மற்றும் பழுதுபார்ப்புக்கு இது அவசியம். இது உடலில் ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது, ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து செல்களைப் பாதுகாக்க உதவுகிறது. வலுவான நோய் எதிர்ப்பு சக்தி பருவகால நோய்களின் தொடக்கத்தைத் தடுக்க உதவும். போதுமான சிட்ரஸ் பழங்களைச் சேர்ப்பது நோயெதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்க உதவும்.
மஞ்சள்:
மஞ்சள், அரிணம் அல்லது பீதம் உணவுப் பொருட்களில் நிறம், சுவை கூட்டியாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படும் பயிராகும். இது 60 முதல் 90 செ.மீ. உயரம் வரை வளரும் ஒரு பூண்டு வகைச்செடி. இதன் இலைகள் கொத்தாக இருக்கும். தண்டில் உள்ள முளையிலிருந்து கிளைத்து மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர்தான் மஞ்சள் கிழங்கு. நன்கு உலர்த்தப்பட்ட மஞ்சள் கிழங்கின் விரலை ஒடித்தால் உலோக நாதம் உண்டாகும்.
இது இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள். இதனை தமிழர் சடங்குகளின் புனிதப் பொருளாக உபயோகிக்கிறார்கள். மஞ்சளில் குர்க்குமின் எனும் வேதிப்பொருள் உண்டு, இது மஞ்சளுக்கு நிறத்தைத் தருவதுடன் மஞ்சளால் அடையக்கூடியப் பல்வேறுபட்ட பயன்களைத் தரும் பொருளாக உள்ளது. மஞ்சள் அல்லது ஹல்டி குளிர்காலத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டும். இது உங்களை சூடாக வைத்திருக்கவும், சளி மற்றும் இருமல் அறிகுறிகளைக் குறைக்கவும் உதவும். மஞ்சள் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
உப்பு நீர் கொப்பளிப்பு:
உப்பை ஆவியில் வேகவைத்து வாய் கொப்பளிக்கும் முறை நாட்டு மருத்துவத்தில் மிகவும் பயன்படுத்தப்படும் ஒரு மருத்துவ முறையாகும். சளி, இருமல், காய்ச்சல் மற்றும் தொண்டை புண் ஆகியவற்றால் பாதிக்கப்படும் ஒருவருக்கு உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது மேல் சுவாச நோய்த்தொற்றுகளைத் தடுக்க உதவுகிறது. இது நெரிசல் மற்றும் தொண்டை புண் ஆகியவற்றின் தீவிரத்தை குறைக்கிறது. அதேபோல, நீராவியை சுவாசிப்பது நெரிசலைக் குறைக்கிறது. இது மூச்சுக்குழாய்களுக்கு ஈரப்பதத்தை வழங்குவதன் மூலம் இருமலுக்கு உதவுகிறது.
சூப்கள்:
சூப்கள் குளிர்ச்சியின் தீவிரத்தை குறைத்து, விரைவாக மீட்கும். அவை உங்களை சூடாக வைத்திருக்கும். அத்துடன், உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கக்கூடிய ஏராளமான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன.
பல பிரபலமான சூப்களில் பூசணி, கேரட், உருளைக்கிழங்கு இறைச்சி போன்றவற்றை சேர்ப்பதுண்டு. மற்ற வகை சூப்களில் பழ சூப்கள், இனிப்பு சூப்கள், பிளவு பட்டாணி போன்ற பருப்பு சூப்கள், குளிர்ந்த சூப்கள் மற்றும் பிற பாணிகள் அடங்கும். சூப்களில் மொத்தம் 531 வகை இருப்பதாக உணவுப் பிரியர்கள் மற்றும் உணவு தயாரிப்பு கலை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். எலும்பு சூப், பீட்ரூட் கேரட் சூப், சிக்கன் சூப், இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். குளிர்காலத்தில் சூடான சூப்களை சாப்பிட்டுவதால், உடலில் ஒரு புதிய உற்சாகம் பிறக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
சூடான பானங்கள்:
குளிர்காலத்தில் தேநீர் பொதுவாக உட்கொள்ளப்படுகிறது. உங்கள் குளிர்கால உணவில் சூடாக இருக்க மற்ற சூடான பானங்களையும் சேர்க்கலாம். சூடான பானங்களைப் பருகுவது நெரிசலைக் குறைக்கிறது மற்றும் தொண்டை வலியைக் குறைக்கிறது. குளிர்காலம் என்பது மகிழ்ச்சியின் மகிழ்ச்சியைக் கொண்டாடும் பருவமாகும். மேலும், குளிர்காலத்திற்கான சூடான பானங்கள் அந்த அரவணைப்பை அனுபவிக்க சரியான வழியாகும். ஒரு இனிமையான தேநீர், சுவையூட்டப்பட்ட பால், சூடான சாக்லேட் அல்லது புத்துணர்ச்சியூட்டும் காபி என எதுவாக இருந்தாலும், குளிர்கால பானங்கள் குளிரில் இருந்து ஆறுதல் தரும்.
குளிர்காலத்திற்கான சிறந்த சூடான பானங்களாக கிளாசிக் ராகி ஹாட் சாக்லேட், தென்னிந்திய வடிகட்டி காபி, தங்க மஞ்சள் பால் என பலவற்றை குறிப்பிடலாம். சூடான காபி பானங்களை விரும்புபவர்கள், ஸ்வீட் கரம் காபியின் தென்னிந்திய வடிகட்டி காபி கண்டிப்பாக முயற்சிக்க வேண்டும். குளிர்ந்த குளிர்காலக் காலைப் பொழுதில் உங்களுக்கு ஆற்றலைத் தருவது மட்டுமின்றி, அதன் நறுமணப் பாரம்பரிய சுவையுடன் உங்கள் மனதைத் தணிக்கும் சரியான பானம். தங்க மஞ்சள் பால் ஹல்டி தூத் என்றும் அழைக்கப்படும் இந்த பாரம்பரிய இந்திய பானம் அதன் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் வெப்பமயமாதல் பண்புகளுக்கு நன்கு அறியப்பட்டதாகும். மஞ்சள் தூள், இலவங்கப்பட்டை, காய்ந்த இஞ்சி, மிளகு, ஏலக்காய், பெருஞ்சீரகம் மற்றும் பழுப்பு சர்க்கரை கொண்டு தயாரிக்கப்படும் இந்த வசதியான குளிர்கால பானம் நீண்ட நாட்களுக்குப் பிறகு முறுக்குவதற்கு ஏற்றது. தங்க மஞ்சள் பால் குளிர்கால நோய்களை முறியடிக்கவும், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கவும் உதவும்.
எச்சரிக்கையும் அவசியம்:
சளி, இருமல், காய்ச்சல் மற்றும் தொண்டை புண் ஆகியவற்றால் பாதிக்கபப்படும் ஒருவர் மேற்கண்ட ஏழு எளிய வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தி நிவாரணம் பெறும் அதேவேளையில், இந்த வைத்தியம் நோயின் தீவிரத்தையும் காலத்தையும் குறைக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நோய்கான அறிகுறிகள் மோசமாக இருந்தால், உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனைப் பெற்று அவர் கூறும் ஆலோசனையின் படி, சிகிச்சை எடுத்துக் கொள்வது மோசமான நோயில் இருந்து விடுபட தீர்வாக இருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment