Thursday, October 22, 2026

முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வு - பில் கிளிண்டன் கண்டனம்...!

 முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வுகளுக்கு

  முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் கடும் கண்டனம்

மத சமூகங்களுக்கு இடையே சிறந்த புரிதலுக்கு அழைப்பு 

புளோரிடா, அக்.23- முஸ்லிம்களாக வாழ்வதற்காகவே அவர்களை இழிவுபடுத்தும் மக்களால்  தான் மிகவும் சோர்வடைந்துவிட்டதாக முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் வேதனை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கொய்னோனியா வழிபாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாட்டைக் கண்டித்து குர்ஆனின் வசனத்தை மேற்கோள் காட்டினார். 

பில் கிளிண்டன் வேதனை :

புளோரிடாவின் புரோவர்ட் கவுண்டியில் உள்ள ஹாலிவுட்-பெம்ப்ரோக் பார்க் பகுதியில் அமைந்துள்ள கொய்னோனியா வழிபாட்டு மையத்தில், அக்டோபர் 20, 2026, செவ்வாய்க்கிழமை மாலை, "பல்வேறு நம்பிக்கைகள் ஒரே புளோரிடா” என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.  இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசிய முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டன், முஸ்லிம்களாக இருப்பதற்காகவே அவர்களை இழிவுபடுத்தும் மக்களால் தான் மிகவும் சோர்வடைந்துவிட்டதாக வேதனை தெரிவித்தார். 

திருக்குர்ஆன் வசனம் மேற்கோள் :

இஸ்லாத்தின் புனித நூலான குர்ஆனில் தனது மகள் செல்சியா கொண்டிருந்த ஆர்வத்தை நினைவு கூர்ந்த கிளிண்டன், தனது 15 வயதில் செல்சியா குர்ஆனை முழுமையாகப் படித்ததாகவும், பின்னர் தன்னையும் அதைப் படிக்க ஊக்குவித்ததாகவும் கூறினார். மனிதகுலம் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காகவே வெவ்வேறு மக்களாகவும் கோத்திரங்களாகவும் படைக்கப்பட்டது என்று விளக்கும் சூரா அல்-ஹுஜுராத்தின் 13-வது வசனத்தை தனது உரையில் அவர் மேற்கோள் காட்டி பேசினார். 

"மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும், ஒரு பெண்ணிலிருந்தும் படைத்தோம். இன்னும் நீங்கள் ஒருவரையொருவர் அறிந்துகொள்ளும் பொருட்டு உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தான் அல்லாஹ்விடம் மிக கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன்; சூழ்ந்தறிபவன்"  என்ற வசனத்தை அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.  

===================

"முஸ்லிம்களாக இருப்பதற்காகவே அவர்களை இழிவுபடுத்தும் மக்களால் நான் மிகவும் சோர்வடைந்துவிட்டேன்"

 ===================

சமூகங்களுக்கு இடையே பகைமையைக் காட்டிலும் பரஸ்பர புரிதலின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்ட கிளிண்டன் அந்தப் பகுதியைப் பயன்படுத்தினார். மேலும் தனது மகள் செல்சியா தனக்கு அந்த வசனத்தை அறிமுகப்படுத்தியதை கிளிண்டன் நினைவு கூர்ந்தார். முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் இந்த உரை உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


Never...!

Never see what has been done. Only see what remains to be done.



கல்வி....!

 கற்கையில் கல்வி கசப்பு. 

கற்ற பின் அதுவே இனிப்பு. 

வாழ்க்கையில் ஒரு அமிர்தம். 

வாழ்க்கை நம்மிடம் 

வசப்பட வேண்டுமானால், 

கல்வி மிகமிக அவசியம்.



Gaza...!

 The situation in the Occupied Palestinian Territory is out of control.

In Gaza, essential aid is still being severely restricted by Israel.

In the occupied West Bank, Palestinians continue to suffer daily attacks by Israeli settlers and journalists & diplomats are being attacked.

There must be a credible political path towards lasting peace, ending the occupation and realizing a two-State solution, with Israel & Palestine living side by side in peace & security.



பிஸி...!

 பிஸியான ஊடகப் பணி...!

நா ரொம்ப பிஸி....

பிஸி மீன்ஸ் பிஸி....



Media...!

 ஊடகவியலாளர்....!



மீடியா....!

 ஊடகவியலாளர்....!



திறமை...!

 சும்மா பாருங்க....!

திறமையோ....திறமை...!!



Wednesday, October 21, 2026

Bill Clinton - Isalm...!

 Oh, glory be to God!

Bill Clinton: Former President of America

“I am tired of people who insult Muslims just for being Muslims.

The Holy Quran says—and I heard this verse for the first time from my daughter, who read the entire Quran from beginning to end when she was fifteen years old, and she said to me: ‘Read this.’

God made people into different nations on this earth, not so that they would despise one another, but so that they would come to know each other and learn from one another.

There are people who commit bad deeds in every religion, because we are all human and not infallible from error.

But I am tired of religious wars, and cultural conflicts. I am truly tired of them.”

Clinton is speaking about verse 13 of Surah Al-Hujurat:

(O mankind, indeed We have created you from male and female and made you peoples and tribes that you may come to know one another)



Success...!

Don't worry about what others are doing better than you. Concentrate on beating your own records everyday. 

Success is a battle between you and yourself only.



Hitler...!

 H I T L E R.....!

Once upon a Time there was Hitler....

1. Hitler had not got married

2. Hitler used to think that people of certain religion were enemies of the country

3. Hitler’s supporters could not tolerate any criticism against him

4. Hitler used to paint and sell colours in his childhood

5. All the means of publicity, newspapers, magazines were devoted to publicise Hitler

6. Hitler had crushed all Labour movements

7. Hitler used to call his rivals anti-nationals/traitors

8. Hitler had joined the Nazi party as an ordinary worker and gone on to finish all his rivals and had become the leader of the party

9. Hitler had come to power campaigning that he would end all problems in a jiffy

10. Hitler, after he came to power could not manage to end any problems, but he certainly managed to destroy Germany

11. Hitler had come up with a slogan to come to power---Good Times will Come—Acche din aayenge!

12. Hitler’s party when it won, he went to the German Parliament for the first time and cried profusely

13. Hitler had come to power lying

14. Hitler used to love dressing up and look good

15. Hitler had the consummate art of making lies look like truth

16. Hitler always used to say, I, me, I, me, I, me always

17. Hitler used to love giving speeches on Radio

18. Hitler used to have a lover whom he used to get spied on

19. Hitler always used in his speeches “friends, friends””(mitron, mitron)

20. Hitler used to love getting photographed.

P.S: This post is just and just about Hitler. If this post feels like it has any resemblance to anybody else except Hitler, you can blame it on your own imagination

ஒளரங்கசீப்....!

 மாமன்னர் ஔரங்கசீப்.....! வரலாற்று உண்மைகள்.....!!

ஔரங்கசீப் இராஜபுத்திர இளவரசியின் பேரன். அவரின் நான்கு மனைவியரில் இருவர் இந்துக்கள். அவரின் நம்பிக்கைக்குரிய இரண்டு உயர் பெரும் தளபதிகள் லி ஜெய்சிங், ஜஸ்வந்த் சிங் இந்துக்கள் ஆவர். முகுந்த்சிங் ஹாதா, ரத்தன்சிங், தயாள்சிங், ஜல்லா, அர்சுன் சிங், குமார்சிங் ஆகியோர் அவர் படையிலே இருந்த பல இந்து தளபதிகள்.

மேலும், அவரின் நிர்வாகத் துறையில் எண்ணற்ற இந்துக்கள் இருந்தனர். அவர்களில் பலர் மிக உயர்நிலையில் இருந்தனர். அவருடைய 393 மன்சப்தார்களில் 182 பேர் இந்துக்கள். இவர்கள் 1000 முதல் 7000 குதிரை வீரர்களின் அதிபதிகள்.

அக்பர் காலத்திலோ அல்லது ஷாஜஹான் காலத்திலோ இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் இந்து மான்சப்தாரிகள் முகலாய படையில் இருந்ததில்லை. ஒளரங்கசீப் ஒரு அதிதீவிர மதசகிப்பற்ற முஸ்லிமாக இருந்திருந்தால் இது எல்லாம் எங்ஙனம் நடந்திருக்கும்?

இதுமட்டுமல்ல. ஒளரங்கசீப் இந்துக் கோயில்களுக்கு மானியமும் இந்துத் துறவிகளுக்கு ஆதரவும் அளித்துள்ளார். உஜ்ஜனியின் பாலாஜி ஆலயம் சாவஹத்தியிலுள்ள உமானநித் கோயில், சந்குஞ்சயின் ஜைனர்கள் கோயில், வாரனாசி ஜங்கம்பதி சிவன் கோயில் ஆகியன ஒளரங்கசீப்பினால் மானியங்கள் அளிக்கப்பட்ட பல நூறு கோயில்களில் சில. தமிழகத்தைச் சேர்ந்த குமரகுருபரர் காசியிலும் மடம் அமைத்து சைவ மதப் பிரச்சாரம் செய்ய ஒளரங்கசீப் உதவினார். ஒளரங்கசீப்பின் ஆட்சியின் போது லஷ்மிலால், பாபாலால், வைராஜா, விப்ரயோத் என்னும் நூலின் ஆசிரியர், இன்னும் பற்பல இந்துமத போதகர்கள் எல்லாம் யாதொரு தீங்குமின்றி தங்கள் மதக்கருத்துகளை பரப்பி வந்தனர். வைணவம் வளர்ந்தது. ஒளரங்கசீப்போ அவரின் அதிகாரிகளோ இவர்களை தடைப்படுத்தவில்லை.

ஒளரங்கசீப் ஒரு முஸ்லிம் என்பதால், "உங்கள் மதம் உங்களுக்கு, என் மதம் எனக்கு" என்னும் இஸ்லாமிய கோட்பாட்டை தீவிரமாக பின்பற்றியவர். இதனால் கட்டாய மத மாற்றத்தை இவர் செயற்படுத்தவில்லை. சத்திரபதி சிவாஜியின் பேரன், சாம்பாசியின் மகன் ஷாகு, இவருடைய மாளிகையில் தன் ஏழாம் வயது முதல் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு வளர்ந்தார். ஒளரங்கசீப்பின் புதல்வி ஜுனைத்துன்னிசாவினால் வளக்கப்பட்டார். சிவாஜி, சாம்பாஜி, இராஜாராம் என அனைவரும் மறைந்து விட்ட நிலையில், ஒளரங்கசீப்பின் அவையிலும், முகலாயர்களின் சுற்றுச் சார்புகளிலும் சுமார் 25 ஆண்டுகள் வளர்க்கப்பட்டும், ஷாகு இந்து மதத்தை சுதந்திரமாகப் பின்பற்ற அனுமதிக்கப்பட்டதிலிருந்து, ஒளரங்கசீப்பின் தாராள மனப்பான்மை தெளிவாகப் புரியும்.

அதேபோல் இராஜபுத்திர இராணி ஹாதி, 'ஜோத்பூரை தனது வாரிசுக்கு உரிமையாக்கினார். "அங்குள்ள இந்து ஆலயங்களைத் தடுத்துவிட்டு பள்ளிவாசல்களை நிர்மாணிக்கிறேன்" என்று அந்த இந்து அரசியே சொன்னபோது... அதனை ஏற்றுக் கொள்ளாது மறுத்தவர் ஒளரங்கசீப்.

விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் கடைசி அரசர் ரங்கராயலு தானும் தனது உற்றார் உறவினர்களும், குடிமக்களும் முஸ்லிமாக மதம் மாறுவதற்கு சம்மதிப்பதாக அறிவித்த போதும் அதை ஏற்றுக் கொள்ளாதவர். ஒளரங்கசீப் குறித்து வரலாற்று மாமேதை ஜாதுநாத் சர்கார் குறிப்பிட்டுள்ளதை உற்றுநோக்கினால் ஒளரங்கசீப்பின் மதசகிப்புத்தன்மை புரியும்.

தனது பரிபாலனத்தின் கீழ் உள்ள இந்து மதத்தைச் சார்ந்த குடிமக்கள் அமைதியாக வாழவேண்டும் என்பதில் ஒளரங்கசீப் கவனமாக இருந்தார். ''பிராமணர்களையோ, மற்ற இந்து குடிமக்களையோ சட்டவிரோதமாகத் தலையிட்டு தொல்லைக்குட்படுத்தக்கூடாது'' என்பது குறித்து இவரின் பனாரஸ் ஆணை குறிப்பிடுகின்றது. பேராசிரியர் கே.கே.தத்தாவின் Islam and Indian Culture(1578 - 1802) என்றும் நூல் ஒளரங்கசீப் இந்துக்களுக்கு குறிப்பாக பிராமணர்களுக்கு மானியம் வழங்கியதையும், அதுகுறித்து பிறப்பித்த அரச ஆணைகளையும் பட்டியலிடுகிறது.

''ஒளரங்கசீப்பின் ஆட்சியின்போது பாரசீகர்கள், கிருத்தவர்கள், இந்துக்கள் ஆகிய அனைவரும் தங்களது மதக் கடமைகளை ஒழுங்காக ஆற்றிட முடிந்தது'' என்று கேப்டன் அலெக்சாண்டர் ஹாமில்டன் குறிப்பிட்டுள்ளது ஒளரங்கசீப்பின் தாராளத்தன்மையையும் மத சகிப்புத்தன்மையையும் மறுபடியும் நிரூபிக்கின்றது.

பேரரசர் ஒளரங்கசீப் படை வங்காளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது வாரணாசி வந்தடைந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து சிற்றசர்கள் மற்றும் தளபதிகள் வாரணாசியில் மொகலாய படை ஒரு நாள் தங்கினால் தங்களுடன் வந்துள்ள தங்களது குடும்பப் பெண்கள் கங்கையில் குளித்துவிட்டு காசி விஸ்வநாதரை தரிசித்து செல்ல முடியும் என்ற கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஒளரங்கசீப், தன் படை காசியில் ஓர் நாள் தங்கிச் செல்ல அனுமதியளித்தார்.

தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப இந்து அரசிகள் மூடுபல்லக்கில் சென்று கங்கையில் நீராடிவிட்டு, காசி விஸ்வநாதர் கோயில் சென்று வழிபட்டுத் திரும்பினர். ஆனால் ஆலயத்திற்கு வழிபடச் சென்ற கட்ச் இராணியை மட்டும் திரும்பவே இல்லை.

இராணியைத் தேடிக் கண்டு பிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனால் வெகுண்ட ஒளரங்கசீப், அந்த அரசியை கண்டுபிடிக்க தன் மூத்த அதிகாரிகளை அனுப்பினார். அவ்வதிகாரிகள் தீவிர தேடுதலில் ஈடுபட்டபோது விஸ்வநாதர் ஆலயத்தின் சுவற்றிலுள்ள ஒரு கணபதி சிலை மட்டும் சுழலும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதனை சுழற்றியபோது, பாதாள சுரங்கத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் திடீரென வெளிப்பட்டன. அந்த பாதாள சுரங்கத்தில் சென்று பார்த்தபோது கட்ச் அரசி கற்பழிக்கப்பட்ட நிலையில் முக்கி முனகிக் கொண்டு கிடந்தாள். விசுவநாதர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடத்திற்கு நேர் கீழே அந்தத் துயரச் சம்பவம் நடைபெற்றிருந்தது.

நடந்த சம்பவம் குறித்து விசாரித்த போது, மேற்படி கட்ச் இராணி விஸ்வநாதர் ஆலய புரோகிதரால் கற்பழிக்கப்பட்டு துன்புறத்தப்பட்டது உறுதியாகத் தெரிந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க மாமன்னர் ஒளரங்கசீப்பை வேண்டினர்.

மேற்படி விஸ்வநாதர் சிலைக்கு நேர் கீழே இருந்த சுரங்க அறையில் கற்பழிப்பு நடைபெற்று இருந்ததால், #கற்பக்கிரகத்தின்_புனிதம்_அழிந்துவிட்டதாகக்கருதி மேற்படி விஸ்வநாதர் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுவிட்டு, கர்பக்கிரக சாமி சிலை இல்லாத #தோஷம்பட்டக்கட்டிடம் (அந்தக்கோயில்) இந்து அரசர்கள் ஆதரவோடு அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, மாமன்னர் ஒளரங்கசீப்பின் ஒப்புதலுடன் இடிக்கப்பட்டது.

இந்து இளவசர்களின் கோரிக்கையின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி மிக ஆதாரப்பூர்வமானது. இதன் விரிவான விளக்கம் ஒரிசா மாநில கவர்னராக இருந்த பி.எஸ்.பாண்டே அவர்களின் இஸ்லாம் அண்ட் இந்தியன் கல்ச்சர் (Islam and Indian Culture) என்னும் நூலில் ஆதாரமாக தரப்பட்டுள்ளது.

மத சகிப்புத்தன்மையைப் பொறுத்த மட்டில் ஒளரங்கசீப்பின் உண்மையான வரலாறு வேறு, பாடநூல்கள் வாயிலாக நமக்கு போதிக்கப்படுகின்ற பொய்யான வரலாறு வேறு.

நமக்கு போதிக்கப்படுவது போல் ஒளரங்கசீப் ஒரு மதவெறியராக, இந்துக்களை துன்புறுத்துகிற ஓர் அரசராக இருந்திருப்பின் இந்துக்களை பெரும் பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டை ஐம்பது ஆண்டுகள் ஆண்டிருக்க முடியுமா?

ஒரு வைதீக முஸ்லிம் ஒருபோதும் பிற மதத்தினரை துன்புறுத்த மாட்டார். அப்படியான ஒளரங்கசீப் பற்றி பரப்பப்படும் தவறான கருத்துக்கள் இனியாவது நிற்கட்டும். இல்லையேல் விஸ்வநாத ஆலய இழி நிகழ்ச்சியைப் போன்ற பல நிகழ்ச்சிகள் வெளிவரக்கூடும்.

முனைவர் அ. தஸ்தகீர்.

(கட்டுரையாளர் பொன்னேரி அரசு கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வர், தலைசிறந்த வரலாற்றாசிரியர்)

வரலாற்று ஆதாரம்: 

பிஷம்பர் நாத் பாண்டே,

சரித்திர ஆய்வாளர் மற்றும் முன்னாள் ஒரிசா மாநில கவர்னர்

'இஸ்லாமும் இந்திய கலாசாரமும்'

Page : 70,71

மேற்கண்ட அவமானகரமான துயரச் சம்பவம் குறித்து பி.என்.பாண்டே என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.

P.N.Pande

“Aurangzeb came to Know of it. He was very much enraged. He sent his senior officers to search for the Rani. Ultimately they found that the statue of Ganesh: which was fixed in the wall was a movable one. When the statue was moved. They saw a flight of stairs that led to the basement. To their horror, they found the missing Rani dishonoured and crying. The basement was just beneath Lord Vishwanaths seat. The Rajas expressed their vociferous protests. As the crime was heinous the Rajas demanded examplary action. Aurangzeb ordered that as the sacred precinets has despoiled. Lord Viswanath may be moved to some other place. The temple be razed to the ground and the Mahant be arrested and punished.”

P.N.Pande, Islam And Indian Culture, Page 55

உறவுகள்....!

 கோபமான கேள்விகளுக்கு கூட கனிவான பதில்களை தருகிறார்கள் என்றால் அவர்கள் கோபப்பட தெரியாதவர்கள் என்பதல்ல. அவர்களின் கோபத்தை விட உங்களின் உறவை முக்கியமாக கருதுகிறார்கள் என்று அர்த்தம். உறவுகளை பேணுவோம்.



மேகம்....!

 பொன்மேகம் மின்ன...மின்ன....!



Train...!

 This is a sleeper carriage on China's 350 km/h Fuxing high-speed train!

Lie down, rest up, and race across the country at bullet-train speed!

This is what happens when your country invests in technologies instead of funding wars!



Tuesday, October 20, 2026

மழை....!

 சென்னையில் ஒரு மழைக்காலம்...!

மழை அழகு....!

இயற்கை வழங்கும் அருட்கொடை...!




Setback....!

Every setback carries the seed of a comeback. Live, laugh, love yourself.



முகம்....!

 முகத்தை, மதத்தை பார்க்காதீர்கள்....! இதயத்தை பாருங்கள்...!!


அமெரிக்காவைச் சேர்ந்த அகமது முகமது என்ற பள்ளி  மாணவன் தனது புதிய கண்டுபிடிப்பான நவீன கடிகாரத்தை தாம் படிக்கும் பள்ளிக்கு கொண்டு சென்றார். 

அதை பார்த்ததும், அதில் வெடிகுண்டு பொருத்தப்பட்டு இருப்பதாகவும் விரைவில் வெடிக்கும் என்றும் சிலர் புரளி கிளப்ப, போலீசார் வந்து அகமதை கைது செய்தனர். 

பிறகு, தீவிர விசாரணைக்கு பிறகு அகமது விடுதலை செய்யப்பட்டார். 

முஸ்லிம் சிறுவனை தீவிரவாதி என்றும் கைது செய்த அமெரிக்க போலீசாரின் இந்த நடவடிக்கை உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

கண்டனங்கள் எழுந்தன. 

இதையடுத்து, தமது அதிபர் மாளிகைக்கு சிறுவன் அகமதை வரவழைத்து, தவறுக்கு மன்னிப்பு கேட்டார் அதிபர் ஒபாமா. 

இந்நிலையில், ஒரு மனிதனின் நிறம், முகம் மற்றும் மதத்தை வைத்து அவரை எடை போடக்கூடாது என அகமது தெரிவித்துள்ளார். 

மனிதனை இதயத்தை பார்த்து அவரை எடை போட வேண்டும். 

மனித இதயத்தை பார்த்து அவனை தீர்மானிக்க வேண்டும் என அகமது கேட்டுக் கொண்டுள்ளார். 

இதயங்களின் மூலம் பிறரை எடை போடுங்கள் என்றும் தீர்மானிங்கள் என்றும் உலக மக்களை கேட்டுக் கொண்டுள்ளார் அகமது முகமது. 

அகமதின் வேண்டுகோளில் நியாயம் இருப்பது உண்மைதான். 

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

ஹமாஸ்....!

 கேள்வி......கேள்வி.....கேள்வி.....!

ஹமாஸ் ஒரு தீவிரவாத அமைப்பா?? இந்தியாவில் ஹமாஸ் தடை செய்யப்பட்டுள்ளதா??

அ.முத்துக்கிருஷ்ணன் 

ஹமாஸ் இயக்கம் 1987 ஆம் ஆண்டு சேக்கு அகமது யாசின், மற்றும் முகமது தாகா ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது. 

இஸ்ரேல் நாட்டைப் பாலஸ்தீனர்களுக்கு மீளப் பெற்றுக்கொடுத்து இஸ்ரேல், மேற்குக் கரை, காசா ஆகிய பகுதிகளை இஸ்லாமியக் குடியரசாக மாற்றுவதே ஹமாசின் முக்கிய குறிக்கோளாகத் தொடங்கப்பட்டது.

1987ல் இஸ்ரேலை ஒரு நாடாகவே ஹமாஸ் அமைப்பு கருதவில்லை, அவர்கள் இன்று வரை இஸ்ரேலை ஆக்கிரமிப்பாளர் என்கிற பதத்துடன் தான் அழைத்து வருகிறார்கள். ஆனால் 2006ல் அவர்கள் பாலஸ்தீனத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்றார்கள். 2006 தேர்தல் என்பது ஏதோ அவர்களாக நடத்திக்கொள்ளவில்லை, சர்வதேச கண்காணிப்பாளர்கள் மற்றும் ஐநாவின் அதிகாரிகளின் முன்னெடுப்புடன் தான் அந்த தேர்தல் நடைபெற்றது. ஹமாஸ் 2006ல் வெற்றிபெற்று காசாவின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றது முதல் மெல்ல தங்களின் தீவிரத்தன்மையை கைவிட்டு இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட எல்லா வகையிலும் முயன்றது. ஐநாவின் 1967 எல்லை பகிர்வை ஏற்றது, ஆனால் அப்படியான ஒரு அமைதி உடன்படிக்கையிலும் இஸ்ரேல் ஒத்துழைக்கவில்லை. 

காசாவில் பாலஸ்தீனர்கள் ஹமாஸ் அமைப்பையும் மேற்கு கரையில் பாலஸ்தீனர்கள் ஃப்தா அமைப்பையும் தீர்வு கணும் அமைப்புகளாக, நம்பிக்கையுடன் பார்த்தார்கள்.

ஆயுதங்கள் ஏதும் இல்லாத மேற்கு கரை பாலஸ்தீனர்கள் வசம் இருந்து நிலம் ஏறக்குறைய நிர்மூலமாகிவிட்டது, அவர்களின் வாழ்வு மொத்தமும் இஸ்ரேலின் கண்காணிப்புக்குள், கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது.அவர்களின் நிலங்களின் நாற்புறங்களிலும் இஸ்ரேல் சூழ்ந்துள்ளது.

ஆனால் காசாவின் ஒரு சதுர அடி நிலத்தையும் ஹமாஸ் விட்டுக்கொடுக்காததால் தான  அவர்களின் நம்பிக்கை நாளுக்கு நாள் பெருகியது. காசாவின் ஒரு புறம் எகிப்து நாடு இருப்பதால் அவர்களால் கொஞ்சம் மூச்சுவிட முடிந்தது. 

ஹமாசை ஒரு தீவிரவாத அமைப்பாகச் சித்தரிப்பதில் உலக ஊடகங்களும் வதந்தி தொழிற்சாலைகளும் வெற்றிப் பெற்றிருக்கலாம் ஆனால் ஹமாஸ் ஒரு தீவிரவாத அமைப்பாக அமெரிக்கா, பிரிட்டன் , ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சில உதிரி நாடுகள் அறிவித்துள்ளதே தவிர உலகம் முழுவதும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு தான்...

ஈரான்

கத்தார்

துருக்கி

லெபனன்

ஈராக்

ஏமன்

பிரேசில்

சீனா

எகிப்து

சவுதி அரேபியா

சீரியா

ஆப்கானிஸ்தான்

நோர்வே

பிலிப்பைன்ஸ்

ஸ்விசர்லாந்து

ஜோர்தன

இந்த பட்டியலில் இன்னும் 100 நாடுகள் உள்ளது.இவை எல்லாம் ஹமாஸை தடை செய்யாத நாடுகள்....

இதை எல்லாம் விடுங்கள் இந்தியாவின் சங்கிகள் இஸ்ரேலுடன் இணைந்து ஃபயர் விடுகிறார்கள், ஆனால் இந்திய அரசால் ஹமாஸ் ஒரு போதும் தீவிரவாத அமைப்பாகக் கருதப்பட்டதில்லை. காங்கிரஸ் அரசுகள் முதல் இன்று ஆட்சியில் உள்ள மோடியின் பாஜக அரசு வரை ஹமாஸ் தடை செய்யப்பட்ட இந்திய அமைப்புகளின் , உலக அமைப்புகளின் பட்டியலில் இல்லை.

அதை விட முக்கியம், ஐநா சபை ஹமாஸை ஒரு அமைப்பாகவே அங்கீகரிக்கிறது என்றால் இந்த பொய்யர்களின் பிரச்சாரம் எத்தனை வலிமையானது என்பதை யோசித்துப்பாருங்கள்.

இந்தியா தடை செய்யாத ஒரு அமைப்பின் மீது இந்தியர்கள் அனைவரையுமே மனதளவில் ஒரு தடையாக உணரும் படி இந்திய ஊடகங்கள் இரவும் பகலும் இயங்கி வருகின்றனர். பாலஸ்தீனத்தின் விடுதலையின் குரல்வளையை நெறிக்க இஸ்ரேல் முயன்று வருகிறது. ஹமாஸ் அழித்துவிடுவதன் மூலம் பாலஸ்தீனர்களை கொட்தடிமைகளாக மாற்றவே இஸ்ரேல் துடிக்கிறது.

ஹமாஸ் உறுப்பினர்கள் இஸ்ரேலின் பார்வையில் தீவிரவாதிகள்முஎன்றால் நிச்சமயாக இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு வரை பிரித்தானியர்களின் பார்வையில் யார் எல்லாம் தீவிரவாதிகள் என்று நினைத்துப்பாருங்கள்.

ஜான்சி ராணி, பகத் சிங், சுப்பிரமணிய சிவா, வ.உ.சிதப்ரனார், சுந்தர லிங்கம், சர்தார் வல்லபாய் படேல்,  ஜவகர்லால் நேரு, காந்தி என அனைவருமே தீவிரவாதிகள் தான். 

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தான் ஆகப்பெரிய தீவிரவாதி என்று ஒரு ஊடகம் சொன்னால் என்ன செய்வீர்கள். நாட்டையும் நிலத்தையும் அடைமானம் வைப்பீர்களா அல்லது அதை மீட்கப் போராடுவீர்களா???

ஆக்கம் :

Muthukrishnan

நிம்மதி...!

 மனிதனுக்கு நிம்மதி 

இல்லாமைக்கு 

ஒரே காரணம். 

அமிர்தமே கிடைத்தாலும் 

அதைவிட சிறப்பான 

ஒன்று இருப்பதாக 

மனம் நம்புவது தான். 

கிடைத்ததைக் கொண்டு 

நிம்மதி அடைவோம்.



மகிழ்ச்சி....!

 மகிழ்ச்சியான தருணம்....!

என்னுடைய மூத்த சகோதரர் ஷேக் ஃபரீத் அவர்களின் இரண்டாவது வாரிசு எஸ்.முஹம்மது உசாமாவின் திருமணம் 19.10.2026 அன்று ஏக இறைவனின் கிருபையால் சிறப்பாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 20.10.2026 அன்று வலிமா நடந்தது. இந்த சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மணமகன் மற்றும் மணமகனின் தந்தை ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக் கூறி மகிழ்ந்தேன். மேலும் நான் எழுதிய உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி மற்றும் இந்திய முஸ்லிம்கள் பாகம் - 1 ஆகிய இரண்டு நூல்களை வழங்கி ஆனந்தம் அடைந்தேன்.



முகம்....!

 இரண்டு முகம்....!



வேதனை...!

  Child nearly swept away by waves as parents film a reel; a bystander rushes to the rescue. குழந்தையை மறந்து விட்டு ரீல் மோகத்தில் ஈடுபட்டு பெற்றோர். நாசமாய் போன சமூகம்...



அவன்...?

 எவன்டா அவன்..?



சும்மா....!

 அழகோ....அழகு....!

நமக்கு நாமே பெருமை...?



Monday, October 19, 2026

Thieves....!

 The most dangerous street thieves.. They steal while you're watching them! A theft in three seconds..


Attach...!

Never get too attached to anyone unless they also feel the same towards you. 

Because one sided expectations can mentally destroy you.




நம்பிக்கை....!

 வலிமையான நம்பிக்கை....!

வழக்கம்போல் இந்த வாரம் ஜூம்மா தொழுகைக்கு சேப்பாக்கம் மஸ்ஜித்-எ-குத்தூஸியாவிற்கு சென்றிருந்தேன்.

இமாம் சாஹிப் எளிமையான உருது மொழியில் ஜூம்மா உரை நிகழ்த்தி கொண்டிருந்தார்.

இஸ்லாத்தில் மூட நம்பிக்கைகள் இல்லை, இதை முஸ்லிம்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார் அவர்.

முஹரம், ஸபர் மாதங்களில் நல்ல செயல்களை செய்து சரியல்ல என தப்பான எண்ணங்கள் முஸ்லிம்கள் மத்தியில் இருப்பதை சுட்டிக் காட்டி பேசிய இமாம் சாஹிப், நமது நம்பிக்கையை வலிமையானதாக மாற்றி கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இமாம் சாஹிப் வலிமையான நம்பிக்கை குறித்து உரை நிகழ்த்தி கொண்டிருந்தபோது, பக்கத்தில் அமர்ந்திருந்த நபரை கவனித்தேன்.

அவர் வாட்ஸ்-அப்பில் சார்ட் செய்து கொண்டிருந்த காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

பள்ளிவாசலில் ஜூம்மா உரை கேட்பதை விட, வாட்ஸ்-அப், முகநூலில் அதிக கவனம் செலுத்தும் இதுபோன்ற சில  சகோதரர்களை என்ன செய்வது.

எப்படி வலிமையான நம்பிக்கை முஸ்லிம்கள் மத்தியில் மலரும்

புரியாத கேள்வி....!

குறிப்பு - கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி எழுதிய பதிவு இது.

வாழ்க்கை....!

 வாழ்க்கையைக் கற்றுக்கொள்வதில் 

குழந்தை போல் இருங்கள். 

அதற்கு அவமானம் தெரியாது. 

விழுந்தவுடன் அழுது முடித்துத் 

திரும்பவும் எழுந்து நடக்கும்.

எழுந்து நடப்பதில் தான் 

வெற்றிக்கான வழி உண்டு.



அழகு....?

 மறக்குமா நெஞ்சம்....!






சும்மா...!

 அழகோ....அழகு....!



சும்மா....!

 இளமைக் காலத்தில்....!



Man...!

A man climbing a mountain rescued a creature whose head was stuck between rocks after a long struggle, enabling it to cling to life once more.



Press Meet..!

Prashant Bhushan...

Neha Bora....

Delhi 

GM News...



Sunday, October 18, 2026

Navi Pillai story...!

 What an inspiring story of Navi Pillai, daughter of an Indian bus driver, who overcame all odds to become one of the world’s foremost human rights lawyers & activists. She was rightly awarded the Nobel peace prize this year. Had Modi congratulated her?



Plan...!

 Whenever you don't understand what's happening in your life, just close your eyes, take a deep breath and say. God I know it is your plan, just help me through it.


கடன்....!

 கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும்.....!

கடனுடன் பகை.

பொதுவாக உணவு விடுதிகள் டீ கடைகளில் இப்படி ஒரு வாசகத்துடன் கூடிய பதாகை தொடங்குவதை நாம் அனைவரும் கண்டு வருகிறோம்.

கடன் அன்பை முறிக்கும் என பெரியவர்கள் சொல்வார்கள்.

எனக்கு கடன் வாங்கும் பழக்கம் இல்லை.

அப்படியே வாங்கினாலும் குறிப்பிட்ட காலகெடுவிற்கு முன்பே கடன் பணத்தை அதை கொடுத்தவர்களிடம் திருப்பி கொடுத்து விடுவேன்.

யாராவது கடன் கொடுத்து உதவ முன்வந்தால் கண்ணியத்துடன் வாங்க மறுத்து விடுவேன்.

ஆனால் கடன் விஷயத்தில் எனக்கு பல அனுபவங்கள் உண்டு.

ஒருமுறை நண்பர் ஒருவர் ஒரு அவசர தேவைக்காக மிகப் பெரிய தொகையை கடனாக கேட்டிருந்தார்.

நானும் கொடுத்தேன்.

அதனை பல மாதங்களுக்கு பிறகுதான் என்னால் திருப்பி வாங்க முடிந்தது.

மீண்டும் அதே நபர் கடன் கேட்டபோது என்னிடம் பணம் இல்லை.

அதனால் இல்லை என்றேன்.

நண்பருக்கு கோபம் வந்துவிட்டது.

என்னிடம் பேசுவதையும் பழகுவதையும் குறைத்துக் கொண்டார்.

இதேபோல் உறவினர் ஒருவருக்கு கடன் கொடுத்து இருந்தேன்.

பல ஆண்டுகள் ஆகியும் என்னால் முழு பணத்தை இன்னும் வாங்க முடியவில்லை.

கடனாக வாங்கி பணத்தை கூட முழுமையாக கொடுக்காமல் அவ்வப்போது கை செலவுக்கு செலவழிக்கும் வகையில்தான் உறவினர் பணத்தை திருப்பி கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.

இதனால் இரண்டு பேர் இடையே உறவு முறையில் லேசான விரிசல் ஏற்பட்டு விட்டது.

ஆக கடன் கொடுத்தாலும் தொல்லை.

கொடுக்காமல் இருந்தாலும் பாதிப்பு.

கடன் விவகாரம் மனிதனை எப்படி ஆட்டிப் புரட்டுகிறது என்பதை அதை கொடுத்தும் கொடுக்காமல் இருந்தவர்களுக்கு தெரியும்.

அந்த அனுபவம் எனக்கு கொஞ்சம் அதிகமாக உண்டு.

குறிப்பு - இது, கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி எழுதிய பதிவு.

இந்தி...!

 இந்தியர்கள் யாருக்கும் ஹிந்தி தாய் மொழியே அல்ல.

தமிழ்நாடு- தமிழ்

கேரளா- மலையாளம்

ஆந்திரா-தெலுங்கானா- தெலுங்கு

கர்நாடகா- கன்னடம்

மகாராஷ்டிரா- மராத்தி

குஜராத்- குஜராத்தி

பஞ்சாப்- பஞ்சாபி

ராஜஸ்தான்- ராஜஸ்தானி, மார்வாரி, மேவாரி

ஹரியானா-ஹரியானி

இமாசலப்பிரதேசம்-

மஹாசு பஹாரி, மண்டேலி,

காங்கிரி-பிலாஸ்புரி,சாம்பேலி

ஜம்மு-காஷ்மீர்- காஷ்மீரி, டோக்ரி,பாடி,லடாக்கி.

உத்தர்காண்ட்-கடுவாலி, குமோனி

உத்திரப்பிரதேசம்- பிரஸ்பாஷா, கரிபோலி,அவதி,கன்னோஜி,போஜ்புரி, பந்தேலி,பகேலி.

பீஹார்- போஜ்புரி, மைதிலி

ஜார்கண்ட்- சந்தாலி

சத்தீஸ்கர்-கோர்பா

மத்தியப் பிரதேசம்- மால்வி,நிமதி, பகேலி

மேற்கு வங்கம்- வங்காளி

ஒடிசா- ஒரியா

வட கிழக்கு மாநிலங்கள்-அப்பகுதி மூத்த குடிகளின் தாய்மொழிகள்.

இந்தியாவில் உள்ள 135 கோடி மக்களில் ஒருவருக்கு கூட ஹிந்தி தாய்மொழி அல்ல.

ஹிந்தியும் அந்நிய மொழி தான்.

தாய்மொழிகளை அழித்து ஐரோப்பியர்களால் உருவாக்கப்பட்டதே ஹிந்தி என்பது வரலாறு.

இந்துஸ்தானி என்ற மொழியை உடைத்து,

ஹிந்தி இந்துக்களுக்காகவும்,

உருது இஸ்லாமியர்களுக்கென்று 180 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டதே ஹிந்தி வரலாறு.

இந்துஸ்தானியை தேசிய மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்பதே காந்தியின் நிலைபாடாக இருந்தது.

ஹிந்தியை கல்கத்தா வில்லியம் கோட்டையில் ஆய்வகம் வைத்து உருவாக்கியவன் ஜான் கில் ஹிரிஸ்ட் என்பவன் தான்.

அவனே ஹிந்தியின் தந்தை என்பது வரலாறு.

- Surya Xavier  டுவிட்டர் பதிவில் இருந்து...!

குறை....!

 மற்றவர்களின் குறைகளை கண்டுபிடிப்பதில் உள்ள எளிமை, ஏனோ நம் குறைகளை உணர்வதில் மட்டும் கடினமாகி விடுகிறது. நம்மிடம் உள்ள குறைகளை உணர்ந்து கொண்டால், பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வாழ்க்கை வசம்படும்.



எப்படி....?

 எப்படி....?

யார் கிட்ட...!



Saturday, October 17, 2026

கேம்...!

 சும்மா பாருங்க....

அருமையான கேம்....

ஹி....ஹி....ஹி.....ஹி....


சென்னை கனமழை..!

 சென்னை கனமழை...

விமான நிலைய காட்சிகள்...


மழையோ....மழை....!



Guest....!

 You are a guest. Leave this earth a little more beautiful, a little more human, a little more lovable, a little more fragrant, for those unknown guests who will be following you.




தகவல்...!

சமூக வலைத்தள தகவல்..!

டெல்லியில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் (SIR) பணிகள் மூலம் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்தப் பணியின் மூலம் யாருடைய பெயர்களெல்லாம் நீக்கப்படுகின்றன?

'தி இந்து' நாளிதழ் டெல்லியின் முழுமையான வரைவு வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்தது. அதில் 97.54 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 13.6 சதவீதத்தினர் (சுமார் 13.3 லட்சம்) முஸ்லிம்கள் ஆவர்.

இவர்களில் 19.33 லட்சம் வாக்காளர்களை, "தர்க்கரீதியான முரண்பாடுகள்" (வாக்காளர் தரவுகளில் மென்பொருள் கண்டறிந்ததாகக் கூறப்படும் பிழைகள்) இருப்பதாகக் கூறி முடக்கி வைத்துள்ளனர்.

இவ்வாறு முடக்கப்பட்டவர்களில் 20.3 சதவீதத்தினர் முஸ்லிம்கள் ஆவர். இது அவர்களின் மக்கள்தொகை விகிதமான 13.6 சதவீதத்தை விட மிக அதிகமாகும்.

எளிமையாகச் சொன்னால்: ஒவ்வொரு 1,000 முஸ்லிம் வாக்காளர்களிலும் 318 பேர் முடக்கப்பட்டனர். ஆனால் ஒவ்வொரு 1,000 முஸ்லிமல்லாத வாக்காளர்களிலும் இது 197 பேர் மட்டுமே.

அதாவது, ஒரு முஸ்லிம் வாக்காளர் சந்தேகத்தின் நிழலில் சிக்கிடுவதற்கான வாய்ப்பு 60 சதவீதம் அதிகம்.

 முரண்பாடுகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்ட "காரணங்களில்" ஐந்தும் குடும்பத்தின் அளவைக் குறிப்பவை ஆகும்.

ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள், ஒன்பது மாதங்களுக்கும் குறைவான இடைவெளியில் பிறந்த உடன்பிறப்புகள், குழந்தையின் பிறப்பின் போது பெற்றோருக்கு வயது மிகவும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருப்பது ஆகியவை அந்தக்காரணங்களாகும்.

இந்தக் காரணங்களின் அடிப்படையில் முடக்கப்பட்டவர்களில் 30 சதவீதத்தினர் முஸ்லிம்களாவர்.

ஒவ்வொரு 1,000 முஸ்லிம்களிலும் 152 பேர் முடக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு 1,000 முஸ்லிமல்லாதவர்களிலும் இது வெறும் 56 பேர் மட்டுமே. அதாவது இது கிட்டத்தட்ட மும்மடங்காகும்.

"ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள்" என்ற காரணத்தினால் மட்டும் முடக்கப்பட்டவர்களில் 58 சதவீதத்தினர் முஸ்லிம்களாவர்.

இது எங்கோ கேட்டுப் பழகியது போல் இருக்கிறதா? இது சங்கப் பரிவாரின் அதே பழைய பொய்யாகும்: "அவர்களுக்கு நிறைய குழந்தைகள் உள்ளனர், அவர்கள் எண்ணிக்கையில் நம்மை முந்திவிடுவார்கள்."

யார் வாக்காளராகத் தொடர வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் ஒரு கணினி ப்ரோக்ராம் விதிகளில் இப்போது அந்தப் பொய் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆனால் உண்மை இதற்கு முற்றிலும் எதிரானது. அரசு சுகாதாரக் கணக்கெடுப்புகள் (NFHS) காட்டியுள்ளபடி, 1992-93 க்கும் 2019-22 க்கும் இடையில் முஸ்லிம் பெண்களின் கருத்தரிப்பு விகிதம் 4.41 இல் இருந்து 2.36 ஆகக் குறைந்துள்ளது.

இந்து பெண்களுக்கும் இவர்களுக்கும் இடையேயான இந்த இடைவெளி மிக விரைவாகக் குறைந்து வருகிறது.

வீடுகளில் பிறந்த முந்தைய தலைமுறை இந்தியர்கள் பலருக்குத் தங்கள் சரியான பிறந்த தேதி தெரியாது. வயதைப் பற்றிய ஒரு சிறிய தவறான அனுமானம் கூட, இப்போது ஒரு குடிமகனை "சந்தேகத்திற்குரிய" நபராக மாற்றக்கூடும்.

இதனைத் தீர்மானிப்பது யார்?

 வாக்காளர் பட்டியலின் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் அல்ல; மாறாக தேர்தல் ஆணையத்தின் சொந்த மென்பொருளான ERONET ஆகும்.

மேற்கு வங்கத்தில் SIR நடந்து கொண்டிருக்கும் போதே, எந்தவிதமான பகிரங்க அறிவிப்பும் இல்லாமல் இந்த "முரண்பாட்டுப்" பரிசோதனை ரகசியமாகச் சேர்க்கப்பட்டது.

2025 ஜூன் மாத பீகார் SIR உத்தரவிலோ அல்லது 2025 அக்டோபர் உத்தரவிலோ இது இடம்பெறவில்லை. 2026 மே 14 அன்று மட்டுமே இது எழுத்துப்பூர்வமாக வெளிவந்தது.

இந்தப் பரிசோதனை பயன்படுத்தப்படாத பீகாருடன் இதனை ஒப்பிட்டுப் பாருங்கள். அங்கு பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட வாக்காளர்களில் 18.4% பேர் முஸ்லிம்களாவர். இது மக்கள்தொகையில் அவர்களின் 17.7% பங்களிப்புடன் மிகவும் நெருக்கமாக உள்ளது.

ஆகவே, இங்கு முக்கிய வேறுபாடு இந்த மென்பொருள்தான். தேர்தல் ஆணையம் இதுவரை இதற்குத் தெளிவான காரணங்களை வழங்கவில்லை. நாளிதழின் கேள்விகளுக்கும் அவர்கள் பதிலளிக்கவில்லை.

பிரதமருக்கும் அவரது அமைச்சருக்கும் பெரும்பான்மை உள்ள ஒரு குழுவே இந்த ஆணையத்தின் தலைவரான ஞானேஷ் குமாரைத் தேர்ந்தெடுத்தது.

2023 இல் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தின் மூலம் தலைமை நீதிபதி அந்தக் குழுவிலிருந்து நீக்கப்பட்டார்.

விளையாட்டின் நடுவரை ஒரு அணியே தேர்ந்தெடுக்கும் போது, ஆட்டம் எப்படி இருக்கும் என்று நாம் வியக்க வேண்டுமா?

இது ஒரு மென்பொருள் பிழை அல்ல. ஞானேஷ் குமாரின் கீழ் இயங்கும் தேர்தல் ஆணையம் இங்கு ஹிந்துத்துவ ஆட்சியின் எடுபிடி வேலையைச் செய்து வருகிறது.

ஒவ்வொரு குடிமகனின் வாக்கையும் பாதுகாக்க வேண்டிய ஆணையம், இப்போது சங்கப் பரிவார் அஜெண்டாவின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு இயந்திரத்தைப் பயன்படுத்தி முஸ்லிம் வாக்காளர்களை வேட்டையாடி வருகிறது.

உழைப்பு....!

 உழைப்பின் வேர்கள் 

கசப்பானவை. 

ஆனால் 

அதன் கனிகள் 

இனிப்பானவை. 

இனிப்பான கனிகளை 

சுவைக்க வேண்டுமானால், 

உழைப்பு மிகமிக அவசியம்.



தோசை....!

 நெய் தோசை...

சுவையோ...சுவை...

சும்மா சாப்பிடுங்க....



அலா குதா என்ற ஹிஜ்ரா பாதை திட்டம்....!

 சவூதி அரேபியா அறிமுகம் செய்த அலா குதா என்ற வரலாற்று சிறப்புமிக்க ஹிஜ்ரா பாதை திட்டம்

சவூதி அரேபியா, "அலா குதா" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, இறைத்தூதர் நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள், மக்காவிலிருந்து மதீனாவிற்கு மேற்கொண்ட ஹிஜ்ரத் தொடர்பான வரலாற்றுப் பாதையை பார்வையாளர்கள் ஆராய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இஸ்லாமிய நாட்காட்டியின் முதல் ஆண்டில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை மீண்டும் அனுபவிக்கும் வகையில்,  'அலா குதா' திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

அலா குதா திட்டத்தின் நோக்கம் :

சுமார் 470 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தப் பாதை, இஸ்லாமிய வரலாற்றின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றைப் பற்றி யாத்ரீகர்களும் சுற்றுலாப் பயணிகளும் அறிந்துகொள்ள உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஹிஜ்ரா, முஸ்லிம் சமூகத்தின் வளர்ச்சியில் ஒரு திருப்புமுனையாக அமைந்ததுடன், ஆழ்ந்த மார்க்க மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் 41 வரலாற்றுச் சின்னங்கள், ஊடாடும் அனுபவங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் இடம்பெற்றுள்ளன. இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்  ஹிஜ்ரத் நிகழ்வுகள், இடங்கள் மற்றும் முக்கியத்துவத்தை பார்வையாளர்கள் புரிந்துகொள்ள உதவும் வகையில் இந்த ஈர்ப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த முயற்சியின் மூலம், சவூதி அரேபியா தனது இஸ்லாமிய பாரம்பரியத்தைப் பாதுகாப்பதோடு, முக்கியமான வரலாற்றுத் தளங்களை பார்வையாளர்கள் எளிதில் அணுகும்படி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், இந்தத் திட்டம் இரு புனித நகரங்களுக்கு இடையே பயணிக்கும் யாத்ரீகர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் ஆழமான கலாச்சார மற்றும் ஆன்மீக அனுபவத்தை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஹிஜ்ராவின் மரபை ஆராய்வதற்கான வழி :

பாரம்பரிய, கலாச்சார சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், சவூதி இராச்சியத்தின் வளமான இஸ்லாமிய வரலாற்றை பார்வையாளர்கள் அறிந்துகொள்ள வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் மேற்கொள்ளப்படும் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முன்னெடுப்பு அமைகிறது.

===================

"அலா குதா திட்டத்தில் 41 வரலாற்றுச் சின்னங்கள், ஊடாடும் அனுபவங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் இடம்பெற்றுள்ளன. இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்  ஹிஜ்ரத் நிகழ்வுகள், இடங்கள் மற்றும் முக்கியத்துவத்தை பார்வையாளர்கள் புரிந்துகொள்ள உதவும் வகையில் இந்த ஈர்ப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன"

===================

வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைக் கல்விசார் அனுபவங்களுடன் இணைப்பதன் மூலம், 'அலா குதா' திட்டமானது, வழக்கமான சுற்றிப்பார்த்தலுக்கு அப்பாற்பட்டு, ஹிஜ்ராவின் மரபை ஆராய்வதற்கான ஒரு வழியைப் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. மேலும் இறைத்தூர் நபிகள் நாயகம் அவர்களின்  அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடக்கும் வாய்ப்பை இந்த திட்டம் வழங்குகிறது. 

ஆவணப்படுத்தும் வரலாற்று மைல்கற்கள் :

இந்த திட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சவூதி பொது பொழுதுபோக்கு ஆணையத்தின் தலைவர் துருக்கி அல் ஷேக், இந்தத் திட்டம் "வரலாற்று மைல்கற்களை ஆவணப்படுத்துகிறது என்றும், "நபிகளாரின் வாழ்க்கையைப் பற்றிய ஆழமான புரிதலை ஊக்குவிக்கிறது" என்றும் தெரிவித்துள்ளார். சவூதி பொது பொழுதுபோக்கு ஆணைய இணையதளத்தின்படி, 470 கி.மீ நீளமுள்ள இந்தப் பாதை, வரலாற்றுப் பயணத்தை மீண்டும் காட்டுவது மட்டுமின்றி, பார்வையாளர்களுக்கு ஆழ்ந்த அனுபவங்கள், பயிலரங்குகள் மற்றும்  மேம்படுத்தப்பட்ட மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம் நிகழ்வுகளை மீண்டும் கண்முன் கொண்டுவரும் வசதிகளையும் வழங்குகிறது. இந்த அனுபவம் "ஹிஜ்ரத்தின் (மக்காவிலிருந்து மதீனாவுக்கான பயணம்) வரலாற்று மற்றும் ஆன்மீக அம்சங்களில்" கவனம் செலுத்துகிறது. 

இந்த 470 கிலோ மீட்டர் பயணத்தில், 305 கிலோ மீட்டர் தூரத்தை மக்கள் நடந்தே கடக்கலாம். இந்தப் பாதையில் ஏழு தங்குமிடங்கள், 112-க்கும் மேற்பட்ட உணவகங்கள் மற்றும் 68-க்கும் மேற்பட்ட கடைகளும் உள்ளன. சவூதி செய்தி முகமையின் தகவல்படி, இந்தத் திட்டத்தின் முதற்கட்டமாக பத்து லட்சம் பார்வையாளர்களை வரவேற்பது இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது. 2030-ஆம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கை ஐம்பது லட்சமாக உயரும் என்றும், எதிர்காலத்தில் இது ஒரு கோடியாக  அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும்சவூதி பொது பொழுதுபோக்கு ஆணையத்தின் தலைவர் துருக்கி அல் ஷேக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


Friday, October 16, 2026

துணிவுடன்....!

 துணிவுடன் எதிர்த்து நில்....எதிரி அஞ்சுவான்....!

பயந்து ஓடுவான்....!



உங்களுக்கு நீங்களே நண்பராகுங்கள்....!

 உங்களுக்கு நீங்களே நண்பராகுங்கள்....!

வாழ்க்கையின் ஒவ்வொரு திருப்பத்திலும், உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத சிலரை நீங்கள் சந்திப்பீர்கள். சிலர் உங்களைக் குறை கூறுவார்கள், சிலர் உங்கள் குறைகளை மிகைப்படுத்துவார்கள். மேலும் சிலர் உங்கள் மௌனத்தை பலவீனமாகக் கருதுவார்கள். ஆனால் இவை அனைத்தையும் மீறி, உங்கள் ஒளியை உங்களால் தக்க வைத்துக் கொள்ள முடிந்தால், உண்மையில் நம்புங்கள், நீங்கள் வென்றுவிட்டீர்கள். மற்றவர்களின் வார்த்தைகளுக்கும் கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதற்குப் பதிலாக, உங்களுக்கு நீங்களே முன்னுரிமை கொடுங்கள். வாழ்க்கை இனிமையாக இருக்கும். 

புன்னகை செய்யுங்கள் :

வாழ்க்கையின் கொந்தளிப்பான பயணத்தில், நாம் அடிக்கடி மற்றவர்களின் மனப்பான்மைகளுக்கு அடிமையாகி விடுகிறோம். ஒருவரின் வார்த்தையையோ, ஒருவரின் கடுமையான வாக்கியத்தையோ அல்லது ஒரு கண நேர கவனக்குறைவையோ நம் இதயத்தைச் சுற்றிப் போர்த்திக் கொள்கிறோம். பின்னர் அந்தக் கணம் நம் வாழ்வின் மகிழ்ச்சியையும் திருப்தியையும் வென்றுவிடுகிறது. நாம் சிரிக்க மறந்துவிடுகிறோம். வாழ மறந்துவிடுகிறோம். மேலும் நம்முடைய பிரகாசமான பகுதியை இருளிடம் ஒப்படைத்துவிடுகிறோம். ஆனால் நீங்கள் சற்று நின்று யோசித்துப் பார்த்தால், மற்றவர்களின் அதிருப்திக்கு அஞ்சி நாம் வாழ்க்கையைச் செலவிடும் அளவுக்கு அது மலிவானதல்ல என்பதை உணர்வீர்கள். 

மற்றவர்களின் கருத்துக்கள் தன்னை ஆள அனுமதிக்காமல் இருக்கக் கற்றுக்கொள்ளும்போதுதான், வாழ்க்கையை வாழும் திறன் ஒருவருக்குக் கிடைக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு வித்தியாசமான கண்ணோட்டம் உண்டு. ஒவ்வொருவரின் சிந்தனையும் வித்தியாசமானது. உங்களை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்றால், அது உங்கள் தவறல்ல. ஒருவேளை, உங்கள் நன்மையையும் நற்பண்புகளையும் காணும் ஒளி அந்த நபரின் கண்களில் இல்லாமல் இருந்திருக்கலாம். எனவே, வருந்துவதற்குப் பதிலாக, புன்னகை செய்யுங்கள். ஏனெனில் இந்தப் புன்னகைதான் உங்கள் வாழ்க்கைப் பிரகடனம்.

 மிகப்பெரிய பலம்  தன்னம்பிக்கை :

ஒரு நபரின் மிகப்பெரிய பலம் அவனது அமைதியான தன்னம்பிக்கை. "எனக்கு என்னைத் தெரியும், எனக்கு யாருடைய ஒப்புதலும் தேவையில்லை" என்று கூச்சலிடாமல், அமைதியாகச் சொல்லும் அந்த நம்பிக்கை. இந்த உணர்வு இதயத்தில் இடம்பிடிக்கும்போது, ​​ஒரு நபருக்குள் இருக்கும் அமைதியின்மை தானாகவே மறையத் தொடங்குகிறது. அப்போது விமர்சனங்கள் காயங்களாக மாறுவதில்லை. மாறாக வாழ்க்கைப் பாடங்களாகின்றன. நமது வாழ்க்கை முறை மற்றவர்களிடமிருந்து வேறுபடலாம். ஏனெனில் உலகில் பொதுவாக இரண்டு வகையான மக்கள் உள்ளனர். ஒன்று, மற்றவர்களின் 'ஒப்புதலுக்காக' வாழ்பவர்கள். அவர்கள் தங்கள் தனிப்பட்ட குணங்கள், வெற்றி மற்றும் மகிழ்ச்சிக்காக மற்றவர்களின் கருத்துக்களையும் விமர்சனங்களையும் சார்ந்திருக்கிறார்கள். மற்றொன்று, தங்கள் மனசாட்சியின் குரலால் வாழ்பவர்கள். அவர்கள் தங்கள் வேலையிலும் செயல்திறனிலும் திருப்தி அடைகிறார்கள். 

===================

"எந்தத் துயரத்திலும் புன்னகைக்க உங்களுக்குத் தைரியம் இருப்பதில்தான் வாழ்க்கையின் அழகு அடங்கியுள்ளது. இந்தத் தைரியம் ஒருவரின் குணத்தை உயர்த்துகிறது. மற்றவர்களின் வார்த்தைகளுக்கும் கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதற்குப் பதிலாக, உங்களுக்கு நீங்களே முன்னுரிமை கொடுங்கள். வாழ்க்கை இனிமையாக இருக்கும்"

===================

முதல் குழுவினர் எப்போதும் சோர்வாக இருக்கிறார்கள். இரண்டாவது குழுவினர் அமைதி நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். தங்கள் மகிழ்ச்சியைப் பற்றித் தாங்களே முடிவெடுப்பவர்கள் ஒருபோதும் சூழ்நிலைகளுக்கு அடிமையாவதில்லை. மகிழ்ச்சியாக இருப்பது என்பது ஒரு தேர்வு மட்டுமல்ல, அது ஒரு நனவான முடிவு என்பதை அவர்கள் அறிவார்கள். வாழ்க்கையின் அழுத்தங்கள், உறவுகளின் சிக்கல்கள் அல்லது கடந்த கால நினைவுகளால் நீங்கள் எப்போதாவது சோர்வடைந்திருந்தால், உங்களிடமிருந்து ஓடி ஒளிவதற்குப் பதிலாக, உங்களுக்கு நெருக்கமாக இருங்கள். ஒரு கோப்பை தேநீருடன் சில கணங்கள் மௌனத்தில் செலவிடுங்கள். ஒரு பழைய நண்பரிடம் பேசுவது போல் உங்களுடேயே பேசுங்கள். உங்களுக்குள் எவ்வளவு தைரியம், எவ்வளவு ஒளி மற்றும் எவ்வளவு அமைதி மறைந்திருக்கிறது என்பதைப் பார்த்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். நீங்கள் உங்களுக்கு நேரம் ஒதுக்கவில்லை அல்லது உங்களை நீங்களே அறிந்துகொள்ளவில்லை என்பதுதான் காரணம். 

 துக்கமும் வலியும் :

துக்கமும் வலியும் வாழ்க்கையின் பிரிக்க முடியாத பகுதிகள். ஆனால் ஒரு நபர் அவற்றை தனது ஆளுமையின் மையமாக ஆக்காதபோதுதான் அவர் வெற்றி பெறுகிறார். உலகில் மிகவும் வெற்றிகரமான மற்றும் மகிழ்ச்சியான மக்கள் துக்கத்திலிருந்து விடுபட்டவர்கள் அல்ல, மாறாக துக்கத்துடன் வாழக் கற்றுக்கொண்டவர்களே. ஒவ்வொரு புயலுக்குப் பிறகும் ஒரு அமைதியான மௌனம் இருக்கும் என்பதையும், ஒவ்வொரு காயத்திற்குப் பிறகும், சூழ்நிலைகளைக் கையாள உதவும் ஒரு புதிய ஒளி தைரியத்திற்குக் கிடைக்கும் என்பதையும் அவர்கள் அறிவார்கள்.

எந்தத் துயரத்திலும் புன்னகைக்க உங்களுக்குத் தைரியம் இருப்பதில்தான் வாழ்க்கையின் அழகு அடங்கியுள்ளது. இந்தத் தைரியம் ஒருவரின் குணத்தை உயர்த்துகிறது. மக்களின் மனப்பான்மை கசப்பானதாக இருந்தாலும், அவர்களின் வார்த்தைகள் உங்களைக் குத்தினாலும், அந்த விஷத்திற்கு உங்கள் இதயத்தில் இடம் கொடுக்கும்போது மட்டுமே அது உங்களைப் பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் இதயத்தின் வாசலில் காவல் காத்துக்கொள்ளுங்கள். உங்கள் அமைதியை அதிகரிக்கும் உணர்வுகளை மட்டுமே உள்ளே நுழைய விடுங்கள். உலகம் மாறினால், அது மாறட்டும், ஆனால் உங்கள் இதயத்தின் அமைதி உங்களை விட்டுப் போக விடாதீர்கள். 

விமர்சனம் முன்னேற்றத்திற்கானதே :

ஒருவரின் வெறுப்பு, ஒருவரின் தவறான புரிதல் அல்லது ஒருவரின் அலட்சியம் உங்கள் மகிழ்ச்சியைப் பாதிக்க அனுமதிக்காதீர்கள். உங்கள் இதயம் இறுக்கமாக இருக்கும் இடத்திலிருந்து விலகிச் செல்லுங்கள். இதயம் என்ற வார்த்தை வெளிப்படும் இடத்தில் மௌனமாக இருங்கள். அனைவரின் ஒவ்வொரு கேள்விக்கும் நீங்கள் பதிலளிக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு எதிர்மறையான கருத்துக்கும் நீங்கள் பதிலளிக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு விமர்சனத்திற்கும் நீங்கள் தவறு என்று நினைக்க வேண்டியதில்லை, ஏனெனில் விமர்சனம் எப்போதும் முன்னேற்றத்திற்கானதே. சில விமர்சனங்கள் இழிவுபடுத்தும் நோக்கத்துடனும் கூறப்படுகின்றன. மேலும் அவை உங்கள் ஒளியால் கண்கள் கூசும் நபர்களிடமிருந்து வருகின்றன. அதனால்தான் சில சமயங்களில் மௌனமே மிக அழகான பதிலாக இருக்கிறது.

ஒவ்வொரு காலையும் கண்ணாடியில் பார்த்து, "என் துயரங்களுக்கு மத்தியிலும் வாழத் தெரிந்தவள் நான், என் காயங்களை மறைத்து, மற்றவர்களுடன் புன்னகையைப் பகிர்ந்துகொள்பவள் நான்" என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள். உண்மையில் நம்புங்கள். இந்தத் தருணத்தில்தான் வாழ்க்கை உண்மையிலேயே அழகாக உணரத் தொடங்குகிறது. உங்கள் இருப்பை அதன் பலவீனங்களுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போதுதான் வாழ்க்கை எவ்வளவு மென்மையானது, எவ்வளவு அழகானது, எவ்வளவு விலைமதிப்பற்றது என்பதை நீங்கள் உணர்வீர்கள். இது சில ஆண்டுகளுக்கான நம்பிக்கை, அதில் சோகம் குடியேற அனுமதிக்காதீர்கள். உங்கள் புன்னகையை உங்கள் அடையாளமாக ஆக்கிக்கொள்ளுங்கள். ஏனென்றால் ஒருவேளை இந்த உலகிற்கு, அதன் துயரங்களுக்கு மத்தியிலும் புன்னகைக்கக்கூடிய ஒரு முகம் இன்னும் தேவைப்படலாம்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

IPhones...!

 Strait of Hormuz: Several containers fell from a cargo ship struck by Iran, scattering numerous iPhone 18s across the sea. Yesterday, many fishing boats loaded up with iPhones, and today, a large number of iPhones have washed up on the beach.

The ship that was loaded  

with iPhones in Hormuz and took a missile  

The people on the shore didn't get hurt  

I wish I was with theeeem .. 



Evil..!

The world will not be destroyed by those who do evil..., but by those who watch them without doing anything.



கதை...!

 ஒரு கதை....!

ஒரு விழாவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய பழைய ஆசிரியரை சந்திக்கின்றார். அப்போது அந்த முன்னாள் மாணவ இளைஞர் "தன்னை தெரிகின்றதா ? " என்று அந்த ஆசிரியரிடம் கேட்கின்றார். ஆசிரியரோ "எனக்கு நினைவில் இல்லை எனவே நீங்களே யார் என்று அறிமுகம் செய்து கொள்ளுங்களேன் " என்றார். 

இளைஞர் கூறினார், "நான் உங்கள் முன்னாள் மாணவன் " என்றார். அதற்கு அந்த ஆசிரியர் "மிக்க மகிழ்ச்சி, எங்கு உள்ளீர்கள், வாழ்க்கை எப்படி உள்ளது , என்ன செய்கிறீர்கள் " எனக் கேட்டார். இளைஞர், "நான் ஆசிரியராக உள்ளேன் ". என்றார். "அவ்வாறு ஆசிரியர் ஆக வேண்டும் என்று எது உங்களைத் தூண்டியது " என வினவினார் அந்த ஆசிரியர் . "உங்களால் தான் தூண்டப்பட்டேன். உங்களைப் பார்த்துத் தான் நானும் ஆசிரியனாக வேண்டும் என்ற உணர்வு மேலோங்கியது " என்றார். மேலும் "உங்களுடைய செயல்களின் தாக்கத்தினால் தான் நானும் கற்றுக் கொடுக்கும் தொழிலில் உள்ளேன் " என்றார். " எப்படி என்ன தாக்கம் உங்களிடததிலே உண்டாக்கினேன் " எனக் கேட்டார் ஆசிரியர்.

 " நான் உங்களுக்கு ஒரு கதை கூறட்டுமா? " என்று கூறி சொல்ல ஆரம்பித்தார் அந்த இளைஞர். _ " ஒரு நாள் என்னுடைய வகுப்புத் தோழர் மிகவும் விலையுயர்ந்த கடிகாரத்தை அணிந்து வந்தார். அப்படிப்பட்ட ஒரு கைக்கடிகாரம் வாங்குவது என்னுடைய சக்திக்கு அப்பாற்ப்பட்டது. எனவே அதனை திருட நினைத்து அவர் கடிகாரத்தை பாக்கெட்டில் வைத்திருந்த போது எடுத்து விட்டேன். அவர் வகுப்பறைக்குள் வந்தவுடன் தன்னுடைய கடிகாரம் காணவில்லை என்று ஆசிரியரிடம் புகார் செய்தார். ஆசிரியர் அவர்களும் இவருடைய கடிகாரத்தை எவர் எடுத்து இருந்தாலும் அதனை திரும்பக் கொடுத்து விடுங்கள் என அறிவித்தார். நான் எப்படி கடிகாரத்தை திருப்பித் தருவேன் என நினைத்து எனக்கு மிகவும் சங்கடமாக போய்விட்டது. 

ஆசிரியர் வகுப்பறையின் கதவை மூடச் செய்தார். எல்லோரையும் எழுந்து வரிசையாக நிற்கச் சொன்னார். எனக்கு மிகவும் அவமானமாக போய்விட்டது. அவர் கூறினார், மாணவர்களே வரிசையாக நில்லுங்கள் , ஆனால் எல்லோரும் கண்ணை மூடிக் கொண்டு தான் நிற்க வேண்டும் என்றார். அவர் ஒவ்வொருவரின் பாக்கெட்டுகளிலும் கையை விட்டு பார்த்துக் கொண்டே சென்றார். என்னுடைய பாக்கெட்டுக்குள்ளும் கையை விட்டார் கடிகாரத்தையும் எடுத்துக் கொண்டார். ஆனால் எல்லோரும் கண்களை மூடி இருந்ததால் எவரும் எதையும் பார்க்க இயலவில்லை. 

பின்னர் அந்த கடிகாரத்தை உரியவரிடம் கொடுத்து விட்டார். ஆனால் இது பற்றி ஒரு வார்த்தை கூட என்னிடம் கேட்கவில்லை. வேறு எவரிடமும் இது பற்றி கூறவோ, சம்பவத்தை விவரிக்கவோ இல்லை. அந்நாளிலே நீங்கள் என்னுடைய மானத்தை காபாற்றினீர்கள் என்னை திருடன், மோசடிக்காரன், என்றெல்லாம் திட்டாமல் ஒன்றுமே பேசாமல் இருந்தீர்கள் என்னுடைய கவுரத்தையும், மானத்தையும் காபாற்றினீர்கள். என்னிடமும் எதுவும் கூறவில்லை. அது மட்டுமின்றி கடிகாரத்தின் உரிமையாளரிடமும் இது பற்றி எதுவும் கூறவில்லை. இது எனக்கு ஒரு செய்தியை கற்றுத் தந்தது. அது ஆசிரியர் என்பவர் இப்படி தான். கற்பித்தல் என்பது எவ்வளவு அற்புதம். இதைத் தான் என் வாழ்க்கையிலும் மேற்கொள்ள வேண்டும் என்றும் , கற்பித்தலை செய்ய வேண்டும் என விரும்பினேன்" இதனைக் கேட்ட அந்த ஆசிரியர் "அற்புதம்" என்றார். 

மீண்டும் அந்த இளைஞர் கேட்டார் , "இப்பொழுதாவது என்னை தெரிகின்றதா" எனக் கேட்டார். 

அதற்கு மீண்டும் "எனக்கு எதுவும் நினைவில் இல்லை, யார் என்பதும் தெரியவில்லை" ? என்றார். 

"ஏன் தெரியவில்லை " என்று கேட்டார் அந்த இளைஞர். 

ஆசிரியர் கூறினார், "நானும் அந்த சமயத்தில் கண்ணை மூடிக் கொண்டிருந்தேன்" என்றார்.

நம்பிக்கை...!

 மனதில் உள்ள நம்பிக்கை 

நம்மை உயரத்தில் வைக்கும். 

நம்பிக்கையுள்ள வார்த்தை 

மற்றவரை வாழ வைக்கும். 

வாழ்க்கையில் நம்பிக்கை 

மிகமிக முக்கியம்.



சும்மா....!

 வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்...!

அவசியம் பாருங்க....!



Tradition....!

 At a wedding ceremony in Turkey, the bride's brother stood at the door and prevented his sister from leaving with the groom until he paid the amount negotiated for it.

This tradition is known there as “Kapı Parası” or “door money,” where the groom pays the money until the brother is satisfied, then he is allowed to take his bride.



Muslims...!

 Hitler, who killed 11 million people, was not Muslim.

Stalin, who killed 20 million people, was not Muslim.

Mao, who killed 20 million people, was not Muslim.

Muslims did not drop the atomic bomb on Hiroshima and Nagasaki, where 200,000 people died.

Muslims did not wage the war in Cambodia, where 3 million people died.

The war in Iraq, where 12 million people died, did not happen because of Muslims.

Muslims did not start the Bosnian and Kosovo wars, which resulted in 500,000 deaths.

Mussolini, who killed 400,000 people, was not Muslim.

Muslims did not start the war in Afghanistan, where millions of people died.

Muslims did not start the World War where 17 million people died 1.ci.

Muslims did not start the World War where 55 million people died 2.ci.

Muslims did not carry out the Rwandan genocide.

Muslims did not carry out the Algerian genocide.

Who do you think is the terrorist?

Crime...!

 A U.S. Navy nuclear submarine officer on Gaza:

"We swore to defend our country, but what is happening in Gaza is not war, but systematic killings and famine. Without the U.S., Israel could not commit these crimes."



எப்படி...?

 ஓநாய் கூட்டங்களில் இருந்து தப்பிப்பது எப்படி...?

இதோ....!



Thursday, October 15, 2026

டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு....!

 ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் பதற்றம்:

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை 

தடைப்படைகள் அனுப்புவதும் சாத்தியமில்லை என

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன், அக்.16-ஈரான்-அமெரிக்கா இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் திட்டம் தங்களுக்கு இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

இந்தாண்டு பிப்ரவரி மாத இறுதியில் போர் தொடங்கியதில் இருந்து, இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து ஈரான் கடுமையாக தாக்கி வருகிறது. இதனால், மேற்காசியாவில் போர் பதற்றம் மீண்டும் அதிகரித்து வருகிறது. அண்மையில் இஸ்ரேலை குறிவைத்து ஈரான் நடத்திய கடும் தாக்குதலில் பெருத்த சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

டொனால்ட் டிரம்ப் முடிவு :

இத்தகைய சூழ்நிலையில், ஈரானுக்கு தரைப்படைகளை அனுப்பப்படுவது சாத்தியமில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.  மேலும், ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டேன் என்றும் அமெரிக்க அதிபர் கூறியுள்ளார். இதன்மூலம் ஈரானின் வலிமை அமெரிக்கா உணர்ந்து இருக்கிறது என்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் நடத்திய, தொடர்ந்து நடத்திவரும் ஏவுகணை தாக்குதல்கள் மூலம் அமெரிக்காவிற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாகவும் போர் ஆய்வு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாகவே அமெரிக்க அதிபர் தற்போது இந்த முடிவை எடுத்து இருப்பதாக அவர்கள் கருத்து கூறியுள்ளனர். 

இதனிடையே, சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தை நோக்கி ஏவப்பட்ட ஆளில்லா விமானத்தை கூட்டணிப் படைகள் இடைமறித்து அழித்ததாக சவுதி தலைமையிலான கூட்டணி தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்க-இஸ்ரேல் குண்டுவீச்சுகளில் குறைந்தது 78 ஆம்புலன்ஸ்கள் அழிக்கப்பட்டன என ஈரானின் சுகாதார அமைச்சர் முகமது ரெசா ஜஃபர்கண்டி தெரிவித்துள்ளார். சேதமடைந்த ஆம்புலன்ஸ்களுக்குப் பதிலாக புதியவற்றை வாங்குவதும், பழைய ஆம்புலன்ஸ்களைப் புதுப்பிப்பதும் தற்போதைய சூழ்நிலையில் சுகாதார அமைப்புக்கு மிகவும் அவசியமானவை என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

===================== 

Library....!

 Periyar Library, Coimbatore....

திராவிட மாடல் அரசின் சாதனை....!



Enemies...!

 Make sure your enemies never trace your moves. Keep this, it will be of help.



See...!

How others see you is not important. How you see yourself means everything.



பூக்கள்....!

 நிறம் மாறும் பூக்கள்...!

அடிக்கடி நிறம் மாற்றிக் கொள்ளும் நபர்களை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்தித்து இருக்கலாம்.

அதனால் பல நேரங்களில் இப்படிப்பட்ட நபர்கள் ஏன்தான் நம்முடைய வாழ்க்கை பயணத்தில் வந்து செல்கிறார்களோ என நினைத்து நீங்கள் வருத்தப்பட்டு இருக்கலாம்.

குறிப்பாக உங்களது நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் உங்களிடம் அடிக்கடி நிறம் மாறி நடந்து கொண்டால் சே இவ்வளவு தானா இவர்கள் என நீங்கள் மனதிற்குள் நினைத்து வேதனை அடைந்திருக்கலாம்.

உங்களுக்கு நேர்ந்த அனுபவங்களை போன்று நானும் வாழ்க்கையில் பல அனுபவங்களை சந்தித்து இருக்கிறேன்.

தற்போதும் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

ஆம் வசதி வாய்ப்புகளை பார்த்து பழகும் நபர்களைப் பற்றிதான் கூறுகிறேன்.

என்னுடைய நண்பர் ஒருவர் ஆரம்ப காலத்தில் சாதாரண நிலையில் இருந்தவர்.

தற்போது நம்மை விட கூடுதல் வசதி வாய்ப்பு அவருக்கு.

ஆனால் பண்பிலும் பழகும் முறையிலும் அவரிடம் நிறைய மாற்றங்கள்.

அவருடைய அந்தஸ்துக்கு நிகராக நாம் இல்லை என்ற சூப்பிரியாட்டி காம்ப்ளக்ஸ் நண்பருக்கு.

எனவே நம்முடைய நட்பை குறைத்து கொண்டு அவருடைய அந்தஸ்துக்கு தகுதியானவர்களுடன் மட்டுமே நட்பு வட்டாரத்தை அமைத்துக் கொண்டு இயங்கி வருகிறார்.

அதேநேரத்தில் நமக்கு ஏதாவது ஒரு வளர்ச்சி முன்னேற்றம் கிடைத்தால் அப்போது மட்டுமே நம்மிடம் தொடர்பு கொள்ள முயலுவார் அந்த நண்பர்.

நமது வீழ்ச்சி தோல்வி ஆகியவற்றின் போது நம்மை கண்டுகொள்ள மாட்டார்.

இதுபோன்ற நண்பர்கள் உறவினர்களை நாமும் கண்டுகொள்ள கூடாது.

வசதி வாய்ப்புகளை மட்டுமே பார்த்து உறவுமுறையை வளர்க்கும் நபர்களிடம் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இல்லையெனில் நம்முடைய வாழ்க்கையில் பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டிய சுழல் ஏற்படும்.

ஏன் அவமானம் கூட ஏற்படலாம்.

என் வாழ்க்கையில் வந்த சென்ற இதுபோன்ற நிறம் மாறும் நபர்களை நான் தற்போது முற்றிலுமாக ஒதுக்கி வைத்துவிட்டேன்.

கூடா நட்பு கேடாக முடியும் என்பது போல ஒருவரின் வசதியை மட்டும் பார்த்து பழகும் நபர்களின் நட்பை உதறி தள்ளியதால் தற்போது எனக்கு வாழ்க்கையில் எந்த பிரச்சினையும் இல்லை.

அவமானங்கள் இல்லை.

வாழ்க்கை அமைதியாக அதன் வழியில் சென்றுகொண்டிருக்கிறது.

குறிப்பு - இது கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி எழுதிய பதிவு.

பக்குவம்....!

 நாம் பக்குவம் அடையும் போதுதான் 

சில விஷயங்கள் புரியும். 

முப்பது ரூபாய் கடிகாரமும் 

மூன்று லட்சம் ரூபாய் கடிகாரமும் சரி, 

ஒரே நேரத்தை தான் காட்டும் என்று புரியும்.

 பக்குவம் மனிதனின் வழி.




செ....நு....!

சும்மா பாருங்க....

எல்லாம் செயற்கை நுண்ணறிவு செய்யும் வேலை....

ஹி....ஹி....ஹி....ஹி....

ஹா.....ஹா.....ஹா.....ஹா...



சும்மா...!

 மாணவர்கள்....

சும்மா பாருங்க....

ஹி....ஹி....ஹி....

ஹா.....ஹா....ஹா.....




வேதனை...!

 காலத்தின் கோலம்....!

1.  கடிகாரத்தை சாப்பிட்டது

2. இது டார்ச் லைட்டை உட்கொண்டது

3. இது தபால் அட்டைகளை சாப்பிட்டது

4. இது புத்தகங்களை முழுங்கியது

5. இது வானொலியை விழுங்கியது

6. இது டேப் ரெக்கார்டரை உட்கொண்டது

7. இது கேமராவை அழித்தது

8. இது கால்குலேட்டரை சாப்பிட்டது

9. இது அண்டை வீட்டாருடன் நட்பை துண்டித்தது

10. இது உறவையும் மறக்கடித்தது

11. இது நம் நினைவாற்றலை நுகர்ந்தது

12. தியேட்டர் இல்லை

நாடகம் இல்லை,

தொலைக்காட்சி இல்லை,

விளையாட்டு இல்லை, பாடல் இல்லை...

இதுவே வங்கி, இதுவே ஹோட்டல்,

இதுவே மளிகைக் கடை...

இதுதான் மருத்துவர், இதுதான் ஜோதிடர்...

இதுதான் உண்மையான சந்தை...

வெளியே போனால் எல்லாமே போனில் இருந்துதான்...

எல்லாமே ஸ்மார்ட்போன்களின் சாம்ராஜ்யம்...

ஒரு விரல் உலகை ஆளுகிறது...

அதே விரல் மனிதனின் வாழ்க்கையை ஆளுகிறது....

வாய் முடக்கப்பட்டுள்ளது...

உண்மைதான்... தொட்டால்தான் வாழ்க்கை...

ஆனால் யாரும் தொடர்பில்லை...

ஒன்னாக கூடி இருந்தாலும் இது சிணுங்கினால் போதும் ஒதுங்கி விடுவார்கள் தனியாக.....

பல குடும்பங்கள் கெட்டுப் போனதும் இதனால தான்.....

- வாட்ஸ்ஆப்பில் கண்டது...!

சில நேரங்களில் உங்களைப் பற்றி!

 சில நேரங்களில் உங்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள் !

"சில நேரங்களில் உன்னைப் பற்றி நினைத்துப் பார்" என்பது உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளும் ஒரு சொற்றொடர். நீங்கள் சோர்வாக இருந்தால், சிறிது நேரத்திற்கு எல்லா கவலைகளையும் உங்கள் தலையிலிருந்து அகற்றிவிடுங்கள். உங்களையும், மற்றவர்களின் பாசத்திற்காக நீங்கள் புறக்கணித்த உங்கள் இதயத்தையும் கவனித்துக்கொள்ளுங்கள். ஏனெனில், இந்த உடலும் ஆன்மாவும் கூட இறைவனின் நம்பிக்கையே. அதுவும் அதன் உண்மையான உரிமையாளரிடம் சிறந்த நிலையில் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும். உங்களுக்காகவே உங்களைப் பற்றி சிந்திப்போம்.

 நாள் முழுவதும் ஓய்வின்றி வேலை :

பல வீடுகளில் உள்ள பெண்கள், நாள் முழுவதும் ஓய்வின்றி, வியர்வையில் நனைந்து, வேலை, வேலை, வேலை என்று மட்டுமே செய்வதை நாம் அடிக்கடி பார்த்திருக்கிறோம். ஓய்வு எடுக்கவோ அல்லது யாரிடமாவது உதவி கேட்கவோ அவர்களிடம் கேட்டால், தங்களுக்கு வேலை செய்யும் பழக்கம் இருப்பதாகவும், அல்லது முடிக்கப்படாத வேலை தங்களை அமைதியற்றதாக ஆக்குவதாகவும் அவர்கள் பொதுவாகப் பதிலளிப்பார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், அது வேலையை முடிக்கும் பழக்கம் மட்டுமல்ல, ஓய்வெடுப்பதற்கான ஒரு குற்ற உணர்வுமாகும். ஏனென்றால், சோர்வைப் பற்றிப் புகார் செய்யாமல் எவ்வளவு வேலை செய்கிறார்கள் என்பதை வைத்தே அவர்கள் மதிக்கப்படும் ஒரு சூழலில் அவர்கள் வளர்க்கப்பட்டு வாழ்ந்துள்ளனர். நோய் அல்லது காயம் ஏற்பட்டாலும், தன்னை ஒரு பொறுப்பான பெண் என்று அழைத்துக் கொள்வதற்காக, முழு குடும்பத்திற்கும் சமைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

ஒரு சிறிய குழந்தையுடன் இரவு முழுவதும் விழித்திருந்த பிறகும், காலையில் அனைவருக்கும் காலை உணவு தயாரித்து, அனைவரின் வேலைகளையும் கவனித்துக் கொண்டால், அவள் ஒரு நல்ல மருமகள், ஒரு நல்ல சகோதரி, அல்லது ஒரு நல்ல மகள். குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் காலை உணவு கொடுத்து, அவர்களின் படுக்கையையும் ஆடைகளையும் சரிசெய்து, நாள் முழுவதும் அவர்களை சுத்தமாக வைத்திருந்தால், அவள் ஒரு நல்ல தாய்! புகார் செய்யாமல், எந்த சோர்வையும் காட்டாமல், ஏனென்றால் அவள் எவ்வளவு குறைவாக சோர்வைக் காட்டுகிறாளோ, அந்தப் பெண் அவ்வளவு வலிமையானவள். 

மரியாதை, நன்மதிப்பு, பாராட்டு :

வேறுவிதமாகக் கூறினால், அவள் எவ்வளவு தியாகங்களைச் செய்கிறாளோ, அவ்வளவு பெரியவள்! மகத்துவம் மற்றும் நன்மை எனச் சொல்லப்படும் இந்தத் தரத்தை அடைய வேண்டும் என்ற அழுத்தம், மனநிலையின் கோபம் அல்லது வேலை முடிக்கப்படாதபோது ஏற்படும் பொறுப்புக்கூறல் பற்றிய பயம் ஆகியவை அவர்களைத் தொடர்ந்து பரபரப்பாக வைத்திருக்கின்றன. ஆனால், பெரும்பாலான பெண்கள் தங்கள் உடல் மற்றும் மன நலனைப் பணயம் வைத்துப் பெறும் மரியாதை, நன்மதிப்பு மற்றும் பாராட்டு ஆகியவை மிகவும் விலை உயர்ந்த பேரம் என்பதை மறந்துவிடுகிறார்கள். 

ஏனெனில், மனித உடலின் செயல்திறனுக்கும் திறனுக்கும் சில வரம்புகள் உள்ளன. அவற்றைக் கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். இல்லையெனில், நமது உடல் எனும் இந்த இயந்திரம் சோர்வாகவே செயல்படும். மேலும் பல பலவீனங்களும் உடல்நலப் பிரச்சினைகளும் முன்கூட்டியே ஏற்படும். அந்த நேரத்தில், நமக்கு உதவ யாரும் இல்லாமல் போகலாம். ஏனெனில், நாம் யாருக்காக நமது சக்தியைச் செலவழித்தோமோ அவர்கள் அவ்வளவு நேர்மையாகவும் அன்பாகவும் இருந்திருந்தால், வாழ்க்கையின் ஒவ்வொரு கடினமான கட்டத்திலும் நமக்கு உதவிக்கரம் நீட்டியிருப்பார்கள். உறவுகளின் சுயநலம் மற்றும் தன்னலத்திற்காகப் பின்னர் வருந்துவதை விட, நமக்காக நாமே சிந்தித்து, நமது முன்னேற்றத்திற்காக முன்முயற்சி எடுப்பது மிகவும் சிறந்தது.

===================

சில நேரங்களில், வாழ்க்கையை முழுமையாக்கும் முயற்சியில், அதை உண்மையில் வாழ மறந்துவிடுகிறோம். உங்களுக்காக சிறிது நேரத்தை ஒதுக்க இன்னும் நேரம் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்"

===================

சில நேரங்களில், நமது வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும் சுழற்சியில் வாழ நாம் மறந்துவிடுகிறோம். நம் வீடு எப்போதும் பளபளப்பாக இருக்க வேண்டும். எல்லா வேலைகளும் நம் விருப்பப்படியும் குறித்த நேரத்திலும் முடிக்கப்பட வேண்டும். வாழ்க்கை எப்போதும் ஒழுங்காக இருக்க வேண்டும் என்பது மட்டுமே நமக்கு நினைவிருக்கிறது. இத்தகைய சிந்தனை மிதமானதல்ல. அத்தகைய ஆசையும் சாத்தியமில்லை. ஒருவரின் உதவியுடன் பல பணிகளை இன்னும் சிறப்பாகவும் எளிதாகவும் செய்து முடிக்க முடியும். அப்படியிருக்க, நம் அன்புக்குரியவர்களிடம் உதவி கேட்பதிலோ, நம் சோர்வை வெளிப்படுத்துவதிலோ என்ன தவறு இருக்கிறது! 

உடலும் மனமும் ஓய்வைக் கேட்கின்றன  :

நம் சோர்வை ஏற்றுக்கொள்வதோ அல்லது வெளிப்படுத்துவதோ தவறல்ல. ஆனால் உங்கள் உடலும் மனமும் ஓய்வைக் கேட்கின்றன என்பது ஒரு மனித உண்மை. தொடர்ச்சியான ஓட்டம், பொறுப்புகளின் சுமை மற்றும் வேலையை முடிக்க வேண்டும் என்ற மன அழுத்தம் ஆகியவை ஒருவரை உள்ளிருந்து பலவீனப்படுத்துகின்றன. விரைவிலோ அல்லது பின்னரோ, தனக்கு ஓய்வு தேவை என்பதை அவர் ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கும். எனவே, எந்தவொரு மன மற்றும் உடல் ரீதியான இழப்பு ஏற்படுவதற்கு முன்பும், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு நல்லது. எல்லாம் வல்ல இறைவன் தன் அடியானின் திறனுக்கு மீறி சுமையை ஏற்றாதபோது, தவிர்க்கக்கூடிய சுமைகளால் நமது தனிமையான, பலவீனமான ஆன்மாக்களை நாம் ஏன் பாரப்படுத்துகிறோம்? நீங்கள் உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ மிகவும் சோர்வாகவும் பலவீனமாகவும் உணர்ந்தால், சில அவசியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் இது. நிச்சயமாக வேலை செய்யுங்கள். ஆனால் உங்களால் கையாளக்கூடியதை விட அதிகமாக ஒருபோதும் செய்யாதீர்கள். மன மற்றும் உடல் உழைப்பிற்குப் பிறகு, சிறிது நேரம் நிம்மதியாக மூச்சு விடுங்கள். உங்கள் ஆரோக்கியத்திற்கும் வசதிக்கும் அதிக முன்னுரிமை கொடுங்கள்:

வரம்புகளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்: 

ஒவ்வொரு பணிக்கும் 'ஆம்' என்று சொல்வது, உங்கள் ஆற்றலைக் கட்டுப்பாடின்றிப் பயன்படுத்த ஒப்புக்கொள்வதாகும். இது ஒரு வகையில் உங்களுக்கு நீங்களே செய்யும் அநீதியாகும். எனவே, உங்கள் ஆற்றலைச் சேமிக்க சில நேரங்களில் 'வேண்டாம்' என்று சொல்வது அவசியம். ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்து, அக்கறை காட்டும் குடும்பங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி சிறந்தவை. ஆனால், ஒருவர் மட்டுமே எல்லா வேலைகளையும் செய்து, மற்றவர்கள் வெறும் பார்வையாளர்களாக இருக்கும் வீடுகளும் குடும்பங்களும் சிறந்தவை அல்ல. அத்தகைய இடங்களில், தேவையற்ற பாரபட்சத்தையும் தேவையற்ற கவனத்தையும் தவிர்த்து, ஒவ்வொருவருக்கும் அவரவர் தகுதிக்கேற்ப பொறுப்புகளைப் பிரிப்பது அவசியம்.

ஆற்றலின் சிறந்த ஆதாரம் சத்தான உணவுதான். பெண்கள் உட்பட கடினமாக உழைக்கும் மக்களுக்கு அத்தகைய உணவு மிகவும் தேவைப்படுகிறது. எனவே, சமச்சீரான உணவை உண்ணுங்கள். உங்கள் ஆரோக்கியத்தைப் புறக்கணிக்காதீர்கள். மனச்சோர்விலிருந்து விடுபட, சமூக ஊடகங்களின் லைக்குகள், ஷேர்கள், சப்ஸ்கிரைப்கள் மற்றும் ஃபார்வர்டுகளின் பரபரப்பிலிருந்து விலகி இருங்கள். உங்கள் நேரத்தையும் சக்தியையும் பயனுள்ள மற்றும் ஓய்வளிக்கும் செயல்களுக்காகச் சேமித்து, புத்தகங்களைப் படியுங்கள் அல்லது இயற்கைக்கு அருகில், உங்களுடன் மட்டுமே அமைதியாகச் சிறிது நேரம் செலவிடுங்கள். சில மகிழ்ச்சிகள் உங்களிடமிருந்தேம் வருகின்றன. உங்களை உணருங்கள்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்