Sunday, September 25, 2011

அழகான பாடல் !

ஓய்வு நாள்.

மாலை நேரம்.

மெரினா கடற்கரைக்கு சென்றிருந்தேன்.

கண்ணகி சிலைக்கு பின்புறம்,  அங்காங்கே அமர்ந்து கொண்டிருந்த காதலர்கள், மெரினாவின் அழகை மேலும் மெருக்கூட்டினார்கள்.இந்த காட்சியை பார்த்தபோது, இயற்கையின் அற்புதம்  குறித்து  மனம் கொஞ்சம் அழமாகவே  யோசிக்க செய்தது.

நீண்ட நேரம், மெரினாவின்   அழகை (காதலர்களையும்தான்) ரசித்த பின்பு அறைக்கு திரும்பி எஃப்.எம். ரேடியோவை ஆன் செய்தேன்.ஒரு கவிஞரின் திரைப்படப்பாடல் ஒலித்தது.

இறைவனின் அற்புதப் படைப்பான பெண்ணின் அழகை அந்த கவிஞன் மிக அற்புதமாக வர்ணித்து இருந்தான்.

அந்த பாடலில் நீண்ட நேரம்  லயித்துப் போனேன்.அழகான பாடல்.

அற்புதமான வரிகள்.நீங்களும் ரசிக்க

இதே அந்த பாடலின்  வரிகள்

உங்கள் பார்வைக்கு......விழியிலே மலர்ந்தது
உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே
அடடா
எங்கெங்கும் உன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே


உன் விழியே போதுமடி
மனம் மயங்கும்
மெய் மரக்கும்
புது உலகின் வழி தெரியும்
பொன் விளக்கே
தீபமே


விழியிலே மலர்ந்தது
உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே
அடடா
எங்கெங்கும் உன்னழகே
ஓவியனும் வரைந்ததில்லையே
உன்னைப் போல் ஓரழகைக் கண்டதில்லையே
காவியத்தின் நாயகி
கற்பனைக்கு ஊர்வசி
கண்களுக்கு விளைந்த மாங்கனி
காதலுக்கு மலர்ந்த பூங்கொடி


விழியிலே மலர்ந்தது
உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே
அடடா
எங்கெங்கும் உன்னழகே


கைய்யளவு பழுத்த மாதுளை
பாலில் நெய்யளவு பரந்த புன்னகை
முன்னழகில் காமினி
பின்னழகில் மோகினி
மோகவலை சூடும் நேரமே
யோகம் வரப் பாடும் ராகமே


விழியிலே மலர்ந்தது
உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே
அடடா
எங்கெங்கும் உன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே.பாடல் வரிகளை ரசித்தீர்களா ?

அழகான பாடல்தானே !

அழகை ரசிக்கும்போது, வரிகளும் அழகாகதானே வரும்.

அழகை ரசியுங்கள். இயற்கையை சுவாசியுங்கள்.

மனதில் தானாகவே உற்சாகம் பிறக்கும்.

கவலைகள் மறந்து போகும்.

புதிய உலகம் தென்படும்.

புதிய காட்சிகள் வரும்.

அனைவரையும் நேசிக்கத் தோன்றும்.

நேசிப்பதிலேயே மகிழ்ச்சி உருவாகும்.


S.A.ABDUL AZEEZ

Monday, September 19, 2011

எதுக்கு எது ?

 

எதுக்கு எது சாப்பிடலாம் !?

தலைவலியா? இஞ்சி சாப்பிடுங்கள்

காய்ச்சலா? தயிர் சாப்பிடுங்கள். மேலும் தேன் சாப்பிடுங்கள

மாரடைப்பு வராமல் இருக்க தேனீர் சாப்பிடுங்கள்கொழுப்பு இதயத்தின் சுவர்களில் தேங்காமல் தடுக்கும். குறிப்பாக க்ரீன் டீ மிக நல்லது

தூக்கம் வர வில்லையா? தேன் குடித்தால் தானாக வரும் தூக்கம

ஆஸ்த்துமாவால் கஸ்டப்படுகிறீர்களா? வெங்காயம் சாப்பிடுங்கள்ஆர்த்த்ரிடிஸ்- ஆல் கஸ்டப்படுகிறீர்களா? மீன் சாப்பிடுங்கள்

வயிற்று கோளாறா? வாழை பழம் சாப்பிடுங்கள்எலும்பு சம்பந்த்தப் பட்ட கோளாறா? அன்னாசி பழம் சாப்பிடுங்கள்

மாதவிலக்கு பிரச்சனையா? Cornflakes சாப்பிடுங்கள்

மறதி பிரச்சனையா? Oyster fish சாப்பிடுங்கள்

சளி தொல்லையா? பூண்டு சாப்பிடுங்கள்

மார்பக புற்றுநோயா? கோதுமை, முட்டைகோஸ் சாப்பிடுங்கள்

நுரையீரல் புற்றுநோயா? கரும் பச்சை மற்றும் ஆரன்சு நிறம்

காய்கறிகளை சாப்பிடுங்கள்வயிற்று புண்ணா? முட்டைகோஸ் சாப்பிடுங்கள்

வயிற்று போக்கா? ஆப்பிளை சுட்டு சாப்பிடவும்இரத்த கொதிப்பா? ஆலிவ் எண்ணை சாப்பிடுங்கள்

இரத்த சர்க்கரை ஏற்ற இற்க்கமா? BROCCOLI AND வேர்க்கடலை சாப்பிடுங்கள்

மனநிம்மதி தேவையா உழைத்துச் சாப்பிடுங்கள்

S.A.ABDUL AZEEZ

Sunday, September 18, 2011

பேரீச்சம் பழம்

பேரீச்சம் பழம்இயற்கையின் கொடையான பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.

இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். இது ஆப்பிரிக்கா, அரபு நாடுகளில் மட்டுமே அதிகம் விளைகின்றது.

வெப்பம் அதிகமுள்ள பாலைவனப் பகுதிகள் இதன் வளர்ச்சிக்கு ஏற்றதாகும். இதற்கேற்ற தட்ப வெப்ப நிலை நம் நாட்டில் இல்லாததால் இங்கு விளைவதில்லை.

இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். அரபு மக்களின் உணவுப் பொருட்களில் இதுவே முக்கிய இடம் பெறுகின்றது.

ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது. சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம் பழம். இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, விட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் விட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.கண்பார்வை தெளிவடைய

 பொதுவாக உலகிலுள்ள குழந்தைகளில் 42 சதவீதம் பேர் கண் பார்வை கோளாறுகளால் பாதிக்கப் பட்டுள்ளனர். விட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும்.

]இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

மெலிந்த குழந்தைகளுக்கு

சில குழந்தைகள் எதைச் சாப்பிட்டாலும் உடல் பெருக்காமல் மெலிந்தே காணப்படுவார்கள். 


பாடசாலைக்குச் சென்று வந்தவுடன் கால் மூட்டுக்களில் வலி ஏற்படுவதாகச் சொல்வார்கள். எவ்வளவுதான் மருந்துகள் கொடுத்தாலும் இவர்கள் குணமாகாமல் இருப்பார்கள்.இதை ஆங்கில மருத்துவரிடம் கொண்டு சென்றால் சாதாரண வலி என்று கூறுவார்கள்.
ஆனால் ஆயுள் வேத மருத்துவர்கள் இப்படிப்பட்ட பிரச்சனை ஏற்பட ஈரல் பாதிப்புக்கு ஒரு காரணம் என்கின்றனர். இந்த பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு பேரீச்சம் பழத்தை தேனுடன் ஊறவைத்து காலை மாலை என இருவேளையும் கொடுத்து வந்தால் குழந்தையின் உடல் தேறி, வலுவுடனும், புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாகவும் காணப்படுவார்கள்.
பெண்களுக்கு

பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது. மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும்.அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.

சளி இருமலுக்கு பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும்.

நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

நரம்பு தளர்ச்சி நீங்கஅதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் படுவார்கள். இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.


* இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும்.
* எலும்புகளை பலப்படுத்தும்.
* இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.
*முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும்.
* புண்கள் ஆறும். மூட்டு வலி நீங்கும்.
* பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் வரவே வராது.


இவ்வாறு சத்துக்கள் நிறைந்த பேரீச்சம் பழத்தை தினமும் உண்டு வந்தால் தீராத நோய்களும் நம்மை விட்டு நீங்கிச் சென்று விடும்.


S.A.ABDUL AZEEZ

Wednesday, September 14, 2011

உனக்காக

உனக்காக!
காதலி
 

கலாவுக்காக


கணிதத்தை


காதலிக்கும்காதலன்


கணபதியின்


காதல்  நிறைவேறியதா !படிக்க காத்திருங்கள்!

நெஞ்சத்தைக் கொள்ளை கொள்ளும்

காதல் காவியம்....
விரைவில்....உங்கள் 

புதுமலரில்............

Sunday, September 11, 2011

காத்திருங்கள் !

உனக்காக !

ஓர்

இளைஞனின்

உண்மைக் காதலைஉருக்கமாகச் சொல்லும்

எழுத்தோவியம்!விரைவில்........உங்கள்
புதுமலரில்.....

கொய்யாப்பழம்

படித்தது ! பயன் உள்ளது !!

கொய்யாப்பழம்

நம் உடலுக்கு வேண்டிய நல்ல சத்துக்கள் தரும் பழங்களில் கொய்யாப்பழம் ஒன்று.

 கொய்யா பச்சைப்பசேலென்ற நிறத்திலும் ஒரு சில வகைகள் மஞ்சள் நிறத்திலும் நல்ல நறுமணத்துடன் கிடைக்கும்.

கொய்யா அனைவருக்கும் பிடிக்கும்.

 கொய்யா மரங்கள் சுமார் 33 அடி உயரம் வரை வளரும் மரங்களாகும்.
 கொய்யாவின் பச்சைப் பசேலென்ற இலைகள் நறுமணத்துடன் காணப்படும் விதையில்லாத கொய்யாப் பழங்களும் உள்ளன.
 உஷ்ணப் பிரதேசங்களில் அதிகமாக விளையும் கொய்யாப்பழங்கள் நல்ல நறுமணம் மற்றும் இனிப்புச் சுவையுடன் சாப்பிடுவதற்கு மிகவும் உகந்தது.
சுவையான கொய்யாப்பழங்களின் மருத்துவ குணங்களைப் பார்ப்போமா!

கொய்யா மரத்தின் வேர்,இலைகள், பட்டை, மற்றும் செங்காய் இவைகளில்  மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன குடல், வயிறு பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றன.

கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன.

கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.

கொய்யா மரத்தின் கிளைகளிலிருந்து தயாரிக்கப்படும் மற்றொரு கஷாயம் குழந்தைகளுக்கு வரும் மாந்தம், இழுப்பு,காக்காய் வலிப்பு போன்ற வியாதிகளுக்கு கொடுக்கப்படுகிறது.


கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

கொய்யாக் காய்களை உணவுப் பொருளாக சமைத்து சாப்பிடுகிறார்கள் கொய்யாக் காய்களை சிறு சிறு துண்டுகளாக்கி வெஜிடபிள் சாலட்டில் சேர்க்கிறார்கள் கொய்யாப் பழத்தின் கூழ், ஜெல்லி என பல்வேறு உணவு பொருட்களாக மாறி மார்க்கட்டில் உலா வருகின்றன.
கொய்யாப்பழத்தைப் பதப்படுத்தி ஐஸ்கிரீம், வேஃபர்ஸ், புட்டிங்ஸ், மில்க்‌ஷேக் இவற்றோடு கலந்தும் விற்கப்படுகிறது சில இடங்களில் கொய்யா ஜுஸ் பாட்டில்களில் அடைத்தும் விற்கிறார்கள்.

 உலர வைக்கப்பட்ட கொய்யாவை பவுடராக்கி, கேக், புட்டிங்ஸ், ஐஸ்கிரீம், ஜாம், சட்னி போன்ற உணவுப் பொருட்களில் கலந்து விற்கிறார்கள்.
 இவ்வளவு அருமை பெருமையை பெற்ற கொய்யாப்பழம் மூலம் ஜாம் எப்படி செய்வது என்கிற ரெஸிபி உங்களுக்கு போனஸாக தரப்படுகிறது.தேவையான பொருட்கள் : நன்கு முற்றிய 10 அல்லது 12 கொய்யாப்பழங்கள், சர்க்கரை 750 கிராம், சிவப்பு நிற கலர்ப்பவுடர் 1 டேபிள்ஸ்பூன் தேவையான அளவு தண்ணீர்.செய்முறை: 10,12 எண்ணிக்கையுள்ள கொய்யாப் பழங்களை நல்ல தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும் பிறகு அவைகளை சிறு சிறு துண்டுகளாக்கி பின்பு அதிலுள்ள விதைகளை நீக்கி விடவேண்டும் ஒரு பாத்திரத்தில் நல்ல தண்ணீரை தேவையான அளவுக்கு (சுமார் 1 அல்லது ½ டம்ளர் ) நன்கு சூடு படுத்த வேண்டும் நன்கு கொதித்த நீரில் சேர்ந்து பேஸ்ட் போன்ற பதத்துக்கு வரும். மேலும் தண்ணீர் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். இப்போது சர்க்கரையை (சுமார் கால் கிலோ )சேர்த்து கிளற வேண்டும் இப்போது குறைவான தீ கொடுத்து பாத்திரத்திலுள்ள கொய்யா சர்க்கரை போன்றவை ஜாம் போன்ற பாகு பதம் வரும் வரை கிளற வேண்டும்.

 பிறகு பதம் வந்த ஜாமுடன் ரெட் கலர் பவுடரைத் தூவி கலக்க வேண்டும் கலக்க கலக்க ஒரு சுகந்தமான நறுமணம் வருவதை உணர்வீர்கள் இவ்வாறு தயாரித்து முடித்த சிவப்பு நிற கொய்யா ஜாமை குளிமைப்படுத்தி சப்பாத்தி பிரட் போன்ற உணவுப் பொருட்களுடன் கலந்து சாப்பிடலாம்.

 இதன் ருசியைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை.

S.A.ABDUL AZEEZ

Sunday, September 4, 2011

வவ்வால்

ழிக்கப்பட்டு வரும் வ்வால் இனம் :

காசநோய் உள்ளிட்ட பல நோய்களின் மருந்துக்காக வேட்டையாடப்படும்  வவ்வால் இனம்.  

காவல்துறையின் கண்களில் மிளகாய் பொடியை தூவி விட்டு சமூக விரோதிகள் நடத்ததும் அட்டூழியம். 

நெல்லை மாவட்டத்தில் அரங்கேற்றப்படும் கொடுச் செயலை, கண்டும் காணாமல் இருக்கும் வனவிலங்கு பாதுகாப்புத்துறை. 

_______________________________________________________

இறைவனால் படைக்கப்பட்ட அதிசய பாலூட்டிகளில்,  பெரும்பாலான இனங்கள் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு வருகின்றன. 

ஒரு லட்சம் பாலூட்டி இனங்களில்,  தற்போது 4 ஆயிரம் பாலூட்டிகள் மட்டுமே, உலகத்தில் இருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.  

இவற்றின் எண்ணிக்கை மேலும் மிக வேகமாக குறைந்து வருகிறது.

இதே நிலை தொடர்ந்தால், உயிரியல் கண்காட்சிகளில் மட்டுமே இனி பாலூட்டி இனங்களை காணக்கூடிய நிலை ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் அறிவியல் ஆய்வாளர்கள்.  

பாலூட்டிகளில்,  நான்கில் ஒரு பகுதியைக் கொண்டது வவ்வால் இனம். 

பல அதிசய தன்மைகளை தன்னகத்தே கொண்ட வாவ்வால் இனம், தங்களது உடல் எடையைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக உண்ணக் கூடியவை. 

வவ்வால்களில் 951 இனங்கள் இருப்பதாக ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது. 

ஒரு சமுதாயமாக வாழும் வவ்வால் இனம், ஆண்டு முழுவதும் உணவுத் தட்டுபாடின்றி கிடைக்கக் கூடிய இடங்களை தேர்வு செய்து வாழும் தன்மை கொண்டவை. 

உலகின் அனைத்து பகுதிகளிலும் வவ்வால்கள் காணப்பட்டாலும், அதிக வெப்பம் மிகுந்த நாடுகளில்தான் இவை பொதுவாக காணப்படுகின்றன. 

மரங்களின் கிளைகளில் தலை கீழாக தொங்கிக் கொண்டு, அதிசயமாக வாழும் வவ்வால் இனம், ஒரு ஆச்சரியமான பாலூட்டி. 

இப்படி பல அதிசயங்களை தன்னகத்தே கொண்ட வவ்வால் இனம் மனிதர்களால் தற்போது வேட்டையாடப்பட்டு அழிக்கப்பட்டு வருகிறது.

காசநோய், ஆஸ்துமா உள்ளிட்ட பல நோய்களுக்கு, வவ்வால்கள் மூலம் தீர்வு கிடைப்பதாக நம்பப்படுகிறது. 

இதனால், தமிழகத்தின் பல பகுதிகளில் அதிசயமாக காட்சி அளிக்கும் வவ்வால்கள், துப்பாக்கித் தோட்டாக்களுக்கு இரையாகி வருகின்றன. 

நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றுப் பகுதிகளில் காணப்படும் வவ்வால் இனம், மெல்ல மெல்ல அழிந்து வருவது,  வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

இதே நிலை தொடர்ந்தால், இன்னும் சில ஆண்டுகளில், தமிழகத்தில் வவ்வால் இனமே இல்லாத நிலை உருவாகிவிடும். 

இளம் தலைமுறையினருக்கு வவ்வால்கள் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்காமல் போய்விடும். 

அதிசய பாலூட்டி இனமான வவ்வால் குறித்தும், நெல்லை மாவட்டத்தில் அது அழிவின் விளிம்பில் இருப்பது குறித்தும் இப்போது பார்க்கலாம். 
_______________________________________________________
திருநெல்வேலி மாவட்டம் குறுக்குத்துறை அருகேயுள்ள சாலைப் பகுதிகளில் அழகாக காட்சியளிக்கின்றன ஏராளமான மருத மரங்கள்.

அழகாக காட்சி அளிக்கும் இந்த மருத மரங்களின் கிளைகளில், தலைக்கீழாக தொங்கிக் கொண்டிருக்கின்றன ஆயிரக்கணக்கான கருமை நிற வவ்வால்கள். 
இப்படி, ஸ்ரீவைகுண்டம் ஆற்றுப்பகுதியில் இருக்கும் மருதமரங்களில் தொங்கிக் கொண்டிருக்கும் வல்வால்களை காணும்போது மனத்தில் ஒரு மிரட்சி இயற்கையாகவே ஏற்பட்டு விடுகிறது. 

பாலூட்டி இனங்களில் மிகப் பழமையான இனம் இந்த வவ்வால். 

பார்ப்பதற்கு சிறிய பூனைக்குட்டி போன்று காட்சி அளிக்கும் வவ்வால்,  மிக அமைதியான சுவாபம் கொண்டது. 

வவ்வால்களுக்கு பகலில் கண் பார்வை அவ்வளவாக தெரியாது என்பதால், இரவு நேரங்களில் மட்டுமே, இரையை தேடிக் கொள்ளும் தன்மை கொண்டது. 

இரவு நேரத்தில் இரையை தேடி விட்டு, பகல் நேரங்களில் மருதமரங்களின் கிளைகளில் தொங்கிக் கொண்டு, குட்டித் தூக்கம் போடுகின்றன இந்த வவ்வால்கள். 

மருதமரத்தின் கிளைகளில் வாழும் வவ்வால்கள் பார்ப்பதற்கு கருமையாக இருந்தாலும், மிகப் பெரிய ஆற்றல்களை தன்னுள் கொண்டுள்ளன. 

வவ்வால்களின் இறக்கை,  மழைக்கு குடை விரித்தது போன்று இருக்கும். 

தலைக் கீழாகவே தொங்கிக் கொண்டு உறங்கும் தன்மை கொண்டது வவ்வால். 

மரங்களின் கிளைகளில் தலைக் கீழாக தொங்கிக் கொண்டிருந்தாலும், மற்ற பாலூட்டிகளை காட்டிலும் வேறுபட்ட தன்மையை கொண்டவை வவ்வால். 

தலைக்கீழாக தொங்குவதால் எந்தவிதமான சக்தி இழப்பும் வவ்வாலுக்கு ஏற்படுவதில்லை. 

இப்படி பல விசித்தரங்களை கொண்ட வவ்வால், மிக வேகமாக பறக்கக் கூடிய ஆற்றல் கொண்டது. 

இரையை தேடும் போது ஜெட் வேகத்தில் பறக்கும் வவ்வால்கள், எதிலும் மோதி விடக்கூடாது என்பதற்காக, ஒரு வித எதிரொலியை எழுப்பும். 

இன்றைய நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஒன்றான ரேடாரின் இயக்கத்தை ஒத்த ஒரு உத்தியை வவ்வால் தனது இரையை தேடும்போது கையாளுகிறது.

எதிரொலியின் மூலம் இரையை பிடிக்கும் அதிசயமான ஆற்றல் கொண்டது வவ்வால்.  

மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் ஆற்றல் கொண்ட வவ்வால், ஆண்டு முழுவதும் ஒரே மரத்தில் தங்கியும் விடுகின்றன. 

பகல் பொழுதை ஓய்விற்கும் இரவு பொழுதை தங்களது வாழ்க்கைத் தேவைக்கும் பயன்படுத்துகின்றன வவ்வால்கள். 

அந்திப் பொழுது முதல் வைகறைப் பொழுது வரை மிகச் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவை வவ்வால் இனம். 

இரவில் மட்டும் இயங்கக் கூடிய உயிரினங்களில் வவ்வாலும் ஒன்று. 

இரவில் நன்கு பார்க்கக்கூடிய கண் அமைப்பு வவ்வாலுக்கு இறைவன் அளித்துள்ளான். 

தூரக் கடல் தீவுகளில் வசிக்கக்கூடிய சில வவ்வால்கள் மட்டுமே, பகல் பொழுதில் தங்களது இரையை தேடுகின்றன. 

கதைகளிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் தீய சக்திக்கும் சாத்தானிய சக்திக்கும் , வவ்வால்கள் உதாரணமாக கூறப்படுகின்றன. 

ஆனால், உண்மையில் வவ்வால்கள் மனிதர்களுக்கு பல விதங்களில் சேவை ஆற்றி வருகின்றன. 

ஆம். 

மனிதர்களுக்கு ஊறுவிளைவிக்கும் பூச்சி, கொசு, வண்டு, ஈக்கள் ஆகியவற்றை தங்களது முக்கிய உணவாக உட்கொள்கின்றன வவ்வால்கள்.


சில வவ்வால்கள் ஒரு மணி நேரத்தில் 600 கொசுக்களை பிடித்து திண்ணும் ஆற்றல் கொண்டவை. 

இதனால், பல வித நோய்கள் தாக்கப்படுவதில் இருந்து மனிதன் தப்பித்துக் கொள்கின்றான். 

பல நாடுகள் கொசுகளை அழித்து மனித இனத்தை நோய்களில் இருந்து காப்பாற்ற தங்களது பட்ஜெட்டில் கோடிக்கணக்கான நிதியை ஒதுக்கி வருகின்றன. 

ஆனால், வவ்வாலோ எந்த கட்டணமும் இன்றி , கொசுக்களை வேட்டையாடி மனித இனத்தை நோய்களில் இருந்து காப்பாற்றி வருகிறது. 

 இப்படி மனித குலத்திற்கு வவ்வால்கள் ஆற்றி வரும்  தொண்டினை  வார்த்தைகளால் விவரிக்க முடியாது. 

இது மட்டுமல்ல, வவ்வால்களின் கழிவுகளில் மிக அதிக அளவுக்கு நெட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் உள்ளதால், மிகச் சிறந்த உரமாக அது கருதப்படுகிறது. 

பல நாடுகளில்,  வவ்வால்களின் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, விவசாயத்திற்கு தேவையான மிக உயர்ந்த உரம் தயாரிக்கப்படுகிறது. 

வவ்வால்களின் வாயில் இருந்து சுரக்கும் உமிழ் நீரில் இருந்து,  மனிதர்களுக்கு ஏற்படும் இதய சம்பந்தமான நோய்களுக்கு அருமருந்து தயாரிக்கப்படுகிறது. 

மூளைக்கு செல்லும் இரத்தம் தடைப்படுவதை தடுக்கவும், காயங்களில் இருந்து வெளியேறும் இரத்தத்தை விரைவில் உறைய வைக்கவும் இந்த மருந்து பயன் அளிக்கிறது. 

இது மட்டுமல்ல, காசநோய், ஆஸ்துமா உள்ளிட்ட பல நோய்களுக்கு வவ்வால்கள் மூலம் தீர்வுகள் கிடைக்கின்றன. 


இதனால்தான், ஸ்ரீவைக்குண்டம் பகுதியில் மருதமரக்கிளைகளில் வாழும் வவ்வால்கள் தற்போது சமூக விரோதிகளால் வேட்டையாடப்பட்டு வருகின்றன.

நரிக்குறவர் இன மக்களை பயன்படுத்தி, சில சமூக விரோதிகள் வவ்வால்களை தங்களது துப்பாக்கிகளின் தோட்டாக்களுக்கு இரையாக்குகின்றனர். 

இதனால், நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கில் வாழ்ந்து வந்த வவ்வால் இனம் தற்போது, மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. 

நெல்லை மாவட்டத்தில் மட்டுமல்ல, தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் வவ்வால்கள் வேட்டையாடப்பட்டு வருவது தொடர்கதையாகியுள்ளது. 

அதிசய பாலூட்டி இனமான வவ்வால் அழிக்கப்பட்டு வருவதை தமிழக அரசின் வன விலங்கு பாதுகாப்புத்துறை ஏனோ கண்டும் காணாமல் இருந்து வருகிறது. 

இதனால்தான், காவல்துறையின் கண்களில் மிளகாய் பொடியை தூவி விட்டு,  சமூக விரோத கும்பல், வவ்வால் இனத்தை வேட்டையாடி, கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்து வருகிறது. 

இதனால், நெல்லை மாவட்ட மருதமரக்கிளைகளில் ஆயிரக்கணக்கில் தொங்கிக் கொண்டிருந்த வவ்வால்களின் எண்ணிக்கை தற்போது நூறு என்ற அளவுக்கு குறைந்துள்ளது. 

வனவிலங்குகளை வேட்டையாடுவதைத் தடுக்க நாட்டில் பல சட்டங்கள் இருக்கின்றன. 

7 ஆண்டுகள் சிறைத்தண்டனை. 

30 ஆயிரம் ரூபாய் அபராதம். 

இப்படி, பல கடுமையான தண்டனைகள் வழங்கச் சட்டத்தில் இடம் இருந்தாலும், ஏனோ,  வனவிலங்குகள் வேட்டையாடப்படுவது மட்டும் நிறுத்தப்படவில்லை.

நெல்லை மாவட்டத்தில் வவ்வால்கள் இனம் அழிக்கப்பட்டு வருவதே,   இதற்கு ஒரு நல்ல உதாரணம்.

தடை செய்யப்பட்ட விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை வேட்டையாடுவது மிகப் பெரிய குற்றம். 

ஆனால், தற்போது இவையெல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. 

சட்டத்தை யாருமே மதிப்பதில்லை. 

பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படும், சமூக விரோத கும்பல், மனசாட்சி இல்லாமல், வவ்வால் இனத்தை கூண்டோடு அழிக்கும் செயலில் தீவிரமாக இறங்கியுள்ளது. 

இப்படி, ஈவு இரக்கம் இன்றி,  வவ்வால்களை வேட்டையாடும் நபர்களை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். 

அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். 

வவ்வால்களால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. 

மாறாக,  வவ்வால்களால் மனித இனத்திற்கு பல நன்மைகள்தான் கிடைத்து வருகின்றன. 

இப்படி, மனித சமுதாயத்திற்கு அளப்பரிய சேவையை ஆற்றிக் கொண்டிருக்கும் வவ்வால் இனத்தை காப்பற்ற அரசு துணிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

வவ்வால்கள் அழிக்கப்படுவதை தடுக்க வேண்டிய பொறுப்பு தமிழகஅரசின் கைகளில்தான் உள்ளது. 

அரசு இனியும் மவுனம் கடைப்பிடித்தால், வவ்வால் இனம் குறித்து எதிர்காலத்தில் கதைகளில் மட்டும்தான் தமிழக இளைஞர்கள்,அறிந்துக் கொள்ளக்கூடிய ஒரு அவல நிலை உருவாகிவிடும். 

இதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதுதான் வனவிலங்கு ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு. S.A.ABDUL AZEEZ