Wednesday, September 7, 2016

என்னத்த சொல்ல.....!

என்னத்த சொல்ல.....!


காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவு.

இந்த உத்தரவைத் தொடர்ந்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீரை கர்நாடகா அரசு திறந்துவிட்டுள்ளது.

இந்த தண்ணீர் திறப்பிற்கு எதிராக கர்நாடகாவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக, தமிழர்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருவது மிகவும் வேதனை அளிக்கிறது.

அதிலும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை குறி வைத்து, கர்நாடக மக்களில் சிலர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவது கண்டனத்திற்குரியது.

தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் தண்ணீர் திறந்துவிட உத்தரவு பிறப்பித்ததை, கர்நாடக மக்கள் குறை கூறுவது எப்படி நியாயம் என சொல்லலாம்...


ஒரு மாநில மக்கள் தண்ணீருக்காக ஏங்கி தவிக்கும் நிலையில், பக்கத்து மாநிலம் சிறிது தண்ணீர் கூட தர மறுப்பது எப்படி சரி என சொல்லலாம்.

மனித நேய அடிப்படையில் கூட கர்நாடக மக்களின் போராட்டம் நியாயமானதாக தெரியவில்லை.

வாழு, வாழ விடு என்ற தத்துவத்தை கூட கர்நாடக மக்கள் கடைப்பிடிக்க விரும்பவில்லை என்பது அவர்களின் தொடர் போராட்டங்கள் மூலம் தெரிகிறது.


தண்ணீர் விஷயத்தில், தமிழர்கள் மீது மிகப் பெரிய அளவுக்கு வெறுப்புணர்ச்சி கர்நாடக மக்களில் சிலருக்கு இருந்து வருவது மிகவும் வெட்கப்பட வேண்டிய விஷயம்.

இந்த போக்கு நீண்ட நாட்களுக்கு  நீடிப்பது சரியல்ல.

ஒரே நாட்டைச் சேர்ந்த மக்கள், இப்படி தண்ணீருக்காக அடித்துக் கொண்டு வெறுப்புகளை வளர்த்துகொள்வது வரும் காலத்தில் மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.


காவிரியில் தண்ணீர் திறப்பிற்காக கர்நாடக மக்கள் நடத்தும் போராட்டங்களை என்னவென்று சொல்வது...

வேதனைதான் அளிக்கிறது....

S.A.Abdul Azeez
Journalist 

No comments: