Saturday, July 30, 2016

மகத்தான பணி....!

முதல்வன் விருது....! மகத்தான பணி....!!



ஆண்டுதோறும், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், ஒவ்வொரு மாவட்டத்திலும் முதலிடம் பிடிக்கும் மாணவ மாணவியர்களுக்கு முதல்வன் விருதுகளை வழங்கி, ராஜ் தொலைக்காட்சி கவுரவித்து வருகிறது.

அதன்படி, 18வது ஆண்டாக முதல்வன் விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

இதற்காக சென்னைக்கு 3 நாட்களுக்கு முன்பு அழைத்துவரப்பட்ட மாணவ மாணவிகள், ஆளுநர் ரோசய்யாவுடன் சந்திப்பு, போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை, பிர்லா கோளரங்கத்திற்கு பயணம், வி.ஜி.பி. தங்கக் கடற்கரையில் உல்லாசப் பொழுதுபோக்கு ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

அத்துடன் முதல்வன் விருது பெறும் மாணவர்களுக்காக ராஜ் தொலைக்காட்சி அலுவலகத்தில் சிறப்பு வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டு, முதல் இரண்டு இடங்களைப் பிடித்தவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது.

பின்னர், விருது வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இமேஜ் கலையரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாணவர்களுக்கு முதல்வன் விருதுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

விழாவில், முன்னாள் டி.ஜி.பி. ராஜகோபால், கனரா வங்கியின் துணை பொது மேலாளர் தங்கவேலு, விஜிபி குழுமங்களின் நிர்வாக இயக்குநர் ரவிதாஸ், அமிர்தா கல்வி நிறுவன தலைமை செயல் அதிகாரி பூமிநாதன், திரைப்பட இயக்குநர் மிஸ்கின், நடிகர் ஜெயம் ரவி, நடிகை சங்கீதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பள்ளி தேர்வுகளில் சாதிக்கும் மாணவர்களுக்கு ராஜ் தொலைக்காட்சி நிறுவனம், விருதுகளை வழங்கி  தொடர்ந்து கவுரவித்து வருவது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய ஓர் மகத்தான பணி என்றே கூறலாம்.

விருதுகளை மட்டும் வழங்காமல், மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில், பல்வேறு நிகழ்ச்கிளுக்கும் ராஜ் தொலைக்காட்சி நிறுவனம் ஏற்பாடு செய்வது, மாணவர் சமுதாயம் மீதும், நாட்டின் கல்வி வளர்ச்சி மீது ராஜ் தொலைக்காட்சி நிர்வாகிகளுக்கு இயக்கும் அக்கறையை பாராட்ட வேண்டும்.

அவர்களது சமூக அக்கறையை எவ்வளவு பாராட்டினால் அது குறைவுதான்.

சாதிக்கும் மாணவர்களை மேலும் சாதிக்க ஆர்வம் தூண்டும் இதுபோன்று விழாக்களை பிற தொலைக்காட்சிகள் நடத்துவதாக எனக்கு தெரியவில்லை.

எனவே, மகத்தான பணியை 18 ஆண்டுகளாக தொடர்ந்து ஆற்றி வரும் ராஜ் தொலைக்காட்சிக்கு ஒரு சலூட்.....!

வாழ்க ராஜ் தொலைக்காட்சி நிர்வாகிகள்....!

S.A.Abdul Azeez
Journalist.

Tuesday, July 26, 2016

நிதிஷ்குமார் அதிரடி திட்டம்.....!

மது அருந்துபவர்களின் குடும்பத்தினருக்கு சிறை....!

நிதிஷ்குமார் அதிரடி திட்டம்.....!!


பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்,ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இம்மாநிலத்த்ன் முதலமைச்சராக நிதீஷ்குமார் மிக சிறப்பாக சேவையாற்றி வருகிறார்.

இம்மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மீறி மதுகுடிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க சட்டம் வகை செய்கிறது.

இந்நிலையில் முதலமைச்சர் நிதீஷ்குமார் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது.

இதில் புதிய மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, மது அருந்தோர், வீட்டில் மது பாட்டில் பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டால் அவரது குடும்பத்தையை சிறையிலடைக்கவும், மது அருந்தியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிடவும் சட்டதிருத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இந்த சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்படுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

பீகார் மக்களின் நலனில் நிதிஷ்குமாருக்கு உள்ள உண்மையான அக்கறையை பாராட்டத்தான் வேண்டும்.

இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள், மதுவை ஒழிக்க அவசியம்.

அந்த வகையில் நிதிஷ்குமாரின், திட்டம் வெற்றி பெற வேண்டும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்

Saturday, July 23, 2016

கனவு நகரம்....!

கனவு நகரம்....!


சென்னை மாநகரம், தற்போது வட இந்திய இளைஞர்களின் கனவு நகரமாக மாறி வருகிறது.

மாறிவிட்டது.

சென்னையின் எந்த பக்கம் திரும்பினாலும்,  இந்தி கலந்த தமிழ் மொழியை பேசும் வட இந்திய இளைஞர்களை, மக்களை காண முடிகிறது.

உணவகங்களில் வேலை செய்யும் பத்து பேரில் 8 பேர் வட இந்திய இளைஞர்கள்.

மாநகர பேருந்துகளில் பயணம் செய்யும்போது, வட இந்திய இளைஞர்களைதான் அதிகம் பார்க்க முடிகிறது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்களில் வட மாநில மக்களின் கூட்டம்தான் அதிகம்.

சினிமா தியேட்டர்களில், பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மக்கள்தான் டிக்கெட் வாங்க அதிகமாக வரிசையில் நிற்கிறார்கள்.

கட்டிட தொழிலாளிகளில் வட இந்திய மக்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள்.

சின்ன சின்ன தொழில்களை கூட கவுரவம் பார்க்காமல் செய்யும் வட இந்திய இளைஞர்களை சென்னையில் அதிகமாக பார்க்க முடிகிறது.

ஏன்,

பிச்சை எடுக்கும் தொழிலை செய்யும் பலரில், வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

ஒருசில கொள்ளை சம்பவங்களிலும் வட இந்திய இளைஞர்கள் இருப்பது செய்தி ஊடகங்கள் தரும் தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

சரி,


நம்ம ஆளுங்க என்ன செய்கிறார்கள்.

அதுதான் இருக்கிறதே, அரசு மதுபானக் கடையான டாஸ்மாக்.

அதில், கூட்டம் கூட்டமாக மொய்கிறார்கள் தமிழர்கள்.

வேலை செய்யும் ஆர்வம் சிறிதும் இல்லை தமிழர்களுக்கு.

பணம் சம்பாதித்து குடும்பத்தை காப்பற்ற மனம் இல்லை தமிழர்களுக்கு.

சம்பாதிக்கும் பணத்தைக்கூட,  மது அருந்தி, செலவழிக்கதான் தமிழர்களின் புத்தி செல்கிறது.

அத்துடன்,

கபாலி, கபாலி என சினிமா பின்னாடி ஓடுகிறான்.

நடிகனுக்கு பாலாபிஷேகம் செய்கிறான்.

முதல்நாள் முதல் ஷோ பார்த்து அதை படம் எடுத்து முகநூலில் போட்டு மகிழ்ச்சி அடைகிறான்.

ஏதோ உலகத்தில் மிகப்பெரிய சாதனை செய்துவிட்டதாக நினைத்து பூரிப்பு அடைகிறான்.

இதே நிலை தொடர்ந்தால்,

சென்னை மட்டுமல்ல, தமிழகவே இனி வட இந்திய இளைஞர்களின், மக்களின் கனவு நகரமாக விரைவில் மாறி விடும்.

S.A.Abdul Azeez
Journalist.

Thursday, July 21, 2016

நெருப்புடா.....!

நெருப்புடா.....!


மெரினா சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம்.

மெரினாவில் கூட்டம் அதிகம் என்பதால் பல வழிகள் ஒரு வழிப்பாதையாக மாற்றி போக்குவரத்து காவலர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.

திடீரென ஒரு காவலர் எங்களைப் பார்த்து ஏய் நில்லு.

யோவ் திரும்பப் போ..

என கையை நீட்டியபடி கோபத்துடன் கர்ஜனை செய்தார்.

அப்போதுதான் அது ஒருவழிப் பாதை என எங்களுக்கு புரிந்தது.

சரி, வண்டியை திருப்பிக் கொண்டு சொல்லலாம் என முடிவு செய்து கிளம்பினோம்.

வாகனத்தை ஓட்டிய கவிஞரும் பத்திரிகையாளருமான சம்பந்தன் முரளி, ஏய் என எங்களை அழைத்த போக்குவரத்து காவலரை நோக்கி வண்டியை ஓட்டி நிறுத்தினார்.

அத்துடன் அந்த காவலரை பார்த்து என்ன சொன்னீர்கள்.

ஒரு அரசு ஊழியர் இப்படி மரியாதை குறைவாக பொதுமக்களை அழைக்கலாமா என கோபம் கலந்த புன்னகையுடன் சீறினார்.

உடனே சுதாகரித்துக் கொண்ட அந்த போக்குவரத்து காவலர் தாம் அப்படி அழைக்கவில்லை என்றும் எங்களுக்கு தவறாக கேட்டதாகவும் விளக்கம் அளித்தார்.

சார் என தாம் கூறியதை நாங்கள் யோவ் என நினைத்துக் கொண்டதாகவும் கூறினார்.

நாங்கள் பத்திரிகையாளர் என்பதை தெரிந்துகொண்ட அந்த காவலர் உடனே பல்டி அடித்து சமரச நிலைக்கு வந்துவிட்டதால் நாங்கள் உடனே அங்கிருந்து கிளம்பினோம்.

அதேநேரத்தில், பொதுமக்களிடம் இதுபோன்று கண்ணியம் குறைவாக நடப்பது சரியல்ல என அந்த காவலரிடம் கூறினார் சம்பந்தன் முரளி.

அநியாயம் நடந்தால் சும்மா பார்த்துக் கொண்டு இருக்க முடியுமா என்ன.

சம்பந்தன் முரளி, ஒரு நெருப்புடா...!

S.A.Abdul Azeez 
Journalist.

உயர்ந்த உள்ளம்....!

உயர்ந்த உள்ளம்....!



தமிழக காட்சி ஊடகத்துறையில் மிக மிக முக்கிய புள்ளி நிஜந்தன்.

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளை அவர், கொண்டு செல்லும் பாணி ஒரு தனி ரகம்.

இதேபோன்று, செய்தி வாசிப்பில், அவரது தமிழ் உச்சரிப்பு நேயர்களை கவர்ந்து இழுக்கும்.

சிறந்த ஊடகவியலாளராக இருக்கும் நிஜந்தன், நல்ல எழுத்தாளரும் கூட.

பேரலை

பாபுஜியின் மரணம்

என் பெயர்

புதிய வெயிலும் நீலக் கடலும்

சுவை மணம் நிறம்

என பல நாவல்களையும் நிஜந்தன் எழுதியுள்ளார்.

ஊடகவியலாளர், எழுத்தாளர் என பல பரிமாணங்களுடன் விளங்கும் நிஜந்தன், சமூக அக்கறை கொண்ட, ஒரு நல்ல மனிதர்.

அனைவரிடமும் அன்புடன் பழகும் சிறந்த பண்பாளர்.

அண்மையில் நிஜந்தனை சந்தித்து பேசியது மனதிற்கு மகிழ்ச்சி அளித்தது.

இந்த சந்திப்பின் நினைவாக நிஜந்தனுக்கு நல்ல நூல் வழங்கிய மகிழ்ச்சி அடைந்தேன்.

சில சந்திப்புகள் வாழ்க்கையில் மறக்க முடியாத வகையில் அமைவது உண்டு.

அந்த வகையில் இந்த சந்திப்பு அமைந்து இருந்தது.

S.A. Abdul Azeez 
Journalist.

சுல்தான்.....!

சுல்தான்.....!


மல்யுத்த விளையாட்டை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த இந்தி திரைப்படம், சுமார் 3 மணி நேரம் சலிப்பு (போர் அடிக்காமல்) தட்டாமல் செல்வது ஆச்சரியம் அளிக்கிறது.

படத்தில் வன்முறை காட்சிகள் இல்லை.

மது அருந்தும் காட்சிகள் இல்லை.

அபாச நடனங்கள் இல்லை.

பெண்களை இழிவுப்படுத்தும் காட்சிகள் இல்லை.

இருந்தும் சுல்தான் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

படத்தின் இயக்குநர் அலி அப்பாஸ் ஜஃபர்,  தமது அழகான, நேர்த்தியான திரைக்கதை மற்றும் வசனங்களால், படத்தை ரசிகர்களை கவரவே செய்திருக்கிறார்.

பல இடங்களில் வசனங்கள் டச்சிங் ரகம்.

மல்யுத்த வீரராக வரும் நடிகர் சல்மான் கான், தமது நடிப்பால் உண்மையிலேயே கலக்கி இருக்கிறார்.

இதேபோன்று, மல்யுத்த வீராங்கனையாக வரும் அனுஷ்கா ஷர்மாவின் நடிப்பும் ரசிகர்களை கவரவே செய்கிறது.

அரியானா மாநிலத்தை ஒட்டியே கதை நகர்வதால், அங்குள்ள இந்தி மொழிக்கு ஏற்ப வசன உச்சரிப்புகள் இருப்பது கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது.

விஷால் சேகரின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்.

ரன்தீப் ஹுடா, அமித் சத் ஆகியோரும் தங்களது நடிப்பில் கலக்கி இருக்கிறார்கள்.

ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் எடுக்கப்பட்டுள்ள சுல்தான் திரைப்படம், வசூலில் சக்கைப்போடு போட்டு வருவதற்கு,, அதன், அழகான நேர்த்தியான கதை மற்றும் திரைக்கதையே முக்கிய காரணம் எனலாம்.

மொத்தத்தில் விளையாட்டை மையமாக எடுக்கப்பட்டுள்ள சுல்தான், ரசிகர்களை ஏமாற்றவில்லை.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர். 

Wednesday, July 20, 2016

அப்பாடா.....!

அப்பாடா.....!


காவிரி நதிநீர் பிரச்சினை தீர்ந்துவிட்டது.

தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடகா அரசு ஒப்புக் கொண்டுவிட்டது.

காவிரி நதிநீர் தொடர்பான அனைத்து வழக்குகளும் முடிவுக்கு வந்துவிட்டன.

மேகதாதுவில் புதிய அணை கட்டுவதில்லை என கர்நாடக அரசு முடிவு.

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் முடிவை கைவிட்டது கேரள அரசு.

முல்லைப் பெரியாறு அணையை உயர்த்திக் கொள்ளும் தமிழக அரசின் முடிவுக்கு தடை செய்வதில்லை என கேரளா முடிவு.

பாலாற்றில் தடுப்பணை கட்டும் திட்டத்தை கைவிட்டது ஆந்திர அரசு.

தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கும் இலங்கை கடற்படை, இனி மீனவர்களை தாக்குவதில்லை என்றும், இலங்கை கடல்பகுதியில் எங்கு வேண்டுமானாலும், தமிழக மீனவர்கள் மீன் பிடித்துச் செல்லலாம் என அறிவித்துவிட்டது.

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டு மாநிலத்தில் மதுவிலக்கு உடனே அமலுக்கு வந்துவிட்டது.

வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும், திட்டத்தை கைவிட்ட பிரதமர் நரேந்திர மோடி, இனி மக்கள் நலப்பணியில் மட்டுமே முழுமையாக தம்மை ஈடுபடுத்திக் கொள்ள முடிவு செய்துவிட்டார்.

நாட்டின் பணவீக்கம் வெகுவாக குறைந்துவிட்டது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து விட்டது. இதனால், அமெரிக்காவிற்கு பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது.

நாடு முழுவதும், வறட்சியால் விவசாயிகள் தற்கொலைகள்  செய்து கொள்வது நின்றுவிட்டன.

வேலையில்லா திண்டாட்டம் முடிவுக்கு வந்து, படித்து வேலையில்லாமல் இருக்கும் அனைத்து இளைஞர்களுக்கும் வேலை கிடைத்துவிட்டது.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்,  கொடுமைகள் நின்றுவிட்டன.

நாடு முழுவதும் ரயில்கள் குறித்து நேரத்தில் இயங்குகின்றன.

அரசு மருத்துவமனைகள் சிறப்பாக செயல்படுகின்றன.

நோயாளிகளுக்கு மருத்துவர்கள்  சிரித்துக் கொண்டே நன்றாக சிகிச்சை அளிக்கிறார்கள்.

நாடு முழுவதும் ஊழல் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போய் விட்டது.

நாட்டில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் எதுவும் இல்லை.

நாட்டில் கொலை, கொள்ளை, வன்முறை என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போய்விட்டது.

அத்துடன், உலகம் முழுவதும் நடக்கும் தீவிரவாத தாக்குதல்கள் நின்றுவிட்டன.

இதனால், ஐ.நா.அவைக்கு சமரச பணிகளில் ஈடுபடும் வேலை போய்விட்டது.

என்ன ஆச்சரியமாக உள்ளதா...

ஆம்,

கபாலி திரைப்படம் நாளை (22.07.2016) ரிலீஸ்.

இனி,

நாடு (இந்தியா) சுவிட்சமாக இருக்கும்.

நாட்டில் வெறும் முன்னேற்றம் மட்டும்தான்.

வளர்ச்சியோ வளர்ச்சிதான்.

உலகத்தில் அமைதியோ அமைதிதான்.

இனி எல்லோருக்கும் மகிழ்ச்சிதானே.

போங்கடா....

நீங்களும் உங்கள் திரைப்பட மோகமும்...

திரைப்படங்களை, திரைப்படங்களாக மட்டுமே பார்ப்போம்.

கனவில் மூழ்கி, வாழ்க்கையை தொலைக்கும் மர மண்டைகளே புரிந்துக் கொள்ளுங்கள்.

வேண்டாம், வீணான திரைப்பட மோகம்.

S.A.Abdul Azeez
Journalist.

Sunday, July 10, 2016

கில்லி......!

கில்லி......!


இந்திய ஊடகத்துறையில், குறிப்பாக தமிழக காட்சி ஊடகத்துறையில் ராஜ ராஜ ராஜனை போன்ற மிகத் திறமையான இளைஞர்களை காண்பது மிகவும் அரிது.

ஊடகத்துறையில் நான் சந்தித்த சில திறமையான இளைஞர்களில் ராஜ ராஜ ராஜனுக்கு முதலிடம் கொடுக்கலாம்.

நமது வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவரை, ஒரு சகலகலா வல்லவன் என்றே கூறலாம்.

கவிஞர், இசையமைப்பாளர் என இவரிடம் பல பன்முகத்தன்மைகள் ஏராளமாக குவிந்து கிடக்கின்றன.

தற்போது, ஊடகத்துறையில் இருந்து விலகி திரைப்படத்துறையில் ராஜ ராஜ ராஜன் கலக்கிக் கொண்டு இருக்கிறார்.

மிகப் பெரிய உயரத்திற்கு சென்றபோதும், என்னிடம் வழக்கம் போலவே இப்போதும் அவர் அன்புடன் பழகுவது எனக்கு ஆச்சரியம் அளிக்கும் விஷயம்.

அவரை பற்றி நிறைய கூறிக் கொண்டே போகலாம்.

ஆனால்,

ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், ராஜ ராஜ ராஜன் ஒரு கில்லி.

அப்படிதான் கூற வேண்டும்.


இன்று பிறந்த நாள் காணும் அவருக்கு எமது வாழ்த்துக்கள்.

நல்ல உடல்நலம், நல்ல மன நலம், நல்ல வளம் என அனைத்து வளங்களையும் பெற்று எப்போதும் வளமுடன், நலமுடன் மகிழ்ச்சியுடன் வாழ ராஜ ராஜ ராஜனை வாழ்த்துகிறேன்.

ராஜ ராஜ ராஜன் சார் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Happy birthday Greetings Sir.

S.A.Abdul Azeez
Journalist.

Sunday, July 3, 2016

அதிசயம்....!!

அற்புதம்....! அதிசயம்....!!


கடந்த ஜனவரி மாதம் முதல் உடல்நலம் சரி இல்லாமல் 5 மாதங்களாக நான் பெரும் அவதிக்கு ஆளாகி வந்தேன்.

எனவே,

இந்தாண்டு ரமலான் மாத நோன்பை எப்படி கடைப்பிடிக்க போகிறேன் என்ற அச்சம் எனக்குள் இருந்து வந்தது.

ஏன இறைவன்தான் கருணை காட்ட வேண்டும், இரக்கம் காட்ட வேண்டும் என மனம் அடிக்கடி கூறிக் கொண்டே இருந்தது.

என்ன அதிசயம்...!

என்ன ஓர் அற்புதம்....!!

ரமலான் நோன்பு தொடங்குவதற்கு 15 நாட்கள் இருக்கும் நிலையில், திடீரென எனக்கு உடல்நலம் தேறியதை  நான் உணர்ந்தேன்.


தொடர்ந்து உடல் வலியால் 5 மாதங்களாக தவித்து வந்த எனக்கு, உடல் வலியெல்லாம் பறந்து போனது.

காணாமல் போனது.

எனினும்,

முதல் நோன்பு வைக்கும்போதும், மனதில் ஒருவித அச்சம் இருக்கவே செய்தது.

ஆனால்,

ஏக இறைவனின் அற்புத கருணையால், இன்று வரை (28வது நோன்பு) அனைத்து நோன்புகளும் மிக சிறப்பாக கடைப்பிடிக்க கூடிய வாய்ப்பு கிட்டியது.

இன்னும் மீதம் இருக்கும் நோன்புகளும் இன்ஷா அல்லாஹ் (இறைவன் விரும்பினால்) நன்றாகவே நிறைவேறும் என உறுதியாக நம்புகிறேன்.

அத்துடன், இந்தாண்டு, திருக்குர்ஆனின் அழகிய தமிழாக்கத்தை முழுவதுமாக படித்து முடிக்கக் கூடிய வாய்ப்பையும் இறைவன் எனக்கு வழங்கினான்.

இந்த ஒரு மாதம் முழுவதும் எனக்கு நல்ல ஒரு ஆன்மிக பயணமாக இருந்தது.

இதனால் மனம் மகிழ்ச்சி அடைந்தது.

இந்த அற்புதத்தை செய்துக் காட்டிய ஏக இறைவனுக்கு என்னுடைய நன்றிகள் கோடி.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர். 

ராமுடு காரு.....!

ராமுடு காரு.....!



கல்லூரி தோழர் ஏ.வி.ராமசுப்ரமணியனை, இப்படிதான் நான் எப்போதும் அன்பாக அழைப்பது வழக்கம்.

சென்னையில் உள்ள எம்.ஆர்.எஃப். நிறுவனத்தில் தற்போது உயரதிகாரியாக பணிபுரிந்து வரும் அவர், நம்முடைய வேலூர் மாவட்டம் குடியாத்தைச் சேர்ந்தவர்.

இதனால், இயல்பாகவே நம் இருவருக்கும் இடையே நல்ல அன்பு, புரிந்துணர்வு இருந்து வருகிறது.

உயரதிகாரியாக இருந்தாலும் எந்தவித பந்தாவும் இல்லாமல், கல்லூரி நாட்களில் பழகியது போன்றே, தற்போதும் அவர் என்னிடம் அன்புடன் நட்பு பாராட்டுவது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது.

நல்ல பண்பாளரான ராமசுப்ரமணியனுக்கு இன்று பிறந்த நாள்.

இந்த இனிய நாளில் அவரை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்ல உடல்நலம், நல்ல மன நலம், நல்ல வளம் என அனைத்து வளங்களையும் பெற்று பல்லாண்டு வாழ ராமசுப்ரமணியனை வாழ்த்துகிறேன்.

ராமுடு காரு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Happy birthday Greetings Ramudu Karu.

S.A.Abdul Azeez
Journalist.

ஏன் இந்த வெறுப்பு....?

ஏன் இந்த வெறுப்பு....?


சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

வழக்கில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆனால்,

ஒருசில தோழர்களுக்கு உண்மையை ஏற்றுக்கொள்ள ஏனோ இன்னும் மனம் மறுக்கிறது.

கொலையாளி ஒரு முஸ்லீமாக இருக்க வேண்டும் என நினைத்த அவர்களுக்கு ராம்குமார் கைது செய்யப்பட்டதை ஜீரணிக்க முடியவில்லை.

ராம்குமார் மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்.

அவர் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு மாறிவிட்டார்.

அவர் பெயர் அப்துல்லா என்றெல்லாம் தற்போது கதை விட ஆரம்பித்து இருக்கிறார்கள்.

இதன்மூலம் ஒன்று மட்டும் உறுதியாக புரிகிறது.

இஸ்லாத்தின் மீதும் முஸ்லீம்கள் மீதும் சிலருக்கு இருக்கும் வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி இன்னமும் குறையவில்லை.

மாறாக அதிகமாக, கூடிக்கொண்டே போகிறது.

இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தமான மார்க்கம் அல்ல.

அது உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது.

ஓர் இறைக் கொள்கையை வலுவாக போதிக்கும் இஸ்லாம் உலக மக்கள் அனைவரையும் நன்மையின் பக்கம் வருமாறு அழைக்கிறது.

மனிதர்களின் அமைதியான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறது.

இம்மை, மறுமை வாழ்க்கையில் மனித சமுதாயம் ஆனந்தமாக இருக்க கருணை மிக்க இறைவன் திருக்குர்ஆனில் வழிகளை காட்டி இருக்கிறான்.

ஏக இறைவேதமான திருக்குர்ஆன் படித்தால் இந்த உண்மை மிகத் தெளிவாக புரியும்.

இதன்மூலம் இஸ்லாம் மீதும் முஸ்லிம்கள் மீதும் சிலருக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சி மறையும்.

கொலையாளி யாராக இருந்தாலும் அவனை மதம், சாதி ரீதியாக பார்க்காமல், அணுகாமல், குற்றவாளி என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்க வேண்டும் தோழர்களே.

கடைசியாக,

நீங்கள் எந்த மதக் கொள்கையை கடைப்பிடித்தாலும் சரி, அது உங்கள் விருப்பம்.

ஏனென்றால் திருக்குர்ஆன் அழகாக சொல்லிவிட்டது.

உங்களுக்கு உங்கள் மார்க்கம்.

எங்களுக்கு எங்கள் மார்க்கம்.

மேலும் தவறான வழியில் இருந்து நேர்வழி தெளிவாக எடுத்து கூறப்பட்டு விட்டது.

இனி எல்லாமே மனிதனின் கையில் தான் இருக்கிறது.

மேலும்

நன்மையின் கூலி நன்மையை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்.

எனவே

இஸ்லாம் மீதும் முஸ்லிம்கள் மீதும் இருக்கும் தவறான கருத்துக்களை மனதில் இருந்து அகற்றி விட்டு அன்பை விதையுங்கள் தோழர்களே.

அதன்மூலம் மனிதர்கள் மத்தியில் சமூக நல்லிணக்கம் மிக ஆழமாக வளரும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

Saturday, July 2, 2016

மனித நேயம் - ஒற்றுமை ...!

எங்கு மனித நேயம் இருக்கிறதோ, அங்கு ஒற்றுமை நிலவும்: 

முதலமைச்சர் ஜெயலலிதா பேச்சு....!


சென்னையில் அ.தி.மு.க. சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நந்தம்பாக்கம், மவுண்ட் பூந்தமல்லி சாலையில் உள்ள சென்னை வர்த்தக மைய வளாகத்தில் உள்ள கன்வென்சன் ஹாலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஜெயலலிதா கலந்துகொண்டார்.

விழாவில் ஜெயலலிதா ஆற்றிய பேருரை:-

இறை நம்பிக்கை, தொழுகை, நோன்பு, தர்மம், ஹஜ் ஆகியவை இஸ்லாத்தின் ஐந்து முக்கியக் கடமைகள் ஆகும்.

இவற்றில், இறை நம்பிக்கை, தொழுகை, தர்மம், ஹஜ் போன்றவை வெளிப்படையாகத் தெரியக் கூடியவை.


ஆனால், ஒருவர் நோன்பாளியா இல்லையா என்பதை மற்றவரால்  வெளிப்படையாக அடையாளம் காண முடியாது. யார் நோன்பாளி என்பதை எல்லாம் வல்ல இறைவன் நன்கு அறிவார்.

"நோன்பு நோற்பவர்களுக்கு நானே நேரடியாக கூலியைக் கொடுப்பேன்" என்று எல்லாம் வல்ல இறைவன் உறுதி அளிக்கிறார்.

 இறைவனே நேரடியாக பலன் தரும் இந்த நோன்புக் கடமை மிக வலிமையும், புனிதமும் கொண்டது.

"இறை நம்பிக்கை கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது, நோன்பு கடமை ஆக்கப்பட்டது போல உங்கள் மீதும் நோன்பு கடமை ஆக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்." என திருமறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பதன் மூலம் அகமும், புறமும் தூய்மை அடைகிறது.

தூய்மை அடைவதன் மூலம் இறைப் பற்றும், அன்பும் மேலோங்குகிறது.

 தர்ம சிந்தனை தழைத்தோங்குகிறது. இதன் மூலம் இறைவன் அருளை நாம் பெற முடிகிறது.

இறைவனை எப்போதும் உள்ளத்தில் கொண்டுள்ளவர்கள் இறைவனால் காக்கப்படுவர்.

இறைப் பற்று உள்ளவர்களை  எந்த துன்பமும் அணுக இயலாது.  


இஃப்தார் நோன்பு திறப்பு  கொடையையும், அன்பையும் பறை சாற்றுகிறது.

எங்கு அன்பு இருக்கிறதோ, அங்கு மனித நேயம் இருக்கும்.

எங்கு மனித நேயம் இருக்கிறதோ, அங்கு ஒற்றுமை நிலவும். அறம் தழைக்கும்.  ஏழ்மை விலகும். நன்மை பெருகும்.

இறை நம்பிக்கையுடைய, இஸ்லாமியப் பெருமக்களாகிய நீங்கள், இஸ்லாமிய நெறிமுறைகளைக் கடைபிடித்து  இறைவனின் விருப்பத்திற்கேற்ப மனித நேயத்திற்கும், அன்பிற்கும், எடுத்துக்காட்டாக நிச்சயம் விளங்குவீர்கள்.

தொகுப்பு....
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்