Tuesday, December 3, 2024

இ.டி.முஹம்மது பஷீர் எம்.பி. பேச்சு....!

 

"வழிப்பாட்டுத்தலங்கள் பாதுகாப்பு சட்டம் 1991-யை அரசு தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்" 

சம்பலை போன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடக்க அனுமதிக்கக் கூடாது 

நாடாளுமன்ற மக்களவையில் .யூ.முஸ்லிம் லீக்

தேசிய அமைப்புச் செயலாளர் .டி.முஹம்மது பஷீர் எம்.பி. பேச்சு

புதுடெல்லி, டிச.04- சம்பல் ஷாஷி ஜும்ஆ மஸ்ஜித் குறித்து நாடாளுமன்ற மக்களவையில் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய அமைப்புச் செயலாளர் .டி.முஹம்மது பஷீர் எம்.பி., நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வழிப்பாட்டுத்தலங்கள் பாதுகாப்பு சட்டம் 1991யை அரசு தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கேள்விக்குறியான சட்டம்:

மக்களவையில் பேசிய அவரது உரையின் முழு விவரம் வருமாறு: வழிப்பாட்டுத்தலங்கள் பாதுகாப்பு சட்டம் 1991 தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. நாட்டில் அந்த சட்டத்திற்கு மாறாக பல சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அதற்கு ஒரு உதாரணமாக சம்பல் ஷாஹி ஜும்ஆ மஸ்ஜித் ஆய்வு இருந்து வருகிறது. இந்த ஆய்வின்போது நடத்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் அங்கு நிலைமை பதற்றமாக உள்ளது. உண்மையில் இது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கும் நிகழ்வாகும்.

அமைதியான முறையில் குரல் எழுப்புவர்களின் குரல்கள் நாட்டில் மீண்டும் மீண்டும் நசுக்கப்பட்டு வருகிறது. மதசார்ப்பற்ற நிலைமைக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் மதவாதிகள் பிரச்சினையை எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள்.

ஏராளமான மஸ்ஜித்துக்கள் மீது குறி:

பாபரி மஸ்ஜித் விவகாரத்திற்குப் பிறகு, நாட்டில் ஏராளமான மஸ்ஜித்துக்கள் மீது குறிவைக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் ஏராளமான பாபரி மஸ்ஜித்துக்களை உருவாக்கி கொண்டே இருக்கிறார்கள். இது இந்துத்துவ வாதிகளின் சதி வேலையாகும். மஸ்ஜித், மந்திர் பிரச்சினைக்கு முடிவு ஏற்படும் என நினைக்கிறோம். ஆனால், அது தொடர்கதையாகவே தொடர்கிறது.

நாட்டில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் சிலர் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். பாபரி மஸ்ஜித்தைப் போன்று நாட்டில் உள்ள மற்ற மஸ்ஜித்துக்களையும் கைப்பற்ற அவர்கள் முயற்சி செய்துக் கொண்டே இருக்கிறார்கள். இதேபோன்று அஜ்மீர் தர்கா பிரச்சினையை தற்போது அவர்கள் கிளப்பி இருக்கிறார்கள். மேலும் இதுபோன்ற பிரச்சினைகளை தொடர்ந்து எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள்.

ஊக்குவிக்கும் அரசு:

இதுபோன்ற சதி திட்டங்களையும் செயல்களையும், வன்முறைகளையும் அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். ஆனால், இதுபோன்ற செயல்களை அரசு ஊக்குவித்து வருகிறது. இதை தடுத்து நிறுத்த நீதிமன்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். அதன்மூலம் மட்டும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

இந்த நாடு, அமைதியான நாடு, மதசார்பற்ற நாடு, அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழும் நாடு. ஆனால் துரஷ்டவசமாக இவை அனைத்தையும் நாம் தற்போது இழந்து வருகிறோம். நான் அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்ற செயல்களை இனி ஒருபோதும் வேடிக்கைப் பார்க்கக் கூடாது. ஒருபோதும் அனுமதிக்க கூடாது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இத்தகைய செயல்களுக்கு எதிராக உள்ளது. அதேநேரத்தில் நாட்டின், அமைதி மற்றும் ஒற்றுமைக்கு எப்போதும் ஆதரவாக இருந்து வருகிறது.

எனவே, அரசு மஸ்ஜித் பிரச்சினை உள்ளிட்ட மதவழிப்பாட்டுத்தலங்கள் மீது உரிமை கோரும் செயல்களையும் நடவடிக்கைகளையும் இனி ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று மீண்டும் ஒருமுறை இந்த அவையில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு .டி.முஹம்மது பஷீர் பேசினார்.

சிபில்சிபலுடன் ஆலோசனை:

முன்னதாக உத்தரப் பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள ஷாஹி ஜும்ஆ மஸ்ஜித் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுகுவது தொடர்பாக  டெல்லியில் மூத்த வழக்கிறஞர் கபில் சிபலுடன்  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனையில் .யூ.முஸ்லிம் லீக் தேசிய அமைப்புச் செயலாளர் .டி.முஹம்மது பஷீர் எம்.பி.,, தேசிய பொருளாளர் பி.வி.அப்துல் வஹாப் எம்.பி.,  தேசிய துணைத் தலைவர் அப்துஸ் ஸமதானி எம்.பி., தேசிய வழக்கறிஞர் அணி ஒருங்கிணைப்பாளர் ஹரீஸ் பிரான் எம்.பி., ஆகியோர் கலந்துகொண்டனர். ஆலோசனையின்போது, பல்வேறு முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறப்புச் செய்தியாளர்: எஸ்..அப்துல் அஜீஸ்

====================

No comments: