Thursday, October 31, 2013

ஊடகங்களில் உலாவும் நாதாரிகள்.....!  உஷார்.....!!


என்னது.....

தலைப்பு ஒரு மாதிரியாக இருக்கிறது...?

நீங்கள் கேள்வி எழுப்பலாம்....

தமிழக ஊடகங்களில் (ஒருசில) அண்மை காலமாக நடைபெறும் சில நிகழ்வுகள்....

எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்கள்....

அவற்றில் ஒரு சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறேன்....

பிறகு நீங்களே தீர்மானித்து விடுங்கள்....

நான் சொல்வது உண்மையா, இல்லையா என்பதை....

நான் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிந்து வந்த நேரம் அது...

அந்த நிறுவனத்தில் குறிப்பிட்ட தேதியில் சம்பளம் வழங்கப்படுவதில்லை...

எனவே, வேறு ஒரு நல்ல நிறுவனத்தில் சேர முயற்சி செய்துக் கொண்டிருந்தேன்...

பல நிறுவனங்களுக்கு விண்ணப்பம் அளித்திருந்தேன்...

இப்படிப்பட்ட நேரத்தில்தான், நல்ல நிறுவனம் ஒன்றில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது.

அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த, எனக்கு அறிமுகமான நண்பர் (அவரை அப்படி அழைக்கக்கூடாது) ஒருவர் என்னிடம் அடிக்கடி செல்பேசியில் தொடர்பு கொண்டு மணிக்கணக்கில் பேசுவார்.

அந்த நிறுவனம் குறித்து தப்பு தப்பாக விவரங்களை கூறுவார்....


அங்கு பணிபுரியும் ஊழியர்களின் திறமைகள் குறித்து குறைத்து மதிப்பிட்டு நிலைமை சரியில்லை என்பார்.

நீங்கள் வேறு ஒரு நல்ல நிறுவனத்திற்கு முயற்சி செய்யுங்கள் என தினமும் ஆலோசனைகள் தருவார்....

நானும் அந்த நபர் மீது நல்ல மதிப்பு வைத்திருந்ததால், என்னுடைய நலனை கருத்தில் கொண்டு சொல்கிறார் என்று நம்பினேன்.

இந்த நிலையில்தான், நான் மேற்குறிப்பிட்டபடி, அந்த நிறுவனத்தில் இருந்து ஒருநாள் எனக்கு அழைப்பு வந்தது...

நானும், சென்றுதான் பார்ப்போமே என்று நினைத்து அங்கு சென்றேன்...

அந்த தொலைக்காட்சியில்,  அப்போது தலைமை செய்தி ஆசிரியராக இருந்த நல்ல மனிதரை சந்தித்து பேசினேன்...

அவர் எனக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி பணியில் சேரும்படி அறிவுறுத்தினார்...

நானும், சேர்ந்துவிடலாம் என நினைத்து அங்கிருந்து கிளம்பினேன்...

திருவல்லிகேணியில் இருந்த என்னுடைய அறைக்கு வந்த சிறிது நேரத்தில், அந்த நண்பரின் செல்பேசி என்னை அழைத்தது...

எதிர்முனையில் பேசி அந்த நபர், சார் என்ன சொன்னார்கள்....அந்த சம்பளத்திற்கு நீங்கள் ஓ.கே. சொல்லாதீர்கள்...அதிக சம்பளம் கேளுங்கள்...இங்கு நிலைமை சரியில்லை...

இப்படி சொன்னபோது, உண்மைதான் என நானும் நினைத்தேன்...அந்த நபரின் ஆலோசனையை ஏற்று, அந்த நிறுவனத்தில் சேரவில்லை...

பிறகு, நான் பணிபுரிந்த நிறுவனத்தில் சம்பள பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது.

மூன்று, நான்கு மாதங்கள் என சம்பளம் கொடுக்கப்படவில்லை...

மீண்டும், முதலில் சென்று வந்த தொலைக்காட்சி நிறுவனத்தில் முயற்சி செய்யலாம் என நினைத்து, மற்றொரு நண்பர் மூலம் முயற்சி செய்தேன்.அவரும், தலைமை செய்தி ஆசிரியரிடம் பேசி என்னை போக சொன்னார்...

நானும் சென்று வந்தேன்.... நான் வந்து சென்ற விஷயம் கேள்விப்பட்டதும், அந்த நபர், மீண்டும் என்னை தொடர்பு கொண்டு, சார் நீங்கள் இங்கே வரவே வேண்டாம் சார். என்றார். சன்னுக்கு, கலைஞருக்கு முயற்சி செய்யுங்கள் என்றார்..

அப்போதுதான், அந்த நபர், நான் அங்கு வருவதை சிறிதும் விரும்பவில்லை என்பது என்னுடைய அறிவுக்கு எட்டியது...

என்ன கோல்மால் செய்தாரோ, எனக்கு அங்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

நல்ல வாய்ப்பு....கைநிறைய சம்பளம்...சிறப்பான இடத்தில் அமர வேண்டிய நிலை...

இதை அனைத்தையும் அந்த நண்பர் கெடுத்துவிட்டார்...

அப்போது எனக்கு,  "கூடா நட்பு கேடாய் முடியும்.."  என்ற பழமொழிதான் ஞாபத்திற்கு வந்தது.

இப்போது சொல்லுங்கள் இவரை நான் எப்படி அழைப்பது.....

இதேபோன்று, ஊடகத்துறையில் பணிபுரியும் சிலர், தவறான வழிகளில் பலரை மிரட்டி பல லட்சம் ரூபாய் சுருட்டிக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன.

பாதிக்கப்பட்ட சிலர், தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு எழுதும் கடிதங்கள் இதற்கு சாட்சிகளாக உள்ளன...

இப்படிப்பட்டவர்களை எப்படி அழைப்பது...

ஒருசில தொலைக்காட்சிகளில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் அணிந்து வரும் உடை, இந்திய கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் ஆகியவ்ற்றிற்கு வேட்டு வைக்கும் வகையில் இருநது வருகிறது...

இவற்றை சம்பந்தப்பட்டவர்கள் தடுத்து நிறுத்துவதில்லை...அதனால், அங்கு ஒழுக்க சீர்கேடுகள் அரங்கேற்றப்படுகின்றன....

ஒருசிலர், பெண் ஊழியர்களிடம் நடந்து கொள்ளும் முறை, ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை....

இதேபோன்று,  அடிக்கடி, ஒவ்வொரு நிறுவனத்திற்கு தாவும் சிலர், அங்கு யாரையும் வாழ விடாமல் மற்றவர்களையும் வெளியேற்றிவிட்ட ஆனந்தம் கொள்கிறார்கள்...இரண்டு மாதம், மூன்று மாதம் என பணிபுரிந்து விட்டு, காசு பார்த்து விட்டு, பெரிய ஜாம்பவான்கள் போன்று வேஷமிடுகிறார்கள்...இது அண்மை காலமாக ஊடகத்துறையில் நடக்கும் கூத்துகள்...


இவையெல்லாம், ஊடகத்துறையில் மட்டுமல்ல,  எல்லா துறைகளிலும் நடக்கிறது எனலாம்...

ஆனால், ஜனநாயகத்தின் முக்கிய தூணாக விளங்கும் ஊடகத்துறை, மேற்குறிப்பிட்டவர்களால், சமூகத்தில் தற்போது மதிப்பு குறைந்து வருகிறது...

பத்திரிகை துறை குறித்து முகநூலில் அன்பர் ஒருவர், எழுதும்போது, பத்திரிகையாளர்களின் நடவடிக்கைகளால், அவர்கள் மீது இருந்த மதிப்பு, மரியாதை குறைந்து விட்டது என குறிப்பிட்டார்...

உண்மைதான்...

சமூகத்தில் பத்திரிகையாளர்களை மதிக்கும் போக்கு குறைந்து வருகிறது...

எல்லாவற்றிற்கும் காரணம் தலைப்பில் நான் குறிப்பிட்ட நபர்களால்தான்....

சரி, ஊடகத்துறையில் நல்ல பண்பாளர்கள் இல்லையா.... என நீங்கள் கேட்கலாம்....

நிறைய பேர் இருக்கிறார்கள்...அந்த நல்ல பண்பாளர்கள்..அமைதியாக பணிபுரிந்து பத்திரிகை துறைக்கு சேவை செய்து கொண்டிருக்கிறார்கள்...

ஊடகத்துறையில் நான் சந்தித்த சில நல்ல பண்பாளர்கள் குறித்து அடுத்த கட்டுரையில் பார்ப்போம்....


ஏஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
==================================

Sunday, October 27, 2013

முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான

அ.தி.மு.க. அரசு... 

இரண்டரை ஆண்டுகள் 

சாதனை என்ன ?மக்களால் நான்.....மக்களுக்காக
நான்...

இது அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா சொல்லும் வார்த்தைகள்....

மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக கடந்த 2011ஆம் ஆண்டு மே மாதம் பொறுப்பு ஏற்றுக் கொண்டார் ஜெயலலிதா.

பொதுவாக அவரை அம்மா என்று எல்லோரும் தற்போது அழைக்க ஆரம்பித்துள்ளதால், நானும் இந்த கட்டுரையில், அம்மா என்றே குறிப்பிட்டு எழுதுகிறேன்....

அம்மாவின் இரண்டரை கால ஆட்சி எப்படி இருக்கிறது...

தமிழகம் அமைதி பூங்காவனமாக திகழ்கிறது.....

ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு பல திட்டங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன....

குறிப்பாக, தொழிலாளர்களின் வசதிக்காக கொண்டு வரப்பட்டுள்ள அம்மா உணவகம் திட்டம், சென்னையில் மட்டுமல்ல, தமிழகத்தின் முக்கிய மாநகராட்சி பகுதிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.இந்த திட்டத்திற்கு ஏழை, எளிய, தொழிலாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டே இருக்கிறது...

ஒருநாள், தேனாப்பேட்டையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், பேருந்திற்காக காத்திருந்தேன்.

அப்போது, இரண்டு தொழிலாளர்கள் பேசிக் கொண்டது என்னுடைய காதில் விழுந்தது...

அம்மா உணவகம் திட்டம் குறித்து அவர்கள் புகழ்ந்து கொண்டிருந்தார்கள்...

ஆக, அம்மா உணவகம் திட்டம் ஏழை மக்களை சென்று சேர்ந்துள்ளது... குறைந்த விலையில் உணவு கிடைப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளது தொழிலாளர் வர்க்கம்...பல நேரங்களில் விரைவிலேயே உணவு வகைகள் அனைத்தும் விற்பனையாகி விடுவதால், பலருக்கு உணவு கிடைப்பது இல்லை என்ற புகார் இருந்தாலும், இந்த திட்டம் அதிமுக அரசின் சாதனை திட்டம் என்றே சொல்லாம்....

அடுத்து, பெண்களை கவரும் வகையில் கொண்டு வரப்பட்ட பண்ணை பசுமை காய்கறி நுகர்வோர் கடைகள்....

காய்கறி விலைகள் விண்ணை தொட்டு வரும் நிலையில், மலிவு விலையில் தரமான காய்கறிகள் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பது முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா அவர்களின் ஆசை....
உடனே, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பண்ணை பசுமை காய்கறி நுகர்வோர் கடைகள் திறக்கப்பட்டன.

தரமான காய்கறிகள், குறைந்த விலைக்கு கிடைப்பதால், பெண்கள், குறிப்பாக ஏழை, மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்...

அடுத்து, அம்மா மினரல் வாட்டர்....

10 ரூபாய்க்கு ஒரு லிட்டர் தண்ணீர்....தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது அம்மா மினரல் வாட்டர்....


இந்த திட்டமும் ஏழை, எளிய மக்களின் வசதிக்காக கொண்டு வரப்பட்டுள்ளது...நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது...

அடுத்து, காமதேனு கூட்டுறவு கடைகளில் ஒரு கிலோ அரிசி 20 ரூபாய்க்கு விற்பனை செய்யும் திட்டம்.... ரேஷ்ன் கார்டுகளுக்கு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

எனினும் வெளிமார்க்கட்டுகளில் அரிசி விலை கூடுதலாக இருப்பதால், நடுத்தர மக்கள் குறைந்த விலையில் அரிசி வாங்க என்ன வழி...

 அம்மா புதிய திட்டத்தை அறிவித்தார்....

ஒரு கிலோ அரிசி 20 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளலாம் என்பதுதான் அந்த திட்டம்...

இதுவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றே கூறலாம்...

அடுத்து, சென்னையில் தற்போது தொடங்கப்பட்டுள்ள மினி பேருந்து திட்டம்...

சாலைகளில், வீதிகளில் மினி பேருந்துகள் செல்வது சென்னைவாசிகளை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது....

பல பத்திரிகைகளில் வரும் பொதுமக்களின் பேட்டிகள், தொலைக்காட்சிகளில் வரும் நேர்காணல்கள், மினி பேருந்துகளுக்கு கிடைத்துள்ள வரவேற்பை படம் பிடித்து காட்டுகின்றன....

இதேபோன்று, இலவச மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் திட்டமும் மக்களை சென்று அடைந்துள்ளது......இதுபோன்று, ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் வசதிக்காக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருவதன் மூலம், மக்களிடையே ஆட்சிக்கு வரவேற்பு கிடைத்து உள்ளதாகவே கூறலாம்...

மின் தட்டுப்பாடு தற்போது குறைந்துள்ளது....பல மாதங்கள் மின் வெட்டால் அவதிப்பட்ட பொதுமக்கள், இப்போது, வீடுகளில் மின்வெட்டு இல்லை என்பதால், அதிமுக அரசை பாராட்ட தொடங்கியுள்ளனர்...

காவிரி நதி நீர் விவகாரம்....

இலங்கை தமிழர் விவகாரம்....

மத்திய அரசின் மூலம் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமைகள்....

கச்சத்தீவு விவகாரம்...

இப்படி பல விவகாரங்களிலும், முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா அவர்களின் அணுகுமுறைகள் பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளன....

விஸ்வரூபம் திரைப்படம் விவகாரத்தில், சிறுபான்மை மக்களின் கோரிக்கைகளை ஏற்று, தீர்வு கண்டது....

சிறுபான்மை மக்களின் நலன்களில் அக்கறை...

திரைப்படத்துறையினர் மீது அவர் கொண்டுள்ள பாசம்...

தமிழக காவல்துறையை உலகத்தரத்திற்கு அழைத்துச் செல்லும் முயற்சி...ஒரு குறிப்பிட்ட குடும்பம் மட்டுமே, ஆதிக்கம் செலுத்தி வந்த திரைப்படத்துறை, தற்போது, அனைத்து தரப்பு கலைஞர்களின் கைகளில் தவழ்கிறது....

அதிமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகுதான், புதிய தொலைக்காட்சி ஊடகங்கள் பிறந்தன..

தற்போது,.சுதந்திரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன...

தொழில் வளர்ச்சியில் கூட தமிழகம் முன்னேறி வருகிறது....

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்...

அதிமுக ஆட்சியில் குறைகளே இல்லையா.....இந்த கேள்வி எல்லோருக்கும் எழும்...

ஒருசில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன...மறுப்பதற்கு இல்லை...

ஆனால்....ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயன் பெற வேண்டும் என்ற நோக்கில் செயல்படுத்தப்படும் அம்மா உணவகம், பண்ணை பசுமை காய்கறி நுகர்வோர் திட்டம், அம்மா மினரல் வாட்டர், மினி பேருந்து திட்டம்....குறைந்த விலையில் அரிசி விற்பனை...

இதுபோன்ற மக்களை கவரும் திட்டங்களால், அதிமுக அரசின் ஒருசில குறைகள் மக்களால் மறக்கப்பட்டுள்ளன...

இதனால், வரும் நாடாளுமன்ற தேர்தலில், அதிமுகவிற்கு நல்ல மகசூல் கிடைக்கப் போகிறது என்றே சொல்லலாம்....

காரணம்.... மக்களின் நாடி அறிந்து, பல திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக சென்று சேரும் வகையில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன....

கோடிக்கணக்கில் நிதி செலவிட்டு பெரிய பெரிய கட்டிடங்களை கட்டி வரலாற்றில் இடம் பெற வேண்டும் என அதிமுக அரசு நினைக்கவில்லை என தெரிகிறது....

எனவேதான், அதில் அக்கறை செலுத்தாமல், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயன் பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.....அதனால்தான் கூறுகிறேன்...அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மிகப் பெரிய வெற்றியை சூவைக்கும்...

மத்தியில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக மாறும்....

நரேந்தர மோடியின் பிரதமர் கனவுகள் எல்லாம் சிதைந்து போகும்....

இறைவன் விரும்பினால்......

நாட்டில் நல்லதே நடக்கும்.....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

ஊடக முதலாளிகளை ஏமாற்றும் 

அரை வேக்காடுகள்......


வுட்புட் எடிட்டர்(Output Editor)......அப்படியன்னா என்ன...?
அன்கட் பைட் (uncut Byte).....அது என்ன ?
மாலாலாவை தெரியுமா....அது யாரு?

இந்த கேள்விகள் எல்லாம் அண்மையில் தொடங்கப்பட்ட ஒரு தொலைக்காட்சியின் செய்திப்பிரிவுக்கு நேர்முக தேர்வுக்கு சென்றவரிடம் கேட்டகப்பட்டவை...

நேர்முக தேர்வில் கலந்து கொண்டவருக்கு நிச்சயம்  பதில் தெரியவில்லை...

வேலை கிடைக்கப் போவதில்லை என்று உறுதியாக நம்பினார் அந்த நபர்..

ஆனால் என்ன ஆச்சரியம்.....40 ஆயிரம் ரூபாய் மாத சம்பளத்தில் உடனே பணியில் சேரும்படி அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.
வாய்ப்பு அளிக்கப்பட்டது.  நேர்முக தேர்வில் கலந்து கொண்டவருக்கு ஒன்றுமே புரியவில்லை...

ஆனால், செய்திப்பிரிவில் தலைமை பொறுப்பில் இருந்தவருக்கு இப்படிப்பட்ட ஆட்கள்தான் தேவைப்பட்டது.

காரணம்....

அவரது பதவிக்கு யாரும் போட்டியாக வந்துவிடக் கூடாது... திறமைசாலிகளை, அனுபவசாலிகளை பணிக்கு எடுத்துவிட்டால், தன்னுடைய, திறமை வெட்ட வெளிச்சத்திற்கு வந்துவிடும்,  வெளிப்பட்டுவிடும் என்ற அச்சம் அந்த நபருக்கு...

எனவே,

சுறுசுறுப்பாக வேலை செய்பவர்கள்....

உண்மை உழைப்பாளிகள்....

செய்தியை பல்வேறு கோணங்களில் அளிக்கும் திறமை பெற்றவர்கள்...

மற்ற தொலைக்காட்சிகளில் வருவதற்கு முன்பே, முதலில் தான் பணிபுரியும் நிறுவனத்தில் செய்தி வந்துவிட வேண்டும் என துடிப்பவர்கள்...

மற்றும்,

விஷயம் தெரிந்தவர்களை பக்கத்தில் அவர் சேர்த்துக் கொள்வதே இல்லை...

செய்தி எழுத தெரியவில்லை என்றாலும் பராவயில்லை...

தனக்கு அடங்கி நடந்து செல்பவர்களை உடனே பணியில் சேர்த்து கொள்வதுதான் அந்த தலைமை செய்தி ஆசிரியர் வழக்கமாக கொண்டிருக்கிறார்...மேலே கூறிய வார்த்தைகள் கற்பனையாக நீங்கள் நினைக்கலாம்...அப்படியும் இருக்கலாம்....இருக்காமல் போகலாம்...(கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது அல்லவா)

ஆனால், தற்போது விஷுவல் மீடியாவில் இந்த போக்குதான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது...

ஊடக முதலாளிகளை ஒரு கும்பல், தவறான வழியில் அழைத்து சென்றுக் கொண்டிருக்கிறது...

பணத்தை பற்றி கவலைப்படாமல், தொலைக்காட்சி முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என ஆசையில், ஊடக முதலாளிகள் ஆர்வம் செலுத்தும்போது, அவர்களின் ஆசையை உன்னிப்பாக கவனிக்கும் சிலர், தங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்து விட்டதாக நினைத்து உடனே காரியத்தில் இறங்கி விடுகின்றனர்.

ஊடக முதலாளிகளின் பணத்தை எப்படி வீண் வழியில் செலவழிக்க முடியுமா...அப்படி  செய்கிறார்கள்....செய்தி வழங்குகிறோம் என்ற பெயரில் பணத்தை பிடுங்கி  செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள்...

விமானத்தில் பறப்பது.....நட்சத்திர விடுதிகளில் அறைகளை போட்டு தங்குவது....அனைத்து வசதிகளையும் அனுபவிப்பது.....பல லட்சம் ரூபாய் மாத சம்பளம் வாங்கிக் கொண்டு, உல்லாச வாழ்க்கை அனுபவிப்பது....

ஒரு வரியில் செய்தியை சொல்லிவிட்டு, அலுவலகத்தில் நேரத்தை வீணாக செலவழிப்பது இதுதான், தலைமை பொறுப்பில் இருக்கும் ஒருசிலரின் வாடிக்கையாக தற்போது இருக்கிறது....

அதுவும் ஒருசில குறிப்பிட்ட தொலைக்காட்சிகளில் மட்டும்தான் இந்த போக்கு  இருந்து வருகிறது....

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தொலைக்காட்சிகளில் மட்டும்தான், இந்த அரை வேக்காடுகளின் ஆதிக்கம் தலைதூக்கி உள்ளது...

இதற்கு எப்போது விடிவு கிடைக்குமோ......நிச்சயம் யாருக்கும் தெரியாது....

ஆனால்....

இயற்கை மேல் நம்பிக்கை கொள்பவர்களுக்கு,  நிச்சயம் காலம் ஒருநாள் மாறும் என்பது தெரியும்....ஊடக முதலாளிகள் விழித்துக் கொள்ளும்போது, அரை வேக்காடுகளின் வேடம் வெளிச்சத்திற்கு வரும்...

அப்போது, ஒதுங்க இடம் கிடைக்காமல் அலைவார்கள்....

காலம் அப்படிதான் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறது....

உண்மை உழைப்பாளிகளே...

பொறுமையை கடைப்பிடியுங்கள்....

பொறுமையாளர்கள் நிச்சயம் வெற்றியை பெற்றிருக்கிறார்கள்....

வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறார்கள்....

விரைவில், அரை வேக்காடுகளின் அட்டகாசங்கள், ஒருநாள் நிச்சயம் அடங்கிவிடும்...

இதற்கு, அண்மை கால நிகழ்வுகளே சாட்சிகளாக உள்ளன...


எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்