Thursday, November 26, 2015

சபாஷ் நிதிஷ் குமார்...!

வாழ்க நிதிஷ் குமார்...!


பீகார் மாநிலத்தில் வரும் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மது விற்பனைக்கு தடை என அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

இந்த செய்தி உண்மையிலேயே பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்டதால்தான் நிதிஷ் குமாரை ஐந்தாவது முறையாக முதலமைச்சர் பதவியில் அமர்த்தி பீகார் மக்கள் அழகு பார்க்கிறார்கள்.

அதற்கு உடனடியாக பலன் கிடைத்துள்ளது.

பக்கத்து மாநிலங்களில் மது விற்கிறார்கள்.

அதனால் பீகாரில் மது விற்பனைக்கு தடை விதிக்க முடியாது என்ற சப்பை காரணங்களை நிதிஷ் கூறவில்லை.

தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி பீகாரில் மது விலக்கு அமல்படுத்த துணிந்து முடிவு எடுத்து அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டு விட்டார்.
'
மக்கள் நலனில் குறிப்பாக பெண்கள், குழந்தைகள் ஆகியோரின் நலனில் அதிக அக்கறை கொண்ட நிதிஷ் குமார் வாழ்க பல்லாண்டு.

அவரது மக்கள் நலப்பணிகள் மேலும் சிறக்கட்டும்

மது கொள்கையில் கேரளா, பீகார் மாநிலங்கள் எடுத்த முடிவை போன்று தமிழகமும் விரைவில் நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

இதுதான் அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பு.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் நல்ல முடிவை எடுத்து மதுவால் தள்ளாடும் தமிழகத்தை காப்பற்ற வேண்டும்.

எஸ் ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

தெறி......!

தெறி......!


தமிழக காட்சி ஊடகத்துறையின் (Visual Media) மிகப் பெரிய ஆளுமை ஹரி கிருஷ்ணன்.

அவர் ஒரு துடிப்பான இளம் பத்திரிகையாளர்.

சன் டி.வி.யில் ஹரிருடன் இணைந்து பணிபுரிந்தபோது,கிருஷ்ணனின் திறமையை பலமுறை நேரில் கண்டு வியந்து இருக்கிறேன்.

ஒரு செய்தியை எப்படி மிக வேகமாக கொடுக்க வேண்டும் என்பதில் கில்லாடி அவர்.

டி.வி.யில் செய்தி ஓடிக் கொண்டே இருக்கும்போது, புதிய செய்தி ஒன்றை சேர்க்க ஹரி மிக துடிப்புடனும், வேகத்துடனும் செயல்படுவார்.

எப்படியும் அந்த புதிய செய்தியை கொணடு வந்துவிடுவார். .

இப்படி, பல திறமைகளை கொண்டு மிக வேகத்துடன் இயங்கும் ஹரி கிருஷ்ணன், ஒரு தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் பொறுப்புக்கு மிகவும் தகுதியானவர் என்பதில் எந்தவித சந்தேகமும்இல்லை.

ஆனால்,

இன்றோ, தமிழக ஊடகத்துறையில் நிலைமை வேறு விதமாக உள்ளது.

சில டம்மி டப்பாசுகள், தலைமை பொறுப்புக்கு வந்துவிட்டு ஆட்டம் போடுகிறார்கள்.

டி.வி.யில் செய்தியை வாசித்துவிட்டால் போதும் அவர்தான் எல்லாமே என்ற தவறான கருத்து மற்றும் நினைப்பு சில ஊடக முதலாளிகளுக்கு இருப்பதே இதற்கு காரணம் எனலாம்.

செய்தியை எப்படி கொடுக்க வேண்டும், எந்த நேரத்தில் எந்த செய்தியை கொடுக்க வேண்டும் என்பன போன்ற அடிப்படை விவரங்கள் எதையும் அறியாமல், அனுபவம் இல்லாமல் சில அரை வேக்காடுகள் தொலைக்காட்சி நிறுவனங்களில் தற்போது ஆட்டம் போட்டு வருகின்றன.

இதுபோன்ற காரணங்களால் ஹரி கிருஷ்ணன் போன்ற திறமை மிக்க பலர் வாய்ப்புகளை இழந்து விடுகின்றனர்.

அல்லது வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன.

எனினும் ஊடகத்துறையில் ஹரி கிருஷ்ணன் நிச்சயம் சாதிப்பார்.

சன் டி.வி.யில் பணிபுரிந்தபோது, அவருடன் ஏற்பட்ட நட்பு, பழகிய நாட்கள் என்றும் மறக்க முடியாதவை.

இந்த நட்பு நம் இருவருக்கு இடையே இன்னும் தொடர்கிறது.

சிறந்த ஊடக பண்பாளர் ஹரி கிருஷ்ணனுக்கு இன்று பிறந்த நாள்.

இந்த இனிய நாளில் எங்கள் தங்கள் ஹரி கிருஷ்ணனுக்கு இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நல்ல உடல் நலத்துடனும், நல்ல வளத்துடனும், நல்ல மன ஆரோக்கியத்துடனும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

ஹரி கிருஷ்ணனின் திறமைகள் இனி தெறி போல மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

இத்தனை நிபந்தனைகளா....!

சுதந்திர போராட்ட தியாகி திப்பு சுல்தான் பிறந்த நாளுக்கு இத்தனை நிபந்தனைகளா....!


வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில், மைசூர் வேங்கை மாவீரன் திப்பு சுல்தான் பிறந்த நாளை கொண்டாட போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.

இதை எதிர்த்து தமிழக மக்கள் ஜனநயாக கட்சியின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்த போலீசார் 17 நிபந்தனைகளின் பேரில் விழா நடத்த அனுமதி வழங்கலாம் என தெரிவித்து இருந்தனர்.

அவை,

திப்பு சுல்தானின் வரலாறு, தியாகம் தவிர வேறு எதையும் விழாவில் பேசக்கூடாது.

மற்ற மதம், சாதிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய கைப்பிரதிகளை வெளியிடக்கூடாது. பேசவும் கூடாது.

தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கிப் பேசக்கூடாது.

அரசையோ, அரசின் கொள்கைகளையோ எதிர்த்து உரையாற்றக்கூடாது.

சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் போலீசின் அறிவுரையைக் கேட்டு உடனடியாக விழாவை மனுதாரர் நிறுத்திவிட வேண்டும்.

கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துக் கொள்ளக் கூடாது.

நகரத்துக்கு உள்ளேயும், வெளியேயும் வாடகை வாகனங்களில் வரக்கூடாது.

மின்சார வாரியம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும்.

கலசார நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது.

தனிப்பட்ட காரணங்களுக்காக விழாவை மனுதாரர் நிறுத்தினால் மற்றொரு நாளில் விழாவிற்கான அனுமதியை கோரக்கூடாது.

பட்டாசு கொளுத்க்கூடாது.

போக்குவரத்து பொது அமைதியைக் கெடுக்காமல் கூட்டத்தை நடத்த வேண்டும்.

ஊர்வலம் கூடாது.

பாக்ஸ் போன்ற ஒலிபெருக்கிகளை வைக்கக்கூடாது.

போலீஸ் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியுடன் பிளக்ஸ் போர்டு, கொடிகள் கட்டப்பட வேண்டும்.

விழா முடிந்த ஒரு மணி நேரத்தில் அவை அகற்றப்பட வேண்டும்.

தகாத சம்பவம் நடந்துவிட்டால் அதனால் பொதுச்சொத்துக்கு ஏற்படும் இழப்புகள் அனைத்துக்கும் மனுதாரரே பொறுப்பு ஏற்க வேண்டும்.

இப்படி பல நிபந்தனைகளை தமிழக போலீசார் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

ஆக ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது.

முதல் சுதந்திர போராட்ட தியாகி, மாவீரன் திப்பு சுல்தானின் பிறந்த நாள் விழாவை, மக்கள் கொண்டாடுவதை அரசு விரும்பவில்லை என்பது புரிகிறது.

இந்த வேதனையை, கொடுமையை யாரிடம் போய் சொல்வது....?

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ
பத்திரிகையாளர்.

மீண்டும் அடி....!

மோடிக்கு மீண்டும் அடி....!


பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வி.

உத்தரப் பிரதேச மாநில உள்ளாட்சித் தேர்தலில் கடும் பின்னடைவு.

இதைத் தொடர்ந்து மத்திய பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் அண்மையில் நடந்த இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் வலிமையான கட்சியாகவும் ஆளும் கட்சியாகவும் இருந்து வரும் பாஜகவிற்கு இந்த தோல்வி ஏற்பட்டு இருக்கிறது.

அங்குள்ள ரட்லம் மக்களவை தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் கந்திலால் பூரியா வெற்றி பெற்றுள்ளார்.

இதேபோன்று, தெலுங்கானா மாநிலம் வாராங்கல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலிலும் பாஜக தோல்வி அடைந்துள்ளது.

இந்த தொகுதியில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி வேட்பாளர் தயாகர் வெற்றி பெற்றுள்ளார்.

ஆக, பிரதமர் மோடியின் செல்வாக்கு நாடு முழுவதும் மிக வேகமாக சரிந்து வருவது இதன்மூலம் உறுதியாகிறது.

உலகம் சுற்றும் வாலிபனாக சுற்றிவரும் பிரதமர் மோடி, இனி உள்நாட்டில் வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தினால் நல்லது.

இல்லையென்றால், மக்கள் தொடர்ந்து பாடம் புகுத்திக் கொண்டே இருப்பார்கள்.

இதுதான் தற்போது நடந்து முடிந்த தேர்தல்கள் தரும் படிப்பினை.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

Tuesday, November 24, 2015

கழகங்களின் மீது வெறுப்பு...!

கழகங்களின் மீது வெறுப்பு...!


தமிழகத்தில் தொடர்ந்து கொட்டிவரும் கனமழை, ஒரு உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

அது, திமுக, அதிமுக ஆகிய இரண்டு கழக ஆட்சிகளின் நிர்வாக சீர்கேட்டால் தமிழகம் பாழாய் போனதாக மக்கள் தற்போது நன்றாக உணர்கிறார்கள்.

கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளும் அதிமுக மீது குற்றம் சுமத்தும் மக்கள், திமுகவிற்கும் இதில் பங்கு உண்டு என பேசிக்கொள்கின்றனர்.

தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்த கழகங்கள் மாநிலத்தை உண்மையான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவில்லை என்பது அனைத்து தரப்பு மக்களின் கருத்தாக இருக்கிறது.

சுயநலம், அரசியல் லாபம் உள்ளிட்ட பல காரணங்களால் திமுகவும் அதிமுகவும் தமிழகத்தை வஞ்சித்து விட்டன என்பது மக்களின் குற்றச்சாட்டு.


இரு கழகங்களின் ஆட்சியின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை போய்விட்டது.

கோபம் அதிகமாக உள்ளது.

எனவே மாற்று அரசியல் சக்தியை தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆனால் தமிழகத்தின் சாபகேடோ என்னவோ தெரியவில்லை, மாநிலத்தில் வலுவான அரசியல் சக்தி இன்னும் உருவாகவே இல்லை.

அனைத்து அரசியல் கட்சிகளும் கழகங்களின் ஆட்சிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினாலும் அவர்களிடையே நல்ல புரிந்துணர்வு, ஒற்றுமை அறவே இல்லை.

எல்லோரும் அமைச்சர் பதவி மீதே குறியாக இருக்கிறார்கள்.

எனவே கழகங்களைத் தவிர பிற கட்சிகள் ஆட்டம் கண்டு வருகின்றன.

இதனால் வேறு வழியில்லாமல் திமுக, அதிமுகவை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்த்த வேண்டிய கட்டாயம் மக்களுக்கு மறுபடியும் ஏற்பட்டுள்ளது.

சரி, ஆளும் அதிமுகவை அகற்றி விட்டு திமுகவிற்கு வாய்ப்பு அளித்தால் என்ன நடக்கும்.


மீண்டும் அனைத்து துறைகளிலும் திமுக தலைமையின் குடும்ப ஆதிக்கம் மேலோங்கும்.

சினிமா, ரியல் ஸ்டேட், ஊடகம் என பல்வேறு முக்கிய துறைகளில் குறிப்பிட்ட ஒரு குடும்பம் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும்.

மாநிலம் முழுவதும் திமுக கவுன்சிலர்கள் மீண்டும் தங்களது அட்டகாசங்களை ஆரம்பித்து விடுவார்கள்.

சென்னை சங்கமம் விழா மீண்டும் களைக் கட்டிவிடும்.

வாக்குறுதி அளித்தப்படி மாநிலத்தில் மது விலக்கை அமல்படுத்துவார்களா என்பது சந்தேகம்தான்.

சரி, அதிமுகவிற்கு மீண்டும் வாய்ப்பு அளித்தால் என்னவாகும், தமிழகத்தில் துதி பாடும் கூட்டம் அதிகரிக்கும்.

பழைய பாணிலேயே தமிழகம் நடைபோடும்.

இதுதான் நடக்கும்.

ஆக, வலிமையான மாற்று சக்தி உருவாகாத நிலையில் திமுகவா அதிமுகவா என்ற கேள்வியே மக்கள் முன் தற்போது நிற்கிறது.

இப்படிப்பட்ட சூழலில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாத அரசை தேர்ந்தெடுப்பதுதான் தமிழகத்திற்கு நல்லதாக இருக்கும்.

இதைத்தான் வரும் சட்டப்பேரவை தேர்தலில் தமிழக மக்கள் செய்வார்கள் என்பது நமது கணிப்பு.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

மெண்டல் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆக ஆசையா....!

கீழ்பாக்கம் மெண்டல் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆக உங்களுக்கு ஆசையா....!


சென்னை கோடம்பாக்கம் ஏரியாவில் சினிமா ஆசையில் நிறைய பேர் அரை லூஸ் தனமாக சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள் என கேள்விப்பட்டு இருக்கிறேன்.

முதலில் அதை நான் நம்பவில்லை.

ஆனால் டம்மி டப்பாசு என்ற திரைப்படத்தைப் பார்த்த பிறகு எனக்கு நம்பிக்கை வந்து விட்டது.

உங்களுக்கு பைத்தியம் பிடித்து கீழ்பாக்கம் மெண்டல் ஆஸ்பத்திரியில் சேர வேண்டும் என்ற ஆசை இருந்தால் இந்த படத்தை நிச்சயம் பாருங்கள்.

நிச்சயமாக கீழ்பாக்கம் மருத்துவமனையில் சேர்ந்து விடுவீர்கள்.

இந்த படத்தின் இயக்குநர் பக்கா அரை லூசாக இருப்பார் என தெரிகிறது.

அதை படம் முழுவதும் வெளிப்படுத்தியுள்ளார்.

சரி, இந்த திரைப்படம் எப்போ வந்தது.

எந்த திரையரங்குகளில் ஓடியது.

என்ற விவரம் யாருக்கும் தெரியாது.

அனேகமாக ஒரு காட்சி கூட ஓடி இருக்காது.

பின்னே என்ன சார், லூசு தனமா ஒரு படத்தை எடுத்தால் யார் தான் பார்ப்பார்கள்.

டம்மி டப்பாசு படத்தின் இயக்குநர் ஓ.எஸ்.ரவி, உங்கள் பார்வையில் கிடைத்தால் எனக்கு சொல்லுங்கள்.
தகவல் தாருங்கள்.

நாலு சாத்து சாத்தலாம்.

நீங்களும் என்னுடன் சேர்ந்து அந்த அரை லூசு இயக்குநரை பின்னி பெடல் எடுங்க.

உலக சினிமா பல்வேறு பரிமாணங்களை கடந்து ராக்கெட் வேகத்தில் சென்றுக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில், இப்படி அரை லூசு தனமாக படம் எடுப்பவர்களை சாத்துவதில் ஒன்றுமே தவறில்லை.

தப்பி தவறி இதுபோன்ற திரைப்படங்களை பார்த்து விடாதீர்கள்.

அப்படி பார்த்து விட்டால் மெண்டல் ஆஸ்பத்திரியில் உங்களுக்கு சீட் கன்பெர்ம்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

சமூக அக்கறை....!

சமூக அக்கறை....!


தமிழகம் உட்பட நாடு முழுவதும் தற்போது கல்வி வணிக மயமாகிவிட்டது.

காசு, பணம், துட்டு கொடு கல்வியை பெற்றுக் கொள் என்கின்றனர் கல்வி நிறுவன அதிபர்கள்.

சரி, பணத்தை பெற்றுக் கொண்டு கல்வியை அளிக்கும் இந்த கல்வி வணிகர்கள், படிப்பு முடிந்ததும் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பை அளிக்க முயற்சி செய்கிறார்களா என்றால் நிச்சயம் இல்லை என்றே கூறலாம்.

ஒருசில கல்வி நிறுவனங்கள் பெயரளவில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்துகின்றன.

அவ்வளவுதான்.

அதில் எத்தனை பேருக்கு வேலை கிடைத்து அவர்கள் வாழ்க்கையில் நிறைவு அடைகிறார்கள் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்நிலையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றை அண்மையில் பார்க்கக்கூடிய வாய்ப்பு கிட்டியது.

அதில் தாம் நடத்தும் இசை கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியரின் ஒழுக்கம் மற்றும் நல்ல பண்புகள் குறித்து அக்கறையுடன் பேசிய ரஹ்மான், தமது இசைக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு எப்படி வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதுதான் தமது கவலை என்றும் தெரிவித்தார்.

இசைத் துறையில் ஆர்வம் செலுத்தும் மாணவர்களுக்கு பிற துறைகளில் கிடைக்கும் வேலைவாய்ப்புகளை போன்று கிடைப்பதில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.

எனவே தமது இசை கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் வாழ்க்கைக்கு தேவையான வருமானத்தை ஈட்ட வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் அதற்கான முயற்சிகளில் தாம் கடுமையாக ஈடுபட்டு இருப்பதாகவும் ரஹ்மான் கூறினார்.

தமது கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை நலனில் என்ன ஒரு அக்கறை இசைப்புயலுக்கு.

உண்மையிலேயே ஏ.ஆர்.ரஹ்மானின் சமூக அக்கறையை நாம் பாராட்டதான் வேண்டும்.

கல்வி நிறுவங்களை நடத்தி பணத்தை கொள்ளை அடிக்கும் கல்வி வணிகர்கள் மத்தியில் ஏ.ஆர.ரஹ்மான் ஒரு வித்தியாசமான மனிதர்தான்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

ஒருநாள் இரவில்.....!

ஒருநாள் இரவில்.....!


மலையாள படம் ஷட்டரின் தழுவல்தான் இந்த ஒருநாள் இரவில் திரைப்படம்.

தனது மகளின் காதல் அதனால் ஏற்படும் மன அழுத்தம், உடனே மகளின் திருமணத்திற்கு ஏற்பாடு, அதற்கு மனைவி மகள் எதிர்ப்பு என பல்வேறு பிரச்சினைகளால் தவிக்கும் சத்யராஜ், தமக்கு சொந்தமான ஷட்டரில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துகிறார்.

பிறகு அங்கிருந்து ஆட்டோவில் கிளம்பும்போது பஸ் ஸ்டாப்பில் நிற்கும் பெண் ஒருவரை பார்த்து சபலம் அடைகிறார்.

பின்னர் ஆட்டோ டிரைவரின் உதவியுடன் அந்தப் பெண்ணை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு லாட்ஜ்க்கு செல்கிறார்.

அங்கு அறை கிடைக்காமல் மீண்டும் தனது ஷட்டருக்கு வந்து அந்த பெண்ணுடன் சேர்ந்து மாட்டிக்கொண்டு வெளியே வராமல் எப்படி தவியாய் தவிக்கிறார் என்பதுதான் ஒருநாள் இரவில் படத்தின் கதை.

சும்மா சொல்லக்கூடாது சத்யராஜ் உண்மையிலேயே நன்றாகவே நடித்து இருக்கிறார்.

தப்பு செய்துவிட்டதாக நினைத்து அவர் தவியாய் தவிப்பது இயற்கையாகவே உள்ளது.
நடிப்பதாக தெரியவில்லை.

விபச்சார அழகியாக வரும் அனுமோள் தமது வசீகரமான முகத்துடன் மட்டுமல்லாமல் நடிப்பிலும் இயற்கையாகவே கலக்கி இருக்கிறார்.

யூகி சேது, ஆர்.சுந்தர்ராஜன், ஆட்டோ டிரைவராக வரும் வருண் உள்ளிட்டோரும் தங்களது பாத்திரங்களில் ஊன்றி நடித்துள்ளனர்.

நவீன் ஐயரின் பின்னணி இசை காட்சிகளுக்கு பொருத்தமாக இருப்பதால் படத்தில் சத்யராஜ் படபடப்பு அடையும்போது அது ரசிகர்களையும் தொற்றிக் கொள்கிறது என்றே கூறலாம்.

மனசாட்சிக்கும் குடும்ப மானம் மரியாதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு குடும்ப தலைவன் திடீரென ஏற்படும் சபலத்தால் எப்படி மனவேதனை அடைகிறான் என்பதை இயக்குநர் அந்தோணி மிக அழகாக திரை வடிவத்தில் கொண்டு வந்து இருக்கிறார்.

படத்தில் பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து வரும் வசனம் மனதை தொடுகிறது.

மொத்தத்தில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருக்கும் ஒருநாள் இரவில் திரைப்படம் ரசிகர்களை கவரவே செய்யும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

Friday, November 20, 2015

தீவிரவாதம் - அமைச்சர் கருத்து...!

தீவிரவாத செயல்களை குறிப்பிட்ட ஒரு மதத்துடன் இணைத்து பேசக் கூடாது...!

மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி...!!


முஸ்லிம்கள் உட்பட நாட்டில் இருக்கும் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவதில் வல்லவர் மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி.

இந்தியாவில் உள்ள அனைவரும் ராமனின் பிள்ளைகள் என்று கருத்து தெரிவித்த அவர், இதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம் என கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய சாத்வி நிரஞ்சன் ஜோதி,  உலகம் முழுவதும் தீவிரவாதம் வேகமாக பரவி வருவது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.

அதேநேரத்தில் தீவிரவாத செயல்களை குறிப்பிட்ட ஒரு மதம் மற்றும் ஜாதியுடன் இணைத்து பேசக் கூடாது என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

குறிப்பிட்ட ஒரு மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது உண்மையெனில், பாகிஸ்தானில் அப்பாவி குழந்தைகளை தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்து இருக்க மாட்டார்கள் என்றும் சாத்வி நிரஞ்சன் ஜோதி கூறினார்.

அப்பாடா, ஒரு வழியாக தீவிரவாத செயல்களுக்கு அப்பாவி முஸ்லிம்கள் காரணம் இல்லை என்பதை இப்போதாவது உணர்ந்துக் கொண்ட மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, தீவிரவாத செயல்களை குறிப்பிட்ட ஒரு மதத்துடன் இணைந்து பேசுவது சரியல்ல என தெரிவித்து இருப்பது உண்மையிலேயே மகிழச்சி அளிக்கிறது.

அவரது கருத்துதான் சமூகத்தில் அக்கறை உள்ள அனைவரும் ஏற்கனவே திரும்ப திரும்ப சொல்லி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர். 

சந்தேகம் வேண்டாமே....!

சந்தேகம் வேண்டாமே....!


சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழையால் வெள்ளம் சூழ்ந்து மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

குறிப்பாக சென்னை புறநகர் பகுதி மக்கள் இன்னும் துயரங்களை சுமந்துகொண்டு இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆளும் அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமகா, மதிமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ம.ம.க., ஜமாஅத் யே இஸ்லாமி ஹிந்த், மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள், சமூக அக்கறையுடன் மக்களின் துயரங்களை துடைக்க நேரில் களம் இறங்கி முடிந்த அளவிற்கு நல்ல பணிகளை செய்து வருகின்றன.


மேற்குறிப்பிட்ட கட்சிகளின் தலைவர்கள் அவர்களின் தொண்டர்கள் ஆற்றி வரும் களப்பணிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிச்சயமாக ஓரளவுக்கு ஆறுதலை தந்துக் கொண்டிருக்கிறது.

இதேபோன்று தமிழகத்தில் உள்ள சிறிய சிறிய கட்சிகள் கூட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றன.

இப்படிப்பட்ட நிலையில் இவையெல்லாம் வெறும் நாடகம்.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் விழுந்து அடித்துக்கொண்டு வெள்ளப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக சிலர் கிண்டல் செய்கின்றனர்.

எல்லாமே அரசியல் ஆதாயத்திற்காகதான் என சிலர் விமர்சனம் செய்கின்றனர்.


ஆபத்தான நேரத்தில் ஒருவர் செய்யும் உதவியை நாம் சந்தேக கண்ணோடு நோக்குவது நியாயமா...?

எல்லாவற்றையும் சந்தேகத்தோடு பார்ப்பது, எடுத்துக் கொள்வது சரியல்ல என்பதுதான் எமது கருத்து.

என்ன சரிதானா...!

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

உலகின் முதல் ராக்கெட் ஏவுதளம்...!

உலகின் முதல் ராக்கெட் ஏவுதளம் திப்பு சுல்தானின் ஸ்ரீரங்கப்பட்டணம்....!

விஞ்ஞானி சிவதாணுப் பிள்ளை தகவல்....!!


ஜே.எஸ்.எஸ்.பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் மாநாட்டில் பங்கேற்பதற்காக மைசூருக்கு வந்த விஞ்ஞானி சிவதாணுப் பிள்ளையிடம் மைசூர் வேங்கை மாவீரன் திப்பு சுல்தானின் விஞ்ஞான ஆர்வம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த சிவதாணுபிள்ளை பண்டைய அறிவு மற்றும் அறிவியலுக்கு இந்தியாவின் பங்களிப்பு போற்றக் கூடியது என்றார்.

பல கண்டுபிடிப்புகள் இந்தியாவில் இருந்து தொடங்கியுள்ளது.

முதன்முதலாக இந்தியாவின் ஸ்ரீரங்கப்பட்டணத்தில் இருந்துதான் விண்ணை நோக்கி ராக்கெட் பறந்தது.

அங்குள்ள ராக்கெட் ஏவுதளத்தைப் பார்வையிட்டு 2006-இல் அறிக்கை அளித்தேன்.

அதனடிப்படையில், ஏவுதளத்தை புனரமைக்கும் பணியை ஏஎஸ்ஐ மேற்கொண்டது.

ஆனால், அந்தப் பணி முழுமையாக முடிக்கவில்லை என்றார் அவர்.

முன்னதாக, மாநாட்டில் பேசிய சிவதாணுபிள்ளை, உலகில் முதன்முதலாக ராக்கெட் ஸ்ரீரங்கபட்டணாவில் இருந்துதான் ஏவப்பட்டது.

இதை பெரும்பாலானோர் அறியாமல் இருக்கின்றனர்.

ஆங்கிலேயர்களை வீழ்த்துவதற்காக அவர்களுக்கு எதிரான போரில் திப்பு சுல்தானால் ராக்கெட் பயன்படுத்தப்பட்டது என்றார் விஞ்ஞானி சிவதாணுப் பிள்ளை


ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு உயிரிழந்த மைசூர் வேங்கை மாவீரன் திப்பு சுல்தான் ஆட்சியை குறித்து இதுபோன்ற பல நல்ல தகவல்கள் தொடர்ந்து வெளிவந்துக் கொண்டிருக்கும் நிலையில்,  வேண்டும் என்றே சர்ச்சையை கிளப்பி மோதல்களை வெடிக்கச் செய்து வரும் மரமண்டைகள் இனியாவது திருந்துவார்களா என்பதுதான் நமது கேள்வி.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

Wednesday, November 18, 2015

என்ன உரிமை இருக்கிறது...?

என்ன உரிமை இருக்கிறது...?


சென்னையில் விடாது பெய்த கனமழையால் மாநகரின் அனைத்துப் பகுதிகளும் வெள்ளக் காடாக மாறின.

குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகளில் இன்னும் வெள்ளம் சூழ்ந்து இருப்பதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சந்தித்து வரும் இன்னல்களை சொல்ல முடியாது.

அப்படி ஒரு நரக வேதனையை மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள் மழைக் காலங்களில் வெள்ளக் காடாக மாற யார் காரணம்.

அரசின் நிர்வாக சீர்கேடா அல்லது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததா என்றால் நிச்சயமாக இல்லை என்றே கூறலாம்.


சென்னையின் அவல நிலைக்கு அரசு ஒரளவுக்கு பொறுப்பு என கூறினாலும் முழுக்க முழுக்க பொதுமக்களின் சுயநலமே இத்தகைய நிலைக்கு காரணம் என்பது என்னுடைய வாதம்.

குறைந்த விலையில் நிலம் விற்பனைக்கு கிடைக்கிறது என்றதும் அது நீர்நிலை பகுதியாக இருந்தாலும் சரி ஏரி குளமாக இருந்தாலும் சரி வாங்கி குவித்த மக்கள் அங்கு வீடுகளைக் கட்டி வாழ்ந்து வருகின்றனர்.

சரி ஆக்கிரமிப்பு செய்து கட்டிய வீடுகளை கட்டடங்களை அகற்ற அரசு நடவடிக்கை எடுத்தால் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி போராட்டங்களை நடத்துகிறார்கள் சம்பந்தப்பட்ட பகுதி மக்கள்.

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ஏரி குளங்களை உடனடியாக மீட்டு நீர் ஆதாரங்களை மேம்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றமே உத்தரவிட்டாலும் பல்வேறு அரசியல் காரணங்களால் மாநில அரசால் அதை நிறைவேற்ற முடியவில்லை.


இதற்கு எல்லாமே பொதுமக்களின் சுயநலம் தான் முக்கிய காரணம்.

பிறகுதான் அரசியல் கட்சிகள் இங்கு வருகின்றன.

இப்படிப்பட்ட நிலையில் மழை காலங்களில் சென்னை வெள்ளக் காடாக மாறாமல் என்ன செய்யும்.

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ஏரி குளம் பகுதிகளில் மழைநீர் தேங்காமல் வேறு எங்கு தேங்கும்.
ஐய்யய்யோ தண்ணீர் தேங்கி நிற்கிறது.

அரசு கண்டுகொள்ளவே இல்லை என கூறி அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்துவதில் என்ன நியாயம் இருக்கிறது..?

ஆக்கிரமிப்பு பகுதிகளில் வாழும் மக்களுக்கு என்ன உரிமை இருக்கிறது..?

இதுதான் நமது கேள்வி.

அதேநேரத்தில் நீர் ஆதாரங்களை மீட்கவும் பாதுகாக்கவும் மழைக்காலங்களில் எப்படி தண்ணீரை சேமிப்பது என முன்னோக்கு திட்டங்களை செயல்படுத்தாமல் இருக்கும் மாநில அரசின் மெத்தனத்தை நாம் கண்டிக்கவே வேண்டும்.

இத்தகைய போக்கு திமுக அதிமுக ஆகிய இரண்டு கழகங்களின் ஆட்சியில் தொடர்வதை யாரும் மறுக்கவே முடியாது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

பேமிலி டிராமா....!

பக்கா பேமிலி டிராமா....!


இந்தி நடிகர் சல்மான் கான் நடிப்பில் வந்திருக்கும் பிரேம் ரதன் தான் பாயோ என்ற இந்தி திரைப்படம்தான், தமிழில் மெய் மறந்தேன் பாராயோ என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு திரையிடப்பட்டுள்ளது.

ராஜவம்ச குடும்பத்தில் நடக்கும் அண்ணன், தம்பி, தங்கை பிரச்சினைகளை மையமாக வைத்து இந்த படத்தின் கதை பின்னப்பட்டுள்ளது.

அத்துடன் நாடக நடிகராக வரும் சல்மான் கான், ராஜவம்ச இளவரசர் சல்மான் கானுக்கு ஏற்படும் பிரச்சினையை எப்படி தீர்த்து வைக்கிறார் என்பதுதான் கதையின் முக்கிய அம்சம்.

ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக படம் நகருகிறது.

படத்தில் முகம் சுளிக்கும் காட்சிகள் இல்லை.

காதல் காட்சிகள் இல்லை.

மது அருந்தும் காட்சிகள் இல்லை.

புகைப்பிடிக்கும் காட்சிகள் இல்லை.

ஆபாச நடனங்கள் இல்லை.

எனவே, குடும்பத்தில் உள்ள அனைவரும் இணைந்து உட்கார்ந்து படத்தை தைரியமாக பார்க்கலாம்.

குடும்ப உறவுகள் சீர்குலையாமல் இருக்க வேண்டும்.

அதன்மூலம்தான், குடும்பத்தில் அன்பு தழைக்கும்.

மகிழ்ச்சி பிறக்கும்.

இதுதான், இந்த படம் சொல்லும் படிப்பினை.

இரட்டை வேடங்களில் வரும் சல்மான் கான் தமது வழக்கமான பாணியில் நன்றாகவே கலக்கி நடித்துள்ளார்.

நடிகை சோனம் கபூரும் நடிப்பில் குறைவு எதையும் வைக்கவில்லை.

இயக்குநர் சூரஜ் பர்ஜாத்யா, இந்திய பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இந்த படத்தை இயக்கி இருப்பது பாராட்டத்தக்கது.

படத்தில் ஒரே ஒரு குறை உண்டு.

அது, அடிக்கடி நிறைய பாடல்கள் வந்து செல்வதுதான்.

பாடல்கள் அனைத்தும் நன்றாக இருந்தாலும், ஒருவித சலிப்பு ஏற்படுத்தவே செய்கிறது.

மெய் மறந்தேன் பாராயோ திரைப்படம் பக்கா பேமிலி டிராமா என்பதால், நிச்சயம் மெய் மறந்து பார்க்கலாம்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

Tuesday, November 17, 2015

அமைதியை விரும்பும் இந்தியர்கள்...!

அமைதியை விரும்பும் இந்திய மக்கள்....!

புத்த மத தலைவர் தலாய் லாமா...!!


ஜலந்தரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தலாய் லாமா இந்திய மக்கள் அனைவரும் அமைதியுடன் வாழ விரும்புவதாக கூறினார்.

சகிப்புத் தன்மையுடன் அனைத்து தரப்பு மக்களுடன் இணந்து வாழ்வதையே இந்தியர்கள் விரும்புகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இதைத்தான் காட்டுவதாக தலாய் லாமா மேலும் கூறினார்.

நாட்டில் சகிப்புத் தன்மை மற்றும் மத ஒற்றுமைக்கு எதிராக தொடர்ந்து குந்தகம் விளைவிக்கும் மர மண்டைகளுக்கு புரிந்தால் சரி.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

தீவிரவாதத்திற்கு எதிராக போர்....!

தீவிரவாதத்திற்கு எதிராக ஜியாத் போர்....!மவுலானா மதானி அழைப்பு....!!


அப்பாவி மக்களை ஈவு இரக்கம் இல்லாமல் கொல்லும்    தீவிரவாதிகளுக்கு எதிராக ஜீயாத் செய்ய இஸ்லாமியர்கள் முன்வர வேண்டும் என ஜாமியத்துல் உலமா-யி-ஹிந்த் தலைவர் மவுலானா மாமூத் மதானி அழைப்பு விடுத்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூகத்தில் நச்சு கிருமியாக இருக்கும் தீவிரவாதத்தை வேரோடு அறுத்து எரிய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை ஒருபோதும் எற்றுக் கொள்ள முடியாது என்றும், ஜியாத் என்ற போர்வையில் இதுபோன்ற செயல்கள் நடப்பதை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும் என்றும் மவுலானா கேள்வி எழுப்பினார்.

இஸ்லாத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் கொடுமைகாரர்களை வீழத்த  அனைத்து இஸ்லாமிய நாடுகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மதானி கேட்டுக் கொண்டார்.


ஒரு மனித உயிரை காப்பாற்றுவது மனித இனத்தையே காப்பாற்றியதற்கு சமம் என்பதே இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனை என்று கூறிய மவுலானா, இதற்கு மாறாக நடந்து அப்பாவி மக்களை கொல்லும் தீவிரவாதிகளை எதிர்த்து போராட அனைத்து முஸ்லிம்களும் முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தீவிரவாதத்திற்கு எதிராக டெல்லி, ஐதராபாத், மும்பை உட்பட நாடு முழுவதும் இன்று போராட்டம், பேரணி நடத்தப்படும் என்றும்  அவர் தெரிவித்தார்.

இஸ்லாத்தின் பெயரால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது மிகப் பெரிய கவலை அளிப்பதாகவும், எனவே அதை உடனே தடுத்த நிறுத்த வேண்டும் என்றும் இதற்காக அனைத்து முஸ்லிம்களும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும் மவுலானா மதானி கேட்டுக் கொண்டார்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

Saturday, November 14, 2015

இவர்கள் மனிதர்களே இல்லை...!

இவர்கள் மனிதர்களே இல்லை...!


பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நான்கு வெவ்வேறு இடங்களில் தீவிரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களில் அப்பாவி மக்கள் 129 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தை காலை 6 மணி செய்திக்காக கணினியில் தட்டியபோது கைகள் நடுங்கின.

மனதில் ஒருவிதமான வேதனை ஏற்பட்டது.

மேலும் தாக்குதல் தொடர்பான விஷூவல் காட்சிகளை பார்த்தபோது சே இவர்கள் எல்லாம் மனிதர்கள் தானா என மனம் நினைத்தது.

மனித பிறப்பு எவ்வளவு அற்புதமானது.

மனித உயிர் எவ்வளவு உயர்ந்தது.

இத்தகைய அற்புத உயர்ந்த உயிரை அநியாயமாக பறிக்க இந்த பிசாசுகளுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என மனம் கேட்டுக் கொண்டது.

இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அது உண்மையென்றால் இஸ்லாத்தின் பெயரால் இதுபோன்ற தாக்குதலை நடத்திய அந்த மனித உருவில் இயங்கும் பிசாவு கூட்டத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுபோன்ற தீவிரவாத தாக்குதல்களுக்கு இஸ்லாத்தில் இடம் இல்லை.

துளிகூட அனுமதி இல்லை.

இஸ்லாமியர்கள் யாரும் இதுபோன்ற தீவிரவாத தாக்குதல்களை ஆதரிப்பதில்லை.

இத்தகைய தாக்குதல்களை மனதளவில் கூட நினைத்து இஸ்லாமியர்கள் சந்தோஷம் அடையக்கூடாது.

ஜியாத் என்ற போர்வையில் நடத்தப்படும் மனித குலத்திற்கு எதிரான இத்தகைய தாக்குதல்களை
சிறிய அளவில் கூட ஆதரிக்க கூடாது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

நல்லது.....!

நல்லது.....!


உங்களிடம் நெருங்கி பழகிய உங்களது உறவினர்கள், நண்பர்கள், பல்வேறு காரணங்களால், திடீரென உங்களை ஒதுக்கினால், அல்லது ஒதுக்குவதாக நீங்கள் உறுதியாக கருதினால்,  கவலைபடாமல் நீங்களும் அமைதியாக ஒதுங்கி விடுங்கள்.

அதை விட்டு விட்டு, பழைய பாணியிலேயே நீங்கள் அன்பு பாராட்ட முயற்சி செய்தால், அல்லது நட்பை தொடர்ந்தால், அதன்மூலம் பல்வேறு தேவையில்லாத பிரச்சினைகளை வலுக்கட்டாயமாக நீங்கள் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

ஏன், சில நேரங்களில் உங்களுக்கு அவமானங்கள்  கூட ஏற்படும்.

சில நேரங்களில் வாழ்க்கையில் நமக்கு நல்ல பாடத்தை சொல்லி தருபவர்கள் நமது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள்தான்.

இதை நாம் மறந்துவிடக்கூடாது.

எனவே, அவர்களிடம் பழகிய நாட்களை நீங்கள் மறக்காவிட்டாலும், உங்களது உண்மையான அன்பை தொடர்ந்தாலும், அவர்களது புறக்கணிப்பு, ஒதுக்கல் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு, உள்வாங்கிக் கொண்டு நீங்களும் அமைதியாக ஒதுங்கி விடுவதுதான் உங்களுக்கும் அவர்களுக்கும் நல்லது.

இதன்மூலம் மட்டுமே உங்கள் வாழ்க்கையில் அமைதி கிடைக்கும்.

தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படாது.

இது என் அனுபவம்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

வேதாளம்....!

வேதாளம்....!


பணத்திற்காக எதையும் செய்யும் ரவுடி அஜீதிற்கு சூழ்நிலை காரணமாக திடீரென தங்கையாக வரும் லட்சுமி மேனனின் தாய் தந்தையை கொன்றவர்களை பழி வாங்கும் கதைதான் வேதாளம்.

ஆரம்பம் முதலே ராக்கெட் வேகத்தில் படம் நகர்வதால், ரசிகர்கள் பெரிய அளவில் யோசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதில்லை.

சர் சர் என காட்சிகள் நகர்வதால், படத்தில் ஒருவித சலிப்பு ஏற்படுவதில்லை.

அண்ணன் தங்கை சென்டிமென்டோடு, அதிரடி டிராமாவுடன் எடுக்கப்பட்டுள்ள இந்த வேதாளம், அஜீத் ரசிகர்களுக்கு நல்ல விருந்து என்றே கூறலாம்.

வசனங்கள் குறைவாக வந்தாலும் ஒருசில இடங்களில் நச் என எழுதியுள்ளார் இயக்குநர் சிவா.

சூரியின் காமெடி வழக்கம் போல இருப்பதால், பெரிய அளவுக்கு சிரிப்பை ஏற்படுத்துவதில்லை.

பாடல்கள் சுமார் ரகம். அதேநேரத்தில் பின்னணி இசையில் நன்கு கலக்கி இருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத்.

அப்பாவி, ரவுடி என இரண்டு பரிமாணங்களில் நடித்து இருக்கும் அஜீத், தியேட்டரில்  தன் ரசிகர்களிடம் கைத்தட்டல்களை பெறுகிறார்.

சண்டை காட்சிகள் மிரட்டினாலும், கற்பனைக்கு எட்டாத அளவுக்கு இருப்பதால் மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

பெண்களை கடத்தி பாலியல் தொழில் ஈடுபடுத்தும் ஒரு சர்வதேச கும்பல் எப்படியெல்லாம் பெண்களை கடத்துகிறார்கள் என்பதை இயக்குநர் சிவா இந்த படத்தில் சொல்லி இருக்கிறார்.

மொத்தத்தில், எதையும் யோசிக்காமல் படத்தை பார்த்தால் வேதாளம் அனைவரையும் கவரவே செய்யும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

Friday, November 13, 2015

தூங்காவனம்....!

தூங்காவனம்....!



போதைப் பொருட்களுக்காக கடத்திச் செல்லப்பட்ட தனது மகனை மீட்க கமல்ஹாசன் செய்யும் போராட்டம் என்ற ஒரு லைன் கதைதான் தூங்காவனம்.

இந்த ஒரு லைன் கதையை வைத்துக் கொண்டு படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்ல முடியுமா என்றால், முடியும் என நிருபித்து இருக்கிறார் இயக்குநர் ராஜேஷ் எம். செல்வா.

கமல்ஹாசனின் விறுவிறுப்பான திரைக்கதைக்கு அழகான வடிவம் கொடுத்து, படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை  தொய்வு இல்லாமல் கொண்டு செல்வது இயக்குநரின் திறமை என்றே கூறலாம்.

இரவு விடுதியில் நடக்கும் இந்த கதையில் அழகான தமது ஒளிப்பதிவின் மூலம், சானு வர்க்கீஸ் படத்திற்கு பலம் சேர்க்கிறார்.

ஜிப்ரான் இசை படத்திற்கு மேலும் விறுவிறுப்பை ஏற்படுத்துகிறது எனலாம்.

எடிட்டர் ஷான் முகமது தமது திறமையை வெளிப்படுத்தி இருப்பதன் மூலம் படம் தொய்வு இல்லாமல் செல்கிறது.

பிரகாஷ் ராஜ் வழக்கமான வில்லன் தனத்தை இந்த படத்திலும் காண்பித்து இருக்கிறார்.

திரிஷா, ஆஷா சரத் உள்ளிட்டோரும் நன்றாகவே நடித்து இருக்கிறார்கள்.

இரவு விடுதியில் நடக்கும் படம் என்பதால், இளம் பெண்களின் கலாச்சார சீரழிவு, மது அருந்தும் காட்சிகள், ஆபாச நடனம் என படத்தில் காட்சிகள் நிறைய வந்து செல்கின்றன.

இது உண்மையிலேயே வருத்தும் அளிக்கிறது.

அதேநேரத்தில் உலக நாயகன் தமது நடிப்பு திறமையை இந்த படத்திலும் நன்றாகவே வெளிப்படுத்தி இருக்கிறார்.

மொத்தத்தில் தூங்காவனம், கமல் படங்களில் மேலும் ஒரு மைல் கல் எனலாம்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

பாழாய் போன சென்னை...!!

கழகங்களின் ஆட்சி...! பாழாய் போன சென்னை...!!


தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்துவரும் திமுக அதிமுக சென்னை மாநகரத்தின் நிலையை கொஞ்சமாவது மாற்றி இருக்கிறார்களா என கேள்வி எழுப்பினால் நிச்சயமாக இல்லை என்ற பதில்தான் கிடைக்கும்.

பருவமழை காலங்களில் சென்னை மாநகர மக்கள் சந்திக்கும் இன்னல்களை சவால்களை சொல்ல வார்த்தைகள் இல்லை.

கடந்த 10 நாட்களாக சென்னையில் அவ்வப்போது கொட்டி வரும் கனமழை காரணமாக நகரின் அனைத்து பகுதிகளும் வெள்ளக் காடாக காட்சி அளிக்கின்றன.

இதனால் பெண்கள் குழந்தைகள் வயதானவர்கள் என அனைத்து தரப்பினரும் வெள்ளத்தில் நீந்தி செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது..


மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து விடுவதால் அதில்தான் மக்கள் நடந்து செல்ல வேண்டிய கட்டாயம் வேறு.

சரி சென்னை மாநகர அரசு பேருந்துகளில் ஏறி அமர்ந்தால் அங்கேயும் வானம் பிளந்து மழை கொட்டுகிறதோ என நினைக்கும் அளவுக்கு பேருந்துகளின் நிலை உள்ளது.

மழை காலங்களில் சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

போக்குவரத்து நெரிசலில் சிக்கும் பலர் தங்களது உயிரையும் இழக்க வேண்டிய நிலை வேறு.

அத்துடன் மழை கால நோய்களுக்கு சென்னையில் பஞ்சமே ஏற்படுவதில்லை.


மழை நீரை சேமிக்கவோ வடிகால் செய்யவோ எந்த ஒரு முன்மாதிரியான செயல்திட்டங்களை கழகங்களின் ஆட்சி நிறைவேற்றவில்லை.

இதனால் மழை நீர் அனைத்தும் வீணாக கடலில் போய் கலக்கிறது.

இதன் காரணமாக கோடைகாலங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டு மக்கள் தண்ணீருக்காக அலைய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கும் அரசு மழை கால பிரச்சினைகளை தீர்க்க முன்கூட்டியே இலக்கு நிர்ணயித்து எந்த பணிகளையும் செய்வதில்லை.

இரண்டு கழகங்களின் ஆட்சியில் இதுதான் தொடர்ந்து நடந்து வருகிறது.

வரலாற்றில் இடம் பெறுவதற்காக பாலங்கள் வானுயர்ந்த கட்டிடங்கள் கட்டுவதற்காக ஆர்வம் செலுத்தும் கழகங்கள் மழைநீர் பிரச்சினைக்கு தொலைநோக்கு பார்வையுடன் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவே இல்லை.


இதனால் சென்னை வாழ் மக்கள் பருவமழை காலங்களில் நரக வேதனையை சந்திக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தொடர்ந்து தள்ளப்பட்டு வருகிறார்கள்.

சென்னை மாநகரம் பாழாய் போனதற்கு கழகங்களின் ஆட்சிகள்தான் காரணம்.

இந்த லட்சணத்தில் சிங்கார சென்னை என்ற கோஷம் வேறு.

வாழ்க கழகங்களின் ஆட்சி.

தொடரட்டும் சென்னை மக்களின் இன்னல்கள். அவலங்கள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

மோடி மீது புகார்....!

மோடி மீது 46 இங்கிலாந்து எம்.பி.க்கள் புகார்....!


இந்தியாவில் மதசகிப்புத் தன்மைக்கு பாதிப்பு.

இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகமாக நடக்கின்றன.

அரசியல் காரணங்களுக்காக ஏராளமானோர் கைது செய்யப்பட்டு இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இப்படிப்பட்ட அசாதாரண சுழல் இந்திய நாட்டில் தற்போது நிலவுகிறது.

இதுகுறித்து இங்கிலாந்துக்கு வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் பிரச்சினை எழுப்பி விவாதிக்க வேண்டும்.

இந்தியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கும்படி மோடியிடம் வலியுறுத்த வேண்டும்.

அழுத்தம் கொடுக்க வேண்டும்.


இப்படி பல்வேறு கோரிக்கைகள் முன் வைத்து இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனுக்கு அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 46 பேர் கடிதம் எழுதி இருக்கிறார்கள்.

இந்த கடிதத்தில் எதிர்க்கட்சியான லேபர் பார்ட்டி உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் ஆளும் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் கையெழுத்து போட்டுள்ளார்கள்.

மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மிகப் பெரிய சாதனை செய்து விட்டதாக ஆஹா ஓவோ என உள்ளூர் பாஜக தலைவர்கள் ஆட்டம் போட்டு வரும் நிலையில் இங்கிலாந்து எம்.பி.க்கள் 46 பேர் மோடி ஆட்சியில் மனித உரிமை மீறல்கள் நடந்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

மோடி அரசின் புகழ் இங்கிலாந்தில் அதுவும் அவர் அந்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சமயத்தில் நாறுவது என்னவென்று சொல்வது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

வட்டி....! அதிர்ச்சி....!!

வட்டி....! அதிர்ச்சி....!!


சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் அடிக்கடி சந்திக்கும் அந்த நபரை நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று சந்திக்க கூடிய வாய்ப்பு கிட்டியது.

என்ன சார் ரொம்ப நாளா ஆளையே பார்க்க முடியலே என கேட்டதுதான் தாமதம், அந்த நண்பர் மிகவும் வேதனையுடன் தம்முடைய தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்ததால் சொந்த ஊருக்கு சென்று விட்டு இப்போதுதான் சென்னை திரும்பி வந்ததாக கூறினார்.

எனக்கு மிகவும் மன வருத்தம் ஏற்பட்டது.

நண்பருக்கு ஆறுதல் கூறி எல்லாம் இறைவனின் நாட்டம் என்றேன்.

உங்களுக்கு இறைவன் கருணை புரிவான் என்று ஆறுதலாக சில வார்த்தைகள் கூறினேன்.

என்னுடைய வார்த்தைகள் மூலம் நண்பருக்கு சிறிது ஆறுதல் ஏற்பட்டதை அவரது முகத்தை பார்த்தபோது உணர முடிந்தது.

பிறகு இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினோம்.

இந்த பேச்சின் போது நண்பருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது தெரியவந்தது.

அந்த வருத்தம் அவரிடம் இருப்பதை நண்பரின் பேச்சின் மூலம் அறிந்தேன்.

45 வயது நிரம்பி விட்ட அந்த நண்பர் தமக்கு திருமணம் ஆகாமல் இருப்பதற்கு தம்முடைய குடும்பத்தில் தந்தை உட்பட சிலர் வட்டி தொழில் செய்ததே காரணம் என மறைமுகமாக கூறினார்.

தம் குடும்பத்தினர் அதிகமாக அநியாயமாக வட்டி வாங்கியதால் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் விட்ட சாபம்தான் தம்மை துரத்துவதாக நண்பர் கூறினார்.

தம்முடைய நண்பர்கள் அனைவரும் திருமணமாகி வாழ்க்கையில் நன்றாக செட்டில் ஆகிவிட்ட நிலையில் தாம் மட்டும் இன்னும் திருமணம் ஆகாமல் இருப்பதாக நண்பர் தமது பேச்சின் மூலம் மறைமுகமாக கூறியபோது எனக்கு உண்மையிலேயே வேதனையாக இருந்தது.

விரைவில் நல்லது நடக்கும் என நண்பருக்கு ஆறுதல் கூறி பேச்சை வேறு திசைக்கு திருப்பினேன்.

நண்பரிடம் பேசியதில் இருந்து ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது.

அது

தமக்கு திருமணம் ஆகாமல் இருப்பதற்கு தமது குடும்பத்தினர் அநியாயமாக வட்டி வாங்கியதுதான் என நண்பர் உணருகிறார் என்பதுதான்.

தமது முன்னோர்கள் செய்த பாவம்தான் தம்மை துரத்திக் கொண்டிருப்பதாக நண்பர் நினைக்கிறார்.

வட்டி வாங்குவதும் கொடுப்பதும் இஸ்லாத்தில் ஏன் தடை செய்யப்பட்டு உள்ளது என்பதையும் அதனால் எத்தகைய பாதிப்புகள் பின் விளைவுகள் ஏற்படும் என்பதையும் நண்பரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் மூலம் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

எழுச்சியும் வீழ்ச்சியும்...!

எழுச்சியும் வீழ்ச்சியும்...!


மக்களவை தேர்தலுக்கு பிறகு பாஜகவில் ஹீரோவாக கருதப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, தற்போது மெல்ல மெல்ல ஜீரோவாக மாறி வருகிறார்.

பாஜகவே இனி தன்னால்தான். தாம் இல்லையெனில் கட்சியே இல்லை என்ற இறுமாப்புடன் இருந்த மோடிக்கு, டெல்லி, பீகார் சட்டப்பேரவை மற்றும் உத்தரப் பிரதேச உள்ளாட்சி தேர்தல் தோல்விகள் நல்ல பாடத்தை கற்பித்து உள்ளன.

இந்த தோல்விகளுக்கு பிறகு மோடிக்கு மிகப் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது எனலாம்.

வெற்றி கிடைத்தால் அதற்கு மோடி சொந்தம் கொண்டாடுவதும் தோல்வி கிடைத்தால் கட்சியில் உள்ள அனைவரும் பொறுப்பு என கூறுவதை எப்படி ஏற்க முடியும் என்றும் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் தற்போது கேள்வி எழுப்பி உள்ளனர்.

டெல்லி தோல்விக்கு பிறகு மோடி மற்றும் அமித் ஷா பாடம் கற்கவில்லை என குற்றம் சாட்டியுள்ள இவர்கள், பீகார் தோல்விக்கு மோடியும் அமித் ஷாவும்தான் முழு பொறுப்பு என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அத்வானி உள்ளிட்டோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரத்தில் இதுபோன்ற கருத்துகளை கூறினால் கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவு ஏற்படும் என்றும் விபரீத பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அத்வானி & கோ மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆக மோடிக்கு எதிராக மூத்த தலைவர்கள் உயர்த்தியுள்ள போர்க்கொடியால் பாஜகவில் உண்மையிலேயே சலசலப்பு ஏற்பட்டு உட்கட்சி மோதல் வெடித்து உள்ளது என்றே கூறலாம்.

இத்தகைய ஒரு நிலைக்கு யார் காரணம் என்றால் அதற்கு நிச்சயமாக மோடி என்றே அடித்துக் கூறலாம்.

மத்தியில் ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு மோடி மூத்த தலைவர்களை சிறிதும் கண்டுகொள்ளவில்லை.

அத்வானி உள்ளிட்டவர்களை உதாசீனம் செய்தார்.

அதற்கு முக்கிய காரணம், தாம்தான் பாஜக தம்மால்தான் பாஜக என நினைத்தார்.

அந்த நினைப்பில் தான் அனைத்தும் செய்து வந்தார்.

தம்மை மட்டுமே முன்னிலை படுத்தி மத்திய அரசின் பணிகள் நடக்கும்படி பார்த்துக் கொண்டார்.

அடிக்கடி வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து உலகம் சுற்றும் வாலிபனாக தம்மை காட்டிக் கொண்டார்.

தம்முடைய பயணங்களின் மூலம் நாட்டிற்கு மிகப் பெரிய நம்மை கிடைத்துவிட்டது போன்று சுய விளம்பரம் செய்துகொண்டார்.

ஒவ்வொரு மாதமும் வானொலியில் உரை.

கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி.

என அனைத்தும் தம்மை சுற்றியே நடக்கும்படி பார்த்துக் கொண்ட மோடி இப்போது பீகார் தோல்விக்கு மட்டும் பொறுப்பு ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்.

தாம் பொறுப்பு இல்லை என்றும் தம்முடைய மவுனத்தின் மூலம் மறைமுகமாக சொல்கிறார்.

இதன்மூலம் இன்னும் தம்மால்தான் பாஜக என மோடி நினைப்பது உறுதியாக தெரிகிறது.

பீகார் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு நாடு முழுவதும் பாஜகவிற்கு எதிரான அலை வீசுவது நன்றாக தெரிகிறது.

ஆக பாஜகவின் திடீர் எழுச்சிக்கும் தற்போதைய படிப்படியான வீழ்ச்சிக்கும் மோடியே காரணம் என்பதுதான் அரசியல் நோக்கர்களின் கருத்து.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

அரை லூஸ்.....!

அரை லூஸ்.....!


தெலுங்கு மகா ஸ்டார் சரண் தேஜா நடித்த புரூஸ்லி என்ற திரைப்படத்தில் சிபிஐ அதிகாரியாக வரும் காமெடி நடிகரை அரை லூசாக சித்தரித்து இருப்பார்கள்.

இந்த அரை லூஸை தன் கூட வைத்துக் கொண்டு கதாநாயகன் சரண் தேஜா என்ற செய்ய போகிறார் என படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகர்களும் நினைப்பார்கள்.

ஆனால் படத்தை மேலே கொண்டு செல்ல அந்த அரை லூஸ்தான் முக்கியமாக இருப்பார்.

ஆக உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் சிலர் அரை லூஸ் தனமாக காரியங்களை செய்தாலும் அவர்களை கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டாம்.

ஏனென்றால் சில நேரங்களில் அவர்கள் உங்களுக்கு உதவ கூடும்.

நான் தினமும் ஒரு அரை லூசை சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

அவர் என்ன செய்கிறார் என்பது அவருக்கே புரிவதில்லை.

சில நேரங்களில் பலரை பயங்கரமாக கடுப்பு ஏற்றவும் செய்கிறார் இந்த அரை லூஸ்.

அவர் செய்யும் பணிகளை பார்க்கும் போது என்ன இப்படி அரை லூஸ் தனமாக செயல்படுகிறார் என வெறுப்பாக நினைக்க தோன்றும்.

இருந்தாலும் சில சமயங்களில் அவரை அறியாமல் நல்லதையும் செய்து விடுகிறார்.

எனவே இவரைப் போன்ற அரை லூஸ்கள் உங்களுக்கு தொடர்ந்து தொந்தரவாக இருந்தாலும் அவர்களை ஒதுக்கி தள்ள வேண்டாம்.

அவர்களின் காரியங்களை பொறுத்து கொள்ளுங்கள்.

ஏனென்றால் எப்போதாவது அவர்கள் உங்களுக்கு மறைமுகமாக அல்லது நேரடியாக அவர்களை அறியாமலேயே உதவ கூடும்.

நல்லதை செய்யக்கூடும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

எச்சரிக்கை....!

அநீதி இழைத்தால் கடும் நடவடிக்கை....!

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் எச்சரிக்கை....!!


சிறுபான்மையினருக்கு எதிரான அநீதிகள் பாகிஸ்தானில் அதிகரித்து வரும் நிலையில், இந்துக்களுக்கு எதிராக முஸ்லீம்கள் அநீதி இழைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் எச்சரித்துள்ளார்.

கராச்சியில் உள்ள கவர்னர் இல்லத்தில் நடைபெற்ற தீபாவளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை, இந்து மத பிரதிநிதிகள் சந்தித்தனர்.

அப்போது, அவர்களிடம் தனது அரசு சிறுபான்மையினர் உரிமைகளை காப்பதில் மிகுந்த உறுதியுடன் இருப்பதாக நவாஸ் ஷெரீப் தெரிவித்தார்.

பாகிஸ்தான் அனைத்து மக்களுக்குமான நாடு.

பாகிஸ்தான் மக்கள் அனைவருக்கும் நான் பிரதமர்.

எந்த மதம், எந்த சாதியை சேர்ந்தவர் என்பது ஒரு விஷயம் அல்ல.

ஒரு முஸ்லீம், இந்துவுக்கு எதிராக அநீதி இழைத்தால், அவர் என்னிடம் வரலாம்.

அநீதி இழைத்த முஸ்லீமுக்கு எதிராக நான் கடும் நடவடிக்கை எடுப்பேன்.

அனைத்து மக்களுக்கும் குறிப்பாக சிறுபான்மையின மக்களுக்கு நீதி வழங்குவதான் ஒரு இஸ்லாமிய அரசாங்கத்தின் கடமை.

இவ்வாறு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்தார்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

திப்பு விழா - கண்டனம்....!

திப்பு சுல்தானின் பிறந்த தினம் கொண்டாட எதிர்ப்பு....!


நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்....!!

முன்னாள் பிரதமர் தேவகௌடா கருத்து....!!!

கர்நாடக மாநிலத்தில் மைசூரு வேங்கை மாவீரன் திப்பு சுல்தான் பிறந்த நாள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

ஆனால் அதற்கு பாஜக, விஸ்வ இந்து பரிஷீத் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பெங்களூருவில் முன்னாள் பிரதமர் தேவகௌடா செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது...

திப்பு சுல்தான் தேச பக்தர், சுதந்திர போராட்ட வீரர் என்பதில் இருவேறு கருத்தில்லை.

நாட்டின் வளர்ச்சிக்கும், ஒற்றுமைக்கும் திப்பு சுல்தான் பாடுப்பட்டுள்ளார்.

இந்த நிலையில்தான், கர்நாடக மாநிலத்தில் அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவது வேதனை அளிக்கிறது.

கர்நாடக மாநிலம் மடிகேரியில் திப்பு சுல்தான் பிறந்த நாளின் போது இரு தரப்பினருக்கிடையே மோதல் உருவாகியுள்ளது தேவையற்றது.

இதனை அனைவரும் கண்டிக்க வேண்டும்.

திப்பு சுல்தானின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் செயலாகும்.

இவ்வாறு கூறிய தேவகௌடா, திப்பு சுல்தான் பிறந்த நாளை கொண்டாட எதிர்ப்பு தெரிவித்து வரும் பாஜக, விஸ்வ இந்து பரிஷீத் அமைப்பு ஆகிய இந்து அமைப்புகளுக்கு கண்டனமும் தெரிவித்தார்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

தீபாவளி விருந்து....!

தீபாவளி விருந்து....!


தீப ஒளி திருநாளின் போது, சென்னையில் உள்ள நண்பர்கள் சிலர் விருந்துக்கு அழைத்தால் என்ன செய்வது என்ற குழப்பம் எனக்கு இருந்தது.

அலுவலகத்தில் விடுமுறை இல்லை.

பணியில் இருக்க வேண்டிய கட்டாயம்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கண்டிப்பாக தீப ஒளி திருநாளை எங்களுடன் சேர்ந்து கொண்டாட நீங்களும் வர வேண்டும்.

வீட்டிற்கு வந்து எங்களுடன் இணைந்து நல்ல உணவு சாப்பிட வேண்டும் என கூறி சக நண்பர்கள் அழைத்தால், அதை எப்படி தவிர்க்க முடியும்

என்ற இக்கட்டமான சூழ்நிலையில் நான் தவித்துக் கொண்டிருந்தேன்.

விருந்துக்கு அழைக்கும் நண்பர்களுக்கு என்ன பதில் சொல்வது என மனதில் யோசித்துக் கொண்டே இருந்தேன்.

இதனால் குழப்பத்தில் மூழ்கி இருந்தேன்.

நல் வாய்ப்பாக அதற்கு நண்பர்கள் யாரும் இடம் கொடுக்கவில்லை.

என்னுடைய நிலைமையை புரிந்துக் கொண்டார்களோ என்னவோ தெரியவில்லை, ஒருத்தர் கூட தீபாவளி விருந்துக்கு வீட்டுக்கு வாருங்கள் என்று அழைக்கவே இல்லை.

சென்னையை விட்டு வெளியூர்களில் இருக்கும் சில நண்பர்கள் மட்டும் அவசியம் வீட்டுக்கு வாருங்கள் என அழைத்தார்கள்.

வேலூரில் இருந்தும் ஒரு நண்பர் அழைப்பு விடுத்தார்.

ஆனால், சென்னையை விட்டு வெளியூர்களுக்கு செல்ல முடியாத சூழல் எனக்கு.

சென்னையில் இருக்கும் நண்பர்கள் யாரும் தீபாவளி விருந்துக்கு அழைக்காததால், எனக்கு கொஞ்சம் ஏமாற்றம் ஏற்பட்டது உண்மைதான்.

ஆனால், அவர்கள் விருந்துக்கு அழைத்து, அந்த அழைப்பை தட்டிக் கழிக்க வேண்டிய சூழல் எனக்கு ஏற்படவில்லை.

அதன்மூலம் நண்பர்களின் மனதை வேதனை அடைய செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு உருவாகவில்லை..

அதற்கான அவசியமும் ஏற்படவில்லை.

எனவே, தீபாவளி விருந்துக்கு யாரும் அழைக்காதது ஒரு விதத்தில் எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.

அடுத்த தீபாவளிக்காவது, சென்னை நண்பர்கள் யாராவது விருந்துக்கு அழைக்கிறார்களா இல்லையா என பார்க்கலாம்,

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

Tuesday, November 10, 2015

இன்னும் புத்தி வரவில்லை....!

இன்னும் புத்தி வரவில்லை....!


பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு பிறகுகூட பாஜக மற்றும் விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் இன்னும் திருந்தவில்லை.

மீண்டும் தங்களது பழைய வேலையை காட்டத் தொடங்கி விட்டார்கள்.

கர்நாடக காங்கிரஸ் அரசு சார்பில் அம்மாநிலம் முழுவதும் மாவீரன் மைசூர் வேங்கை திப்பு சுல்தானின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பாஜக மற்றும் இந்து அமைப்புகள், விழாவை புறக்கணித்து வருகின்றன.

இந்நிலையில், குடகு மாவட்டத்தில் இந்து பரிஷத் அமைப்பு சார்பில் விழாவிற்கு எதிராக இன்று (10-11-2015) போராட்டம் நடைபெற்றது.

இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.

எனினும், அனுமதியை மீறி போராட்டம் நடந்தது.

இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருதரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு உருவாகி,பதற்றம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து வன்முறை வெடித்தால், போலீசார் தடியடி நடத்தினர்.

இதில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த வன்முறையைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது.


பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் போராட்டத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் சித்தராமையா, திப்பு சுல்தான் பிறந்த நாள் விழாவை வேண்டும் என்றே, இந்து அமைப்புகள் எதிர்த்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மாநிலத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் விழாவை வரவேற்றுள்ளதாக கூறியுள்ள அவர், திப்பு சுல்தான் இந்துகளுக்கு எதிரானவர் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் அமைதியாக வாழ விரும்புகிறார்கள்.

இதுதான் பீகார் தேர்தல் முடிவுகளின் மூலம் நாட்டிற்கு கிடைத்த படிப்பினை.

ஆனால், இதனை பாஜக மற்றும் இந்து அமைப்புகள் உணர்ந்ததாக தெரியவில்லை.

மீண்டும் தங்களது சுயரூபத்தை காட்டத் தொடங்கி விட்டார்கள்.

இந்த முறையை திப்பு சுல்தான் பிறந்த நாள் விழாவை காரணம் காட்டி கர்நாடகாவில் வன்முறையை அவிழ்த்து விட்டுள்ளார்கள்.

இதன்மூலம் நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் எதிர்ப்பை அவர்கள் சம்பாதிக்க போவது உறுதி.

பீகார் தேர்தல் முடிவுகளுக்கு பிறகும் பாஜக மற்றும் இந்து அமைப்புகளுக்கு புத்தி வரவில்லை என்றால் நாம் என்ன செய்வது...?

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

தேன் நிலவு முடிந்தது....!

Modi's honeymoon is over....!


பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள முன்னணி ஊடகங்கள் தெரிவித்துள்ள கருத்துதான் இது.

அதாவது மோடியின் தேன் நிலவு முடிந்தது.

இனி அவர் வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என உலக ஊடகங்கள் அட்வைஸ் செய்துள்ளன.

Washington Post
LA Times
The New York Times
The Wall Street Journal
Reuters
Daily Star
Dawn
The Telegraph
Daily Times
The Guardian
BBC
Siasat Daily
The Economist

உள்ளிட்ட பல உலக முன்னணி ஊடகங்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளை விமர்சனம் செய்துள்ளன.

பிரதமர் மோடி இனிமேல் விழித்துக் கொள்ள வேண்டும்.

இதுதான் உலக ஊடகங்களின் அட்வைஸ்.

மோடி இனி என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்துகிறாரா அல்லது தமது பழைய பாணியில் நாட்டை வழி நடத்தி செல்கிறாரா என்பது இன்னும் கொஞ்ச நாட்களிலேயே தெரிந்து விடும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

முஸ்லிம் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை உயர்வு....!

பீகார் சட்டப்பேரவையில் முஸ்லிம் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை உயர்வு....!


நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 243 இடங்களில் 24 தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 12 பேர் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர்கள்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து 6 பேரும் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து 5 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மார்க்சிஸ்ட்(லெனின்) கட்சியில் இருந்து ஒருவர் தேர்வாகியுள்ளார்.

மகா கூட்டணியில் இருந்து தேர்தலில் போட்டியிட 33 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அதில் 23 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

பீகார் மக்கள் தொகையில் 16 சதவீதம் முஸ்லிம்கள் இருக்கின்றனர்.

ஆனால் தேர்வு செய்யப்பட்ட முஸ்லிம் எம்.எல்.ஏ.க்களின் சதவீதம் வெறும் 10 மட்டுமே ஆகும்.

கடந்த சட்டப்பேரவையில் வெறும் 19 முஸ்லிம் எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருந்தது இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

எஸ் ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

மோடிக்கு எதிராக பிரச்சாரம்....!

மோடிக்கு எதிராக நாடு முழுவதும் பிரச்சாரம்....!

லாலு அறிவிப்பு...!!


பீகாரில் வரலாற்று சாதனை புரிந்த ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் இப்போது பிரதமர் மோடி தலைமையான பாஜக அரசுக்கும் பாசிச அமைப்புகளுக்கும் எதிராக நாடு முழுவதும் சென்று பிரச்சாரம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.

பீகாரில் பாஜக கூட்டணியை துடைத்து எடுத்து காலி செய்தது போல நாடு முழுவதும் காலி செய்ய இருப்பதாக லாலு தெரிவித்துள்ளார்.

பீகாரில் நிதிஷ் குமார் ஆட்சியை கவனித்து கொள்வார் என்பதால் தமக்கு நிறைய நேரம் கிடைப்பதால் அதை பாஜக மற்றும் பாசிச அமைப்புகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய பயன்படுத்த இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமது பிரச்சாரத்தை முதலில் உத்தரப் பிரதேசத்தில் இருந்து தொடங்க இருப்பதாகவும் பின்னர் நாடு முழுவதும் செய்ய இருப்பதாகவும் லாலு தெரிவித்துள்ளார்.

சமூக போராளி லாலு பிரசாத் யாதவ்வின் நல்ல எண்ணம் நிறைவேறி, மிகப்பெரிய வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.மோடிக்கு எதிராக நாடு முழுவதும் பிரச்சாரம்....!

லாலு அறிவிப்பு...!!

பீகாரில் வரலாற்று சாதனை புரிந்த ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் இப்போது பிரதமர் மோடி தலைமையான பாஜக அரசுக்கும் பாசிச அமைப்புகளுக்கும் எதிராக நாடு முழுவதும் சென்று பிரச்சாரம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.

பீகாரில் பாஜக கூட்டணியை துடைத்து எடுத்து காலி செய்தது போல நாடு முழுவதும் காலி செய்ய இருப்பதாக லாலு தெரிவித்துள்ளார்.

பீகாரில் நிதிஷ் குமார் ஆட்சியை கவனித்து கொள்வார் என்பதால் தமக்கு நிறைய நேரம் கிடைப்பதால் அதை பாஜக மற்றும் பாசிச அமைப்புகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய பயன்படுத்த இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமது பிரச்சாரத்தை முதலில் உத்தரப் பிரதேசத்தில் இருந்து தொடங்க இருப்பதாகவும் பின்னர் நாடு முழுவதும் செய்ய இருப்பதாகவும் லாலு தெரிவித்துள்ளார்.

சமூக போராளி லாலு பிரசாத் யாதவ்வின் நல்ல எண்ணம் நிறைவேறி, மிகப்பெரிய வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

Sunday, November 8, 2015

பிடிவாதம் பிடித்தால் டமார்தான்......!

பிடிவாதம் பிடித்தால் டமார்தான்......!


தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை.

அதிமுகவை வீழ்த்த கூட்டணி ஒன்றும் தேவையில்லை.

அதிமுக ஒன்றும் வலிமையான கட்சி இல்லை.

கூட்டணி இல்லாமலேயே திமுகவால் வெற்றி பெற முடியும்.

இப்படி, திமுக தலைமை தற்போது சொல்லிக் கொண்டிருக்கிறது.

ஆனால் உண்மை நிலை என்ன.

தமிழகத்தில் கூட்டணி அமைக்காமல் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற முடியுமா என்றால், நிச்சயம் வெற்றி கிடைக்க முடியாது என்பதே தற்போதைய நிதர்சன நிலை.

இதையெல்லாமல் மறந்துவிட்டு கூட்டணி இல்லாமலேயே நாங்கள் வெற்றி பெறுவோம் என திமுக கூறி வருகிறது.

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் நிதிஷ் லாலு கூட்டணி வெற்றி பெற்று இருக்கிறது என்றால், அதற்கு முக்கிய காரணம் மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்டதுதான்.

இதன் காரணமாகதான் பாஜகவை அவர்களால் வீழ்த்த முடிந்தது.

மக்களும் மகா கூட்டணிக்கு ஆதரவு அளித்து வெற்றி வாய்ப்பை வாரி வழங்கினார்கள்.

இதை திமுக கவனத்தில் கொள்ள வேண்டும்.

பீகார் தேர்தல் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஒரு நல்ல பாடத்தை சொல்லி தந்துள்ளது.

அது, வலிமையான அதிமுகவை வீழ்த்த வேண்டுமானால், திமுகவும் வலிமையான கூட்டணி அமைக்க வேண்டும்.

அதை விடுத்து,

கூட்டணி தேவையில்லை.

கூட்டணி ஆட்சி கிடையாது.

நாங்கள் தனித்தே நின்று வெற்றி பெறுவோம்.

என பிடிவாதமாக சொல்லிக் கொண்டு, அப்படி தேர்தலில் களம் கண்டால், ஒன்று மட்டும் நிச்சயம்.

அது
திமுகவிற்கு மிகப் பெரிய வீழ்ச்சியை கொண்டு வந்து தரும்.

பிடிவாதம் பிடித்தால் டமார்தான்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

மீண்டும் லாலு...!

மீண்டும் லாலு...!


ஊழல் வழக்கில் சிறை.

எம்.பி. பதவி பறிப்பு.

திடீர் உடல்நல குறைவு.

மும்பை மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை.

நீண்ட ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுரை.

இப்படிப்பட்ட சூழலில் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ்வின் அரசியல் வாழ்க்கை முடிந்தது என பலரும் நினைத்தார்கள்.

குறிப்பாக பாஜக மிகவும் சந்தோஷமாக இருந்ததே என கூறலாம்.

பீகாரில் இனி எமது ஆட்டம் தான் என பாஜக கற்பனையில் மிதந்தது.

ஆனால் லாலுவா சும்மாவா என்று மீண்டும் வெகுண்டு எழுந்த லாலு தாம் பீகாரில் மட்டுமல்ல தேசிய அரசியலில் கூட மிகப் பெரிய சக்தி என தமது அரசியல் நடவடிக்கைகள் மூலம் மீண்டும் நிருபித்துள்ளார்.

தாம் பாஜகவிற்கு மிகப் பெரிய சவால் என்பதை பீகார் தேர்தல் வெற்றிகளின் மூலம் நாட்டிற்கு ஒரு நல்ல செய்தியை சொல்லி இருக்கிறார்.

இந்திய அரசியலில் மிகப் ஆளுமை லாலு.

இதை அவர் பலமுறை நிருபித்து இருக்கிறார்.

தற்போது மீண்டும் பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் மகா கூட்டணி அமைத்தது மட்டுமல்லாமல் அந்த கூட்டணி வெற்றி பெற அவர் செய்த சமரசம் உழைப்பு ஆகியவற்றால் மகத்தான வெற்றியை ஈட்டி இந்திய அரசியலில் புதிய வரலாறு புரிந்துள்ளார்.

தமது வெற்றியின் மூலம் மாநில கட்சிகளுக்கு சில செய்திகளையும் லாலு மறைமுகமாக சொல்லி இருக்கிறார்.

மிகப்பெரிய சக்தியாக எழுந்துள்ள லாலு இனி இந்திய அரசியலில் மீண்டும் ஒரு கலக்கு கலக்கு போவது உறுதி.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

வாழ்க காட்சி ஊடக ஜனநாயகம்....!

முகத்திரையை கிழித்த பீகார் முடிவுகள்....!


பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான முதல் ஒரு மணி நேரம்.

நாட்டில் உள்ள Ndtv Timesnow உள்ளிட்ட முன்னணி தொலைக்காட்சிகள் பாஜக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுவிட்டதாக செய்திகளை வெளியிட்டு என்னைப் போன்ற பலரின் வயிற்றில் புளியை கரைத்து அதிர்ச்சியை ஏற்படுத்தின.

அத்துடன் தங்களது பாஜக விசுவாசத்தை காட்டி பாஜக கூட்டணிதான் ஆட்சியை அமைக்க வேண்டும் என விரும்பின.

இந்த போலியான முகங்கள் கொண்ட தொலைக்காட்சிகளின் பொய்யான பிரச்சாரத்தையும் தாண்டி பீகாரில் மகா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

இதனால் வேறு வழியில்லாமல் என்ன செய்வது என புரியாமல் மகா கூட்டணிக்கு ஆதரவான செய்திகளை வெளியிட வேண்டிய கட்டாயத்துக்கு தற்போது இந்த தொலைக்காட்சிகள் தள்ளப்பட்டுள்ளன.

வாழ்க காட்சி ஊடக ஜனநாயகம்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

மோடிக்கு மரண அடி....!

மோடிக்கு மரண அடி....!


பீகாரில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி பிரதமர் நரேந்திர மோடியை முன்னிலை படுத்தித்தான் பிரச்சாரம் செய்தது.


பீகார் முழுவதும் சுற்றி சுற்றி சென்று மோடி பிரச்சாரம் செய்தார்.

36 கூட்டங்களில் கலந்து கொண்டு பீகாரில் காட்டாச்சி நடப்பதாக குற்றம் சாட்டினார்.

நிதீஷ் லாலு மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.


ஆனால் தம்முடைய ஆட்சியின் போக்கை மட்டும் மறந்து விட்டு தன்னால்தான் பாஜகவுக்கு வெற்றி என கருதினார்.

ஆர்.எஸ்.எஸ். போன்ற மதவாத அமைப்புகளின் நடவடிக்கைகளை பிரதமர் கண்டுகொள்ளவில்லை.

நாடு முழுவதும் மதசார்பின்மைக்கும் கருத்து சுதந்திரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்ட போது மவுனம் கடைப்பிடித்து வேடிக்கை பார்த்தார் மோடி.'

தாம் எது செய்தாலும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என நம்பினார்.

இன்று பீகாரில் மோடிக்கு மரண அடி கொடுத்து மக்கள் பாடம் கற்பித்து இருக்கிறார்கள்.

இனி இது நாடு முழுவதும் தொடரும்.

பிரதமர் மோடி தமது ஆட்சியின் செயல்பாடுகளில் மாற்றத்தை கொண்டு வராவிட்டால் மக்கள் தொடர்ந்து பாடம் கற்பித்துக் கொண்டே இருப்பார்கள்.

ஏனென்றால் நாட்டில் மக்கள் அமைதியை விரும்புகிறார்கள்.

அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையுடன் சமய சமூக நல்லிணக்கத்துடன் வாழ விரும்புகிறார்கள்.

இதுதான் பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தரும் செய்தி.


பீகாரில் மகத்தான வெற்றியை ஈட்டிய நிதீஷ் லாலு தலைமையிலான மகா கூட்டணிக்கு எமது வாழ்த்துக்கள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

Saturday, November 7, 2015

திப்புசுல்தான்....!

இந்து மதத்திற்கு எதிராக திப்புசுல்தான் செயல்படவில்லை......!

கர்நாடக முதலமைச்சர்  சித்தராமையா.....!!


பெங்களூருவில் 07-11-2015 அன்று  செய்தியாளர்களிடம் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது....

மைசூரு புலி என்று போற்றப்படும் திப்புசுல்தான், ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிரான கடைசிவரை போர்புரிந்தவர்.

ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியது மட்டுமல்லாது, மதசார்பற்ற சமுதாயத்தை கட்டமைக்கவும் தீவிரமாக பாடுபட்டவர் தீப்பு சுல்தான்.

'திப்புசுல்தான் ஒரு மதவாதி. ஹிந்துக்களை கட்டாயப்படுத்தி இஸ்லாம் மதத்திற்கு மதமாற்றம் செய்தார்' என்று கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதரமற்ற பொய்யாகும்.

திப்புசுல்தான் மதவாதியாக இருந்திருந்தால், ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள ஸ்ரீரங்கநாதசுவாமி கோயிலின் வளர்ச்சிக்கு மானியம் வழங்கியிருக்கமாட்டார்.

மாநில அரசு மீது குறைகூறுவதற்கு எதுவும் இல்லாததால் திப்புசுல்தான் பிறந்தநாள் கொண்டாடுவதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால் சில்லரை விஷயங்களை முன்வைத்துக்கொண்டு அரசை விமர்சித்துவருகிறார்கள்.

திப்புசுல்தான் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல.

திப்புசுல்தான் பிறந்தநாள் கொண்டாட்டத்தை எதிர்ப்பதன் மூலம் மதவாதிகள், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சமுதாயத்தை பிளவுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டுவருகிறார்கள்.

சிற்சில விவகாரங்களை விமர்சித்து மதநல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள்.

திப்புசுல்தான் பிறந்தநாளை மாநில அரசு சார்பில் இதற்கு முன்னரே கொண்டாடியிருக்க வேண்டும். தாமதமாக கொண்டாடுகிறோம் என்பதுதான் உண்மை.


திப்புசுல்தான் குறித்து சித்தராமையா இவ்வாறு கருத்துக்களை தெரிவித்தார்.