Thursday, July 21, 2016

நெருப்புடா.....!

நெருப்புடா.....!


மெரினா சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம்.

மெரினாவில் கூட்டம் அதிகம் என்பதால் பல வழிகள் ஒரு வழிப்பாதையாக மாற்றி போக்குவரத்து காவலர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.

திடீரென ஒரு காவலர் எங்களைப் பார்த்து ஏய் நில்லு.

யோவ் திரும்பப் போ..

என கையை நீட்டியபடி கோபத்துடன் கர்ஜனை செய்தார்.

அப்போதுதான் அது ஒருவழிப் பாதை என எங்களுக்கு புரிந்தது.

சரி, வண்டியை திருப்பிக் கொண்டு சொல்லலாம் என முடிவு செய்து கிளம்பினோம்.

வாகனத்தை ஓட்டிய கவிஞரும் பத்திரிகையாளருமான சம்பந்தன் முரளி, ஏய் என எங்களை அழைத்த போக்குவரத்து காவலரை நோக்கி வண்டியை ஓட்டி நிறுத்தினார்.

அத்துடன் அந்த காவலரை பார்த்து என்ன சொன்னீர்கள்.

ஒரு அரசு ஊழியர் இப்படி மரியாதை குறைவாக பொதுமக்களை அழைக்கலாமா என கோபம் கலந்த புன்னகையுடன் சீறினார்.

உடனே சுதாகரித்துக் கொண்ட அந்த போக்குவரத்து காவலர் தாம் அப்படி அழைக்கவில்லை என்றும் எங்களுக்கு தவறாக கேட்டதாகவும் விளக்கம் அளித்தார்.

சார் என தாம் கூறியதை நாங்கள் யோவ் என நினைத்துக் கொண்டதாகவும் கூறினார்.

நாங்கள் பத்திரிகையாளர் என்பதை தெரிந்துகொண்ட அந்த காவலர் உடனே பல்டி அடித்து சமரச நிலைக்கு வந்துவிட்டதால் நாங்கள் உடனே அங்கிருந்து கிளம்பினோம்.

அதேநேரத்தில், பொதுமக்களிடம் இதுபோன்று கண்ணியம் குறைவாக நடப்பது சரியல்ல என அந்த காவலரிடம் கூறினார் சம்பந்தன் முரளி.

அநியாயம் நடந்தால் சும்மா பார்த்துக் கொண்டு இருக்க முடியுமா என்ன.

சம்பந்தன் முரளி, ஒரு நெருப்புடா...!

S.A.Abdul Azeez 
Journalist.

No comments: