Saturday, September 10, 2016

ஒழிச்சா போதும்....!

ஒழிச்சா போதும்....!



பாரா லிம்பிக் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்று சாதனை புரிந்ததை தமிழகமே கொண்டாடி வருகிறது.

அதேநேரத்தில்,

தங்கம் வெல்லும் வரை தங்கவேலு மாரியப்பன்கள் ஏன் நம் கண்களிலேயே படுவதில்லை என முகநூல் நண்பர் Parthiban kumar வினா எழுப்பியுள்ளார்.

இது சரியான, நியாயமான கேள்வி.

இதற்கு ஒரே பதில்...

கிரிக்கெட் விளையாட்டை ஒழிச்சா போதும், இந்தியாவில் பிற விளையாட்டுகள் மக்களின் பார்வைக்கு உடனே வந்துவிடும்.

மற்ற விளையாட்டுகளுக்கு உரிய முக்கியத்துவம் தராமல் கிரிக்கெட்டிற்கு மட்டுமே, அதிக முக்கியத்துவம் கொடுத்து வருதால், பேட்மின்டன், டென்னிஸ் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுகளிலும் நம் இளைஞர்களின் கவனம் செல்வதில்லை.

ஆர்வம் செலுத்துவதில்லை.

மத்திய, மாநில அரசுகளும் பிற விளையாட்டுகளை ஊக்குவிக்க போதிய முயற்சிகளை, நடவடிக்கைகளை எடுப்பதில்லை.

இதுவரை எடுப்பதாக தெரியவில்லை.

எனவே,

கிரிக்கெட் ஒழிக்க தேவையான உடனடி நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

கிரிக்கெட்டை பிரபலப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு  தடை விதித்து, பிற விளையாட்டுகளை பிரபலப்படுத்த திட்டங்களை திட்ட வேண்டும்.

அப்படி ஒரு திட்டத்தை அடுத்த நான்கு ஆண்டுகளில் நாட்டில் செயல்படுத்தினால், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், இந்தியா பதக்க மழையில் நனையும்.

இது உறுதி.

ஆனால்,

மத்திய, மாநில அரசுகள் அதற்கான நடவடிக்கைகளை எடுக்குமா என்பது சந்தேகமே..

ஏனெனில், அனைவரும் கிரிக்கெட்டின் பின்னால் ஓடுவதையை வழக்கமாக கொண்டு பைத்தியமாக இருப்பதால், பிற விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கிடைக்குமா என்பது சந்தேகமே.

கிரிக்கெட்டை ஒழிக்க நடவடிக்கை எடுப்பது மூலம் மட்டுமே, Parthiban Kumar எழுப்பிய கேள்விக்கு தக்க பதில் கிடைக்கும்.

பிற விளையாட்டு வீரர்கள் நம் கண்களில் படுவார்கள்.

சாதனை மகுடத்தில் ஏறுவார்கள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர். 

No comments: