நாட்டில் சிறுபான்மையின மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன
இந்தியாவின் பன்முகத்தன்மையை சீர்குலைக்கும் செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும்
பொருளாதாரத்தை மேம்படுத்த விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்
மக்களவையில் இ.யூ.முஸ்லிம் லீக் எம்.பி. அப்துஸ் ஸமது சமதானி வலியுறுத்தல்.....!
புதுடெல்லி, டிச.17- மக்களவையில் நேற்று (டிசம்பர் 16) நடைபெற்ற சிறுப்பு விவாதத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொன்னேரி தொகுதி உறுப்பினர் அப்துஸ் ஸமது சமதானி பங்கேற்று உரையாற்றினார். அவரது உரையின் முழு விவரம் வருமாறு:
பன்முகத்தன்மையை சீர்குலைக்கு முயற்சி:
இந்த அவையில் எனக்கு அளிக்கப்பட்டுள்ள வாய்ப்பை, நாட்டில் தற்போது பொதுவாக நிலவும் சூழ்நிலைகள் குறித்து எடுத்துக் கூறி பயன்படுத்த நான் விரும்புகிறேன் . அத்துடன், முக்கியமாக நாட்டின் பொருளாதாரம் குறித்தும் நான் சில தகவல்கள் மற்றும் விஷயங்கள் குறித்து கூற ஆசைப்படுகிறேன். நமது தேசம் ஒரு நவீன தேசம். தற்போது நாம் அனைவரும் நவீன தேசத்தில் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறோம். தற்போது நவீன சூழ்நிலைகளில் பல்வேறு பாரம்பரிய வரலாற்று அம்சங்கள், மற்றும் கலாச்சரங்களுடன் கொண்டு மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்தியாவின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றின் முக்கிய அம்சமாக, அதன் பன்முகத்தன்மையை தான் கூற வேண்டும். எப்படி வாழ்ந்தாலும், அது எப்படிப்பட்ட பொருளாதார, சமூக அம்சங்களுடன் இருந்தாலும் நாம் மனதில் பன்முகத்தன்மையை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். இது தான் இந்தியாவின் உண்மையான அமைப்பாகும். நாட்டின் இதயமாகும். இந்த அமைப்பு ஒரு அற்புதமான பங்களிப்பை நாட்டிற்கு தந்துகொண்டு இருக்கிறது.
ஆனால், வேதனை அளிக்கும் விஷயம் என்னவென்றால், தற்போது நாட்டில் நிலவும் அமைப்பை சீர்குலைக்கும் வகையில் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. நாட்டின் பாராம்பரிய கலாச்சாரத்தை சீர்குலைக்க சிலர் முயற்சி செய்துக் கொண்டு இருக்கிறார்கள். இது மிகவும் வருத்தம் அளிக்கும் விஷயமாகும்.
மக்களின் உழைப்பு முக்கியமானது:
நாட்டில் வேலையில்லா திண்டாட்டம், வறுமை, பொருளாதார மந்த நிலை, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்து வருகின்றன. நாட்டின் பொருளாதர நிலையை உயர்த்துவதில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பின்தங்கிய மக்களின் உழைப்பு மிகவும் முக்கியமாக இருந்து வருகிறது. நமது நாடு, ஒவ்வொரு அம்சங்களிலும், கலாச்சாரம், பண்பாடு, ஒற்றுமை என அனைத்து நிலைகளிலும் உலகத்திற்கே ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருந்து வரும் நாடாகும்.
தற்போது நாம் புக்ழ்பெற்ற திரைப்படக் கலைஞர் ராஜ்கபூரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். அவர் இப்படி கூறியதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். "இந்தியா நமக்கு அனைத்தும் கொடுத்து இருக்கிறது. இந்தியாவின் இதயம், பன்முகத்தன்மையில் மட்டும் தான் உள்ளது". அவையில் உரையாற்றி பல உறுப்பினர்களின் பேச்சை கேட்டபோது, அவர்கள் ஒதுக்கப்பட்ட, தலித் மற்றும் சிறுபான்மையின மக்களின் நிலைகள் குறித்து எடுத்துக் கூறினார்கள்.
சிறுபான்மையின மக்களின் நிலை:
தற்போது நாட்டில் சிறுபான்மையின மக்களின் நிலை எப்படி உள்ளது? நாட்டில் மதசார்ப்பற்ற நிலை இருந்துவந்தாலும், அந்த அமைப்பு சீர்குலையும் வகையில் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மக்களுக்கு உண்மையான நீதி கிடைப்பது இல்லை. அவர்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது. ஒதுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு உரிய நீதி சரியான நேரத்தில் கிடைப்பது இல்லை. சிறுபான்மையின மக்களுக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகளும் பறிக்கப்படுகின்றன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாடு எப்படி முன்னேற முடியும். தற்போது நாட்டில் உள்ள வழிப்பாட்டுத்தலங்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட சம்பவங்கள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. இதுதான் நாட்டில் தற்போது நடைபெற்று வருகிறது.
அடிப்படை கட்டமைப்புகள் சிதைப்பு:
நாட்டில் நிலவும் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் கவனம் செலுத்தாலும், குறிப்பாக நாட்டில் உள்ள ஏழை மற்றும் பின்தங்கிய மக்கள் சந்திக்கும் பிரச்சினைக்கு முடிவு கட்டுவதை விட்டுவிட்டு, நாட்டின் அடிப்படை கட்டமைப்புகளை உடைக்கும் காரியங்கள் நடைபெற்று வருகின்றன. நாட்டின் உண்மையான அமைப்பை மெல்ல மெல்ல முற்றிலும் சீர்குலைக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன்மூலம் நாட்டின் சமூக ஒற்றுமை மற்றும் அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் நாம் கவனம் செலுத்த வேண்டும். தற்போது நவீன தொழில்நுட்ப அதிகாரத்தை நாம் கவனத்தில் கொண்டு, செயல்புரிய வேண்டும். வளர்ந்து வரும் தொழில்நுட்பம், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு மிகமிக முக்கியம் என்பதை மறந்துவிடக் கூடாது. இந்தியா தற்போது பொருளாதார மேம்பாட்டு அடைந்து வந்தாலும், நவீன தொழில்நுட்ப புரட்சியை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, தொழில்நுட்ப புரட்சிக்கு ஏற்ப, நாட்டில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். நாட்டின் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
நவீன தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம்:
செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் வகையில் தற்போது தொழில்நுட்பம் வளர்ந்து உள்ளது. நாட்டில் டிஜிட்டல் புரட்சி தற்போது நிலவுகிறது. இந்த நிலையில், நாமும் அனைத்து துறைகளின் வளர்ச்சிகளில் புதிய, நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். நவீன தொழில் புரட்சி ஏற்பட்டு இருக்கும் இப்படிப்பட்ட சூழ்நிலையில், நமது விவசாயிகள் தங்களுடைய உரிமைகளுக்காக இன்னும் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். இது மிகவும் வேதனை அளிக்கிறது.
என்னுடைய உரையை முடிக்கும் முன்பு, பல ஆண்டுகளுக்கு முன்பு நாட்டை ஆண்டை அரசர் ஒருவர், விவசாயிகள் குறித்து கூறிய அற்புதமான கருத்துகள் குறித்து, அறிஞர் பகத் பூஷண் எழுதிய கிங் ஆப் இந்தியா என்ற நூலில் இருந்து சில வார்த்தைகளை இங்கு குறிப்பிட்ட விரும்புகிறேன்.
விவசாயிகளுக்கு முன்னுரிமை:
அந்த அறிஞர் இப்படி எழுதியுள்ளார். "நாட்டின் உண்மையான செழிப்பை வழங்கும் இதயமாக விவசாயிகள் இருந்து வருகிறார்கள். அவர்களை நாம் ஊக்குவிக்க வேண்டும். அத்துடன், அவர்களுடைய வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அவர்களில் யாரும் பாதிப்பு அடையக் கூடாது. ஒரு ஆட்சியாளன் ஒரு சாதாரண விவசாயியை பாதுகாக்கவில்லை எனில், அது அவர்களின் உரிமையை பறிக்கும் செயலாகும். அதன்மூலம் அவர்களின் வருவாயை பறிக்க ஆட்சியாளன் வழி வகுத்து விடுகிறான். இதன்மூலம் நாடு எந்த நன்மையும் பெற முடியாது" பல நூற்றாண்டுகளுக்கு முன்பு விவசாயிகள் குறித்து அந்த அரசன் கூறிய வார்த்தைகள், தற்போது நாட்டில் விவசாயிகளின் நிலைமையை கவனிக்கும்போது அப்படியே இருந்து வருகிறது.
நாடு முழுவதும் விவசாயிகள் தங்களுடைய அடிப்படை உரிமைகளுக்காக போராடிக் கொண்டு இருக்கிறார்கள். எனவே அரசு தனது முதல் பணியாக விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இதன்மூலம் மட்டுமே நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கிச் செல்லும். ஒன்றிய அரசு அதில் தனிக் கவனம் செலுத்தி, அதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அப்துஸ் ஸமத் சமதானி பேசினார்.
- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment