Sunday, June 26, 2011

கூடுதல் தங்க நகை கேட்ட மணமகன் திடீர் மாயம் - திருமணம் நின்றதால் கலங்கி நிற்கும் மணமகள்: சென்னையில் நடந்த சோகம்.

ஆசை ஆசையாய் வளர்த்த மகளின் திருமணத்தை பார்க்க துடித்த தந்தை.
கூடுதல் நகை கேட்டு திடீரென மாயமான மணமகனால் திருமணம் தடைப்பட்டு கலங்கி நிற்கும் பரிதாபம்.
புகார் கொடுத்தும் மூன்று நாட்கள் அலைக்கழிக்க வைத்து வழக்குப்பதிவு செய்த போல¦சார்.

ஆன்லைன் விளம்பரங்கள் மூலம் பெண்ணுக்கு வரன் தேடும் கலாச்சாரம் தற்போது அதிகரித்து வருகிறது.
இப்படி ஆன்லைன் மூலம்  பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடும் பலர், கடைசியில் ஏமாற்றத்திற்கே ஆளாகி வருகின்றனர். 
பொய்யான தகவல்களை அள்ளி தரும் ஆன்லைன் விளம்பரங்கள், பல பெண்களின் வாழ்க்கையில் புயலை ஏற்படுத்தி விடுகின்றன.
திருமண தகவல் மையங்கள் என்ற பெயரில்  இண்டர்நெட் ஆன்லைனில் வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள்,  உண்மையில் போலியானவை என்பது திருமணத்திற்கு பிறகு தெரிய வருகிறது.
நல்ல வசதிப் படைத்த பெண்களை மட்டுமே  தேடும், சிலர் ஆன்லைன் மூலம்  லட்சக்கணக்கில் சம்பாதிப்பதாக கூறி ஏமாற்றி வருகின்றனர்.
இதை,  நம்பும் பெண்ணின் பெற்றோர்களும் தடல்புடலாக செலவு செய்து திருமணத்தை நடத்தி வைக்கின்றனர்.
ஆனால், திருமணத்திற்கு பிறகு உண்மை வெளிச்சத்திற்கு வந்து மணம் முடித்த பெண்ணின் வாழ்க்கையே  சூனியமாகி விடுகிறது.
இப்படிதான், சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த பெண் திவ்யா,  ஆன்லைன் விளம்பரம் மூலம் இன்று ஏமாற்றம் அடைந்து உள்ளார். 
பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்ட இளைஞன் ஒருவன், வரதட்சணையாக கூடுதலாக 100 பவுன் தங்க நகை கேட்டும், அதையும் கொடுக்க தயாராக இருந்தார் திவ்யாவின் தந்தை.
திருமண மண்டபத்தில், உறவினர்கள், உற்றார்கள் சூழ்ந்து இருக்க, கழுத்தில் தாலி ஏறப்போகிறது என்ற மகிழ்ச்சியில், மணமகள் திவ்யா கனவுடன் மிதந்து கொண்டிருக்க, ஆனால் நடந்ததோ வெறும் சோகம்தான். 
திருமண நாள் அன்று, திடீரென மாயமானார் மணமகன். என்ன காரணம் என்றே புரியவில்லை மணப்பெண்ணுக்கு.
போல¦சில் புகார் கொடுத்தும், மூன்று நாட்கள் அலைக்கழித்து கடைசியில் வழக்குப்பதிவு செய்தது காவல்துறை.
இப்படி, தொடர் சோகங்களால், மகிழ்ச்சி துள்ளிக் கொண்டிருந்த ஒரு நல்ல அமைதியான குடும்பத்தில் இன்று வெறும் மயான அமைதியே  காணப்படுகிறது.
சென்னை பெண் திவ்யாவுக்கு  நடந்த அந்த சோகக் கதையை இப்போது பார்க்கலாம்.



சென்னை ஆதம்பாக்கம் டெலிபோன் காலணி, கணேஷ் நகரில் உள்ள முதல் மெயின் ரோட்டில்  வசிப்பவர் ஆறுமுகம்.
ஓய்வு பெற்ற அரசு ஊழியரான ஆறுமுகத்தின் மனைவி மங்கையர் அரசி.
இந்த தம்பதிக்கு, பல ஆண்டுகளுக்கு பிறந்த ஒரே பெண்தான் திவ்யா
(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.)
செல்லக் குழந்தை திவ்யாவை ஆசை, ஆசையாய் அன்பு பாலூட்டி வளர்த்தனர் ஆறுமுகம்-மங்கையர் அரசி தம்பதி.
நன்றாக படித்த திவ்யாவை எம்.பி.ஏ.வரை படிக்க வைத்தார் ஆறுமுகம்.
சொந்த வீடு, நிலப்புலன்கள் என நன்கு வசதி இருந்ததால், நல்ல வசதியான இடத்தில், தன்னுடைய  ஆசை மகள் திவ்யாவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார் ஆறுமுகம்.
இதற்காக பல இடங்களில் வரன்களை தேடி வந்த ஆறுமுகம், இண்டர்நெட்டையும் விட்டு வைக்கவில்லை.
இண்டர்நெட்டில் ஆன்லைன் மூலம் பல தனியார் திருமண தகவல் மையங்களின் விளம்பரங்கள்  வருவது ஆறுமுகத்தின் கண்ணிலும்  பட்டன.
ஆசை மகள் திவ்யாவுக்கு அழகான,  படித்த, வசதியான மாப்பிள்ளை கிடைத்தால் நன்றாக இருக்கும் என ஆறுமுகம் நினைத்தார்.
இப்படி, ஆன்லைன் மூலம் பெண் திவ்யாவிற்கு வரன் தேடிக் கொண்டிருந்தபோது, ஒரு தனியார் திருமண ஏஜென்சியின் விளம்பரம் பார்த்து மகிழ்ந்து போனார் ஆறுமுகம்.
மும்பை ஐ.டி.நிறுவனத்தில் மாதம் 45 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் பையனுக்கு மணமகன் தேவை என விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது.
வசதியான தன்னுடைய மகளுக்கு நல்ல வரன் கிடைத்து விட்டதாக நினைத்தார் ஆறுமுகம்.
உடனே, விளம்பரம் கொடுத்த  தனியார் திருமண தகவல் மையத்தை தொடர்பு கொண்டு, பையனின் முகவரியை வாங்கிக் கொண்டார்.
இதற்கான கமிஷன் கட்டணமாக அந்த திருமண தகவல் மையத்திற்கு 2 ஆயிரத்து 700 ரூபாயும் கொடுத்தார் ஆறுமுகம்.
விளம்பத்தில் இருந்த பையனின் வீடு பெரம்பூர் தண்டலம் பகுதியில் இருந்தது.
அங்கு சென்று விசாரித்தபோது, பையனின் பெயர் சதீஷ் என்பது தெரிய வந்தது.
எம்.பி.ஏ. படித்த சதீஷின் தந்தை காலமாகி விட்டதால், அவரது தாயார் சந்திரிகாவுடன் வசித்து வந்தார் சதீஷ்.  கூடவே, தாத்தா ராமனுஜம், பாட்டி கந்தா ஆகியோரும் இருந்து வந்தனர்.
சதீஷ்க்கு சென்னையில் சொந்த வீடு. இப்படி அனைத்தும் நன்றாகவே பட்டது ஆறுமுகத்திற்கு.
மேலும் தங்களது பூர்விகமான வேலூரைச் சேர்ந்தவர் சதீஷ் என்பதும்  தெரியவந்தது.
ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் ஆறுமுகத்திற்கு மேலும் நம்பிக்கை பிறந்து மகிழ்ச்சி கூடியது.
சரி, வரனை பேசி முடித்து விடலாம் என முடிவு செய்தார். 
தனக்கு ஒரே பெண் என்பதால், மணமகன் வீட்டில் கேட்டப்படியே மணமகனுக்கு 100 பவுன் தங்க நகை, 5 கிலோ வௌ¢ளி ஆகியவை வரதட்சணையாக கொடுக்க சம்மதம் தெரிவித்தார்.
ஏராளமான தட்டுமுட்டு சாமான்கள், கட்டில் பிரோ என அனைத்தையும் கொடுக்கவும் ஒப்புக் கொண்டார்.
மணமகன் சதீஷுக்கு ஆறுமுகத்தின் பெண் திவ்யா பிடித்து போனதால், கடந்த மார்ச் மாதம் 6 ஆம் தேதி  மணமகனின் வீட்டாரின் விருப்பப்படியே, கோயம்பேட்டில் உள்ள பெரிய ஹோட்டலில் தடல்புடலாக நிச்சயதார்த்தம் நடத்தி வைத்தார் ஆறுமுகம்.
நிச்சயதார்த்திற்கு பிறகு அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டனர் திவ்யாவும் சதீஷ்சும்.
இரண்டு மாதத்திற்கு பிறகு, கடந்த 15 ஆம் தேதி சென்னை ராமாபுரத்தில் உள்ள ஜீவன் ஜோதி மகாலில் வரவேற்பு நிகழ்ச்சியும், மறுநாள் திருமணம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, திருமண அழைப்பு பத்திரிகையும் அச்சடிக்கப்பட்டு, உற்றார், உறவினர்கள் என அனைவருக்கும் அனுப்பி வைத்தார் ஆறுமுகம்.
நேரில் சென்றும் மகளின் திருமணத்திற்கு அவசியம்  வந்து வாழ்த்த வேண்டும் என உறவினர்கள் அனைவரையும் கேட்டுக் கொண்டார்.
திருமண வரவேற்பிற்காக, 15 ஆம் தேதி மாலை முதலே ஜீவன் ஜோதி மகாலில் கூட்டம் கூட ஆரம்பித்தது.
மணமகள் வீட்டில் அனைவரும் வந்து மாப்பிள்ளைக்காக காத்துக் கொண்டு இருந்தனர்.
மாப்பிள்ளை அழைப்புக்கான நேரம் நெருங்கிக் கொண்டு இருந்தது.
ஆனால் மாப்பிள்ளையோ, அவரது தாய் மற்றும் உறவினர்களோ ஏனோ வரவேயில்லை. 
துடிதுடித்து போனார் ஆறுமுகம். என்ன விஷயம் என்று அவருக்கு புரியவில்லை.
மாப்பிள்ளை சதீஷ் வீட்டிற்கு போன் செய்து கேட்கலாம் என முடிவு செய்தார்.
போன் செய்தபோது, எதிர்முனையில் மணி அடித்ததே தவிர, யாருமே எடுக்கவில்லை.
உற்றார், உறவினர்கள் என நூற்றுக்கணக்கானோர், திரண்டு இருக்க, மாப்பிள்ளை வராதது பெரும் அவமானமாகவே போனது ஆறுமுகத்திற்கு.
உடனே, கார் ஒன்றை எடுத்துக் கொண்டு, மாப்பிள்ளை சதீஷ் வசிக்கும் பெரம்பூர் வீட்டிற்கு ஓடினார்.
அங்கு சென்று பார்த்தபோது, வீடு பூட்டப்பட்டு இருந்தது.
அதிர்ச்சி அடைந்தார் ஆறுமுகம். அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது, யாரும் சரியாக பதில் சொல்லவில்லை.
100 பவுன் தங்க நகை, 5 கிலோ வௌ¢ளி , மாப்பிள்ளைக்கு 20 பவுன் நகை என அனைத்து கொடுக்க தயாராக இருந்தும், மேலும் 100 பவுன் நகை கொடுக்க வேண்டும் என மாப்பிள்ளையின் மாமன் ராகவன் டிமாண்ட செய்து இருந்தார்.
அதையும் கொடுக்க தயார் என உறுதி அளித்தார் ஆறுமுகம்.
இப்படி, ஒரே பெண்ணிற்காக தனது சொத்து பத்து அனைத்தும் கொடுக்க தயாராக இருந்தும், திடீரென மாப்பிள்ளை சதீஷ் மாயமானது பெரும் அதிர்ச்சியுடன் அவமானத்தையும் தந்தது ஆறுமுகத்திற்கு.
என்ன செய்வது என்றே தெரியவில்லை. உற்றார் உறவினர்களுக்கு என்ன பதில் சொல்வது என்றே ஆறுமுகத்திற்கு புரியவில்லை.
அதைவிட கல்யாண கனவுகளை சுமந்துக் கொண்டு இருக்கும் தனது பெண் திவ்யாவை எப்படி ஆறுதல் கூறி தேற்றுவது என்று விளங்காமல் தவியாய் தவித்தார் ஆறுமுகம்.
கூடுதலாக 100 பவுன் நகை கேட்ட மணமகன் சதீஷ், குடும்பத்துடன் மாயமானதால், திவ்யாவின் திருமணம் நின்று போனது.
மணநாள் அன்று, மாயமான மணமகன் சதீஷ் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் முதலில் நந்தம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார் ஆறுமுகம்.
ஆறுமுகத்தின் வீடு ஆதம்பாக்கத்தில் இருப்பதால் அங்குச் சென்று புகாரை பதிவு செய்யும்படி கூறினர் நந்தம்பாக்கம் போல¦சார்.
உடனே, ஆதம்பாக்கம் காவல்நிலையத்திற்கு  சென்ற ஆறுமுகம், அங்கும் ஒரு புகார் மனுவை அளித்தார்.
புகாரை பெற்றுக் கொண்ட ஆதம்பாக்கம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பழனிவேல், விசாரணை குழு அமைத்து தேடுதல் வேட்டை தொடங்கினாலும், மணமகனின் வீடு பெரம்பூர் பகுதியில் உள்ளதால், அங்குச் சென்று புகார் செய்யுங்கள் என பரிந்துரை செய்தார்.
இப்படி, போல¦சாரால் அலைக்கழிக்கப்பட்ட ஆறுமுகம், வேதனையை சுமந்துக் கொண்டு, நேராக சென்னை மாநகர போல¦ஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று நடந்த விவரங்களை எழுதி புகார் அளித்தார்.
ஆனால், ஆதம்பாக்கம், புறநகர் பகுதியில் இருப்பதால், புறநகர் காவல் ஆணையரிடம் புகார் அளிக்கும்படி சென்னை காவல் ஆணையர் அலுவலக ஊழியர்கள் கூறி ஆறுமுகத்தை அனுப்பி வைத்தனர். 
உடனே புறநகர் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு ஓடோடி சென்ற ஆறுமுகம், ஆணையர் கரண் சிங்காவை சந்தித்து மணமகன் மாயமானது குறித்து புகார் அளித்தார்.
காவல் ஆணையர் கரண் சிங்காவை உடனே, ஆதம்பாக்கம் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு, மேல் நடவடிக்கை எடுக்கும்படி ஆணையிட்டார்.
இப்படி, தன் மகளின் திருமணம்,  மணமகன் அதிக வரதட்சணை கேட்டு, திடீரென மாயமானதால் தடைப்பட்டு, வேதனையின் உச்சியில்  இருந்தபோது, அது குறித்த புகாரை வாங்காமல் அனைத்து காவல்நிலையத்திலும் அலைக்கழிக்கப்பட்டது ஏன் என்றே ஆறுமுகத்திற்கு  விளங்கவில்லை.
ஆதம்பாக்கம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பழனிவேல், மூன்று நாட்களுக்கு பிறகு மாயமான மணமகன் சதீஷ் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் கடந்த 17 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினார்.
ஆனால், இந்த மூன்று நாட்களில் ஆறுமுகமும், அவரது மனைவி மங்கையர் அரசியும் அடைந்த மனவேதனைக்கு என்ன மருந்து.
ஒரே பெண்ணிற்காக அனைத்தும் தியாகம் செய்ய தயாராக இருந்தும், கூடுதலாக 100 பவுன் தங்க நகை கொடுக்க தயார் என்று கூறியபோதும், மணமகன் சதீஷ் ஏன் மாயமாக வேண்டும்.
உண்மையில் என்னதான் நடந்தது. மணமகன் சதீஷைப் பற்றி விசாரித்தபோது, பல உண்மையாக வெளிவர ஆரம்பித்தன.
சதீஷ் உண்மையில் மும்பை ஐ.டி.கம்பெனியில் பணி செய்யவில்லை என்பதும், எம்.பி.ஏ. படிக்கவில்லை என்பது தெரியவந்தது. அவருக்கு மாதம் 45 ஆயிரம் சம்பளமும் இல்லை.
இப்படி, பொய்யான தகவல்கள், இண்டர்நெட் ஆன்லைன் விளம்பத்தில் கொடுத்த ஏமாற்றி இருக்கிறார் சதீஷ்.
இண்டர்நெட்டில் விளம்பரம் செய்த தனியார் திருமண தகவல் மையமோ, தன்னுடைய கமிஷன் தொகையை பெற்றுக் கொண்டு, தவறான தகவலால் ஒரு நல்ல பெண்ணின் வாழ்க்கையை சிரழித்து உள்ளது.
வரவேற்பு நிகழ்ச்சிக்காவும், திருமணத்திற்காகவும், மணமகளின் உறவினர்கள் வந்து காத்துக் கொண்டு இருக்க,  மணமகன் சதீஷ்  வராமல் மாயமானது, எவ்வளவு பெரிய அவமானம்.
ஒரு இளம் பெண் திவ்யாவால்  இதை எப்படி தாங்கிக் கொள்ள முடியும்.
நல்ல கலகலப்பாக இருந்த ஆறுமுகத்தின் குடும்பத்தில் இன்று வெறும் மயான அமைதியே நிலவுகிறது.
தமிழ் பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றிக்கு எதிரான வரதட்சணை என்ற அரக்கணை, பெண்ணின் நலனுக்காக கொடுக்க ஆறுமுகம், தயாராக இருந்தும் அதற்கு மேலும் கொடுக்க வேண்டும் என கூறிய மணமகன் சதீஷ், திடீரென மாயமானதில் பல புதிர்கள் புதைந்து கிடைப்பதாகவே தெரிகிறது.
இதுபோன்று பல பெண்களின் வாழ்க்கையில் சதீஷ் விளையாடி இருக்கலாம்.
இதெல்லாம், சதீஷையும் அவரது குடும்பத்தினரையும் கைது செய்து காவல்துறை நடத்தும் விசாரணையின் மூலம் மட்டுமே தெரிய வரும்.
நல்ல வரதட்சணை கொடுக்க தயாராக இருந்தும், திடீரென ஓடிய மணமகன் சதீஷை இனி திருமணம் செய்துக் கொள்ள மாட்டேன் என கூறியுள்ளார் மணப்பெண் திவ்யா.
அதிக பணமும், நகையும் கொடுத்து சதீஷை திருமணம் செய்துக் கொள்வதால், தன்னுடைய வாழ்க்கைக்கு உத்தரவாதம் இல்லை என அடித்துக் கூறுகிறார் திவ்யா.
திருமண நடக்க வேண்டிய ஒரு நாளுக்கு முன்பு குடும்பத்துடன் மாயமான சதீஷ் மீது இனி காவல்துறைதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் திவ்யா.
இப்படி துணிச்சலாக திவ்யா கூறினாலும், அவரது மனம் பெரிதும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
ஆறுமுகம்-மங்கையர்அரசி தம்பதியினர் மகளின் திருமணம் தடைப்பட்டதால், கண் கலங்கி கண்ணீர் சிந்துகின்றனர்.
ஆன்லைனில் பொய்யான திருமண விளம்பரங்களை அள்ளி வீசும் தனியார் திருமண தகவல் மையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோன்ற புகார்களை அளிக்கும்போது, பல இடங்களுக்கு அலைக்கழிக்க வைக்காமல், போல¦சார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்போதுதான், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் கிடைக்கும். ஆறுதல் கிடைக்கும்.
பெண்களின் வாழ்க்கையில் இது போன்று தொடர்ந்து விளையாடும் ஆண்களை சட்டத்தின் முன் நிறுத்தி  தகுந்த தண்டனை அளிக்க வேண்டும்.
இதன் மூலம் மட்டுமே, பெண்கள் சந்திக்கும்  பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
இல்லையென்றால், பெண்களை துணிச்சலுடன் ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக் கொண்டே இருப்பார்கள்.
இளம் பெண்களின் வாழ்க்கை சிதைந்து போவது தொடர்ந்து கொண்டே இருக்கும்.

S.A.ABDUL AZEEZ

2 comments:

ragoths said...

nice story pengalukku thirumanam seiyyapogum parents avasiyam padikkavendiya story

ragoths said...

nice story pennuku kalyanam seithuvaikkum parents avasiyam paddikavendiya story